எல்லோரும் நலமுடன் வாழ்க. வயதானவர்கள் (சீனியர் இல்லை)
தினம். அக்டோபர் 1.
வயதான வயதாகிக் கொண்டிருப்பவர்கள் தினம் இன்று அக்டோபர் 1.
பக்கத்தில் இருக்கும் சீனியர் சிடிசன் இல்லம்.
ஒரே விழாக்காலம் பூண்டிருக்கிறது.
இரு 90 வயது கணவர்கள் மனைவிகளின் திருமண நிறைவு நாள்
காலம். அறுபது வயது காலம் ஒன்று சேர்ந்து
வாழ்ந்தவர்களின் சிறப்பு நாள்.
நாங்கள் வெளியே செல்வதானால் அவர்களைத் தாண்டி தான் செல்ல வேண்டும்.
மாலை வேளையில் பலவித வண்ண பலூன்கள் பறந்து கொண்டிருந்தன.
வீதி முழுவதும் சின்ன பெரிய கார்கள்.
குழந்தைகளின் ஆரவாரங்கள். ஒரு இரண்டு மணி நேரம் தெருவெங்கும் கலகலப்பு.
ஒரு அலங்கரிக்கப் பட்ட நீளமான வண்டியில்தம்பதிகளை உட்காரவைத்து
உத்சாகமான ஹார்ன் (ஒலி எழுப்பான்?) ஒலிக்க ஆறு வீதிகளையும் வலம் வந்தார்கள்.
பங்கெடுத்து ஒரு பிரம்மாண்டமான அலங்காரத் தடுப்புகள் வைத்து நாற்காலிகள் அமைத்து நடுவே பெரிய கேக் கும்
வைத்திருந்தார்கள். தெரிந்தவர் தெரியாதவர் என்று பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
எல்லாவற்றையும் கண்டு களித்துக் கொண்டிருந்த
அந்த முதியவர்களைக் காணவே மனம் நிரம்பியது.
அந்த[ ப்ளிமத் காரும் அதன் இசைக்கும் ஹார்னும் மனசை விட்டு அகலவில்லை. வாழ்க வையகம். வாழ்க முதியோர்.
No comments:
Post a Comment