Blog Archive

Monday, September 07, 2009

மங்கியதோர் நிலவினிலே......

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்''
என்ற பாட்டு இந்தப் படத்தைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது .

அப்படியே பரிசோதனைப் பதிவாகவும் போட இதைப் பயன் படுத்திக் கொண்டேன் .




















ஏ.எம்.ராஜா(?) பாடிய பாட்டு என்று நினைவு. வெகு அழகாக, ரசிக்கும்படிப் பாடி இருப்பார்.
நான் கேட்டது தேவநாராயணன் பாட்டு.
பிறகு கிடைத்தது திருமணம் படத்தில் தி எம் எஸ் சார் பாடிய பாட்டு.
பின் பாவைவிளக்கு படத்தில் சி எஸ் .ஜெயராமனும் பாடி இருக்கிறார்.







மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்
வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு Pஒன்ற ஒலி முகமும்
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்
துங்கமணி மின் போலும் வடிவத்தால் வந்து
தூங்காதே எழுந்தேன்னைப் பார் என்று சொன்னால்
அங்கதனில் கண் விழித்தேன்
அடடா ஒ அட டா ஒ அட டா
அழகென்னும் தெய்வம் தான் அதுவென்று அறிந்தேன் !
மங்கியதோர் நிலவினிலே ......
காலத்தில் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே விதியினுக்கொர் கருவியாம் என்ற்ஆள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
nஆலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் eன்றால்










மஹாகவி பாரதியின் பாடல்.
\எழுத்தாளர் அகிலனின் எழுத்துக்களில் பாரதியின் கவிதை வரிகள் சாகாவரம் பெற்றிருக்கின்றன.























Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

27 comments:

சகாதேவன் said...

இந்த பாரதியார் பாட்டை டி.ஆர்.மகாலிங்கம் ஒரு படத்தில் பாடினார். டி.எம்.எஸ் மதுரை வீரன் படத்தில் பாடினார். அருமையாக இருக்கும். படத்தின் நீளம் கருதி படத்தில் இடம் பெறவில்லை.என்னுடைய பதிவைப் பாருங்க்ளேன்.
vedivaal.blogspot.com/o8o7o07

வடுவூர் குமார் said...

இப்ப நன்றாக இருக்கு.

துளசி கோபால் said...

சி.எஸ். ஜயராமன் இல்லையா ?


படங்கள் சூப்பர்.

என்ன காமெரா?

அபி அப்பா said...

சூப்பர் வல்லிம்மா!!!! பாட்டு எல்லாம் கேட்ட மாதிரி தெரியலை. ஆனா படம் எல்லாம் சூப்பர். நீங்க எடுத்ததா?????? அருமை!!!

நானானி said...

வல்லி, இப்பாடல் "திருமணம்" படத்தில் டி.எம். சௌந்தரராஜன் பாடியது.

ஆனாலும் ஏ.எம்.ராஜாவும் பாடியிருக்கிறார் என்பதும் நினைவில் நிழலாடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

சகாதேவன் ஜி,
உங்க பதிவில பார்க்கிறேன்.
எனக்கு ரொம்பப் பிடித்த இந்தப் பாட்டு, தேவநாராயணன் என்பவரும் பாடி இருக்கிறார்.
கூல்டோட் என்கிற இசைத்தளத்தில் இந்தப் பாட்டுக் கிடைத்தது.
ஏ.எம் ராஜானு தான் நினைத்தேன்.
அப்படியே குரல் ராஜா மாதிரியே இருக்கும்.


நானானி சொன்னது தங்க நிலவில் கெண்டை இரண்டு துள்ளித் திரிவதுண்டோ பாட்டு. திருமணம் படத்தில் வரும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார். எப்படியோ சரியானது சந்தோஷம்.:).

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி.
எத்தனை பேர் பாடி இருக்கிறார்கள் தெரியவில்லை. கூல்டோடில் கேட்டது மிகவும் இனிமை.

வல்லிசிம்ஹன் said...

வாங்க அபி அப்பா. நல்லா இருக்கிங்களாம்மா.

படம் ஒண்ணுதான் நான் எடுத்தது.

மிச்சதெல்லாம் கூகிளார்.
பாட்டு நீங்க பிறப்பதுக்கு முன்னால் வந்தது. ஞாபகம் இருக்காது. சிலோன் ரேடியோவில் நிறைய வைப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும். நானானி

இணையத் துணை கிடைத்தது சந்தோஷம்.டி.எம்..எஸ், ஏ.எம் ராஜா எல்லாரும் பாடியிருப்பது போலத்தான் தோன்றுகிறது.
சகாதேவன் சார் பதிவிலே போய்ப் பார்க்கணும்.

www.cooltoad.com

போய்ப் பார்த்தால் நிறைய பழைய பாடல்கள் கிடைக்கும்

ஜாஹிர் ஹுஸைன் said...

Amma naan Abiappaavin thambihalil oruvan neengal ketta intha paadalai K.Dhevanarayananum paadi irukkirar TMS um paadi irukkirar ithu TMS paadiya link http://music.cooltoad.com/music/download.php?id=387088 Dhevanarayan paadalai neengal kettu vittathaha ezuthi iruntheerhal CSJ cooltoad il illai enakku kidaithaal anuppi vaikkiren

வல்லிசிம்ஹன் said...

anbu Jahir,thank you.
have downloded TMS. shd inform Naanani too. very glad to know you.
and happy to know so many youngsters are interested
in old songs. and thanks for searching for c.s.jayaraman too.

வல்லிசிம்ஹன் said...

ekalappai sariyaaka illai. puthithaakac serththa varikaLil ezuththup pizai irukkiRathu. mannikkaNum.

வல்லிசிம்ஹன் said...

http://www.raaga.com/player4/?id=154787&mode=100&rand=0.23697979377908612

Here you can listen to c.s jayaraman , in PAVAIVILAKKU PADAM.

கோமதி அரசு said...

பாரதியார் பாடல் அருமை.

படங்கள் அழகு.

படங்களைப் பார்த்துக் கொண்டு,அந்த
பழைய பாடல்களை பாடிப்பார்த்துக்
கொண்டேன், இந்த அனுபவத்தை கொடுத்த உங்களுக்கு நன்றி.

ambi said...

ரைட்டு விடுங்க,

நவராத்திரிக்கு வரும் போது இந்த பாட்டை பாடினா தான் சுண்டல்னு சொல்லாம இருந்தா சரி. :))

துளசி கோபால் said...

//Here you can listen to c.s jayaraman , in PAVAIVILAKKU PADAM//

ஹப்பா..... சிஎஸ் ன்னதும் ஒரு நிம்மதி வந்துச்சு பாருங்க....ஆஹா....

ஆத்தா.....நான் பாஸாயிட்டேன்:-)))))

வல்லிசிம்ஹன் said...

வாங்க கோமதி. உங்க குருந்தமலை பதிவைப் படித்துக் கொண்டு இருக்கிறேன்.

பள்ளி நினைவுகளை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, இது இப்ப தமிழ்மணம் குடும்பப் பாட்டு. அதனால நீங்க பாடியே ஆகணும்:)

ஜாஹிர் ஹுஸைன் said...

அம்மா இந்த ஒரு பாடலுக்கு 5 பேர் பாடி இருக்கிறார்கள் CSJ,TMS,தேவநாராயணன் இல்லை T.R.M,SPB,மற்றும் T.A முத்து என்பவர் பெண் குரலில் பாடி இருக்கிறார் அந்த கால ரீமிக்ஸ் பாடல் போல மிக நன்றாக இருக்கிறது

வல்லிசிம்ஹன் said...

துளசி சொல்லி எங்கயாவது தப்பு இருக்குமா.:)

கோமதி அரசு said...

நீங்கள் என்னிடம் மழை அனுபவத்தை
எழுத சொன்னிரீகள், மழை பதிவு போட்டு இருக்கிறேன், அதையும் படித்துப்
பார்த்து சொல்லுங்கள்.

குருந்தமலை பதிவு நன்றாக இருப்பது
அறிந்து மகிழ்ச்சி.

நன்றி.

Geetha Sambasivam said...

அடர் நீலம்??? கலர் அவ்வளவு மனசுக்குப் பிடிக்கலை எனக்கு. பரவாயில்லை, பதிவு எழுத்துக்கள் படிக்க முடியறது இப்போ. அது போதுமே! எனக்கு என்னமோ பச்சை நல்லா இருந்தாப்போல் இருந்தது.

அம்பி வந்தால் சுண்டல் எல்லாம் கொடுக்கவேண்டாம். :P

திவாண்ணா said...

நீல வானத்திலே நக்ஷத்திர எழுத்துக்கள் பதிவா? நல்லதே! நல்லாதான் இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

கீதா, இன்னும் கொஞ்ச காலத்துக்கு இதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். பிறகு இன்னு கொஞ்சம் தேறிய பிறகு வர்ணம் மாற்றலாம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் .
தம்பி வாசுதேவனுக்கு அக்கா பதிவில் நக்ஷத்ரங்கள் தெரிகிறதா!!
பாராட்டுக்கு நன்றி.

Jayashree said...

So Mrs Simhan ! Started sailing again? Well done:))