Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Saturday, October 22, 2011

சம்சாரம் ஒரு சமுத்திரம்(மீள் பதிவு)












மருமகளாக இருப்பது கஷ்டமா, மாமியாராக இருப்பது கஷ்டமா:)
அது புரிதல், அம்மா அப்பா வளர்த்தவிதம், அம்மாவின் மாமியார் எப்படி நடந்து கொண்டார்கள் அத்தைகள் சாம்ராஜ்யம் எப்படி இருந்தது என்பதையெல்லாம் பொறுத்தது.

நான் வேணும்னால் உலகத்தைலியே பெஸ்ட் அத்தை நான் தான்னு நினைத்துக் கொள்வேன்.
மருமானைக் கேட்டால் சொல்லுவானாயிருக்கும். அத்தை மகா டென்ஷன் பார்டி. பேசிக்
கொ
ண்டே இருப்பாள். என் கிட்டப் பேசிப் புதுப்பாடல்கள் தெரிந்துகொண்டு என்னிடமே விமரிசிப்பாள்:)
என்று சொல்லுவானாயிருக்கும்!!!!!!


ஸ்வர்கலோகி மாமியாரின் மாமியாரைக் கேட்டால்,
''அது சமைக்கத் தெரிந்த அளவுக்கு வீட்டைப் பார்த்துக் கொள்ளத் தெரி:யாது. எப்பப் பார்த்தாலும் லைப்ரரின்னு ஓடிக் கொண்டு இருக்கும்'' அப்படின்னு :)

இப்ப நாம மாமியார் தகுதி அடைந்த பிறகு என் மருமகள்கிடமே ஒரு சர்வே நடத்தினேன்.
என்னைப் பார்த்து உங்களுக்குப் பயமா இல்லையே. என்னை ஒரு தோழி மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். உங்க விஷயங்கள்ள தொந்தரவு செய்ய மாட்டேன்.
நீங்க எப்ப வேணும்னாலும் வெளில போலாம். தூங்கலாம்.
நோ அப்ஜெக்ஷன் என்று தலைக்கு மேல் ஒரு ஒளிவட்டம் சுற்றுவது போல நினைத்துக் கொண்டு,
ஒரு அம்மன் டைப் புன்னகையோடு நின்று கொண்டிருந்தேன். இது 2004 லில் நடந்தது.
அப்போது அவர்கள் சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சரியம்.
'அம்மா,ரிலாக்ஸ். நாங்கள் எப்பவுமே ஃப்ரீதான்.
யாரையும் ...(எங்கள் கணவரைக்கூட ) போவது வருவது சொல்லிவிட்டுப் போய்க் கொண்டே இருப்போம். அதனால் நீங்கள் எங்களைப் பற்றி யோசிக்கவே வேண்டாம்.
அதனால் உங்கள் மூலம் எந்தத் தொந்தரவும் எங்களுக்கு வர வாய்ப்பே இல்லைன்னுட்டுப் போய்விட்டார்கள்.
அடடா, ஒரு அருமை முதலமைச்சர் பதவியை இழந்துட்டோமேன்னு ஒரு நிமிட வருத்தம் தோன்றியது.
அடுத்த நிமிடமே பொறுப்பு இல்லைன்னால் பிரச்சினையும் வராதுன்னும் புரிந்து விட்டது.
இப்போ எல்லோரும் அவரவர் வழி.
இங்க இருக்கிற குட்டிப் பேத்தி கூட,, கையைத் தூக்கி வாவா காட்டினால் தான் நான் வாக்கிங்கே போறேன்:)





Tuesday, August 17, 2010

இரவும் வரும் பகலும் வரும்....1


இந்தப் பதிவு என்னுடைய வில்லிபுத்தூரில் பதிவிட்ட கதையின் ஆரம்பம்.
தமிழ்மணத்தில் சேர்க்க முடியாததால்
நாச்சியாரிடம் சரணடைந்தேன்:0) தொடர். பயப்படவேண்டாம். மூன்று பதிவுக்கு மேல் போகாது என்று நினைக்கிறேன்:)






கதை ஆரம்பம்.

***********************
''வாழ்வென்றால் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று ஏதாவது சட்டம் போட்டு இருக்கா என்ன? எனக்கு கோபம்தான். அதைக் காண்பிக்க எனக்கு ரைட்டு இருக்காக்கும் ''
முணுமுணுக்கும் ஜானு என்கிற ஜானகியை அலுப்போடு பார்த்தேன்.
'பின்ன என்ன முணுக்'னால் பிறந்த வீட்டுக்கு ஓடறது எந்த விதத்தில நியாயம்?
புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதுவரை சண்டையே வந்தது கிடையாதா .


அப்படிப் போவதானால் நானே நானூறு தடவை காரைக்குடிக்கு ஓடி இருக்கணும்.'

'எதுடி, அப்ப எல்லாம் நீ பொட்டி கட்டரத்துக்குள்ள ,சின்னத்துக்கு சளி பிடிச்சுக்கிம்,
பெரிசுக்கு வயத்தவலி வந்துடும்.
சரி நாளைக்குப் போலாம்னு பொத்துன்னு உட்கார்ந்துடுவே.
கார்த்தால உனக்கு கோவம் வந்தது கூட நினைவில்லாம, இட்லி வேக வைத்துண்டு இருப்பன்னுதும் ஜானுவுக்கே சிரிப்பு வந்தது. கூடவே சுய பச்சாத்தாபமும் சேர்ந்து கொண்டது.

அடச்சே கோவிச்சுக்கரத்துக்கூட நேரமில்லாமல் என்ன தான் குப்பை கொட்டினேனோ'' என்றாள்.
சரி 35 வருஷம் கழிச்சு இப்ப வருத்தப் படாதே. எதுக்காக இவ்வளவு கோபம்.
சனி ஞாயிறு வந்தால் நடக்கிற கூத்துதானே.?

''வாராவாரம் நடக்கணும்னு எங்கயாவது காலட்சேபத்தில கேட்டுண்டு வந்தீர்களா,
அதென்ன அகங்காரம். ?
நாளைக்கு எனக்கு அறுபது வயசாகப் போகிறதுன்னு தெரியாதா.
பிரமாதமா பட்டும், வைர நெக்லஸும் கேட்டேனா.

எல்லாரும் ஒண்ணா இங்க இருக்கற மதுராந்தகத்துக்குப் போய் வரலாம்னு தானே

சொன்னேன்.
புளிக்காய்ச்சல் கூட காய்ச்சி வச்சுட்டேன். இட்லிமாவு பந்து பந்தா உருட்டி
வச்ச மாதிரி அரைச்சு வைத்தாச்சு. ராத்திரி சாதம் வடிச்சு, தயிர் சாதத்துக்கு

ரெடி செய்யணும். அவ்வளவுதான்.

இப்ப இந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் ரெண்டு பையன்களுக்கும்
காரைக் கிளப்பிக் கொண்டு மாமனார் மாமியாரை
அழைத்துக் கொண்டு அந்த ரிசார்ட் ,இந்த ரிசார்ட்னு போகணுமா.?""
குமுறியவளை அநுதாபத்தோடு பார்ப்பதைத் தவிர என்னால் ஒன்றும் முடியவில்லை.
அவளது ஆற்றாமைக்கும் காரணம் உண்டு.

இரண்டு பிள்ளைகளக் கொடுத்த கடவுள் இன்னோரு பெண்ணையும்
கொடுத்திருக்கலாம்.
பெற்றோர்கள் நாலு பெற்றுக் கொண்டால் , eங்கள் காலத்தில் இரண்டு பெற்றுக் கொள்வது தான் அளவாக இருந்தது.!!
ஜானுவின் உடல் நிலையும் ஒத்து வரவில்லை. அதனால் இரண்டோடு
போதும் என்று நிறுத்தி ஆச்சு .

Monday, July 12, 2010

தொடரும்..2 ஆம் பகுதி




எல்லோரும் வாழ வேண்டும்.
பட்டு என்கிற பத்மினிக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. எட்டு வயதுக்கு உண்டான கூர்ந்து ஆராயும் தன்மை,,வியப்பு எல்லாம் அவளைக் கவ்விக் கொண்டது.


அடுத்தாற்போல் இறங்கின இன்னோரு ஆண்ட்டி,அன்கிள் என்று உலகம் விரிந்து கொண்டே போனது.

ராதா அத்தையின் மகள் கிருஷ்ணா,

''கிருஷ்ணாவா'' என்று இன்னும் ஆச்சரியப்பட்டாள். பொண்களுக்குக் கிருஷ்ணான்னு பேரு வைப்பாளா பாட்டி, என்று தன் பாட்டியின் கைகளை உலுக்கினாள்.

வைப்பாம்மா. இந்த ராதா அத்தையின் மாமா பேரு என்ன தெரியுமா,கோவிந்தன்!'' என்று

சிரித்தாள்.



ஓஓஒ!!இன்னும் அகலமாகக் கண்ணும் வாயும் விரிந்தன பட்டுவுக்கு.

ராதா அத்தையின் பேரன்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

இரண்டு பெயர்கள் ஒவ்வொருத்தருக்கும்.

ஒரு பையன் 10 வயது இருக்கும் அவன் கைகளை நீட்டி'' ஹை ,ஐ யாம் நிதின் நிகொலஸ் கண்ணன்''

என்றான்.அடுத்த பையன் ''ஹை ஐ யாம் நிகில் நிகோலஸ் கண்ணன்'' என்றான். அவனுக்கு எட்டு வயது இருக்கும்.



மூணு பேரா உனக்கு என்று இருவரையும் கேட்டவள்,அவர்களுக்குத் தமிழ் தெரியுமோ என்ற கேள்வியோடு பாட்டியைப் பார்த்தாள்.

வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக்கலாம் வா என்று அனைவரும் ,

பாமா வாடகைக்கு எடுத்திருந்த இரண்டு பெரிய வண்டிகளில் ஸ்ரீரங்கம் நோக்கி விரைந்தனர்.

ஸ்ரீரங்கம் கோபுரம் கண்ணில் பட்டதும் கைகளை உயர்த்தி வணங்கிக் கொண்டாள், ராதா. அவள் செய்வதையே அவள் மருமகள் க்றிஸ்டினாவும், பேரன்களும் செய்தனர்.

நம் பக்க பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறாள் போலிருக்கிறது என்று அன்போடு தன் நாத்தனாரை நோக்கிய பாமா, தன் பேத்தி வந்திருக்கும் பையன்களோடு சரிசமமாக ஆங்கிலத்தில் வளவளப்பதைப் பார்த்துப் பூரித்தாள்.

எத்தனை நாட்களாச்சு இந்தக் கலகலப்பைக் கண்டு என்று மனம் நிறைந்தது.

ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரி தோட்டம் அருகில் வந்திருக்கும் புதுக் குடியிருப்பு வளாகத்தில் வண்டி நுழைவதைப் பார்த்து



கேள்விக் குறியோடு பாமாவைப் பார்த்தாள் ராதா. நம் வீட்டுக்குப் போகலையாப்பா? இங்க யரு இருக்கிறார்கள் என்றதும்,

இங்க ஒரு அபார்ட்மெண்ட் ஒரு மாதத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறேன் ராதா, உங்கள் அனைவருக்கும் இந்த இடம் சௌகர்யமாக இருக்கும். ஏசி,கொசு நெட் எல்லாம் போட்டிருக்கிறது.

தண்ணீரும் நிறைய வாங்கி வைத்திருக்கிறேன்.

குளியல் எல்லாம் முடித்துக் கொண்டு சாப்பிட நம் வீட்டுக்கு வந்துவிடலாம் என்றாள்.

நம்ம பாஷா ட்ராவல்ஸ் வண்டிதான். ட்ரைவர் ரொம்ப மரியாதையாக இருப்பார். கார் இங்கயே இருக்கட்டும்''

சரியா என்றபடி அவர்களை வீட்டை நோக்கி அழைத்துச் சென்றாள் பாமா.

ராதா ஒன்றும் சொல்லவில்லை.

படு நேர்த்தியாகக் கட்டப் பட்டிருந்த அந்தக் குடியிருப்பு இன்னும் வியப்பாக இருந்தது. நல்ல பாதுகாப்போடு

விசாலமான இடமாக இருந்தது. லிஃப்டில் பெட்டிகளை அடுக்கிக் கொண்டு முன்னே சென்று கதவைத் திறந்து வைத்து அவர்களுக்காகக் காத்திருந்தாள் பாமா.

இன்னும் அகலாத சிந்தனையோடு ராதாவும்,அவரவர் எண்ணங்களோடு மற்றவர்களும்

அந்த அபார்ட்மெண்டின் உள்ளே நுழைந்தார்கள். அங்கே காத்திருந்த ''சின்னப் பொண்ணு''வைப் பார்த்ததும் அவள் முகம்

மலர்ந்தது. ஏய் எப்படி இருக்கே. இன்னும் நம் வீட்டில் தான் வேலை செய்கிறாயா. உனக்குக் கல்யாணம் ஆகிக் குழந்தைகள் லாம் இருக்கா என்ற வண்ணம்,அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள்.

அவள் அணைப்பில் கூச்சத்தோடு நெளிந்த சின்னப் பொண்ணூ ,நீ நல்லா இருக்கியாப்பா,இதில்லாம் உன் பேரப் பசங்களா, வெள்ளைக்காரத் தொரை மாதிரி இருக்குங்களே'' என்றபடி அவர்களை நெருங்கி,''கண்ணூங்களா, நானும் உங்களுக்கு ஒரு ஆயா மாதிரித்தான்'' என்று அன்புடன் சிரித்தாள்.
Posted by Picasa

அன்புடையார் என்றும் ,பகுதி --1




ரயில் வருவதற்கான அறிகுறிகளாக ப்ளாட்ஃபாரத்தில் பரபரப்பு அதிகமானது.


திருச்சி ஜங்ஷனின் காலை பரபரப்பு பாமாவுக்கு மிகவும் பிடிக்கும்.



சென்னையிலிருந்து வரும் மலைக்கோட்டை எக்ஸ்ப்ரசின் மீது ஒரு கண்ணும்,

கையில் பிடித்திருக்கும் பேத்தியின் மேல் ஒரு கண்ணுமாக,வெகு ஆண்டுகளுக்கப்புறம் வரும்

தன் நாத்தனாரையும் அவர் கணவர்,பையன்களையும் வரவேற்க ஆயத்தமானாள்.

 இந்த அத்தைப் பாட்டி உன்னைவிடப் பெரியவரா'என்னும் பேத்தியின் கேள்விக்கு ஆம் என்று தலையை ஆட்டிவிட்டுப்

பெட்டிகளில் தெரிந்த முகத்தைத் தேடினாள்.

பளிச்சென்று சிரித்த ராதாவின் முகத்தைப் பார்த்ததும்

பாமாவுக்கும் உற்சாகம் பிடித்துக் கொண்டது.

'ஹேய்! என்று பழைய சிநேகிதிகளைப் போல இருவரும் கைகளைப் பிடித்துக்

கொள்வதைப் பார்த்துப் பேத்தி

பட்டு, தன் விழிகளை விரித்தாள்.

அத்தைன்னு சொன்னியே பாட்டி, இது உன் ஃப்ரண்டா?

ஆமாம் ஃப்ரண்டும், அத்தையும் தான்:)

என்று பட்டுவை ராதாவுக்கு அறிமுகப் படுத்தினாள்.


இத்தனை கார்த்தாலைல எழுந்து உன்னோட வந்துடுத்தா,
அட பட்டுக் குட்டி, என்று தன்னை அணைக்க வரும் இந்தப் புதிய உறவை மிகவும் பிடித்துவிட்டது

பட்டுவுக்கு.!

அத்தை நீ இங்கயே இருக்கப் போறியா என்று கேட்கும் குழந்தையைப் பார்த்து
சிரித்த ராதா, உம்மாச்சி சேவிச்சுட்டுப் போயிடுவேண்டா செல்லம்'

என்றாள்.

பக்கத்தில் திரும்பி வயதான தன் கணவருக்கு கைலாகு கொடுத்தாள்.
பின்னால் வரும் மகன் குடும்பதையும்,மகள் குடும்பத்தையும்

கவனமாக இறங்குமாறு பார்த்துக் கொண்டாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாமா' இன்னும் உன் பால்யத்திலியே இருக்கியா

ராதா,அவர்களுக்கு வயதாகி விட்டது.

அம்மாப் பறவை மாதிரி கவனிக்கிறீயே என்று கேலி செய்தாள்.



புன்னகையோடு கேட்டுக் கொண்ட ராதா,

''இதுகள் வெளியூர் போய் இருபது வருஷமாச்சு

பாமா, இப்பத்தான் நம்ம ஊருக்கு வருகிறார்கள். ஆரம்பத்திலியே

அவர்களுக்கு ஜாக்கிரதை செய்து விட்டால் சமாளித்துக் கொள்வார்கள்.''



என்றபடி மகன் கண்ணனையும்,மாப்பிள்ளை ஸ்ரீராமையும் பாமாவுக்கு அறிமுகம் செய்தாள்.

ஹலோ பாமா மாமி! நீங்க அப்படியே தான் இருக்கிறீர்கள் என்று

புன்னைகையோடு அணுகும் மருமகனை அன்போடு பார்த்தாள் பாமா.
நீயும் அப்படியே தான் இருக்கேன்னு நான் சொல்ல மாட்டேன் என்று

அவன் தலை முடி,தொப்பை என்று கண்ணோட்டம் விட்டு சிரித்தாள்.
என்ன ஆச்சு உன்னோட எக்ஸர்சைஸ் ரொடீன் எல்லாம்,
என்றபடி அவன் மனைவி க்ரிஸ்டினாவையும் வரவேற்றாள்.

அவர்களின் குழந்தைகளும் பட்டுவைச் சுற்றிக் கொண்டார்கள். சமவயதுடைய

அவர்களின் ,பழுப்பு நிறத்தலைமுடியை, நீல நிறக் கண்களை

ஆச்சரியத்தோடு பார்த்தாள் பட்டு.

எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Tuesday, January 22, 2008

தனிக்குடித்தனம் ஆரம்பம்......1945 ..1


திருமணம் முடிந்து அவரவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
சிரஞ்சீவி நாராயணனுக்கு ஸ்ரீகாகுளம் ஊரில் முதல் போஸ்டிங்.
நெல்லையைத்தவிர,மதுரையும் சென்னையுமே கொஞ்சம் தெரிந்த அந்த பையனுக்கு,
நிறைய புத்திமதி சொல்லித் தாத்தா வண்டி ஏற்றிவிட்டார்.
அங்கு நடந்த சம்பவங்களை எங்கள் அப்பா சுவைபடச் சொல்லுவார். எனக்குத்தான் மறந்துவிட்டது.


அங்கிருந்த நெல்லை மாவட்டம் கயத்தாறு என்ற கிராமத்துக்கு தபால் ஆபீஸ் குமாஸ்தாவாகப்
பொறுப்புக் கொடுத்தார்கள்.
அப்பா(நாராயணன்) பாளையங்கோட்டையில் படித்தததாகச் சொல்லுவார். அவருடய கல்லூரிப் படிப்பும் அங்குதானா என்று தெரியவில்லை.
அந்தக் காலகட்டங்களில் இண்டர்மீடியட் இரண்டு வருடமும், இளங்கலைப் பட்டதாரியாவதற்கு இன்னும் இரண்டு வருடமும் தேவை.

அப்பாவின் கையெழுத்தும் ஆங்கிலத்தில் அவருக்கிருந்த ஆளுமையும் என்னை எப்பவுமே வியக்க வைத்திருகின்றன.

இப்போது அப்பா அம்மாசம்பந்தப் பட்ட சமாசாரங்களைச் சேகரிக்க மிச்சம் இருக்கும்
நாலைந்து பேரைக் கேட்பதற்குப் பதில் என் பெற்றோரிடம்
நான் ஏன் மனம் விட்டுப் பேசவில்லை என்று இன்னும் வருத்தமாக இருக்கிறது.

அவர்களும் அதுப்போல அனஸ்ஸ்யூமிங் வகைப்பட்ட மனிதர்களாக,வெகுளியாகக் கருமமே கண்ணாயினார் டைப்பாக இருந்திருக்க வேண்டாம்.
சரி கயத்தாறுக்குப் போகலாம் வாருங்கள்.

அங்கு ஒரு தனி வீடு பார்த்துக் குடித்தனம் வைக்க அப்பாவின் அம்மா பையனையும் அழைத்து வந்து விட்டார்.
அம்மா அதான் நம்ம கதா நாயகி சேச்சிப்பாப்பா அலையஸ் ஜெயா, தன் மாமாவின் துணையோடு,
புது வீட்டுக்கான பாத்திரப் பொட்டி,
கார்த்திகை விளகுகள் ...ஒரு பெரிய வாழைத்தண்டு விளக்கு என்பார்கள். திருவனந்தபுரம் டைப்.
அதே போல குட்டி அகல்கள் வெண்கல,பித்தளையிலானவை,
காரைக்குடி டப்பா என்று சொல்லக் கூடிய அரிசி,பருப்பு போட்டு வைக்கிற பெரிய டப்பாக்கள்.
ஊறுகாய் போட மஞ்சளும் வெள்ளையுமாக உயர ஜாடிகள்.
கொலு வைக்க பண்ருட்டிப் பொம்மைகள் என்று
ரெண்டு குதிரை வண்டியில் வந்து இறங்கிய பொருட்களைப் பார்த்துத்
திருவேங்கடப் பாட்டி சிரித்தாராம்.
தாத்தாவும் பாட்டியுமாக புதுத் தம்பதிகள் செட்டில் ஆக உதவி விட்டு,
அதலப் பாதாளத்தில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் சேந்தும் முறையும்
சொல்லிக் கொடுத்தாராம்.
மெட்ராஸ் பொண்ணு கிணத்தை எங்க பார்த்திருக்கப் போகிறது என்று அவர்களுக்கு வருத்தம்.
அத்ற்காக உதவிக்கு ஒருவயலில் வேலை செய்பவரிடம் சொல்லித் தினமும் இரண்டு குடம் தண்ணீர் எடுத்துக் கொடுக்கச் சொல்லி விட்டு வண்டி ஏறி திருநெல்வேலிக்குப் பயணமானார்கள்.
ஒன்பது கஜம் நூல் புடவையும் கட்டிக் கொண்டு ஒரு செல்லுலாய்ட் பொம்மை போல அம்மா நின்னதாக உறவுக்காரர் சொல்லுவார்.
அப்புறம் அம்மாவும் அப்பாவும் செய்த குடித்தனம் எப்படி என்பது அப்புறம் பார்க்கலாம்.:))

விடுதலை எப்போது?

வல்லிசிம்ஹன்  அனைவருக்கும்   இனிய காலங்களுக்கான வாழ்த்துகள். நம்மை விடுவிக்க நாம் தான் முன்வரவேண்டும். இளமைக்காலங்களில்  கணவன், குழந்தைகள், ...