

இருபத்தேழு கிலோவோட எமிரேட்ஸ் வண்டி ஏறினோமா. அதுல ரொம்ப முக்கிய விஷயம் சாப்பாடுதான். உண்மையாவே நல்லா இருந்தது.ரசிச்சுச் சாப்பிட்டேன்.சென்னை வந்துடுத்து.லக்கேஜ் கிடைக்க ஒரு மணி நேரம் ஆச்சு. கஷ்டம் ஆபீசர்கள் சிரித்துச் சந்தோஷப் படுத்தினார்கள்.:)கிட்டத்தட்ட 50 படங்கள் ஆப்ஷன் கிடைச்சுது. ஒண்ணே ஒண்ணுதான் பார்த்தேன். நல்ல ஏர்லைன் தான். பாகேஜ் அதிகப் படுத்தினாங்கன்னா நல்லா இருக்கும்.
வீட்டுக்கு வந்தோம். பூட்டுத் திறக்க முடியவில்லை:)
மழையில் துரு பிடித்திருந்தது.
ஏற்கனவே
ஏற்பாடு செய்தபடி நீல்கிரீஸ் நெஸ்டில் இரு இரவுகள் தங்கள். டெலிபோன் கனெக்ஷன், டிவி கனெக்ஷன், இன்வெர்டர் ஆன் செய்தல். மளிகை பொருட்கள்.
அப்பாடி என்ன விலை.
வீட்டைத் திறந்ததும் தாக்கியது எலி நாற்றம்.
ஓஹோ இவங்க குடி வந்திருக்காங்களான்னு கேட்டு, ஜாக்கிரதையாக
ஒவ்வொரு அறையாகத் திறந்தோம்.
எதிர்பார்க்¸kaaத இடங்களில் அவை இறந்தே இருந்தன.
பிறகு தான் தெரிந்தது வேறு வீட்டில் வைத்த விஷத்தை உண்டு
இங்க வந்து இறந்திருக்கின்றன.:(
இதன் விபரீத பிற்பலன்களை எண்ணி இன்னும் பயமாக இருந்தது.
வீட்டின் மற்ற இடங்களையும் புத்தகங்களையும் ஒழித்துக் கொண்டு இருக்கிறோம்.
இணைய இணைப்பு நேற்றுதான் கிடைத்தது.
இதோ இன்றுவரையான விஷயங்களை எழுதியாச்சு.
இனிமேல்தான் மற்றவர்களின் பதிவுகளைக் கண்டு மகிழணும்.
எல்லோருக்கும் வணக்கம்.