இலை கேட்டது பூவிடம் உதிரமல் இருக்க எங்க கற்றாய் பூவக்கா
இருபத்தெட்டு ஆண்டுகளும்
கடந்தாச்சு தங்கச்சி.
என்னை முதலில் நட்ட போது இந்த இடம் கட்டாந்தரை.
கட்டாந்தரையைப் பண்படுத்த வந்த வீட்டுத் தலைவருக்குத்
தன் அருமைப் பாட்டியின் ஆசையான அழகுத் தோட்டத்துக்கு
ஒரு உரு கொடுக்க ஆசை.
உதவிக்கு வந்த மனைவி காலில் கடப்பாறையைக்
காலில் போட்டுக் கொண்டதும் அவள்
பார்வையாளராக நின்றுவிட்டாள்.:0)
நான்தான் வெய்யில் விரும்பி .
அதற்கு ஏற்ற திசையில் என்னை நட்டார் என் நண்பர்.
முத்லில் குத்தும் முட்கள் குழந்தைகளை வருத்தினாலும்
நான் வளர வளர என்பூக்களின் அழகு
அவர்களுக்குப் பிடித்துவிட்டது
நான் வளரஅவர்களும் வளரப்
பலவகைப் பருவங்களைக் கடந்தோம்.
எங்கவீட்டு அம்மா பூஜாடிகளை அலங்கரிக்க அவ்வப் போது என்னிடம் உத்திரவு பெற்றுக் கொண்டு
பூக்களை அள்ளிச் செல்வாள்.
ஜன்னல் வழியாக நானும் எட்டிபார்ப்பேன்.
என் குழந்தைகள் பத்துநாட்கள்
வரைத் தாக்குப் பிடிக்கும்.
அம்மா தாண்ணீரையும் கொஞ்சம் உப்பும் கலந்து
இரு நாளுக்கொரு முறை மாற்றுவார்.
அவைகள் வாடும் தருணம் வந்தால் எஜமானருக்கு மனம் வாடும். இனிமேல் பூக்களை எடுக்க வேண்டாம்மா.
பாவம் அவைகள் என்று சொல்லிவிட்டார்.
இப்போது எனக்கும் வயசாகிவிட்டது. அவர்களுக்கும் வயசாகிவிட்டது.
புதிதாக இலைகளும் பூக்களும் வருவதால்
என் இளமை என்றும் குறைவதில்லை.
இரண்டு மாடியேறி என் பழைய கிளைகளை
அழகாக எடுத்துவீட்டு எனக்கு வேண்டும் என்கிற
கம்பி சட்டங்கள் வைத்துப் பராமரிக்கும் போது
எனக்கென்ன கவலை.
நீ புதிதாக வந்திருக்கிறாய்.
கவலைப் படாதே. நீயும் பூத்துக் காய்த்து
நன்றாக இருப்பாய்.
நல்ல இடம் தேடி வந்தால் எல்லாம் நன்மையே.
