Tuesday, March 31, 2020

நீ யாரு...'.........

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழவேண்டும் 


சரி ஒரு வழியாப் பசங்களுக்கும் பெண்ணுக்கும் திருமணங்கள்
 நடந்து முடிந்ததும் ,நமக்கு'' நீ யாரு...''.கேள்வி அவ்வளவாக எழாது 
என்று நினைத்தேன்.

அப்படியெல்லாம் நிற்குமா.
நாங்களும் பசங்க இருக்கிற ஊருக்குப் போக ஆரம்பித்தோம்.
அங்கே ஏற்கனவே இந்தச் சிநேகிதப் 
பசங்க போய் செட்டிலாயிருக்காங்க.
முதல் குழப்பம் பார்க்கலாமா.!
மும்பையில் போய் இறங்கியதும், 
வீட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதா, வேறு ஏதாவது வாங்கி வரணுமா என்று கேட்டபடி வந்த மனிதரைப்
பார்த்தால், ஏதோ தெரிந்த மாதிரி இருக்கிறதேஎன்று நினைத்தபடி,
அவரை வரவேற்று,'' வசந்தன் தானே நீ''
விவேகாவில 
(படித்த கல்லூரி   அதாவது எங்கள் பசங்க படித்த கல்லூரி)

ரேஸ் எல்லாம் ஓடுவியே.
கல்ச்சுரல்ஸ்ல மோகன் பாட்டுக்கள் எல்லாம் பாடுவியே'' என்றதும்
அவன் சிரித்துவிட்டான்...

இல்லைம்மா, நீங்க என்னைப் பார்த்ததே இல்லை. ''பார்ன் அண்ட் ப்ராட் அப்
இன் மும்பை.''
என்றது அந்தப் பையன்.
எங்க பையனோட ஃப்ரண்ட் ஒருத்தன் இங்க இருக்கான் அவந்தானோ
என்று நினைத்தேன்.''என்றேன்.
மேற்கொண்டு அவனிடம் ஒன்றும் பேசாமல் இவர் தடுத்தாட் கொண்டார்.


சாயந்திரம் பையன் வந்ததும் அப்பாவுக்கும் மகனுக்கும் சிரிக்க விஷயம் கிடைத்தது.
அதன் பிறகு நிஜ வசந்தனே வந்த போது அடையாளமே தெரியவில்லை.
1988ல் பார்த்த முகம் 96ஆம் வருடத்துக்குள் மாறிவிட்டிருந்தது.
தலையில் வழுக்கை. அவனும் முன் பின் சொல்லாமல் வந்தான்.


அம்மா அப்பா எப்படி இருக்கிறீர்கள் 
மும்பையில் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறீர்கள். நான் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன்.
இன்று ரயிலில் பையனைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்'' 
இன்னும் ''அதே மாதிரி டிவியை மியூட்டிலயும், ரேடியோவில பாட்டுக் கேக்கறதுமா இருக்கீங்களான்னு ''வேற சிரித்ததும், 
ஆஹா இவன் தான் வசந்தன் என்று புரிந்தது.

அவன் நிறைய ஏமாந்திருக்கிறான்.
ரேடியோவில் ஏதாவது பாடும். 
தொலைக்காட்சியில் ஏதோ படம் போய்க் கொண்டிருக்கும்.
 '''அம்மா எப்படி இந்தப் படத்தில அந்தப் பாட்டு வருது? என்று,
 வெறித்தபடி இருப்பான்.
அப்புறமாகப் பக்கத்தில் பாடிக் கொண்டிருந்த கையடக்க ட்ரான்சிஸ்டரைக் காண்பித்ததும் ,
ஏமாந்து போயிட்டேனே என்பான்:))


சிலபல குளறுபடிகள்.. இப்ப வேண்டாம். பெரியதாக நான் செய்த கோளாறைப் பார்க்கலாம்:)
ஸ்விட்சர்லாண்டில் போய் இறங்கினோம்.
அங்கும் அவன் சிநேகிதர்கள்சிலர் ஒரு நாலைந்து பேர்,நாங்கள் சென்றுகொண்டிருந்த வண்டியில் வந்துகொண்டிருந்தார்கள்.
எனக்கு மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. 
அவர்களில் ஒருத்தருக்கு அப்பதான் மணமாகியிருந்தது. 
இன்னோருவருக்கு குழந்தைகள் உண்டு என்று தெரியும்.

இருவர் முகங்களும் அறிமுகமான பழகிய முகங்களாகவே இருந்தன.
மருமகள் என்னிடம் ஒருவரைக் காட்டி அவர் இவர்தாம்மா மனோஜ்கஷ்யப் என்றதும்,
நானும் அவருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு'' ஓஹோ நீங்கள் எங்க வீட்டிற்கு வந்திருக்கிறீர்களே'
உங்க மாமனார் , கஷாயம் ச்யவனப்ராசம் எல்லாம் கொண்டு கொடுத்ததை எடுத்துக் கொள்ள வந்தீர்கள் இல்லையா? குழந்தைகள் எப்படி இருக்கிறீர்கள் என்று (ஆங்கிலத்தில்தான்) கேட்டதும்.
அவர் முகம் சிவந்து விட்டது..

இதற்குள் எங்களுக்கு எதிர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த
 சின்னவன் திரும்பிப் பார்க்க, சரி அம்மா பேசிட்டார் போல இருக்கு என்று பக்கத்தில் வந்தான். 
என்னம்மா என்ன கேட்ட அவர் முகம் இப்படி சிவந்து போச்சு, என்று கேட்க,மருமகள் விவரம் அளிக்க ,''

''சாரி மனோஜ், ஷி மஸ்ட் ஹேவ் கன்ஃபுயூஸ்ட் யூ வித் அதர் கஷ்யப்''''
என்றபடி என்னைப் பார்த்தான். என்னாச்சுடா என்றால், இப்போது அவன் முகம் சிவந்தது. சிப்பை அடக்க முடியாமல்.

ஐய்யோ அம்மா நீ பார்த்தது ,நம்ம வீட்டுக்கு வந்தது பரத்வாஜ் கஷ்யப்.
இவனுக்கு இன்னும் ஆங்கிலமே சரியா வராது. வேற ஊர்க்காரன். இவனிடம் குழந்தை பொண்டாட்டின்னு சொன்னேனா.என்ன அர்த்தம்.
அவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலைம்மா'' என்றான்.

அந்தப் பையன் என்ன நினைத்ததோ அடுத்த ஸ்டாப்பில இறங்கிடுத்து.
அது அவன் இறங்க வேண்டிய இடமாக இருக்கலாம். 
ஆனால்
தந்தையும் தனயனுமாக என்னைப் பார்த்து'' பார் நீ பண்ண கலாட்டாவில
அவன் அம்போன்னு தெரியாத இடத்தில இறங்கிட்டான். ஏம்மா உனக்கு இந்தப் பாடு''?????????
என்று சிரிப்பாகச் சிரிக்கிறார்கள். ''எனக்கு அவன் முகத்தைப் பார்த்ததிலிருந்து,
அதில இருந்த திகிலைப் பார்த்து விபரீதமாஏதோ செய்திருப்பேன்னு தெரியும்.''
பாவம் அவனைச் சாப்பிடக் கூப்பிடலாம்னு இருந்தேன். இப்போ கூப்பிட்டாலும் வர மாட்டான்.''

எனக்கென்னடா தெரியும் எல்லாம் மகரிஷிகள் பேரை வைத்துக் கொண்டு ஒரே
மாதிரி வேற இருக்கிறார்கள். என்றேன்.:)
அதிலிருந்து  நான் கொஞ்சம் அடங்கி இருக்கக் கற்றுக் கொண்டேன் :)

என்னைப் பற்றித் தெரிந்த மற்ற சினேகிதர்கள் வீட்டுக்கு வரும்போதே 'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' என்று சொல்லிக் கொண்டேதான் வருவர்கள்:)
Monday, March 30, 2020

சிரிப்பா சிரிச்ச கதை.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் 

சிரிப்பா சிரிச்ச கதை.    செப்டம்பர்  2009

1 – 26 of 26
Blogger Geetha Sambasivam said...
//என்னைப் பற்றித் தெரிந்த மற்ற சினேகிதர்கள் வீட்டுக்கு வரும்போதே 'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' என்று சொல்லிக் கொண்டேதான் வருவர்கள்:)//

நானும் அப்படிச் சொல்லிண்டே வந்துடறேன், அப்போத் தான் பிழைச்சேன்! :))))))))))))))))))))
7:30 AM
 Delete
Blogger கோபிநாத் said...
\\என்னைப் பற்றித் தெரிந்த மற்ற சினேகிதர்கள் வீட்டுக்கு வரும்போதே 'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' என்று சொல்லிக் கொண்டேதான் வருவர்கள்:)\\\

ரைட்டு.. நோட் பண்ணிக்கிட்டேன்ம்மா ;))
8:02 AM
 Delete
Blogger துளசி கோபால் said...
'நான் அவனில்லை' இதுதான் டாப்:-))))))
8:04 AM
 Delete
Blogger ராமலக்ஷ்மி said...
//'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' என்று சொல்லிக் கொண்டேதான் வருவர்கள்:)//

ரொம்ப சவுகரியமாய்ப் போயிற்று:)!
8:06 AM
 Delete
Blogger ஆயில்யன் said...
நீதானேப்பா அந்த பையன் ?

அந்த பையனோன்னு நினைச்சேன்? அப்படின்னு சொல்லி சொல்லியே நீங்க பல பேரை ச்சும்மா டெரரா கலாய்ச்சுறிக்கீங்க போல வல்லியம்மா :))

////என்னைப் பற்றித் தெரிந்த மற்ற சினேகிதர்கள் வீட்டுக்கு வரும்போதே 'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' என்று சொல்லிக் கொண்டேதான் வருவர்கள்:)//


நானும் அப்படியே செய்கிறேன் :)
8:21 AM
 Delete
Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...
'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' இது நல்ல ஐடியாவா இருக்கே.. :)
8:34 AM
 Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
கீதா நீங்க எப்படி நான் அவனில்லைன்னு சொல்ல முடியும்:)
நான் அந்த கீதா இல்லன்னு
வேணா சொல்லலாம்:)
இதோ இன்னிக்குக் கூட கார்த்திக் வரப் போறான்.அவன் தம்பி கீர்த்தி.

என்ன நடக்கறதுன்னு பாக்கலாம்:)
9:15 AM
 Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
அடடா, இப்படி ஒரு பன்ச் டயலாக எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே.
கோபி,
நீங்க போன் செய்யும் போது துபாய் கோபின்னு சொல்லிடுங்க.:)
9:17 AM
 Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
அதான் இந்தப் பதிவோட சாராம்சமே.
இப்ப பசங்க சினேகிதர்களைப் பற்றி ஒரு விஷயம் சொல்றது இல்ல துளசி:)

யாருடா இந்தப் பிள்ளைன்னதும் ஒரு விழிப்புணர்ச்சி வந்துவிடுகிறது. உனக்குத் தெரியாதும்மா. விட்டுடு என்கிறார்கள்.:(((
9:19 AM
 Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
ஆமாம்பா ராமலக்ஷ்மி. உங்களுக்குச் சொல்லி இருப்பேன். என் தோழி ராமலக்ஷ்மி பற்றி:))
9:24 AM
 Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
கண்டு பிடிச்சிட்டீங்களா ஆயில்யன்:)


என் பசங்களுக்கு நல்லாவே டெர்ரர் தான்.
அம்மாவைப் பார்க்க யார் வருவதாக இருந்தாலும் முதல்லியே சினாப்ஸிஸ் சொல்லிடுவாங்க,.பாதிக்கதைதானே சொலி இருக்கேன். இன்னும் ரமணி கதை,தினேஷ் கதை எல்லாம் இருக்கு. ஆனா இன்னோரு சமயம் பார்த்துக்கலாம்:)
9:47 AM
 Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
ஹையா முத்து கயல் உங்களுக்கும் இந்தக் குழப்பம் வரும் அப்ப இருக்கு கதை:)0)
9:48 AM
 Delete
Blogger திவாண்ணா said...
//யாருடா இந்தப் பிள்ளைன்னதும் ஒரு விழிப்புணர்ச்சி வந்துவிடுகிறது. உனக்குத் தெரியாதும்மா. விட்டுடு என்கிறார்கள்.:((( //

விவரமாதான் இருக்காங்க!

சமீபத்து பிரச்சினை:
ரிங்க் ரிங்க...
அலோ
நான் கீதா பேசறேன். கிளம்பிட்டீங்களா?
ஓ கிளம்பியாச்சே! மரக்காணம் கிட்டே வந்து கிட்டு இருக்கோம்.
எப்ப இங்கே வருவீங்க?
ம்ம்ம்ம் மதியம் ரெண்டு மணி?!
ஓ அப்ப காலை டிபனுக்கு வரலையா?
!!!! இல்லையே நா அப்படி வரதா சொல்லையே!
!!!! பின்னே?
முதல்லே குரோம்பேட்டை போறோம். அங்கே என் சிஸ்டர் இன் லா இருக்காங்க. அங்கே டிபன் சாப்டுட்டு வேலை இருக்கு. முடிஞ்ச பிறகு சாஸ்திரி நகர்ல வேலை இருக்கு. அதை முடிச்ச பிறகுதான் உங்க வீட்டுக்கு வரணும்.
ஓஹோ! சிஸ்டர் இன் லா வீட்டுக்கு போறீங்களா முதல்லே?
ஆமாம்.
நான் உங்க சிஸ்டர் இன் லா தான் பேசிண்டு இருக்கேன்!
7:42 PM
 Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
ha haa haaaa:)

டெலபோன்ல கோளாறா இருக்கும் வாசுதேவன்.
ஓ. உங்க ஸிஸ்டர்-இன்லா பேரும் கீதாவா:))))
ஹைய்யோ. என் கதையை விட மோசமா இருக்கே:)
சிரிச்சு சிரிச்சு மாளலை.
8:22 PM
 Delete
Blogger திவாண்ணா said...
//ஓ. உங்க ஸிஸ்டர்-இன்லா பேரும் கீதாவா:))))//

அதே!

// ஹைய்யோ. என் கதையை விட மோசமா இருக்கே:)//

அதான் இரு கோடுகள் தத்துவத்திலே நீங்க கொஞ்சம் சந்தோஷமா இருக்கலாமேன்னு பதிஞ்சேன்!

// சிரிச்சு சிரிச்சு மாளலை.//
நாங்களும் சிரிச்சோம்!
:-))))))
9:13 PM
 Delete
Blogger ambi said...
//சரி அம்மா பேசிட்டார் போல இருக்கு என்று பக்கத்தில் வந்தான்.//

சிரிச்சு சிரிச்சு மாளலை :)))

அன்னிக்கு வந்தது நான் அதாவது அம்பியும், மிஸஸ் அம்பியும் தான்னு இந்த நேரத்தில் நினைவூட்டி கொள்கிறேன். :))
1:56 PM
 Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
adadaa, Neengathaana. maranthe pooyiduththu:)
Ambi and mrs.Ambi. ok:)
2:56 PM
 Delete
Blogger அபி அப்பா said...
\\அன்னிக்கு வந்தது நான் அதாவது அம்பியும், மிஸஸ் அம்பியும் தான்னு இந்த நேரத்தில் நினைவூட்டி கொள்கிறேன். :))
\\

என்ன அம்பி குழந்தையை வல்லிம்மா கண்ணுல காட்டலையா?என்னவோ ஹனிமூன் போவது போல ரெண்டு பேர் மாத்திரம் ஜாலியா போயிருக்கீங்க? வாட் ஈஸ் திஸ்!
4:17 PM
 Delete
Blogger அபி அப்பா said...
வல்லிம்மா! உங்க ஆவாக்காய் பதிவு படிச்சதுல இருந்தே நாக்கு நமநமக்க ஆரம்பிச்சிடுச்சு. அதிலும் சுல்தான் பாய்க்கு வேற கொண்டு வந்து தரேன்ன்னு சொல்லிட்டிங்களா! போச்சு பொறாமை வந்துடுச்சு.

உடனே போன் கிருஷ்ணாக்கு. ஆவாக்காய் கேட்டா கிண்டல் "என்ன மசக்கையா இருக்கீங்களா"ன்னு. சரி சரி எல்லா அவமானத்தையும் பொறுத்துகிட்டு கேட்டுகிட்டேன்,

இப்ப கொஞ்ச நேரம் முன்ன ஊர்ல இருந்து வந்த யார் கிட்டயோ ஆவாக்காய் ஊறுகாய் வந்துச்சு. அந்த மகாபாவி மனுஷன் நேரா வீட்டுக்கே வந்து கொடுத்தார்.

பின்ன என்ன இன்னிக்கு லீவ். சமைக்க அலுப்பா இருந்துச்சு. நேத்து சாதம் மீந்து போய் தண்ணி ஊத்தி வச்சிருந்தேன். அதிலே கொஞ்சம் தயிர் ஊத்தி ஆவாக்காய் பிரிச்சு வச்சுட்டு நேரா மொட்டை மாடிக்கு போய் துணி உலர்திட்டு அந்த கொடும் வெயிலை நல்லா "அனுபவிச்சுட்டு" வந்து பழய அமுது + ஆவாகாய் சாப்பிட்டு அப்படியே உங்களுக்கு டைப்புறேன். தூக்கம் சொக்கிகிட்டு வருது.
4:23 PM
 Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
கேளுங்க அபி அப்பா. சும்மா வராங்க. ரெண்டு பேரும்.
குழந்தையைக் கண்ணால பாக்கலை.
கூட்டிக்கொண்டு வந்திருந்தா ஒரு மோதிரமாவது போட்டு இருப்பேன்:)
அவர் வேற எனக்குப் புடவை கொடுக்கணும்.
அதனால் நழுவிட்டார்:)
5:15 PM
 Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
அடப்பாவமே, வெறும் பழைய சாதத்தோட சாப்பிட்டீங்களா.
அபி அப்பா

கொஞ்சமா சாப்பிடுங்க,. வயித்துக்கு காரம் ஆகாது.
இருந்தாலும் கிருஷ்ணா நல்லாப் பதமாப் போட்டுத்தான் கொடுத்திருப்பாங்க. அதனால் கவலை இல்லை.
சுல்தான் இங்க வந்தாஅதான் கிடைக்கும்.
ஏனெனில் துபாய்க்கு இப்ப சத்திக்கு வரதா ப்ளான் இல்ல.

அதென்ன உங்க மேஜையில வெண்குழல் அப்பன் இருந்ததைப் பார்த்தேனெ. இதுதான் உடம்பைப் பார்த்துக்கற அழகா.
5:20 PM
 Delete
Blogger அபி அப்பா said...
\\அதென்ன உங்க மேஜையில வெண்குழல் அப்பன் இருந்ததைப் பார்த்தேனெ. இதுதான் உடம்பைப் பார்த்துக்கற அழகா.
\\

மாப்பு மாப்பு ! நான் தருமி சார் கிட்ட கொத்தனார் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிகிட்டேன்.

இனி நான் நல்ல பிள்ளையா இருக்கேன்!
5:54 PM
 Delete
Blogger அபி அப்பா said...
அட விடுங்க வல்லிம்மா! தோ நட்டுவை தூக்கிட்டு வர சொல்றேன். வரும் போதே விரலை நீட்டிகிட்டே வருவான், பாவம் குழந்தை விரல் 1 கிலோ மோதிரத்துக்குமேல தாங்காது பார்த்து செய்யுங்க!
6:25 PM
 Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
நட்டு வரட்டும். முதல்ல குழந்தையைக் கொஞ்சிக் கட்டிப் பிடித்து கசக்கி விட்டுப் பிறகு மோதிரம் போடலாம். ஒரு கிலோ தான் தாங்குவானா:))))))))
6:57 PM
 Delete
Blogger சந்தனமுல்லை said...
:-)) இது மாதிரி எங்க வீட்டிலேயும் நடந்திருக்கு! எங்க ஆயா கரெக்டா தப்பா கேட்பாங்க..அதுவும் அந்த ஃப்ரெண்ட் முன்னாடி! அவங்களும் அது வேற கல்பனா ஆயா, நான் திண்டுக்கல் கல்பனா..அப்படின்ன்னு விளக்குவாங்க! :))
7:02 PM
 Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
எங்க ஆயா கரெக்டா தப்பாச் சொல்லுவாங்க.:)

பின்ன என்னப்பா, எல்லாப் பொண்கள் பேரும் ஒண்ணாவே இருக்கு.
ஒருத்தருக்கு ரெண்டு குழந்தை. இன்னோருத்தருக்குக் குழந்தையே இல்லை. ஒருத்த மாமியாரோட இருக்காங்க. ஒருத்தர் புருஷன் ஆர்மில இருக்காரு

யம்மாடி. குழம்பாம என்ன செய்யும்:)