Blog Archive

Sunday, September 06, 2009

எழுத்து கண்ணெனத்தகும்

பேராசை பெருநஷ்டம். கேள்விப்பட்டு இருக்கீங்களா.
அது என்ன எல்லாருக்கும் உள்ளததுதானே அப்படீன்னு யாரும் சொல்ல மாட்டீங்க.

பல

பதிவெல்லாம் ஸ்மூத்செயிலிங் வகை. நம்ம பதிவு அப்படியில்லையே. எங்கேயோ கோளாறு நடந்திருக்கு. என் எழுத்து எல்லாம் வெளிறிப் போச்சு.
 
எப்படி இருந்த நாச்சியார் இப்படி ஆகிட்டாங்களேன்னு எல்லாரும் உச்சுக் கொட்டறமாதிரி ஏன் இந்தக் கலக்கம் வந்தது. ஒரே ஒரு சோதனை செய்ததுனால வந்த வினை.
 
அந்த முகப்பில கஸ்டமைஸ்னு ஒரு குட்டி வார்த்தை இருக்கும். ஒஹோ. சரி நாமளும் டிசைனர் ட்ரெஸ் மாதிரி டிசைனர் ப்ளாகாச் செய்துடலாம், அப்படியாவது இன்னும் கொஞ்சம் மக்கள் எட்டிப் பார்ப்பாங்களான்னு ... ஒரு நப்பாசை.
 
இப்ப மல்லிப்பூ கடைக்கு எதுக்கு விளம்பரம் போஸ்டர் அப்படீன்னு யாரும் பழமொழி சொல்லக் கூடாது. பதிவுலகத்தில போட்டி நிறைய ஆகிட்டது. நமக்கோ பார்க்க கேட்க நிறைய செய்தி கிடைக்கிறது. அதைப் பகிர்ந்து ஒரு ஸ்டைலாக் கொடுக்கலாம்னு அந்த விபரீத எண்ணம் வந்த நேரம்,
ஊர் உலகக் கோவில்களில் இருக்கும் அத்தனை நாச்சியார்களுக்கும் கிலி பிடிச்சிருக்கு. நம்ம பேரை வச்சுக்கிட்டு, இந்த பெரிசு செய்யற கூத்தைப் பார்த்தியா. அப்படீன்னு அவங்க அவங்க தலைல லேசா நாசூக்காத் தட்டிக்கிட்டாங்களாம். அதனல் நான் இப்பச் சொல்ல வரதை மக்களே  ஒரு பாசிடிவ் ஃப்ரேம் ஆஃப் மைண்டோட ஏத்துக்கோங்க.

இன்று காலைலெருந்து, என் பதிவுக்குப் புது வேஷமெல்லம் போட்டுப் பார்த்துட்டேன். ஒண்ணும் பலிக்கலை. படிக்கிறத்துக்கு ஆள் இல்லைன்னா எழுதி என்ன பிரயோசனம்னு நினைத்ததால இப்ப ஒரு யோசனை தோணி இருக்கு. இந்தப் பதிவு எப்படி வருதுன்னு பார்த்துட்டு, மீண்டும் சந்திப்போம்:)))))))

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

19 comments:

Geetha Sambasivam said...

ada??? athuve nanna irunthathe??? OK

கோமதி அரசு said...

வல்லிஅவர்களுக்கு ஏன் இந்த சந்தேகம்?

//படிக்கிறத்துக்கு ஆள் இல்லைன்னா
எழுதி என்ன பிரயோசனம்னு நினைத்தால் இப்ப ஒரு யோசனை தோணி இருக்கு. இந்தப் பதிவு எப்படி
வருதுன்னு பார்த்துட்டு,மீண்டும் சந்திப்போம்://

பதிவு நன்றாகத் தான் இருக்கு .

நீங்கள் மழை அனுபவங்களை எழுதச்
சொன்னீர்கள் எழுதியிருக்கிறேன்.

எல்லோருக்கும் எழுத தூண்டுகோலாய்
உள்ள நீங்கள் துவண்டு போகலாமா?
மற்றும்மொரு பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.
.

இலவசக்கொத்தனார் said...

நான் கூகிள் ரீடரில் படிக்கிறேன், நீங்க என்ன கூத்து அடிச்சாலும் எனக்கு சரியாத் தெரியும்! :)

இலவசக்கொத்தனார் said...

இப்போ சரியாத்தானே இருக்கு! :)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமதி.

ரொம்பப் பொலம்பிட்டேனோ:))))_
அதில்லை நான் சொல்ல வந்தது.

ஒருத்தருக்கும் படிக்க முடியவில்லை என்று தெரிந்ததும் என்னல்லாமோ முயற்சி செய்தாச்சு.
சரிப்பட்டு வரவில்லை.அதான் ஒரு பதிவு போட்டு முன்னோட்டம் செய்தேன்:)

மத்தபடி வருத்தமெல்லாம் ஒண்ணும் இல்லப்பா. நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

Geetha, It shd become alright!:)

வல்லிசிம்ஹன் said...

கூத்துதான் கொத்ஸ்.

புது கூத்து.

சரியாகணும். இன்னும் தமிழ்மணத்துக்கு இணைப்பு
கொடுக்கவில்லை:)

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லாயிருக்கும்மா டெம்ளெட்/ஃபாண்ட் எல்லாமே.

கோபிநாத் said...

\இலவசக்கொத்தனார் said...
நான் கூகிள் ரீடரில் படிக்கிறேன், நீங்க என்ன கூத்து அடிச்சாலும் எனக்கு சரியாத் தெரியும்! :)
\\

ஒரு ரீப்பிட்டேய் ;))

தமிழ்மணத்துல அனுப்புன்னு இருக்கு அனுப்பிட்டேன். சன்னலை மூடுன்னு சொல்லுச்சி அதையும் செய்துட்டேன்.

ஆயில்யன் said...

நான் ரீடர்லயும் படிச்சுட்டு சாமி படம் பாக்க ப்ளாக் பக்கமும்வந்துட்டு போறேன் இப்ப கரீக்டா இருக்கு வல்லியம்மா :)

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத் உண்மையாவா!!!

நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
விடாமல் படிப்பதற்கும் நன்றி. படித்துவிட்டுச் சொல்வதற்கும். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆயில்யன் வரணும்மா.

நன்றி நன்றி .
இன்னோரு விஷயம். நானானி அம்மா கிட்டஎயும் உங்க எல்லோருடைய வாழ்த்துகளையும் சொல்லிட்டேன். சீக்கிரமே எழுதுவாங்கன்னு நினைக்கிறேன்..

ambi said...

//படிக்கிறத்துக்கு ஆள் இல்லைன்னா எழுதி என்ன பிரயோசனம்னு நினைத்ததால //

இப்படியெல்லாம் திடும்னு நீங்களாவே ஒரு முடிவுக்கு வர முடியாது. :p

பங்குதாரர்கள், போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்னு பின்னூட்டம் போடற எங்களுக்கு அப்புறம் என்ன மரியாதைன்னு கேக்கறேன்? :))

இப்ப கூட பாருங்க, வல்லிமா பதிவுல ஒரு கமண்டு போட்டுட்டு வரேன்னு என் டாமேஜர்கிட்ட சொல்லிட்டு தான் இங்க வந்தேன். :))

இந்த டேம்ளேட்டே நல்லா இருக்கு. பாஃன்ட் எல்லாம் கீதா மேடத்துக்கே நல்லா தெரியுதுன்னா பாத்துகுங்க. :p

ambi said...

சரி மேற்கொண்டு ஆக வேண்டியத பாருங்க. பாஸ்டிங்க் ஷுகர் செக்கப் எல்லாம் முடிஞ்சதா? அங்க ஏதாவது வம்பளப்பு நடந்து இருக்குமே? அத தட்டி விடுங்க. :))

இல்லாட்டி சமீபத்துல 1960ல நீங்க ஸ்கூல் படிச்சப்ப குவாட்டர்லி லீவுக்கு எங்கயாவது போயி இருப்பீங்களே, அத தட்டி விடுங்க. :))

அதுவும் வேணாமா, சித்திர மகாபாரதம்னு ஒரு சிரீஸ் ஆரம்பிங்க. இல்லாட்டி அனுமார் வருவார் வடை தருவார்னு ஏதாவது...? :))

ambi said...

கடைசியா ஒரு வார்த்தை, இந்த டேம்ளேட் எல்லாம் சட்டை மாதிரி. இது நல்லா இருக்கே, அது நல்லா இருக்கேன்னு மனுஷ மனசுக்கு தோணிட்டே இருக்கும். ஆனா நாம எழுதற விஷயம் ஆன்மா மாதிரி. :))

எல்லாரும் ஆன்மாவை தேடி தான் வராங்க. :)

ஆன்மாவுக்கு என்னிக்கும் மாற்றமும் கிடையாது, அழிவும் கிடையாது.

எனவே கடமையை செய்க. :))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா அம்பி:))

டாமேஜர் கிட்ட சொல்லிட்டா வந்தீர்கள்!!!
இந்த ஆன்மா, சட்டை எல்லாம் கார்த்தால வேளுக்குடியோட நிறுத்திடுவேன். அப்புறம் சாதாரண ஆர்டினரி ப்ளாகர்:)
சித்திர மஹாபாரதம்????? ஹாஹ்ஹ்ஹா. சாரி !!

வீரப்பா மாதீரி சிரிப்பு வரது.

ஆனானப்பட்ட பிள்ளையாருக்கே ப்ரேக் வேண்டியிருந்தது.
அதுதான் எனக்கும் வேணும்.

1960ல என்ன செய்து,படித்து,கோலம் போடக் கத்துக் கொண்டு,
புது ஸ்டவ் ஜோசியம் பார்த்து இது நாலு அத்தியாயம் வரும்,
நல்ல யோசனை.
எழுதலாம்.
தான்க்ஸ் அம்பி.
இப்படி ஒரு மாரல் சப்போர்ட் கொடுத்ததற்கு.

Geetha Sambasivam said...

//பாஃன்ட் எல்லாம் கீதா மேடத்துக்கே நல்லா தெரியுதுன்னா பாத்துகுங்க. :p//

வ(அ)ம்பி, நறநறநறநற

Geetha Sambasivam said...

//நல்ல யோசனை.
எழுதலாம்.
தான்க்ஸ் அம்பி.
இப்படி ஒரு மாரல் சப்போர்ட் கொடுத்ததற்கு.//
ஆஹா! :D