Showing posts with label பொம்மைகள். Show all posts
Showing posts with label பொம்மைகள். Show all posts

Thursday, September 03, 2009

துளசி மகிமை














இன்னும் ஊறுகாய் சாப்பிடறியா பாட்டி?'
இல்லை கண்ணா , வயத்துக்கு ஒத்துக்கலைம்மா.''
இது நான். முதல் வரி முதல் பேரனோடது. இன்று பிறந்தநாள் அவனுக்கு.
குழந்தை ஆரோக்கியமும் அறிவும் பெருக தீர்க்காயுசுடன் மகிழ
இறைவனை இறைஞ்சுகிறேன்.
சின்னவன் செய்த கூத்து அடுத்தது. அவனுக்கு அடிக்கடி சளித்தொல்லை வருவதால் அவன் அம்மா துளசி இலைகளைப் பறித்து கஷாயம் செய்து கொடுப்பாள்.
அதில் அவனுக்கு நிவாரணமும் கிடைக்கும். அவனுக்கு ஏதாவது தொந்தரவு என்றால் அம்மா துளசி என்று கேட்கிற அளவுக்கு அவங்க வீட்டில் துளசிக்கு மகிமை:)
அவன் ஊருக்குக் கிளம்பும் நாளில் நம் துளசியும் வந்திருந்தார்கள்.
ஒரு சின்ன கிருஷ்ணர் பொம்மையை அடையாளப் பரிசாகக் கொடுத்தார்கள்.
இது நடந்து 22 நாட்கள் ஆயாச்சு.
சிகாகோ சென்றதும் தான் கொண்டு போன கிருஷ்ணரை அவர் இருந்த கைப்பையோடு ,வேறு சில பொம்மைகளோடு அவள் வைத்திருக்கிறாள்.
இந்த்ச் சின்னவன் அதைத் தேடி இருக்கிறான்.
அம்மா, அந்தப் பொம்மை எங்க. கிஷாவோட பொம்மை என்று கேட்டு இருக்கிறான்.
பெண்ணுக்குத் தன்னைப் பற்றிச் சொல்லுகிறானா, இல்லை ஒரிஜினல் கிருஷ்ணனைத் தேடுகிறானா என்று தெரியவில்லை:)
எதுடா, என்று கேட்டதும்
''அதான் அந்த ஆண்ட்டி கொடுத்தாங்களே, அந்தச் செடி ஆண்ட்டி'' என்று சொல்லி இருக்கிறான்.
என்னது செடி ஆண்ட்டியா. யாரும் செடி கொண்டு வரவில்லையே. இவன் யாரைச் சொல்கிறான்.???
யாரும்மா என்று இவள் கேட்க, பாட்டியோட ஃப்ரண்ட்மா, செடி ஆண்ட்டி
கிஷாக்கு, கிஷா கொடுத்தாரே என்று சொல்லி
வற்புறுத்தவும், இவளுக்கு புரிந்தது. துளசி ஆண்ட்டியா என்று கேட்டு இருக்கிறாள்.
அதற்கு அவனுக்கு சிரிப்பு வந்து விட்டதாம்.
அப்பாவிடம் சொல்லி சொல்லி சிரிக்க, வந்தவர்களும் துளசி மகிமையை எண்ணி ,இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறாற்கள்.:)))
18 ஆம்தேதி ஆரம்பிக்கப் போகும் நவராத்திரிக்கு முன்னோடியாக இந்தப் படங்கள். புதிதாக வாங்கிய கொலு பொம்மைகள். காதியில் கொட்டிக் கிடக்கிற அழகு பிம்பங்கள்.










எல்லோரும் வாழ வேண்டும் நாம் எல்லோரும் வாழ வேண்டும்.

























































அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...