Blog Archive

Tuesday, March 31, 2020

நீ யாரு...'.........

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழவேண்டும் 


சரி ஒரு வழியாப் பசங்களுக்கும் பெண்ணுக்கும் திருமணங்கள்
 நடந்து முடிந்ததும் ,நமக்கு'' நீ யாரு...''.கேள்வி அவ்வளவாக எழாது 
என்று நினைத்தேன்.

அப்படியெல்லாம் நிற்குமா.
நாங்களும் பசங்க இருக்கிற ஊருக்குப் போக ஆரம்பித்தோம்.
அங்கே ஏற்கனவே இந்தச் சிநேகிதப் 
பசங்க போய் செட்டிலாயிருக்காங்க.
முதல் குழப்பம் பார்க்கலாமா.!
மும்பையில் போய் இறங்கியதும், 
வீட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதா, வேறு ஏதாவது வாங்கி வரணுமா என்று கேட்டபடி வந்த மனிதரைப்
பார்த்தால், ஏதோ தெரிந்த மாதிரி இருக்கிறதேஎன்று நினைத்தபடி,
அவரை வரவேற்று,'' வசந்தன் தானே நீ''
விவேகாவில 
(படித்த கல்லூரி   அதாவது எங்கள் பசங்க படித்த கல்லூரி)





ரேஸ் எல்லாம் ஓடுவியே.
கல்ச்சுரல்ஸ்ல மோகன் பாட்டுக்கள் எல்லாம் பாடுவியே'' என்றதும்
அவன் சிரித்துவிட்டான்...

இல்லைம்மா, நீங்க என்னைப் பார்த்ததே இல்லை. ''பார்ன் அண்ட் ப்ராட் அப்
இன் மும்பை.''
என்றது அந்தப் பையன்.
எங்க பையனோட ஃப்ரண்ட் ஒருத்தன் இங்க இருக்கான் அவந்தானோ
என்று நினைத்தேன்.''என்றேன்.
மேற்கொண்டு அவனிடம் ஒன்றும் பேசாமல் இவர் தடுத்தாட் கொண்டார்.


சாயந்திரம் பையன் வந்ததும் அப்பாவுக்கும் மகனுக்கும் சிரிக்க விஷயம் கிடைத்தது.
அதன் பிறகு நிஜ வசந்தனே வந்த போது அடையாளமே தெரியவில்லை.
1988ல் பார்த்த முகம் 96ஆம் வருடத்துக்குள் மாறிவிட்டிருந்தது.
தலையில் வழுக்கை. அவனும் முன் பின் சொல்லாமல் வந்தான்.


அம்மா அப்பா எப்படி இருக்கிறீர்கள் 
மும்பையில் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறீர்கள். நான் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன்.
இன்று ரயிலில் பையனைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்'' 
இன்னும் ''அதே மாதிரி டிவியை மியூட்டிலயும், ரேடியோவில பாட்டுக் கேக்கறதுமா இருக்கீங்களான்னு ''வேற சிரித்ததும், 
ஆஹா இவன் தான் வசந்தன் என்று புரிந்தது.

அவன் நிறைய ஏமாந்திருக்கிறான்.
ரேடியோவில் ஏதாவது பாடும். 
தொலைக்காட்சியில் ஏதோ படம் போய்க் கொண்டிருக்கும்.
 '''அம்மா எப்படி இந்தப் படத்தில அந்தப் பாட்டு வருது? என்று,
 வெறித்தபடி இருப்பான்.
அப்புறமாகப் பக்கத்தில் பாடிக் கொண்டிருந்த கையடக்க ட்ரான்சிஸ்டரைக் காண்பித்ததும் ,
ஏமாந்து போயிட்டேனே என்பான்:))


சிலபல குளறுபடிகள்.. இப்ப வேண்டாம். பெரியதாக நான் செய்த கோளாறைப் பார்க்கலாம்:)
ஸ்விட்சர்லாண்டில் போய் இறங்கினோம்.
அங்கும் அவன் சிநேகிதர்கள்சிலர் ஒரு நாலைந்து பேர்,நாங்கள் சென்றுகொண்டிருந்த வண்டியில் வந்துகொண்டிருந்தார்கள்.
எனக்கு மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. 
அவர்களில் ஒருத்தருக்கு அப்பதான் மணமாகியிருந்தது. 
இன்னோருவருக்கு குழந்தைகள் உண்டு என்று தெரியும்.

இருவர் முகங்களும் அறிமுகமான பழகிய முகங்களாகவே இருந்தன.
மருமகள் என்னிடம் ஒருவரைக் காட்டி அவர் இவர்தாம்மா மனோஜ்கஷ்யப் என்றதும்,
நானும் அவருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு'' ஓஹோ நீங்கள் எங்க வீட்டிற்கு வந்திருக்கிறீர்களே'
உங்க மாமனார் , கஷாயம் ச்யவனப்ராசம் எல்லாம் கொண்டு கொடுத்ததை எடுத்துக் கொள்ள வந்தீர்கள் இல்லையா? குழந்தைகள் எப்படி இருக்கிறீர்கள் என்று (ஆங்கிலத்தில்தான்) கேட்டதும்.
அவர் முகம் சிவந்து விட்டது..

இதற்குள் எங்களுக்கு எதிர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த
 சின்னவன் திரும்பிப் பார்க்க, சரி அம்மா பேசிட்டார் போல இருக்கு என்று பக்கத்தில் வந்தான். 
என்னம்மா என்ன கேட்ட அவர் முகம் இப்படி சிவந்து போச்சு, என்று கேட்க,மருமகள் விவரம் அளிக்க ,''

''சாரி மனோஜ், ஷி மஸ்ட் ஹேவ் கன்ஃபுயூஸ்ட் யூ வித் அதர் கஷ்யப்''''
என்றபடி என்னைப் பார்த்தான். என்னாச்சுடா என்றால், இப்போது அவன் முகம் சிவந்தது. சிப்பை அடக்க முடியாமல்.

ஐய்யோ அம்மா நீ பார்த்தது ,நம்ம வீட்டுக்கு வந்தது பரத்வாஜ் கஷ்யப்.
இவனுக்கு இன்னும் ஆங்கிலமே சரியா வராது. வேற ஊர்க்காரன். இவனிடம் குழந்தை பொண்டாட்டின்னு சொன்னேனா.என்ன அர்த்தம்.
அவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலைம்மா'' என்றான்.

அந்தப் பையன் என்ன நினைத்ததோ அடுத்த ஸ்டாப்பில இறங்கிடுத்து.
அது அவன் இறங்க வேண்டிய இடமாக இருக்கலாம். 
ஆனால்
தந்தையும் தனயனுமாக என்னைப் பார்த்து'' பார் நீ பண்ண கலாட்டாவில
அவன் அம்போன்னு தெரியாத இடத்தில இறங்கிட்டான். ஏம்மா உனக்கு இந்தப் பாடு''?????????
என்று சிரிப்பாகச் சிரிக்கிறார்கள். ''எனக்கு அவன் முகத்தைப் பார்த்ததிலிருந்து,
அதில இருந்த திகிலைப் பார்த்து விபரீதமாஏதோ செய்திருப்பேன்னு தெரியும்.''
பாவம் அவனைச் சாப்பிடக் கூப்பிடலாம்னு இருந்தேன். இப்போ கூப்பிட்டாலும் வர மாட்டான்.''

எனக்கென்னடா தெரியும் எல்லாம் மகரிஷிகள் பேரை வைத்துக் கொண்டு ஒரே
மாதிரி வேற இருக்கிறார்கள். என்றேன்.:)
அதிலிருந்து  நான் கொஞ்சம் அடங்கி இருக்கக் கற்றுக் கொண்டேன் :)

என்னைப் பற்றித் தெரிந்த மற்ற சினேகிதர்கள் வீட்டுக்கு வரும்போதே 'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' என்று சொல்லிக் கொண்டேதான் வருவர்கள்:)








17 comments:

நெல்லைத் தமிழன் said...

//ல்லாம் மகரிஷிகள் பேரை வைத்துக் கொண்டு ஒரே
மாதிரி வேற இருக்கிறார்கள்// - ஹா ஹா ஹா

நான் அவனில்லை.....

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா.... நல்லா இருக்கு குளறுபடிகள்...

இப்போது படிக்க சுவை.

தொடரட்டும் பதிவுகள்.

கோமதி அரசு said...

நீங்கள் நகைச்சுவையாக எழுதிய பதிவை மறக்கவே முடியாது.
நினைவுகள் அருமை.

//டிவியை மியூட்டிலயும், ரேடியோவில பாட்டுக் கேக்கறதுமா இருக்கீங்களான்னு '//

நானும் இப்படி செய்வது உண்டு.

'//' ஓஹோ நீங்கள் எங்க வீட்டிற்கு வந்திருக்கிறீர்களே'
உங்க மாமனார் , கஷாயம் ச்யவனப்ராசம் எல்லாம் கொண்டு கொடுத்ததை எடுத்துக் கொள்ள வந்தீர்கள் இல்லையா //

கல்யாணபரிசு தங்ககவேலு நினைவுக்கு வருகிறார்.

அருமையான இன்பான நினைவுகள்.

Geetha Sambasivam said...

இந்தப் பதிவு படித்திருக்கேனே! மீள் பதிவா? என்றாலும் கலாட்டாக்கள் சுவையானவை.

ஸ்ரீராம். said...

ஹா...    ஹா...  ஹா....

ஆனால் இதில் என்ன தப்பு?  நமக்கு அடையாளம் தெரியவில்லை...   என்ன செய்ய!

இந்தப் பதிவு நானும் படித்த மாதிரி இருக்கிறது...   அநே..........கமாக என் கமெண்ட் அங்கே இருக்க......லா.......ம்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா,
மூன்று பசங்களுக்கும் ,பள்ளி தோழர்கள்,தோழிகள்
கல்லூரித்தோழர்கள் தோழிகள்.,பட்ட மேற்படிப்புத் தோழர்கள் தோழிகள்.
பிறகு அலுவலக சினேகிதங்கள்.

இரண்டு செந்தில்,இரண்டு விஜயலக்ஷ்மி, இரண்டு சரவணன்,
மாது ஒன்று மாதவன் ஒன்று,.
திணறிப் போய்விடுவேன்:)

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் நன்றி மா. ஆமாம்
ரொம்ப நல்ல குழந்தைகள். ஒரு பையன் டைனிங்க் டேபிளில் உட்கார்ந்து
தட்டெடுத்து சாப்பிட்டு விடுவான்,

இன்னோருவன் எழுத்தாளர்கள் கதைகள் என்று அரட்டை அடிப்பான்.
எங்கள் பெரியவன் அவனைப் பிடித்து
இழுக்காத குறையாக அழைத்துப் போவான்,:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி.
நான் சொன்ன பையனோட மாமனார் எல்லாத் தைலங்களையும் தலையில் கட்டினார். நமக்கோ 23 கிலோ தான் கொடுக்கப் பட்டது.
நல்ல வேளையாக இந்தப் பையனே வந்துவிட்டான். முகம் தான் மறந்து விட்டது.
வானொலியை மறந்த நாளே இல்லை.
அதுதான் அங்க பாயிண்ட்.
நீங்களும் அதுபோல என்றால் மிக மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா.
நீங்கள் படிக்காத பதிவெல்லாம் ஒன்றும் இருக்காது.
கலாட்டா நாட்கள் தான் அவை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், முக நூலில் படித்திருப்பீர்கள்.
மெமரீஸ்ல வரலாம்.

முகம் மறப்பதில் தப்பில்லை.
அந்த முகத்துக்கு சம்பந்தமில்லாத விஷயத்தைப்
பேசுவதுதான் பேஜார்.:)

அவர்களுடைய கல்லூரிக்காலங்கள்
எனக்கு மிகவும் பிடித்தவை. நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

நினைவுகள் இனிமை அம்மா...

Thulasidharan V Thillaiakathu said...

ரேடியோவில் ஏதாவது பாடும்.
தொலைக்காட்சியில் ஏதோ படம் போய்க் கொண்டிருக்கும்.
'''அம்மா எப்படி இந்தப் படத்தில அந்தப் பாட்டு வருது? என்று,
வெறித்தபடி இருப்பான்.
அப்புறமாகப் பக்கத்தில் பாடிக் கொண்டிருந்த கையடக்க ட்ரான்சிஸ்டரைக் காண்பித்ததும் ,
ஏமாந்து போயிட்டேனே என்பான்:))//

ஹா ஹா ஹா ஹா ஹாஅ.....எங்கள் வீட்டிலும் முன்பு இப்படி குழந்தைகள் செய்வாங்க...

அம்மா எனக்கும் என் மகனின் நண்பனை அது ஏன் எனக்கும் பரிச்சயமானவரையே கூட அடையாளம் மாற்றிப் பேசி பல்பு வாங்கியதுண்டு!!!!!! அதனாலென்ன இல்லையா!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...
This comment has been removed by a blog administrator.
Thulasidharan V Thillaiakathu said...

நானும் அவருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு'' ஓஹோ நீங்கள் எங்க வீட்டிற்கு வந்திருக்கிறீர்களே'
உங்க மாமனார் , கஷாயம் ச்யவனப்ராசம் எல்லாம் கொண்டு கொடுத்ததை எடுத்துக் கொள்ள வந்தீர்கள் இல்லையா? குழந்தைகள் எப்படி இருக்கிறீர்கள் என்று (ஆங்கிலத்தில்தான்) கேட்டதும்.
அவர் முகம் சிவந்து விட்டது..//

எனக்கென்னடா தெரியும் எல்லாம் மகரிஷிகள் பேரை வைத்துக் கொண்டு ஒரே
மாதிரி வேற இருக்கிறார்கள். என்றேன்.:)
அதிலிருந்து நான் கொஞ்சம் அடங்கி இருக்கக் கற்றுக் கொண்டேன் :)

என்னைப் பற்றித் தெரிந்த மற்ற சினேகிதர்கள் வீட்டுக்கு வரும்போதே 'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' என்று சொல்லிக் கொண்டேதான் வருவர்கள்:)//

ஹையோ அம்மா ஆஅ சிரிச்சு முடியலை!!!! செம நகைச்சுவையா எழுதறீங்கம்மா...

பரவால்லமா...இது பலருக்கும் ஏற்படும் அனுபவம் தான் இதுல என்ன இருக்கு....ஆனா நம்ம கூட வருபவர்களிடம் இருந்து கொஞ்சம் திட்டு வரும் தான்...ஹா ஹா ஹா ஹ

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக நன்றி மா..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன் மா.
அனுபவித்துப் படித்தீர்களா.:) மிக நன்றி.
எனக்குப் பெயர்கள் நினைவிலிருக்கும்.
இந்த ஜீவிப் பையன், இன்னும்
பையனோடு தொடர்பில் இருக்கிறான்.
தொண்டி முசிறி அவன் ஊர்.
சர்வகாலமும் கலாய்க்கறது தான்
அவன் வேலை.
உலகமெங்கும் சுற்றி சென்னை வந்தால்
எங்களையும் வந்து பார்ப்பான்.
சாப்பிட என்ன இருக்குன்னுதான் முதலில் கேள்வி:)

எல்லாக் குழந்தைகளும் நன்றாக இருக்கணும். நன்றி மா.

மாதேவி said...

சுவாரசியமாக இருக்கிறது.