Monday, December 15, 2008

வந்தோம்ம்ம்ம்
இருபத்தேழு கிலோவோட எமிரேட்ஸ் வண்டி ஏறினோமா. அதுல ரொம்ப முக்கிய விஷயம் சாப்பாடுதான். உண்மையாவே நல்லா இருந்தது.ரசிச்சுச் சாப்பிட்டேன்.சென்னை வந்துடுத்து.லக்கேஜ் கிடைக்க ஒரு மணி நேரம் ஆச்சு. கஷ்டம் ஆபீசர்கள் சிரித்துச் சந்தோஷப் படுத்தினார்கள்.:)
கிட்டத்தட்ட 50 படங்கள் ஆப்ஷன் கிடைச்சுது. ஒண்ணே ஒண்ணுதான் பார்த்தேன். நல்ல ஏர்லைன் தான். பாகேஜ் அதிகப் படுத்தினாங்கன்னா நல்லா இருக்கும்.வீட்டுக்கு வந்தோம். பூட்டுத் திறக்க முடியவில்லை:)
மழையில் துரு பிடித்திருந்தது.
ஏற்கனவே
ஏற்பாடு செய்தபடி நீல்கிரீஸ் நெஸ்டில் இரு இரவுகள் தங்கள். டெலிபோன் கனெக்ஷன், டிவி கனெக்ஷன், இன்வெர்டர் ஆன் செய்தல். மளிகை பொருட்கள்.
அப்பாடி என்ன விலை.

வீட்டைத் திறந்ததும் தாக்கியது எலி நாற்றம்.
ஓஹோ இவங்க குடி வந்திருக்காங்களான்னு கேட்டு, ஜாக்கிரதையாக
ஒவ்வொரு அறையாகத் திறந்தோம்.
எதிர்பார்க்¸kaaத இடங்களில் அவை இறந்தே இருந்தன.
பிறகு தான் தெரிந்தது வேறு வீட்டில் வைத்த விஷத்தை உண்டு
இங்க வந்து இறந்திருக்கின்றன.:(
இதன் விபரீத பிற்பலன்களை எண்ணி இன்னும் பயமாக இருந்தது.
வீட்டின் மற்ற இடங்களையும் புத்தகங்களையும் ஒழித்துக் கொண்டு இருக்கிறோம்.
இணைய இணைப்பு நேற்றுதான் கிடைத்தது.
இதோ இன்றுவரையான விஷயங்களை எழுதியாச்சு.
இனிமேல்தான் மற்றவர்களின் பதிவுகளைக் கண்டு மகிழணும்.
எல்லோருக்கும் வணக்கம்.

24 comments:

வல்லிசிம்ஹன் said...

இன்னும் நிறைய சமாசாரங்கள் இருந்தாலும், வீடு நிதானத்துக்கு வந்ததும் தொடரலாம். அதுவரை நீங்கள்,நிம்மதியாக இருக்கலாம்:)

ராமலக்ஷ்மி said...

//வந்தோம்ம்ம்ம்//

வாங்க வாங்க. வணக்கம்ம்ம்ம்.

நிதானமாக செட்டில் ஆகுங்க:)!

துளசி கோபால் said...

Take your own time.

அதெல்லாம் ரெண்டு நாளில் ஒழி(ளி)ச்சுக் கட்டிறலாம்.

நோ ஒர்ரீஸ்.

டேக் கேர்:-)

இலவசக்கொத்தனார் said...

வந்து சேர்ந்தாச்சா!! குட் குட்!!

சந்தனமுல்லை said...

நல்வரவாகுக...எங்கே ரொம்ப நாளா புது பதிவு காணோமேன்னு நினைச்சேன்..போட்டுட்டீங்க!!

ஆயில்யன் said...

//வந்தோம்ம்ம்ம் //


வல்லியம்மாவுக்கு வந்தனம் தந்தோம்ம்ம்ம்ம்ம்! :)))

ஆயில்யன் said...

//ஒவ்வொரு அறையாகத் திறந்தோம்.
எதிர்பார்க்¸kaaத இடங்களில் அவை இறந்தே இருந்தன.
பிறகு தான் தெரிந்தது வேறு வீட்டில் வைத்த விஷத்தை உண்டு
இங்க வந்து இறந்திருக்கின்றன.:(
இதன் விபரீத பிற்பலன்களை எண்ணி இன்னும் பயமாக இருந்தது.
//

மற்ற இடங்களில் எலி மருந்துகளை தின்று விட்டு எங்காவது பரண் பக்கம் வந்து பிராணனை விட,அதை கண்டுபிடிச்சு கிளியர் பண்றது ரொம்ப கஷ்டமான வேலை :((

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா. ராமலக்ஷ்மி.
ரொம்ப நிதானமா செயல் படறோம்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி.ஜிகே எப்படி இருக்கான்.

அதேதான் நோ வொரீஸ்.
வொரி செய்தா மட்டும் .....:)
தான்க்ஸ்பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ். வந்தாஆஆச்சு.
இனிமே மெயில் எல்லாம் பிரிச்சுப் பார்க்கணும்.
எலி ஒழிப்பு ஆட்களைக் கூப்பிடணும்:)

நானானி said...

தொம்தொம்...வந்தொம்!!!அப்பாடி.....!

நான் என் நாத்தனாரிடம் வீட்டுச் ச்சாவியை கொடுத்து விட்டு வேலைக்காரியையும் ஞாயிற்றுக்கிழமைதோறும் வரச் சொல்லி நாத்தனார் மேற்பார்வையில் வீட்டை பெருக்கி சுத்தம் செய்து வைக்கும் படி ஏற்பாடு செய்து விட்டுத்தான் இரு முறையும் போனேன். நீங்களும் அதே போல் செய்யுங்கள். திரும்பி வரும் போது வீடு வீடாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சந்தனம்.
ஒரு வாரமாச்ச்சு தரையில் கால் வைக்க.
அவ்வளவு அழுக்கு.
இணையம் இப்பத்தான்பா கிடைச்சுது.


ஒரு வழியாகிட்டேன்:)

கீதா சாம்பசிவம் said...

mmmmm?????நானானி சொல்றாபோல் தான் நாங்களும் செய்யறோம், என்றாலும் எலி வரதுக்கு வேலைக்காரியைக் கேட்கிறதில்லை. அது இஷ்டம் உள்ளே வரும், போகும் இல்லையா? எங்க வீட்டிலே நாங்க போனப்போ கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்திப் பிள்ளை, குட்டியோட இருந்தது. வெளியே அனுப்பவே கஷ்டமா இருந்தது. பிள்ளைத் தாச்சினு பாவமா இருந்தது. வேறே வழி இல்லாமல் அனுப்பினோம். என்ன செய்யறது? அதுக்கும் இடம் வேணுமே? அது மட்டும் குடும்பம் நடத்த வேண்டாமா?

ambi said...

வாங்க வாங்க.
நிதானமாக செட்டில் ஆகுங்க :))

we will wait, no probs. :)

நாகை சிவா said...

வாங்குற காசுல படமாச்சும் காட்டுறாங்களே என்று சந்தோஷப்பட்டுக்கு வேண்டியது தான்..

நல்லப்படியா வந்தாச்சு... அந்த எலிய விரட்டிட்டு கணிப்பொறி எலியை பிடிங்க :)

சதங்கா (Sathanga) said...

//வாங்க வாங்க.
நிதானமாக செட்டில் ஆகுங்க :))//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

மெல்ல வாங்க, நிறைய பதிவுகள் வெய்ட்டீஸ்ஸ்ஸ்ஸ் :)))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி,

நாங்களும் பக்கத்து வீட்டில சாவி கொடுப்போம். நாங்கள் கிளம்பும் அன்று இரண்டு பக்கத்து வீட்டார்களுக்கும் அவசர வேலை. நிலைமை சரியில்லை. இரவு பனிரண்டு மணிபோல் கிளம்பினோம். அணுகுவது சரியாக இருக்காது என்று கிள்ம்பிட்டோம்.
சாமிதான் பார்த்துக் கிட்டார் வீட்டை:)
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

ஆயில்யன், எந்தக் கதையைச் சொல்ல எதை விட.
எலிகள் ஓடியிருந்தால் கூட சேதம் இல்லை. இந்த மாதிரி இறந்து கிடந்தது பயமாகை விட்டது. இப்போது அதற்கான மாற்றுகளைச் செய்து கொண்டு இருக்கிறோம்.

நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. எலிக்களைக் குறை சொல்லி என்ன பிரயோசனம். அது வந்து போகட்டும். அதனால் வரும் பின் விளைவுகள் ,குழந்தை குட்டிகள் வரப்போகும் இடத்தில் இந்த வியாதி வெக்கை வராம சுத்தமா வைக்கணுமே. அதான் கவலை.

மத்தபடி வெள்ளம்,தண்ணீர் எல்லாம் நம்மளைப் படுத்தலியே:)

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
வரணும் வரணும்.

பங்களூறூ குளிர் பாப்பாவுக்கு ஒத்துக்கறதா.
இந்தப் பக்கம் வரும்போது வீட்டுக்கு வரணும்.
கேசரி செய்து வைக்கிறேன். சரியா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்ப்பா சிவப்புலி:)

ஆமாம் அதென்னவோ இந்தத் தடவை ஏமிராட்ஸ் நல்லாவே உபசாரம் செய்தாங்க.

டர்புலன்ஸ் இல்லை.
எலிகள் இப்ப இல்லை. சுத்தம் செய்யற வேலை நடக்குது. சரியாகிவிடும்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சதங்க. உங்களையெல்லாம் பார்க்கலியேன்னு தோணும்.பரவாயில்லை.
வீட்டு வேலைகாள் அதிகமா இருக்கறதுனால அப்பப்ப வந்து எட்டிப் பார்க்கறேன்.

கட்டாயம் உங்க பதிவு படிக்கணும்.
நலமா இருங்க.

கோபிநாத் said...

;))

வல்லிசிம்ஹன் said...

நன்றிம்மா கோபி.