Saturday, November 28, 2026

திகே சிதம்பரனார் அவர்களின் உரையிலிருந்து.

வல்லிசிம்ஹன்

 கம்ப ராமாயணத்தில்  உருக்கமான ''இராமன்  ஜடாயு காட்சி.

இராமன் ஜடாயுவைக் கண்டு   பதைக்கும் நேரம்.

சீதையைத்தேடி ராமனும் லக்ஷ்மணனும்  வரும் பாதையில் குற்றுயிராகக்  கிடக்கும்  ஜடாயுவைக் கண்டு வருந்திக் கைகளில் ஏந்திக் கொள்கிறார்கள்.  அப்போது 
இவ்வாறு நடப்பதற்குக்  காரணமான வானவர் ராக்கதர் அனைவரையும் அழிக்கிறேன் என்று கோபாவேசப் படுகிறான் ராமன்.
அவன் சினத்தைத் தணிக்க ஜடாயு கைகொள்ளும்  வசனங்கள் இவை."ராமா நீயும் இலக்குவனும் சீதையைத் தனியே விட்டு மான் பின்னே போனதல்லவா தவறு. அது அவ்வாறு இருக்க  மற்றவர்களை நோவதில் என்ன பயன் என்று பெரியவன் ஸ்தானத்திலிருந்து  ராமனைக் கேட்கிறான். 
ராமனுக்கு இந்த வார்த்தைகள்   சுருக்கென்று தைத்தாலும் தன் நிலை அடைகிறான்.


"வம்பிழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைத்துக் 
 கொம்பிழை மானின் பின்   போய்க் குலப் பழி கூட்டிக் கொண்டீர்  
அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயுங்காலை 
உம்பிழை என்பதல்லால் 
உலகம்செய் பிழையும் உண்டோ ??
திரு டிகேசி அவர்களின்  "சொல்லமுடியாதல்லவா போய்விட்டது"  கட்டுரையில் ஒரு பகுதி.

இவ்வாறு உரைத்த களைப்பில் ஜடாயுவின் உயிர் பிரிகிறது.

இன்னோரு பகுதி

கம்பர்‌ ஏதோ ஒதுங்கலான ஒரு குக்‌ கிராமத்தில்‌ ஒரு பிரபுவோடு தங்கியிருந்தார்‌. மாலையில்‌, ஒரு புலவர்‌, கோயிலில்க்‌ கம்ப ராமாயணப்‌ பிரசங்கம்‌ செய்யப்போவதாகவும்‌ அதற்குப்‌ போய்வரலாமென்னும்‌ கம்பரிடம்‌ சொன்னார்‌. கம்பரும்‌ இசைந்தார்‌. இருவரு மாகப்‌ போனார்கள்‌. புலவர்‌ வெகு தடபுட லாய்ப்‌ பிரசங்கம்‌ செய்தார்‌. அனேக பாடல்‌ களை அபாரமாக அனுபவித்துப்‌ பாடினார்‌. பிரசங்கம்‌ முடிந்ததும்‌, புலவருக்குக்‌ கம்பரை அறிமுகப்‌ படுத்தினார்‌ பிரபு. புலவர்‌, ரொம்ப ரொம்ப சந்தோஷப்‌ பட்டவராய்க்‌ கம்பரைப்‌ பார்த்து அடாடா, தங்கள்‌ கவிகள்‌ அனைத்தும்‌ அற்புதமாய்‌ அமைந்திருக்கின்‌ றன. அன்னை கலைமகளின்‌ அருள்‌ கொழித்த அருமைக்‌ கவிகள்தான்‌ அவை? என்று பாராட்டினார்‌. அதற்குக்‌ கம்பர்‌, * தாங்கள்‌ பாடிய பாடல்களில்‌ ஒன்‌ றிரண்டு என்னுடைய தாகவும்‌ இருக்கன்றன. ரொம்ப சந்தோஷம்‌” என்று பதில்‌ சொன்னார்‌ !

இதிலிரும்‌ அ, செருகுகவிகள்‌ எவ்வளவோ கம்ப ராமாயண ஏட்டுக்குள்‌ முன்னமேயே புகுந்து‌  விட்டன என்று தெரிகிறதல்லவா ?


தமிழர்களாகிய நாம்‌ பாக்யெசாலிகள்‌.

ஆயிரம்‌ வருஷத்துக்கு முன்னுள்ள மகா கவி ஒருவரின்‌ இதயத்தை அறியக்‌ கொடுத்து  வைத்திருக்கிறது நமக்கு.
 பாஷை அனேகமாய்‌ இன்று வழங்கும்‌ பாஷை யே. தாள இயல்கள்‌ நாம்‌ பாடி அனுபவிக்கக்‌ கூடியவைகளே. காட்சி களும்‌, தமிழ்‌ நாட்டிலுள்ளவைகளே. எல்லா வற்றிலும்‌ முக்கியமாக, பாத்திரங்கள்‌ எல்லாம்‌ நம்மவாகளே.

நாம்‌ பாக்கிய சாலிகள்‌

ஆயிரம்‌ வருஷத்துக்கு முன்‌ இருந்த ஆங்கில நூல்‌ எதையும்‌ தற்காலத்து ஆங்கி லேயர்‌ வாசிக்க முடியாது. அவ்வழக்கப் படியே

 இத்தாலியர்‌ லத்‌தீன்

பாஷையைத்‌ தாய்‌ பாஷை தமிழ்‌ யாகக்‌ கருதி வாசிக்க முடியாது.

திரேக்கர்களுக்கும்‌ இதேசங்கடம்‌

தான்‌. வடமொழியைப்பற்றிச்‌ சொல்லவே

வேண்டாம்‌.

மேலே சொல்லிய பூர்வமான பாஷைகளில்

உள்ள மூலங்களை சாமானிய மக்கள்‌ அறிய

முடியாது. அந்த பாஷைகளைப்‌ பல வருஷ

களாக, இருபது முப்பது வருஷங்களாகவே; 

கஷ்டப்பட்டுக்‌ கற்றிருன்தாலொழிய அனுப விக்க முடியாது. சாமானியப்‌ பயிற்சியுள்ள வர்கள்‌ அனுபவிக்கிறெதெல்லாம்‌, ஒரு புஸ்தகத்தைத்‌ தலை கீழாக வைத்து வாசித்து அனுபவிக்கிற கணக்குத்தான்‌ ! 1 ஆயிரம்‌ வருஷத்துக்கு முன்‌ உள்ள கம்பர்‌ கையாண்ட பாஷையோ, இப்பொழுதும்‌ வழக்கிலிருக்றெது!!!!!!. நம்முடைய பாக்கிய மல்லவா அது?


No comments:

திகே சிதம்பரனார் அவர்களின் உரையிலிருந்து.

வல்லிசிம்ஹன்  கம்ப ராமாயணத்தில்  உருக்கமான ''இராமன்  ஜடாயு காட்சி. இராமன் ஜடாயுவைக் கண்டு   பதைக்கும் நேரம். சீதையைத்தேடி ராமனும் லக...