Showing posts with label பெண் பதிவர்கள் எழுத்து. Show all posts
Showing posts with label பெண் பதிவர்கள் எழுத்து. Show all posts

Tuesday, May 03, 2011

பெண் எழுத்து

 படிப்பது எவ்வளவு பயன் தரும் என்பதை நாம் எழுதுவதைச் சிறிது நிறுத்தினால் தான் தெரிகிறது:)


நாச்சியார் பதிவில் படங்களை ஏற்றுவதில் இருக்கும் சுலபம்,

எழுதுவதில் இல்லை.

இ கலப்பையும் உதவ முடியாத இந்த நேரங்கள் மற்ற பதிவுகளைப் படிக்கத் தோதாக அமைகிறது.

முக்கால்வாசி நேரம் மழலைகளுடன் செலவாகிவிடுகிறது.

ஓய்வெடுக்க ஒரு மணி.

மீண்டும் வேலைகள். மருமகளைப் பார்த்தால் அனுதாபம்தான் தோன்றுகிறது.

நம் ஊரைப் போல இஸ்திரி செய்ய ஒரு ஆள். வீடு பெருக்கித் துடைக்க ஒரு ஆள் என்றெல்லாம் இங்கு இல்லை.

தெரிந்த விஷயமே.



இருந்தாலும் கையில் ஏழு மாதக் குழந்தையுடன் எல்லாவற்றையும் கவனிப்பது

கடினம்..

இருந்தும் எனக்குக் கிடைக்கும் சில மணித்துளிகளில் கமலா சடகோபனின்

"என் இனிய மந்திரக் கோலே" படித்தேன்.

பக்கத்துவீட்டில் நடப்பதை நேரில்பார்ப்பது போல இருக்கிறது.



எண்ணங்களில் கீதாவின்  பெண் எழுத்து படித்தேன் அருமையாக பெண்களின்  எழுத்துப் பரம்பரையையே அலசி இருக்கிறார்.

இந்தப் பதிவிலேயே     .எல்.கார்த்திக்
*********************************************அவர்கள் என்னை எழுத அழைத்த  பெண்களின் எழுத்தைப் பற்றிய என் கருத்துகளைப் பதிவிடுகிறேன்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் காலங்களில் எழுதிய பெண்கள் குறைவாக இருந்தாலும்  எங்களுக்குப் பழகிய சூழ்நிலைக் களமாகக் கொண்டே
கதைகள் அமைந்தன.மிகவும்...பிடித்தவர்....லக்ஷ்மி.....பிறகு///சிவசங்கரி

அதில் புதுப்பாணியைக் கொண்டு வந்தவர் ஆர். சூடாமணி.
பெண் மனசில் உள்புகுந்து அழகுகளையும் விகாரங்களையும் தைரியமாக எழுதியவர்.
பின் என்னைக் கவர்ந்தவர்  ராஜம் கிருஷ்ணன்.
முறுக்கு,சீடை,மைசூர்பாகு என்று உழலாமல்  வேறு  நிலைக்கு எடுத்துவைத்தார்.
அதற்குப் பின்னர் வந்தவர்களின் கதைகளில் , கண்ணம்மா,,டார்லிங் இவைகள் முக்கிய வார்த்தைகளாக உயர் மட்டக் காதல்களும் தியாகங்களும்
வேறொரு பார்வை பார்க்க வைத்தன.
கண்ணம்மா  என்றழைக்கும் கணவன் வேண்டும் என்று என் தோழி ஒருத்தி கனவு காணுவாள்:):சிவசங்கரி,வாஸந்தி,இந்துமதி..)

ஆறடி உயரம் ரிம்லெஸ்  கண்ணாடி,,பியட் கார் என்று வலம் வந்த கதா நாயகர்கள். படித்த காதலி, இப்படிப் போகும் கதை..
இப்பொழுது இணையத்திலும் காதல் கவிதைகளுக்குக் குறைவில்லை.

அதில்லாவிட்டால் உலகம் இல்லையோ.
இல்லைதான் என்று நினைக்கிறேன்.:)
பிறகுபடித்தவர்கள்....வித்யாசுப்ரமணியம்,உஷாசுப்ரமணியம்.
கமலாசடகோபன்.....அனுராதாரமணன்.

பாட்டியின் பார்வையில் வேறென்ன தெரியும்!
படிக்க அனைத்து எழுத்துகளுமே நன்றாக இருக்கின்றன.
நேரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இலவசமாகக் கரும்பு போல இனிக்கும் எண்ணங்களையும்,ஆழ் நோக்குடன் பதியப்படும் முற்போக்குக் கதைகளையும் வாசிக்கக் கிடைக்கின்ற ஒரே இடம் இணையம்.

பெண்பேசும்   தமிழுலகம் இன்னும் விரியும்.
ஆன்மீகத்திலிருந்து, ,பற்பல சுற்றுலா சென்று நம்மை மகிழ்விக்கும்
***************************************************************************
 பதிவுகளிலிருந்தும்,
படித்தாலே சிந்தனையைக் கிளரும் ராமலக்ஷ்மி போன்றவர்களின் தீர்க்கமான கருத்துகளும், லக்ஷ்மியின் மலர்வனமும்,
சித்ரா,அன்புடன் அருணா, மாதங்கி மாலி,அப்பாவி புவனா,ஹுசைனம்மா,மாதேவி,சிறுமுயற்சி   முத்துலட்சுமி,
இவர்களெல்லாம் இளைய தலைமுறை.

பெரியவர்களாக நம் துளசி,கீதா,நானானி,கோமா,கோமதி அரசு, திருமதி
************************************************** லக்ஷ்மி பூனாவிலிருந்து
***************************************************************** எழுதும் பதிவுகள்
***********************************************
 எல்லாமே அள்ள அள்ளக் குறையாத இன்பம் தரும்  எழுத்துகள்.

இவர்களைப் பற்றி  மதிப்பிடவோ,கருத்துக் கூறவோ
 நான் இன்னும் நிறைய தொலைவு கடக்க வேண்டும்.
தெரிந்ததை எழுதி

விட்டேன் கார்த்திக்.!!
 நேரக் குறைவு காரணமாக நிறைய
பதிவர்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பு அதிகம்
நம் சின்ன அம்மிணி அகிலா மாதிரி.:)
மற்றவர்கள் மன்னிக்கணும்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வாழ நினைத்தால் வாழலாம்...........

வல்லிசிம்ஹன் எல்லோரும்   நலமுடன் வாழ  பிரார்த்தனைகள். வீழாத இலைகள்   மனத்தின் உறுதி. விழும் இலைகள் மண்ணுக்கு உரம். சுற்றிச் சுழலும் அக்டோபர்...