![]() | ||||
| உயிர்கொல்லிகள் ஜாக்கிரதை! |
நினைத்ததே இல்லை. கொசுவையும் கரப்பான் பூச்சியையும் கொல்லும் மஸ்கிடோ ஸ்ப்ரே என்னையும் பதம் பார்க்கும் என்று.இரண்டு நாட்கள் முன்
ஆடி மாத ஈக்களின் தொல்லை அதிகமாக இருந்தது.
ஜன்னல்களில் போட்டிருக்கும் வலைகளையும் தாண்டி இரண்டு ஈக்கள் வீட்டுக்குள்ளும் வந்துவிட்டன.
அவை என்னைத் தான் தேடி வந்ததோன்னு நினைக்கிறபடி குளிக்கும் அறைக்குள்ளும் புகுந்து விட்டன.
இதேதடா வம்பு என்று எடுத்தேன் ஹிட் குழாயை.
அதான் விளம்பரத்தில் சொல்கிறார்களே, ஒரு கறுப்பு ஹிட் இருந்தால் போதும்.உலகத்தையே ஜெயிக்கலாம் என்று.:(
ஹிட் அடித்த கையோடு குளிக்க நுழைந்து கதைவையும் சாத்திவிட்டேன். ஒரே ஒரு மூச்சு தான் இழுத்திருப்பேன்.
அவ்வளவுதான் தொண்டையை யாரோ இறுக்கியது போல
மூச்சு விட முடியாமல்(gasp) இழுக்க ஆரம்பித்துவிட்டது.
முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் அவசரமாகக் கதவை த் திறந்து வெளியே வந்து ஃபானைப் போட்டுத் தடால் என்று உட்கார்ந்தவள் ஒரு பத்துநிமிடத்துக்காவது போராடியிருப்பேன்.
மகனோ என்ன ஆச்சு என்று தெரியாமல் அம்மா அம்மா என்று கதவுக்கு அப்பாலிருந்து கேட்கிறேன்.
வாயிலிருந்து வார்த்தை வந்தால் தானே!!
கொஞ்சம் நிதானம் வந்தபிறகு கதவைத் திறந்து நான் சரியாக இருக்கிறேன் என்று தெளிந்த பிறகு மீண்டும் குளிக்கப் போனேன்.
படித்த முட்டாள் என்று இதைத்தான் சொல்வார்கள். நிதானம் இல்லாமல் இவ்வளவு அவசரம் வேண்டுமா.
இந்த சாதனங்களின் வீர்யம் தெரியாமலயே உபயோகித்து வந்திருக்கிறேன்.
விவேகம் இல்லாமல் நான் செய்த இந்தத் தவறை வேறு யாரும் செய்யக் கூடாது என்றே பதிவிட்டேன்.
அதிர்ஷ்டவசமாக வேற ஒன்றும் நடக்கவில்லை.
பக்கவிளைவாக வயிற்றுவலியும் தலைவலியும் மட்டும்.
கடவுளுக்கு நன்றி.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
