Blog Archive

Thursday, September 03, 2009

துளசி மகிமை














இன்னும் ஊறுகாய் சாப்பிடறியா பாட்டி?'
இல்லை கண்ணா , வயத்துக்கு ஒத்துக்கலைம்மா.''
இது நான். முதல் வரி முதல் பேரனோடது. இன்று பிறந்தநாள் அவனுக்கு.
குழந்தை ஆரோக்கியமும் அறிவும் பெருக தீர்க்காயுசுடன் மகிழ
இறைவனை இறைஞ்சுகிறேன்.
சின்னவன் செய்த கூத்து அடுத்தது. அவனுக்கு அடிக்கடி சளித்தொல்லை வருவதால் அவன் அம்மா துளசி இலைகளைப் பறித்து கஷாயம் செய்து கொடுப்பாள்.
அதில் அவனுக்கு நிவாரணமும் கிடைக்கும். அவனுக்கு ஏதாவது தொந்தரவு என்றால் அம்மா துளசி என்று கேட்கிற அளவுக்கு அவங்க வீட்டில் துளசிக்கு மகிமை:)
அவன் ஊருக்குக் கிளம்பும் நாளில் நம் துளசியும் வந்திருந்தார்கள்.
ஒரு சின்ன கிருஷ்ணர் பொம்மையை அடையாளப் பரிசாகக் கொடுத்தார்கள்.
இது நடந்து 22 நாட்கள் ஆயாச்சு.
சிகாகோ சென்றதும் தான் கொண்டு போன கிருஷ்ணரை அவர் இருந்த கைப்பையோடு ,வேறு சில பொம்மைகளோடு அவள் வைத்திருக்கிறாள்.
இந்த்ச் சின்னவன் அதைத் தேடி இருக்கிறான்.
அம்மா, அந்தப் பொம்மை எங்க. கிஷாவோட பொம்மை என்று கேட்டு இருக்கிறான்.
பெண்ணுக்குத் தன்னைப் பற்றிச் சொல்லுகிறானா, இல்லை ஒரிஜினல் கிருஷ்ணனைத் தேடுகிறானா என்று தெரியவில்லை:)
எதுடா, என்று கேட்டதும்
''அதான் அந்த ஆண்ட்டி கொடுத்தாங்களே, அந்தச் செடி ஆண்ட்டி'' என்று சொல்லி இருக்கிறான்.
என்னது செடி ஆண்ட்டியா. யாரும் செடி கொண்டு வரவில்லையே. இவன் யாரைச் சொல்கிறான்.???
யாரும்மா என்று இவள் கேட்க, பாட்டியோட ஃப்ரண்ட்மா, செடி ஆண்ட்டி
கிஷாக்கு, கிஷா கொடுத்தாரே என்று சொல்லி
வற்புறுத்தவும், இவளுக்கு புரிந்தது. துளசி ஆண்ட்டியா என்று கேட்டு இருக்கிறாள்.
அதற்கு அவனுக்கு சிரிப்பு வந்து விட்டதாம்.
அப்பாவிடம் சொல்லி சொல்லி சிரிக்க, வந்தவர்களும் துளசி மகிமையை எண்ணி ,இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறாற்கள்.:)))
18 ஆம்தேதி ஆரம்பிக்கப் போகும் நவராத்திரிக்கு முன்னோடியாக இந்தப் படங்கள். புதிதாக வாங்கிய கொலு பொம்மைகள். காதியில் கொட்டிக் கிடக்கிற அழகு பிம்பங்கள்.










எல்லோரும் வாழ வேண்டும் நாம் எல்லோரும் வாழ வேண்டும்.

























































26 comments:

Anonymous said...

செடி ஆண்டி பேர் சூப்பர். நமக்குத்தோணாதது குழந்தைகளுக்கு தோணுது :)

துளசி கோபால் said...

ஆஹா....... 'மகிமை' புரிஞ்சாச் சரி:-)))))))

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா சின்ன அம்மிணி.
இன்னிக்கு நான் யாருப்பா
பாப்பாக்கு பொம்மை கொடுத்தது என்று கேட்டபோது ,துளசி தான்னு தெளிவா சொல்கிறான்.
துளசி அண்ட்டியா ன்னால் ஆமா ஆமா என்று வண்ணவணயமாச் சொல்கிறான். அன்னிக்குக் கேட்டச் சொல்லவில்லையேன்னதும் இப்பதான் ஞாபகம் வந்ததுன்னு சொல்கிறான்:)
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

மகிமை புரியாமலியா இவ்வளவு கொண்டாடறோம்:)
இன்னிக்கு நீங்க துளசி ஆண்ட்டி ஆயாச்சு.
அன்னிக்கு ஞாபகம் வரலியாம்:)

Geetha Sambasivam said...

துளசியின் மணம் எங்கும் வீசும்!

Geetha Sambasivam said...

அட, என்னோட டாஷ்போர்டிலே தான் தெரிஞ்சது, முதல் பேரனுக்குப் பிறந்த நாள்னு. பிறந்த நாள் வாழ்த்துகளும், ஆசிகளும் எங்கள் சார்பாச் சொல்லிடுங்க. ஃபாண்டை மாத்துங்க, சரியாப் படிக்க முடியலை, அதான் தெரியலை, முதல்லே! :)))))))

மெளலி (மதுரையம்பதி) said...

குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
துளசி ஆண்டியின் மகிமைக்கு ஒரு 'ஜெ' :)

துளசி கோபால் said...

//ஆண்டி..//

ஆண்டி ஆனதென்ன ஆறுமுகா!!!!!

குமரன் (Kumaran) said...

:-)

குழந்தைகளுக்கு வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா. குழந்தைகிட்ட சொல்லிடறேன்.
ஃபாண்ட் மாத்தற மாயம் தெரியவில்லை.
டெம்ப்ளேட் மாற்றினால் தமிழ்மணம் பதிவு போய்விடுகிறது!!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி மௌலி.
ஆண்ட்டி மகிமை அடுத்த பின்னூட்டம் பாருங்க.

வல்லிசிம்ஹன் said...

நன்றி குமரன். நிறைய நாட்கள்
கழித்துப் பார்ப்பது
நிறைவாக இருக்கிறது.

மாதேவி said...

குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.செடி அன்ரி வாவ் நைஸ்.

இலவசக்கொத்தனார் said...

செடி ஆண்டியா? ரீச்சர்ன்னு சொல்லித் தரலையா?

பையன் நல்லா இருக்கட்டும்! :)

ஆயில்யன் said...

//அதான் அந்த ஆண்ட்டி கொடுத்தாங்களே, அந்தச் செடி ஆண்ட்டி'' என்று சொல்லி இருக்கிறான்.
என்னது செடி ஆண்ட்டியா. யாரும் செடி கொண்டு வரவில்லையே. இவன் யாரைச் சொல்கிறான்.???
யாரும்மா என்று இவள் கேட்க, பாட்டியோட ஃப்ரண்ட்மா, செடி ஆண்ட்டி
கிஷாக்கு, கிஷா கொடுத்தாரே என்று சொல்லி
வற்புறுத்தவும், இவளுக்கு புரிந்தது. துளசி ஆண்ட்டியா என்று கேட்டு இருக்கிறாள்.//


அட நம்ம செடி டீச்சர் பத்திதான் அம்புட்டு ஞாபகம் வைச்சு பேசியிருக்கா குட்டீஸ் :))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி. குழந்தையிடம் சொல்லுகிறேன்.
சின்னவனுக்கும் புதுப் புது பெயர் வைப்பதில் மிகவும் ஆசை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் கொத்ஸ்.
அவனுக்கு டீச்சர் இன்னும் அறிமுகமாகவில்லை.

ப்ளே ஸ்கூல் தானே. மிஸ் கேதரின் தான் தெரியும்.

வாழ்த்துகளுக்கு நன்றி. இரவு அரட்டையின் போது சொல்லிவிடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஆயில்யன்,
துளசி என்றும் துளசிதான்.
மணம்,குணம் நிறைந்த அருமருந்து.
அவனுக்கு அப்போ தோன்றியதைச் சொல்லி இருக்கிறான்.

துளசியை ஆலமரம்னு கூட சொல்லலாம்.எல்லாருக்கும் வரலாறு சொன்னதால்.

குப்பன்.யாஹூ said...

nice post, but with the back ground color its difficult to read the text

கோபிநாத் said...

குட்டி பையனுக்கு வாழ்த்துக்கள் ;)

\\அந்தச் செடி ஆண்ட்டி'' \\

சூப்பரு..டீச்சர் என்பதை விட இந்த பெயர் அட்டகாசம் ;))

கோமதி அரசு said...

முதல் பேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

துளசியின் மகிமையை குட்டிப்பேரனும்
அறிந்து வைத்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

நவராத்திரி பொம்மைகள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமதி.
நன்றி. வாழ்த்துகளைச் சொல்லிடறேன். துளசியை அவனுக்கு ரொம்பப் பிடித்து விட்டது.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமதி.
நன்றி. வாழ்த்துகளைச் சொல்லிடறேன். துளசியை அவனுக்கு ரொம்பப் பிடித்து விட்டது.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமதி.
நன்றி. வாழ்த்துகளைச் சொல்லிடறேன். துளசியை அவனுக்கு ரொம்பப் பிடித்து விட்டது.:)

வல்லிசிம்ஹன் said...

Ramji, am trying. let me see the results. Thanks ma.

Kavinaya said...

'செடி ஆண்ட்டி' ச்சோ ச்வீட்! :) குழந்தைக்கும் செடி ஆண்ட்டிக்கும் வாழ்த்துகள் :)