மாமியார் மெச்சிய மருமகள் படம்
அருமையான கதையுடன் வெளிவந்தது.
ஜி.வரலட்சுமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன்,எம் என் ராஜம் எல்லோரும் போட்டி
போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.
ஒரு குழந்தைக்காக இந்தத் தம்பதி படும் பாடும்,
அம்மாவை நம்ப வைக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் நகைக்க வைக்கும்.
மோஹன ரங்கா பாடல் ,எம் எல் வி அம்மா, சீர்காழி கோவிந்தராஜன் குரல்களில் அமிர்த கானம்.
அடுத்த பாடல் சிவகாமி என்ற படத்தில் வந்தது என்று பதிய பட்டு இருக்கிறது .
தி எம் சௌந்தர ராஜன் அவர்களின் குரலில்
கம்பீரமாக ஒலிக்கும் .
இந்தப் பாடலை நிலவுப் பாடல்களோடு சேர்த்திருக்க வேண்டும்.
பாடல் வரிகளை மறந்து தேடிக்கொண்டிருந்தேன்.
சட்டென நினைவுக்கு வந்தது.
நல்ல பாடல் கிடைத்தது.
உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.