எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அவங்க கொடுத்த கண்ணாடியைப் பரிசோதனை செய்து கொண்டிருந்தேன்.
வைத்தியர் உள்ளே இன்னோருவரை அறுத்துக் கொண்டிருந்தார்,. அறுவை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
''பாட்டி'
ஒரு குட்டிக் குரல் கேட்டது.
மனம் பூராவும் ஆநந்தம் துள்ளியது.
யாரிந்த தேவதி என்று திரும்பினேன்.
ஒரு நான்கு வயதுக் குழந்தை (பெண்)
புடவையைப் பிடித்து கண்ணு வலிக்கிறதா பாட்டி என்று கேட்டது.
எனக்கு அப்பவே கண்வலி போய்விட்டது.
இல்லடா கண்ணம்மா. சரியாப் போச்சு. இதோ கண்ணாடி போட்டுக்கப் போறேண்டா, என்றபடி குழந்தையைப் பார்த்தேன்.
ஆணைப் போலக் கால் நிஜாரும்,அரைக்கை சட்டையும்
போட்டு சுருள்குழலோடு பெரிய கண்களால் என்னைப் பார்த்தது அந்தத்
தேன்மலர்.
''ஏண்டா கேட்கறே''
எங்க அம்மா இல்ல எங்க அம்மா''
ஆமாம்'
அவங்களுக்குக் கண்ணு தொங்கிப் போச்சு''
!!!!!!!
என்னது? என்று அடுத்த வரிசையைப் பார்த்தேன்..
அங்கே ஒரு அம்மாவும் இந்தக் குழந்தையோட அண்ணாவும் உட்கார்ந்திருந்தார்கள். அவர் கண் வீங்கி இருந்தது.
நான் இந்த ந்ண்டுசிண்டைப் பார்த்து, உன் பேர் என்னடா
என்றேன்.
இன்மாயி
என்னது?
அவளோட அண்ணா ஹிரண்மயி ஆந்டி என்று புன்னகைத்தான்.
ஹிரண்மயி இங்க வாடா, ஸ்கூல் போறியாம்மா என்றேன்.
அய்ய சூலெல்லாம் கிடையாது
சம்மல்சூல்(சம்மர் ச்கூல்) தான் போறேன்.
ஆனா இன்னிக்குப் போலை.
ஏன் தெரியுமா
தெரியாதே.
காலைப் பாக்கறியா பாட்டி என்றது.
காண்பிடா கண்ணு என்றதும் சிரமப்பட்டு ஒரு துளியூண்டு கீறலைக் காண்பித்தது.
புண்ணு வந்திருக்கு. என்னால ஒக்காரவே முடியாது
அதனால தான் போல.
என்று தாவி தாவிக் குதித்தது.:)
ஏய் வலிக்கப் போறதுடா என்றேன்.
குதிச்சா,டான்ஸ் ஆடினால் வலிக்காது
ஸ்கூலுக்குப் போய் உட்கார்ந்தால் வலிக்கும் என்று
ரொம்பப் பாவமா முகத்தை வைத்துக் கொண்டது.
அவளுடைய அம்மா,அப்பா,அண்ணா எல்லோரும்
புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.
மருந்து போட்டியாமா என்றால். அவளுக்குப் பிடித்த மிக்கிமௌஸ் பாண்ட் எயிட் கிடைக்கலையாம்.:)
அதற்குள் என் முறை வரவே உள்ளே சென்றேன்.
வெளியே வரும்போது அந்த சிறிய சொர்க்கத்திடம் வரேண்டா கண்ணா
என்றதும். இங்கயே இரு பாட்டி என்றது. தாத்தாக்குப் பசிக்கு இன்னோரு நாள் வரேன் என்றதும். சரி பாட்டி பைபை என்று கையசைத்துவிட்டது.
கண் நிறைய அந்தச் செல்வத்தைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிவந்து எஜமானரிடம் சொன்னேன். உனக்கு எப்பவும் பேரன்பேத்திகள் கிடைத்துவிடுவார்கள் என்றபடி வண்டியைக் கிளப்பினார்.
சின்ன சொர்க்கங்களைப் படைக்கும் கடவுளுக்கு நன்றி.

