Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Tuesday, December 02, 2014

பொன்னெழில் பூத்தது புதுவானில்...

கண்ணிலே  என்ன கண்ணே சிவகாமி
Add caption
Add caption
Add caption
மாமல்லபுரம்
Add caption
Add caption
 வாதாபி நகரம்

திரு கல்கியின்
சிவகாமி என்னில் புகுந்தது என் பதினான்கு வயதில்.பாட்டி வீட்டுப் பரணில் இருந்த புத்தகம் மணியம் அவர்களின் கைவண்ண ஓவியங்களோடு அருமையாக இருக்கும்.

அட்டையில் மாமல்லரும்,சிவகாமியும் எதிர்மறை உணர்ச்சிகளோடு ஒருவரை ஒருவரைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நடுவில் நாகநந்தி
கொடூரமான தோற்றத்தோடு கையில் குறு வாளோடு இருப்பார். ஒரு பட்டத்து
யானையும் அதன் அம்பாரியில் மாமல்லரின் குழந்தைகளும் சித்தரிக்கப் பட்டு இருக்கும்.

பின் அட்டையில் சிவகாமி வாதாபி வீதிகளில் ஆடும் நடனமும் பின்புலத்தில் வாதாபி பற்றி எறிவது போலவும் மணியம் வரைந்திருப்பார்.

மிகச் சின்ன எழுத்தில் இருக்கும் புத்தகம். எத்தனை பக்கங்கள் என்று கூட மறந்துவிட்டது.

பிற்காலத்தில் பல்லவ சாம்ராஜ்ய சேனாதிபதி ஆகப் போகும் பரஞ்சோதியும் ஒரு புத்த துறவியும் மகேந்திர தடாகத்தின் கரையில் நடந்து,காஞ்சியை நோக்கி வந்து கொண்டிருப்பார்கள்.
பரஞ்சோதிக்கு நாகநந்தியைப் பார்க்கும் போது ஏதோ ஒரு விஷ நாகத்தைப் பார்க்கும் உணர்வே வரும்.
இந்த மாதிரி எழுத்துக்கள் அந்த வயதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிப்பது கடினம்.
இந்தப் புத்தகத்துக்கு முன்னால் திரு கல்கி, பார்த்திபன் கனவு தொடரை கல்கியில் எழுதி முடித்திருந்தார்.
அவரே மாமல்லபுரக் கடற்கரையில் தனக்கு நேர்ந்த அபூர்வ அனுபவத்தை
ஒரு உத்தம எழுத்தாளனின் உணர்வுகளோடு வர்ணித்திருப்பார்.

அப்போது பிடித்தது பைத்தியம்.எதிலெல்லாம் என்று கேட்டால்
1, மஹாபலிபுரம் போக ஆசை,
2,உண்மையாகவே திரு கல்கி உட்கார்ந்திருந்த இடம்,
3,மானும் மயிலும் செதுக்கப் பட்ட பாறை,
ஆயனச் சிற்பி இருந்ததாகச் சொல்லப்படும் காட்டு வீடு
இப்படி போனது கற்பனை.

பார்த்திபன் கனவு கதையில் தந்தையாக இருந்த நரசிம்ம பல்லவர், சின்னவயதில் எப்படி இருந்திருப்பார்.
ஏன் இந்தக் கதையைக் கல்கி அவர்கள் சோகமாக , முடித்தார்.
சிவகாமி ஏன் இப்படி ஒரு வெறி கொண்ட சபதத்தைச் செய்தாள்,
ஏன் இவர்கள் ஒரு அற்புதக் காதல் காவியத்தைப் படைக்க முடியாமல் போயிற்று.

அந்த வயதில் புரிந்து கொள்ள முடிந்தது அவ்வளவுதான்.
சோகமாக முடிந்ததால் தான் இது காவியமாகிற்று என்பது புரிய வெகு நாட்கள் ஆகிற்று:)இந்தச் சிவகாமியும் நரசிம்ம பல்லவனும் என் வாழ்வில்
ஏற்படுத்திய மாற்றம் தான் எங்கள் திருமணத்தில் வந்து முடிந்தது.

















எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, February 18, 2013

படித்த பழம் கதை





vallisimhan






சென்னையில் இருக்கும்போது காணாமல் போன
பழைய புத்தகங்கள் இங்கே துபாயில் வீட்டு மேல் அலமாரியில் கிடைத்தன,.
அவைஎன் தந்தையால் பைண்டு செய்யப் பட்ட வீட்டுவைத்தியம்  என்ற
புத்தகமும் ஒன்று.ஸ்ரீஹரி   அவர்கள் எழுதியது. இதைப் படித்தாலே பாதி வியாதி பறந்து விடும் போலிருக்கிறது.
அங்கங்கே மிளிரும் நகைச்சுவை.
 பீரோமேல் உட்கார்ந்திருக்கும் பையனுக்கு விளக்கெண்ணெய்  குடிக்கக் கொடுக்கும் அம்மா. கூடவே அப்பா. எத்தனை உணர்ச்சிகள்!
இது அம்மாவின் தந்தை சேர்த்துவைத்து அம்மாவுக்கு அனுப்பிய விகடன் அத்தியாயங்கள்.
.
பிஸ்ரீ அவர்களின் கம்பராமாயணக் குறிப்பு.  ஸ்ரீரங்கம் நரசிம்மன் ஒரு கதை எழுதி இருக்கிறார்.
சியாமா ''என்பவர் எழுதிய கதை அழகான மணியான
ஓவியங்கள்,
ஸ்ரீதர் அவர்களின்
நகைச்ச்சுவைத் துணுக்குகள்,
விதவிதமான  விளம்பரங்கள். அந்நிய நாட்டு நடிகைகள் போஸ்  கொடுக்கும்
விளம்பரங்கள்.
சியாமா  எழுதி இருக்கும் வேளைவரவில்லை கதை மனித எண்ணங்கள்
புனித மடையும் நேரம் மரணம் நெருங்கும்போது என்பதை விளக்கமாகக் கோர்வையாக
எடுத்துச் செல்லுகிறது.
வியாபாரி,இளம்சந்நியாசி,
இரு குழந்தைகள்,
கேப்டன் அமர்நாத்,
விமானப் பணிப்பெண்
சமூக சேவகி அம்மையார்  எல்லோரும் வேறு வேறு விதத்தில்
அந்த  ஆபத்தை உணருகிறார்கள்.
இளம் சந்யாசியும்,பணிப்பெண்ணும் மனம் தளராமல் மற்றவர் நலனை வேண்டுஜ்கிறார்கள்.
விமானம் ஆபத்தைக் கடந்து தரை  இறங்கியதும்
ஏறும்போது இருந்த மனோபாவம் மாறாமல் அனைத்துப் பயணிகளும் பிரிகிறார்கள்.
மயானவைராக்கியத்தை நினைவூட்டியது இந்தக் கதை.
இன்னோரு வியாபாரியை ஏமாற்ற நினைத்த செண்பகனார்
ஆபத்தில் மனம் மாறி,
விமானம் தரை தொட்டதும்
பழைய வேலையை தொடருகிறார்.
ரத்து செய்து பிரிந்த கணவனைச் சந்திக்க விழைந்த சமூகசேவகி
அதைச் செய்யாமல் கவர்னர் மாளிகையை நோக்கி விரைகிறார்.
இரு குழந்தைகளும் பத்திரமாகத் தாய்தந்தையரைக் கட்டி அணைக்கின்றன.
கடவுள்  நம்பிக்கை இல்லாமல் இருந்த காப்டன் அமர்நாத்
மனைவிக்கு  ஃபோன் செய்து இனிக்  கடவுளை நம்புவதாகச் சொல்லுகிறார்.
இளம் சந்யாசியும்,
விமானப் பணிப்
 பெண்ணும் இன்னும் வேளைவரவில்லை என்று சொல்லியபடி பிரிகிறார்கள்.
எளிமையான கதைகள்.  எளிமை எழுத்திலும்  பளிச்சிடுகிறது.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...