Tuesday, September 22, 2026

கண்ணில் தெரிகின்ற வானம்

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக வாழ வேண்டும்.

ஆமாம்... இன்று தான் வானம் கண்ணில் தெரிகின்றது. 
போன  வாரம் முழுவதும் கருமேகங்கள் நிறைந்து 
சத்தமும் ஈரமும்    மனதை உறுத்தின.

சென்னையை விட்டு வந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது.

அதனால் மனம் வருந்துகிறதோ. சிங்கமிருக்கும்போது

திட்டம் இடுவது மட்டும் என் கையில். உடன் நிறைவேற்றுவது மட்டும் அவர் பொறுப்பு. 
சென்னையை விட்டு நகர்வது அவருக்குப் பிடிக்காத விஷயம்.செடிகள்  ,மழைக்காலத் தொந்தரவுகள்
என்று மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

இருந்தும் மறுக்க மாட்டார்.

அவ்வாறு மறுத்து நான் மட்டும் இந்த ஊருக்கு வந்தபோது
மூன்றே மாதங்களில்  விடாத இருமலில் அவர் பாதிக்கப் பட,
தம்பி எனக்கு அவசரமாக உடனே கிளம்பி வரும்படி தொலைபேசினான்.:(

அடுத்த ஒரு வாரத்தில்  மூன்று மாதங்களே ஆன பேரனுடன்
நானும் மகளும் கிளம்பினோம்.
அதற்குள் இவர் தேவகிக்குச் சென்று சிகித்சை பெற்று, மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கும் வந்துவிட்டார்.

அப்போது எடுத்த முடிவுதான். பிறகு சிங்கம் இல்லாமல்
பயணம் இல்லைஎன்று ஆகிவிட்டது.

அடடா, ஒரு கருமேகம் வந்து இத்தனை பின் சென்று விட்டதே மனம் என்று யோசிக்கிறேன்.

இதோ 13 வருடங்கள் கடந்து வந்துவிட்டேன். சகிப்புத் தன்மை மட்டும் இல்லாவிட்டால் வாழ்வு கடினம் என்பதை
நன்றாக உணர வைக்கிறது வாழ்க்கை.

கடந்த காலத்தை நினைக்க  மனம் கனக்கும்
நிகழ்காலத்தைச் செப்பனிடு
வருங்காலம் நிறைவு கொடுக்கும் என்பது இப்போதைய
மந்திரம்.






No comments:

கண்ணில் தெரிகின்ற வானம்

வல்லிசிம்ஹன் எல்லோ ரும்  வளமாக வாழ வேண்டும். ஆமாம்... இன்று தான் வானம் கண்ணில் தெரிகின்றது.  போன  வாரம் முழுவதும் கருமேகங்கள் நிறைந்து  சத்த...