எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
தை வெள்ளிக்கிழமை அனைவருக்கும் நன்மைகள் தொடரட்டும்.
நிலவைத் தொடர்ந்து கண்டு வரும் இன்பமே
தனி. இந்தக் குளிர்காலத்தில் வானத்த்ன் நீல நிறம்
அதீதமாகச் சிறப்பாக விளங்குகிறது.
கோடை காலத்தில் மேகங்கள் திரண்டு நிலவை மறைக்கும்.
மார்ச் ,ஏப்ரிலில் ஆரம்பிக்கும் மழை காலங்களில்
நிலவைக் காணமுடியாமல் வருத்தமாக
இருக்கும். அனேகமாகக் குளிர் மாதங்களிலும் இந்த
நிலைமை வரும்.
இப்போது அதிசயமாக பௌர்ணமி நாளிலிருந்து
காட்சி தரும் நிலா அன்னை,அத்தனையும் வெள்ளி
உருக்கிவிட்டது போல தக தகவென்று
ஒளிவிடுகிறாள்.
காலையில் எழுந்ததும் முதலில் வரும் நினைப்பு
நிலாவைப் பற்றிதான்.
மழை வராத இந்த நாட்களையும்,
மேகங்கள் இல்லாத வானையும் நன்றியுடன்
வாழ்த்துகிறேன்.
பாக்யலக்ஷ்மி படப் பாடல்கள்
அனைத்தும் திண்டுக்கல்லில் இருந்த போது கேட்டது.
காண வந்த காட்சியென்ன பாடல்
அப்போது புரியாவிட்டாலும், பின்னர் தொலைக்காட்சியில் பார்க்கும் போது
ரசிக்க முடிந்தது.