எல்லோரும் வாழ வேண்டும்.

அடுத்தாற்போல் இறங்கின இன்னோரு ஆண்ட்டி,அன்கிள் என்று உலகம் விரிந்து கொண்டே போனது.
ராதா அத்தையின் மகள் கிருஷ்ணா,
''கிருஷ்ணாவா'' என்று இன்னும் ஆச்சரியப்பட்டாள். பொண்களுக்குக் கிருஷ்ணான்னு பேரு வைப்பாளா பாட்டி, என்று தன் பாட்டியின் கைகளை உலுக்கினாள்.
வைப்பாம்மா. இந்த ராதா அத்தையின் மாமா பேரு என்ன தெரியுமா,கோவிந்தன்!'' என்று
சிரித்தாள்.
ஓஓஒ!!இன்னும் அகலமாகக் கண்ணும் வாயும் விரிந்தன பட்டுவுக்கு.
ராதா அத்தையின் பேரன்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
இரண்டு பெயர்கள் ஒவ்வொருத்தருக்கும்.
ஒரு பையன் 10 வயது இருக்கும் அவன் கைகளை நீட்டி'' ஹை ,ஐ யாம் நிதின் நிகொலஸ் கண்ணன்''
என்றான்.அடுத்த பையன் ''ஹை ஐ யாம் நிகில் நிகோலஸ் கண்ணன்'' என்றான். அவனுக்கு எட்டு வயது இருக்கும்.
மூணு பேரா உனக்கு என்று இருவரையும் கேட்டவள்,அவர்களுக்குத் தமிழ் தெரியுமோ என்ற கேள்வியோடு பாட்டியைப் பார்த்தாள்.
வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக்கலாம் வா என்று அனைவரும் ,
பாமா வாடகைக்கு எடுத்திருந்த இரண்டு பெரிய வண்டிகளில் ஸ்ரீரங்கம் நோக்கி விரைந்தனர்.
ஸ்ரீரங்கம் கோபுரம் கண்ணில் பட்டதும் கைகளை உயர்த்தி வணங்கிக் கொண்டாள், ராதா. அவள் செய்வதையே அவள் மருமகள் க்றிஸ்டினாவும், பேரன்களும் செய்தனர்.
நம் பக்க பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறாள் போலிருக்கிறது என்று அன்போடு தன் நாத்தனாரை நோக்கிய பாமா, தன் பேத்தி வந்திருக்கும் பையன்களோடு சரிசமமாக ஆங்கிலத்தில் வளவளப்பதைப் பார்த்துப் பூரித்தாள்.
எத்தனை நாட்களாச்சு இந்தக் கலகலப்பைக் கண்டு என்று மனம் நிறைந்தது.
ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரி தோட்டம் அருகில் வந்திருக்கும் புதுக் குடியிருப்பு வளாகத்தில் வண்டி நுழைவதைப் பார்த்து
கேள்விக் குறியோடு பாமாவைப் பார்த்தாள் ராதா. நம் வீட்டுக்குப் போகலையாப்பா? இங்க யரு இருக்கிறார்கள் என்றதும்,
இங்க ஒரு அபார்ட்மெண்ட் ஒரு மாதத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறேன் ராதா, உங்கள் அனைவருக்கும் இந்த இடம் சௌகர்யமாக இருக்கும். ஏசி,கொசு நெட் எல்லாம் போட்டிருக்கிறது.
தண்ணீரும் நிறைய வாங்கி வைத்திருக்கிறேன்.
குளியல் எல்லாம் முடித்துக் கொண்டு சாப்பிட நம் வீட்டுக்கு வந்துவிடலாம் என்றாள்.
நம்ம பாஷா ட்ராவல்ஸ் வண்டிதான். ட்ரைவர் ரொம்ப மரியாதையாக இருப்பார். கார் இங்கயே இருக்கட்டும்''
சரியா என்றபடி அவர்களை வீட்டை நோக்கி அழைத்துச் சென்றாள் பாமா.
ராதா ஒன்றும் சொல்லவில்லை.
படு நேர்த்தியாகக் கட்டப் பட்டிருந்த அந்தக் குடியிருப்பு இன்னும் வியப்பாக இருந்தது. நல்ல பாதுகாப்போடு
விசாலமான இடமாக இருந்தது. லிஃப்டில் பெட்டிகளை அடுக்கிக் கொண்டு முன்னே சென்று கதவைத் திறந்து வைத்து அவர்களுக்காகக் காத்திருந்தாள் பாமா.
இன்னும் அகலாத சிந்தனையோடு ராதாவும்,அவரவர் எண்ணங்களோடு மற்றவர்களும்
அந்த அபார்ட்மெண்டின் உள்ளே நுழைந்தார்கள். அங்கே காத்திருந்த ''சின்னப் பொண்ணு''வைப் பார்த்ததும் அவள் முகம்
மலர்ந்தது. ஏய் எப்படி இருக்கே. இன்னும் நம் வீட்டில் தான் வேலை செய்கிறாயா. உனக்குக் கல்யாணம் ஆகிக் குழந்தைகள் லாம் இருக்கா என்ற வண்ணம்,அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள்.
அவள் அணைப்பில் கூச்சத்தோடு நெளிந்த சின்னப் பொண்ணூ ,நீ நல்லா இருக்கியாப்பா,இதில்லாம் உன் பேரப் பசங்களா, வெள்ளைக்காரத் தொரை மாதிரி இருக்குங்களே'' என்றபடி அவர்களை நெருங்கி,''கண்ணூங்களா, நானும் உங்களுக்கு ஒரு ஆயா மாதிரித்தான்'' என்று அன்புடன் சிரித்தாள்.


14 comments:
todarattum raadha vijayam
நல்லாருக்கு வல்லிம்மா.
நல்லாப் போகுது. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.
வாங்க எல்கே. ராதா விஜயம் நல்ல படி இருக்கணும். நன்றி.
வாங்கப்பா சுமதி. நேத்தி பூராவும் பவர் துண்டிப்பில அவஸ்தை. உடனே பதில் எழுத முடியவில்லை. நன்றி.
ஆஹா .துளசி விடுமுறை ஒவரா!!
வாங்க வாங்க..
தொடரத்தான் வேணும். சொல்லவந்ததைச் சொல்லாமல் விடலாமா:)
இதையும் படித்து விட்டேன்.... ஏன் தனி ஜாகை என்று ராதாவைப் போலவே எனக்கும் மனதுக்குள் கேள்வி. பார்ப்போம்...ராதா தனி சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கிறார் போலும்...
வசதி எல்லாம் நல்லாவே செய்துகொடுத்துருக்காங்க .. ம்..
Good story telling ! A realistic narrative format with appropriate length and exposition. ஒரு செயற்கையோ பகட்டோ exaggeration இல்லாம, ஒரு artistic integrity ஓட மத்தவா like பண்ணணுங்கறத்துக்கில்லாம தன் மனசுல (bha)பாவமாவும் இயல்பாவும் வந்த நடப்புகளா தெரியறது. இதுல நீங்க ஒரு character ஓ வல்லியம்மா?
ஆமாம் ஸ்ரீராம்,இனிதான் விவரம் தெரியும்:) பேரனுக்குச் சொல்லும்போது ஏம் ,பாட்டி? அப்படீன்னு ஒரு கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பான். அதைப் போல நானும் பதில் சொல்கிறேன்:)
நல்ல வசதியான இடம்தான். நாங்க கூடப் போயிருக்கோம் முத்துலட்சுமி. ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட் டைப்.
ஹை ஜயஷ்ரீ.
தான்க்ஸ்மா.
எனக்கு வேற விதமா சொல்லத்தெரியாதுங்கறதுதான் மெயின் பாயிண்ட்:)
இப்பக் கூட ஏதாவது பசங்க க்ட்ட சொல்கிறதுக்கு முன்னால அவங்களுக்குப் பொறுமையே போயிடும். அவ்வளவு நிதானமா அடியிலிருந்து முடி வரை சொல்லப் போய்,அம்மா,ப்ளீஸ் கம் டு த பாயிண்ட்'அவங்க சொன்னாட்டும்,நீளும் என்
டயலாக்:)
இல்லை இந்தக் கதையில நான் கிடையாது. .கேள்விப்பட்டதுல கற்பனை சேர்த்திருக்கிறேன்.அவ்வளவுதான்பா.
மறுபடி படிச்சேன், ஸ்ரீரங்கமும், கோபுரமும், அந்தப் பெரிய வீடும் கண்ணிலே வந்துட்டுப் போச்சு!
அன்பு கீதா, அந்த வீடு நிஜமாவே இருந்தது.
Post a Comment