வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்
எதிர்பாராமல் நடப்பது 5
மாலாவுக்கும் மாதவனுக்கு சிறிய வயதிலிருந்து
நட்பு உண்டு. கோவில்கள்,கடற்கரை ,மஹாபலிபுரம் என்று
மாமா,பாட்டியுடன் சுற்றிய வருடங்கள் பல. மாமா ஸ்ரீநிவாசன்,மாமி பத்மா
இருவருமே மிக அருமையாக அவளிடம் அன்பைப் பொழிவார்கள்.
பாட்டிம்மா மூவரையும் சேர்த்துக் கொண்டு
கதை சொல்வது, கைகளில் அமுது படைப்பது என்று
செல்லமாகவே வளர்த்தாள் . ராமன், சீதை,லக்ஷ்மணன் என்று
அலங்காரம் செய்து மகிழ்வாள்.
இதெல்லாம் பத்து,பன்னிரண்டு வயது வரைதான் .
அவரவர்களுக்குப் படிப்பு, பாட்டு,நடனம் என்று
தங்களை வளர்த்துக் கொள்ள ஈடுபடும் பொது சந்திப்புகளும் குறைந்தன.
மாதவன் டென்னிஸ் விம்பிள்டன் ராமநாதன் கிருஷ்ணனிடத்தில் பயின்று நன்றாக விளையாட ஆரம்பித்தான்.
அவனும் தம்பி கேசவனும் இரட்டையர் போல் பல ட்டூர்னமெண்ட்களில் வாங்கிய வெள்ளி கோப்பைகள்
அவர்கள் பெற்றோருக்கு அளவில்லாத ஆனந்தம்
கொடுத்தது.
மாலா பிறந்த போது ஏமாந்தது இவர்கள் தான். இபோது போல 21 ஆம் நூற்றாண்டு இல்லையே.
ஆணா கப் பிறந்திருந்தால் அரசாளும் நட்சத்திரம். பெண்ணாகி விட்டதே
என்று பெருமுட்டுச்சு விட்டாள் மதனி வைதேஹி.
மாலாவிடம் அதிக அன்பு காட்டினாலும் தன மகனுக்கு அவளைத் திருமணம் செய்யும் எண்ணம் எழவே இல்லை.
பொன்னா இதை நன்றாக உணர்ந்தாள்.
இப்பொழுது இங்கு வந்திருக்கும் மாதவனின் நல்ல குணம் நடவடிக்கை
எல்லாம் காணும் போது அவள் மனம்
இந்த ஜோடி சேர்ந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அனைவரும் சாப்பிட உட்கார்ந்த பொது,
சின்னவர்கள் உட்கார பெரியவர்கள் பரிமாறினார்கள்.
ஒரே குதுகலமாக நேரம் சென்றது.
பிரசாத் ,கல்லூரியில் நடக்கும் நகைச்சுவை காட்சிகளை சொல்லச் சொல்ல
பெண்களிடையே சிரிப்பு பரவியது.
மாதவன் சாப்பிடும் இலையிலிருந்து கண்ணே எடுக்கவில்லை.
மாலா அவனைக் கிண்டல் செய்தாள் .
சாப்பாட்டு ராமன் தெரியும் . இப்போதுதான் மாதவனைப் பார்க்கிறேன்
எனவும் அவனுக்கே சிரிப்பு வந்து விட்டது.
இன்று முழுவதும் நாங்கள் நடந்த நடைக்கு இன்னும் ஒரு
தடவை கூடச் சாப்பிடுவேன் என்று சிரித்தான்.
பெண்ணை உறுத்து விழித்தாள் பொன்னா .
கொஞ்சம் பேசிக்கொண்டே சாப்பிடட்டும் என்று கேட்டேன் மா. சரி மாது.
உன்னைச் சொன்னால் உன் அத்தைக்குப் பிடிக்கவில்லை.
சினிமா எல்லாம் பார்ப்பீர்களா என்று ஆரம்பித்தாள்.
உடனே பிரசாத் அவனுக்கு சிவாஜி படம் எனக்கு எம்ஜிஆர்.
எனக்காகப் பணக்காரக் குடும்பம் போன வாரம் பார்க்கவந்தான்.
அதில் அவனுக்கு மிகவும் பிடித்தது
அந்த டென்னிஸ் பாட்டுதான்.
சகோதரிகள் மூவரும் பறக்கும் பந்து பறக்கும் என்று
பாட ஆரம்பித்தனர்.
இளைஞர்கள் இருவரும் ஆச்சரிய பட்டார்கள்.
மதுரைக்கும் அந்த சினிமா வந்துவிட்டதா என்றனர்.
ஏன் எங்க மதுரை என்ன குக்கிராமமோ.
எல்லாப் படமும் வந்து விடும்.
என்று அரட்டை நீள
பொன்னா தான் முற்றுப்புள்ளி வைத்தாள் .
நாளைக்கு மதியம் வாருங்களேன் என்று அழைக்க
அவர்கள் நண்பர்களோடு வத்தலகுண்டு வரை போய் வருவதாகத் திட்டம்
வர இரவாகிவிடும். அடுத்த நாள் சென்னை கிளம்ப வேண்டும் என்றனர்
இருவரும்.
ஒரு நொடியில் மாலாவின் முகம் வாடியது.
அதையும் கவனித்தான் மாதவன்.
பெற்றோர் சொல்லாவிட்டாலும் அவன் நிலைமையை ஓரளவு யூயூகித்து இருந்தான்.
அவன் மனதிலும் வெறுமை சூழ்ந்தது.
பொன்னாவுக்கு, அவனது வத்தலகுண்டு உறவினர்களைத் தெரியும்.
தன் மதனியின் பெற்றோர் அங்கு இருப்பதும், அவர்கள் வீட்டிலும்
ஒரு பெண் ,அவனுக்கு ஏற்ற திருமண வயதில் இருப்பதும்
அவள் அறிந்திருந்தாள் .
சரிம்மா நாம் பிறகு சந்திக்கலாம். இந்த பழங்கள்
எடுத்துக் கொண்டு போ. இங்கே தோட்டத்தில் விளைந்தது என்று சப்போட்டா, கொய்யா, ஆரஞ்சுப் பழங்களை
பையில் போட்டுக் கொடுத்தாள் .
அங்கே வெறும் கையோடு போக வேண்டாம் என்றதும் சிரித்தபடியே அத்தையை அனைத்துக் கொண்டான் மாதவன்.
ஹே மாலா, எந்தக் கல்லூரி என்று எனக்குத் தெரிவியுங்கள்.
படிப்பிலும் கவனம் தேவை என்றபடி விடை பெற்றான்.
பிரசாத் எதோ முணுமுணுப் பதைக் கண்டு என்னடா என்றான்.
//ஒரு பெண்ணை ப் பார்த்து நிலவை ப் பார்த்தேன் என்று வான நிலவைக் காட்டினான்.
ஆமாம் அழகுதான் தொட முடியாது என்ற மாதவனின் குரல் கம்மியது.
எல்லோரும் வளமாக வாழவேண்டும்
| Add caption |