Wednesday, September 23, 2026

விடுதலை எப்போது?

வல்லிசிம்ஹன்
 அனைவருக்கும்  இனிய காலங்களுக்கான வாழ்த்துகள்.

நம்மை விடுவிக்க நாம் தான் முன்வரவேண்டும்.

இளமைக்காலங்களில்  கணவன், குழந்தைகள், வீட்டின் முதியோர்
என்ற பல அன்பு விலங்குகளை
விலக்க முடியாமல் போகிறது.

80 களில் என் பெற்றோர் அப்பாவின்  வேலை ஓய்வைக் கொண்டாட பத்ரி நாத்,. சென்றார்கள்.
அப்பாவுக்கு என்னையும் அழைத்துச் செல்ல ஆசை.

அது ஒரு மேமாதக் கடைசி. குழந்தைகள் விடுமுறையில் இருந்தார்கள்.
வீட்டில் மாமியார், அவருடைய மாமியார், குழந்தைகள் மூவர்,
காலை சென்று மாலை,இரவு வரும் என் கணவர்.

என் அப்பா வந்ததும் பாட்டியின் முகம் சுருங்கியது.
உன் குடும்பத்தை என்னால் கட்டிக் காக்க முடியாது.

இப்ப தானே உனக்கு 40 வயதாகிறது. ரிடையரானபிறகு 
நீங்கள் போகலாம் என்று முற்றுப் புள்ளி வைத்தார்.

உண்மைதானே என் வீடு என் கணவர் என் குழந்தைகள்:))))

பெரிய ஏமாற்றம் ஒன்றும் எனக்கில்லை.
பத்து நாட்கள் போவது சிரமம்தான்.

ஒரு அம்மாவாகக் குழந்தைகளைப் பிரிந்து
அவ்வளவு தூரம் செல்வது எனக்கும்
பிடிக்காத ஒன்று.

என் தந்தை அப்போது கடுமையான வயிற்றுவலியிலிருந்து
மீண்டு வந்திருந்தார்.

அறுபது வயது.  இந்த வயதுக்கு மேல் பழைய திடம் வருமா
என்ற சந்தேகம் வேறு.
அவர்களுக்கு என் தைரியத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கை.
நான் கூட வந்தால் எல்லாவற்றையும் கவனித்துக் 
கொள்வேன்  என்று அவர்களது யோசனை.

இல்லை என்று ஆனதும் என் சின்ன மாமாவின் துணையுடன்
பெரிய மாமாவின் ஏற்பாடுகளில்  பத்ரி நாத் தொடர்பான அனைத்து ஸ்தலங்களுக்கும் சென்று வந்தார்கள்.

ஜெய் பத்ரி விஷால் ஜெய் பத்திரி நாத்.

தொடரும்.

No comments:

விடுதலை எப்போது?

வல்லிசிம்ஹன்  அனைவருக்கும்   இனிய காலங்களுக்கான வாழ்த்துகள். நம்மை விடுவிக்க நாம் தான் முன்வரவேண்டும். இளமைக்காலங்களில்  கணவன், குழந்தைகள், ...