 |
| குடங்கள். கவிழ்த்து வைக்கக் கூடாது என்று பாட்டி சொல்வார் |
 |
கோயம்பத்தூரில் இந்த மாதிரிதான் கிணறு தோண்டுவார்கள்
இணையத்தில் கிணற்றுத் தண்ணீர் பற்றிப் பேச்சு வந்தது. சென்னைக்கு வந்த புதிதில் பாட்டி வீட்டுக் குழாயை அதிசயமாகப் பார்த்துச் சந்தோஷப்படுவேன். குடத்தைத் தூக்கிக் கொண்டு கிணற்றுக்குப் போக வேண்டாம். அதுதான் முதல் காரணம்.
நாங்கள் தெற்குச் சீமைகளில் இருந்த இடத்திலெல்லாம் அப்போது குழாய் வசதி கிடையாது. அப்பாவுக்கு மாற்றலாகும் இடங்களில் கிடைக்கும் வீட்டில் முதலில் நாங்கள் பார்க்க ஓடுவது
கிணற்றைத்தான்.
அதில் எட்டிப் பார்த்துத் தண்ணீர் அருகில் இருந்தால் ஒரே சந்தோஷம்.
திருமங்கலம் வீட்டில் கிணற்றில் தடுப்பு போட்டிருக்கும்.
ஒரு பக்கம் சமையலறைக்கும்
மறுபுறம் குளிக்க,துவைக்க, பாத்திரம் தேய்க்க என்று தனியாக வேறு கயிறும் வாளியும் இருக்கும்.
சமையலறைப் பக்கம் அன்னன்னிக்குத் தேய்த்து வைக்க ஒரு குடம்.
அதன் பக்கத்தில் ஒரு சிமெண்ட் தொட்டி.அதற்கு ஒரு மூடி..
அதிலிருந்து சமையலுக்கு உள்ளே கொண்டு நிரப்ப ஒரு அண்டா..
அப்பா சாமீன்னு ஆகிவிடும்.
அம்மாவுக்கு அல்சர் வந்து குணமாகி வந்த நேரம்.
அதனால் நான் உதவி செய்வது வழக்கம். கைசிவந்து போய்விடும். புதுக்கயிறு அப்படித்தான் இருக்கும் என்று அப்பா கைக்கு தேங்காயெண்ணெய் தடவி விடுவார்.
திண்டுக்கல்லுக்கு மாற்றலாகியது. அங்கு செயிண்ட் ஜோசஃப் பள்ளியில்
அப்பா சேர்த்துவிட்டார்.
இங்கயும் கிணறு தானாப்பா என்பதுதான் என் முதல் கேள்வி. ஆமாம்ம்மா ஆனால் நல்ல தண்ணீர்க் கிணறு என்று ஒன்று இருக்கு. அங்கதான் போய் எடுத்துக் கொண்டு வரணும் என்றார்.
முதல்நாள் அலுவலகத்திலிருந்த வந்த பியூன் கொண்டு போய்க் காட்டினார். நான் பெரிய குடம்.தம்பி சின்னக் குடம். தண்ணீர் இல்லாத கல் பூமி.காற்று என்னவோ பிரமாதமாக அடிக்கும்.காய்கறி எல்லாம் கொடைக்கானலில் இருந்து வரும். பள்ளிக்குப் பக்கத்தில்
இருக்கும் மேட்டுப்பட்டி என்ற இடம். பள்ளியில் மணி அடித்தால் இங்கே கேட்கும்.
அவசரத்துக்கு அங்கே போனோம். தாத்தா பாட்டி வந்த போது அவர்களுக்கு அங்கெ
பிடிக்கவில்லை.
நாராயணா கிணத்துதண்ணிக்குக் குழந்தையை அனுப்பாம இருக்கிற வீடா பாரு. 12 வயசில
ஒரு பர்லாங் நடந்து தூக்கிக் கொண்டு வரதே. வேற வீடு பாருன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
பிறகு கிடைத்த வீடுதான் கிருஷ்ணாராவ் ஸ்ட்ரீட் என்னும் தெருவில் ஒன்று போல் அமைந்த பத்துவீடுகள் கொண்ட காலனி வீடு.. அழிக்கதவு போட்ட வராந்தா,ஒரு நடை ஒரு ஹால் ஒரு குட்டி பெட்ரூம் நல்ல சமையலறை புகைபோக்கி என்று(விறகடுப்ப்தான் அப்ப எல்லாம். ஒருஸ்டவ் உண்டு. கரியடுப்பும் உண்டு.) எங்கள் மூவருக்கும் பிடித்துவிட்டது.
சின்னத்தம்பிக்கும் எனக்கும் ஏகப்பட்ட தோழர்கள் தோழிகள் கிடைத்தார்கள்.
தூரத்தில் சௌந்தரராஜா மில் தெரியும். அந்த நாளிலேயே சொந்த விமானம் வைத்திருந்தார் என்று கேள்வி..
ஒரே ஒரு குறை இங்கயும் கிணற்றுக்கு மூன்று வீடு தாண்டி போக வேண்டும்.
பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய கிணறு. நாலைந்து ராட்டினம்.
நம் ராட்டினத்தையும் கயிற்றையும் நாம் தான் எடுத்துக் கொண்டு போக வேண்டும்.
அப்பா அம்மாவைத் தண்ணீர் இறைக்க விடமாட்டார். அலுவலகம் கிளம்பும் வரை
முடிந்த பாத்திரம் பண்டங்களில் எல்லாம் தண்ணீர் நிரப்பிவிட்டுத் தான் போவார்
தம்பிகளுக்கு பத்தும் எட்டும் வயது
நான் தான் பெரிய மனுஷி.
எனக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்ஸ் போட்டுவிட்டு அப்பா கிளம்புவார்.
|

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்