Wednesday, February 27, 2013

''ராதா கல்யாணம்'' எழுதியவர் ''கீதா;''

என்னது கீதான்னு அப்பவே எழுத்தாளினி இருந்தாங்களா:)  !!!!!!!!!! ராதா  என்கிற அன்புமனம் கொண்ட பெண்ணின் பாசப் பிணைப்பு எப்படி அவளுடைய அத்தையையும் மகிழ்ச்சி வட்டத்தில் ஆழ்த்துகிறது என்பதே
என்பதே கதை.

கீதா  எனும் எழுத்தாளர்  எழுதிய சிறுகதை.
லதா  என்ற பெயரோடு ஒரு ஓவியர்  அப்போதெல்லாம் சாண்டில்யன் கதைகளுக்கு ஓவியம் வரைவர்,. நிறைய நாட்கள்  கழித்துதான் தெரியும் அவர் ல.தாமோதரன் என்று:)

அது போல இது எழுத்தாளரும் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை.
கதை நன்றாக இருந்தது.
அண்ணனின்  பாசத்தை எதிர்பார்த்து அவன் பெண்ணின் திருமணத்துக்குச் செல்லும் தங்கை.

ஒரு ஆறு மாதங்களுக்கு முன் தான் தன் பதினைந்து வயது மகனை இழந்தவள்.
அப்போதெல்லாம் டைபாய்ட்  வியாதிக்குப் பிழைப்பவர்கள்  கொஞ்சமே.
கணவனின் சேமிப்பான 500ரூபாயும் கரைய மகனையும் இழக்கிறார்கள்.

ஆரம்பத்தில் அருமையாக இருந்த அண்ணன்,மத்திய சர்க்கார்  வேலை கிடைத்து டெல்லிக்குச் சென்றதும்  சிறிது மாறுகிறான்.
அவன் மனைவி நீலா  முழுவதும் மாறிவிடுகிறாள்.
  நாத்தனாரின் மகன் மறைவுக்குக் கூட அவளால் வர மனம் ஒப்பவில்லை.
ஜெயத் துக்கும்   இரண்டு பெண்குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும்.
அங்கே அண்ணனுக்கும்
17 வயதில் ராதை என்கிற பெண்ணும் இரண்டு ஆண் குழந்தைகளும் .

கனு கார்த்திகைக்கு இரண்டு ரூபாய் அனுப்புவதோடு(????????????????????)
அவன் தன் பாசத்துக்கு அணை போட்டு விடுகிறான்.
மனைவியைப் பகைத்துக் கொள்ள மனமில்லை.

இந்த நிலையில் ஜெயத்துக்குக் கடிதம் வருகிறது.
''ராதைக்குத் திருமணம் செய்யப் போவதாகவும்.சென்னையில் உள்ள
தன் பங்களாவுக்குக் குழந்தைகள் கணவரோடு வந்து   திருமணத்தில் கலந்துகொண்டு

கௌரவிக்கவேண்டும் என்று   தேதியும் குறிப்பிட்டு
அண்ணன்    எழுதி இருக்கிறான்.

ராதையின் மேல் ஜெயத்துக்கு எப்பவுமே ஒரு பிணைப்பு. இறந்த தன் அம்மா போலவே இருக்கிறாள். அமைதியான குணம்   என்று எப்பொழுதும் மெச்சிக் கொள்வாள்.
அவள் மனம் குழப்பத்தில் தவிக்கிறது.
குழந்தை இப்போதுதான்  தவறியிருக்கிறான் தான் திருமணவைபவங்களில் கலந்து கொள்ளவேண்டுமா   என்று.
இரவு வேலை முடிந்து வரும் கணவனிடமும் முறையிடுகிறாள்.

அவனும் திருமணத்துக்குப் போவதுதான் பண்பு என்று முறையை எடுத்துச் சொல்கிறான். நம் துன்பம் நம்மோடு. அந்தக் குழந்தையை நாம் வாழ்த்தாமல் யார் வாழ்த்துவது என்று அடுத்த நாள் பணத்துக்கு ஏற்பாடு செய்யவும் ஒரு வழி சொல்கிறான்.

ஜெயம் போட்டுக் கொண்டிருக்கும் ஆறு பவுன் சங்கிலியை பாங்கில்  அடைமானம் வைத்து 300  ரூபாய் கொண்டு   வருகிறான்,
இரயில் செலவு,ராதைக்குத் திருமணப் பரிசாக  தங்கமுலாம் பூசின மோதிரம்
குழந்தைகளுக்குப் புது துணிமணிகள் ,ஜெயம் கழுத்துக்கு ஒரு கவரிங்  செயின் என்று
வாங்கி வருகிறான்.
ஜெயம் முதலில் கிளம்பிக் கல்யாணத்துக்கு முன்னால் செய்ய வேண்டிய
சமாராதனை  மற்ற  நல்ல விசேஷங்களில் கலந்து கொள்ள சென்னை வருகிறாள்  குழந்தைகளுடன்.

அவள் குடும்பத்துக்கு ஒரே பெண்.
அதனால் அண்ணன் அவளை முன்பாகவே வரச் சொல்லி எழுதி இருந்தான்.

ரயிலடிக்கு வரும் அண்ணனின் மகன் சேகர் அத்தையைப் பாசத்தோடு அழைத்துச் செல்கிறான்.

அங்கே பங்களா கொள்ளாமல் மன்னி நீலாவின் தங்கைகளும் அம்மா,சித்தி என்று  நிறைந்திருக்கிறார்கள்.
வந்திறங்கும் ஜெயத்தை வந்தியா என்று வரவேற்று  உள்ளே  சென்றுவிடுகிறாள் நீலா.

கல்யாணப் பெண் ராதா ஓடிவந்து அத்தையைக் கட்டிக் கொள்கிறாள்.
இருவர் கண்ணிலும் தவறிவிட்ட மோகனின் நினைவு  கண்ணீரை  வரவழைக்கிறது.
கண்கொத்திப் பாம்பாகப் பார்க்கும் ராதாவின் அம்மம்மா(!)
'நன்னாயிருக்கடி ரெண்டு பேரும் செய்யறது. கல்யாணப் பொண்ணா லட்சணமா சிரிச்ச முகத்தோடு இரு என்ன்று ராதாவை அழைத்துச் சென்று விடுகிறால்.
வரும் இரண்டு நாட்களிலும் ஜெயம் புறக்கணிக்கப் படுகிறாள்.
ஒரு சாதாரணப் புடவை கல்யாணத்துக்கு வாங்கித்தருகிறாள்
நீலா.
அவளுக்கும் அவள் உறவினர்களுக்கும் நல்ல பட்டுப் புடவைகள்   வந்து சேருவதை ஜெயம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். திருமணத்துக்கு முதல் நாள் ஜெயத்தின் கண்வனும் வந்து சேர அவனுக்கும் வேட்டி அங்கவஸ்திரம் வைத்துக் கொடுக்கப் படுகிறது.
திருமணம் மிக ஆடம்பரமாக நடக்கிறது.
கச்சேரி,கதாகாலாட்சேபம் என்று  மூன்று நாட்கள் போனதே
தெரியவில்லை.
திருமணம் முடிந்த கையோடு கணவனையும் குழந்தைகளையும்
அழைத்துக் கொண்டு திருச்சி திரும்பிவிடுகிறாள்.
வந்தவளுக்குத் தனக்கு நேர்ந்த அவமானங்களை நினைத்துத் துக்கம் பொங்கி வருகிறது.
பிறகு மனதைத் தேற்றிக்   கொள்கிறாள்.
பணம் ஒன்றுதானே நம்மிடம் இல்லை. மற்றபடி நல்ல கணவன்,மணிமணியாகக் குழந்தைகள் .
என்று திருப்திப் பட்டுக் கொள்கிறாள்.
இரண்டு நாளில்  ஒரு மதிய வேளையில் அத்தை.... என்று குரல் கேட்கிறது.
வாசலில் கார் நிற்கும் சத்தம் ,கதவுகள் சாத்தப் படும் சப்தம் கேட்டதும் விரைகிறாள்  கதவைத் திறக்க.
அங்கெ புதுமணம் மாறாமல் நிற்கிறார்கள் ராதையு ம்  அவள் கணவன் மாதவனும்.

ஆச்சரியம் விலகாத நிலையில் ஜெயம் நிற்க வண்டியிலிருந்து வண்டி ஓட்டுபவர் பலவித பிஸ்கட் டப்பாக்கள்,பழங்கள்  துணிமணிப் பெட்டிகள் என்று கொண்டு வைக்கிறான்.
அதில் ஒரு புடவைப் பெட்டியை எடுத்து அத்தை கையில் கொடுத்து இருவரும் வணங்குகிறார்கள்.

என்னம்மா ராதா இதெல்லாம் என்று ஜெயம் கேட்க,
ராதை சொல்கிறாள்.
'அத்தை  எங்க  மாமியார் ரொம்ப நல்லவர்.
நீங்கள் கல்யாணத்தில் நடத்தப் பட்ட விதத்தை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
நானும் கல்யாணம் முடிந்த  கையோடு அவர்களுடன் மதுரைக்குச் சென்றுவிட்டேன்.
அங்கேதான் என்னை அருகில் வைத்துக் கொண்டு உறவுகளின் பெருமைகளை எடுத்துச் சொன்னார்.
உங்க அம்மா மாதிரி நீ இருக்காதே.
அன்பும் அரவணைப்பும் எப்பொழுதும் நாமும் தரவேண்டும் .பெற வேண்டும்.

நீ உடனே மாதவனை அழைத்துப் போய் உன் அத்தையைப் பார்த்துவிட்டு வா.
நம்வீட்டிற்கும்   வரச் சொல்லி அழைப்பு கொடுத்துவிட்டு,கோவில்களெல்லாம் பார்த்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பினார்   அத்தை'' என்று மூச்சுவிடாமல்  சொல்லி முடிக்கிறாள்.

ஜெயத்தின் வருத்தமெல்லாம் மறைந்துவிடுகிறது. ஒரு பாசம் விலகினால் என்ன.இந்தக் குழந்தையின் அன்பினால்  என் மனத்தை    நிரம்பச் செய்துவிட்டானே இறைவன் என்று  கடவுளை நினைக்கிறாள். .


கதை   எல்லார் வீட்டிலும் ஏதாவது ஒரு விதத்தில் நடந்திருக்கும்..

எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கெல்லாம் எப்படியோ.:)
,


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, February 25, 2013

சித்திர ராமாயணம் பழைய விகடனில்!

ராவணன் சீதையிடம் உரையாட முற்படுகிறான்.
பி ஸ்ரீ அவர்கள் எழுதிவந்த  சித்திரராமாயணத்தின் இரு பாகங்களைப்
படிக்க முடிந்தது  இந்தப்  புத்தகத்தில்.
சித்ராலயா    என்று    ஓவியம் வரைந்தவரின் பெயர்  இடம் பெற்றிருக்கிறது.
அநேகமாக இது மாயா அவர்களின்    இன்னோரு  பெயராக இருக்கும் என்றே தோன்றுகிறது,.
உருவம்,முகங்கள் எல்லாம் அவருடைய முத்திரை  பதிந்திருக்கிறது.

இராவணன்  சீதையின் கண் முன் மாயாஜாலத்தினால்
அவள்   தந்தை ஜனகனைக் கட்டியிழுத்து வந்து புழுதியில் புரளவைப்பது போலத் தோற்றம் காண்பிக்கிறான்.

கம்பராமாயண    வரிகள்  மேற்கோள் காட்டப்பட
''அஞ்சலை  அன்னன் அன்னாய்'
என்று அவளை விளீக்கிறான்.
நீ மட்டும் எனக்கு இணங்குவதாக இருந்தால்
ஜனகனை நான் தொழுவேன். அவனுக்கு வேண்டிய  ராஜ்யங்களையும் முன்பைவிட  அதிகமாக்கிக் கொடுப்பேன்  என்று இனிய பசப்பல் வார்த்தைகளைக் கூறுகிறான்.
''இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து
வேறிடத்திருந்து வாழ்வேன்''

சீதை மனம் இன்னும் ர்துடிக்கிறது.
பெரியோர்களெ  என் தந்தை இவ்வாறு துடிக்கவும் வேண்டுமோ . அநுமன் இல்லையோ நும்பால்'' என்று கதறுகிறாள்,.
இராவணன் மேலும் கூறுகிறான்.

சீதே உன் இனிய மழலையால் ஒரு இன்சொல் சொன்னால்
கூடப் போதும்.

''இந்திரன்  கவித்த மௌலி  இமையவர் இறைஞ்சி ஏத்த
மந்திர மரபில் சூட்டி,வானவர் மகளிர் யாரும்
பந்தரின் உரிமை செய்ய,யான் இவன் பணியில் நிற்பன்!
சுந்தரப்  பவள வாயால் ஒரு மொழி சிறிது சொல்லின்!!
அமிழ்தில் வந்த மகாலட்சுமியே உனக்கு சேவை செய்வாள் என்றவனுக்கு இன்னோரு சந்தெகம் வருகிறது
''செந்திரு நீரல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும்!


ஒருதந்தைக்கு எந்த மகளும் இதுவரை செய்திருக்காத ஒரு உதவியை நீ செய்தவளாவாய்.
இந்திரலோகம் ஆளும் தந்தையாக்குவாய் ஜனகனை.

எல்லாம் உன் அழகினால் அவனுக்குக் கிடைக்கப் போகும் பாக்கியம்.
என்று முடிக்கிறான் இராவணன்.

இந்த ஒரு அத்தியாயம் கிடைத்தது இந்தப் புத்தகத்தில்.
படிக்க முடிந்தது என் பாக்கியம் தான்.

ஏதாவது பிழை இருந்தால்  மன்னிக்க வேண்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Friday, February 22, 2013

நட்சத்திரப் பூக்கள் எழுதியவர் ''வேனா''


பழைய புத்தகப் பொதியலில் இந்தக் கதையும்  இருந்தது. வேனா  என்பவர்
எழுதிய  சிறுகதை. ஆதர்ச தம்பதிகள் இருவரின் ஒரு நாள் வாழ்க்கை.
தேவநாதன்  தகப்பனார் இல்லாத குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவந்துவிட்டு
தாயின் கடைசிகாலத்தில் அவள் இஷ்டப்பட்ட  இந்திராவையும் மணம்
செய்கிறான். இருவரும் சேர்ந்து நோய்வாய்ப்பட்ட  தாயையும்  கரையேற்றி
நிமிரும்போது அவன் கையிருப்புகள் குறைந்து விடுகின்றன. சாதாரண
அலுவலகத்தில் குமாஸ்தாக  இருப்பவனின்  அன்பு மனைவி அவன்
வருமானத்துக் கேற்ற வழியில் சிக்கனம் செய்து குடித்தனம் செய்கிறாள்.

இந்த நிலையில் அவனது வேலையில் வேறு ஒரு ஊருக்கு மாற்றப் படுகிறான்.
இப்போது அந்த செலவும் சேர்ந்து கொள்கிறது.சொற்பப் பணமும் கரைந்த நிலையில் அடுத்த மாத சம்பளத்துக்குக் காத்திருக்கும் நேரம்.
தினப்படி செலவை நண்பர்களிடம் பத்து ரூபாய்,ஐந்து ரூபாய் என்று  கடன் வாங்கிச் சமாளிக்கிறான்.
அரிசி இருப்பு  குறையும் போது,கமலம் அவனை அணுகுகிறாள்.
காலைக் காஃபியோடு   இருக்கும் அவனுக்கு கோபம்  வருகிறது.
''என்னை  ,இந்த நேரத்தில் கேட்டால்  என்னதான் முடியும்.
பட்டினி கிடந்தால் ஒன்றும் ஆகாது,.''
சுடுவார்த்தைகள்   இதுவரைக் கேட்டறியாத  கமலத்துக்கு வருத்தம் மேலிடுகிறது.
 அதை மறைத்துக் கொண்டு அவனை வழிஅனுப்புகிறாள்.
வாசலுக்கு வந்ததும் மதிய உணவுக்கான  பையைத் தேடுகிறான்.
அவளைத் திரும்பி நோக்க ஒன்றும் இல்லை  செய்வதற்கு. மாவு நேற்றே தீர்ந்துவிட்டது என்றதும்
பசியும் கோபமும் மேலிட அலுவலகத்துக்கு விரைகிறான்.
எங்கெங்கோ  அலைந்தும் பணம் பெயரவில்லை.
கடைசியாக அலுவலக  மேனஜரையே அணுக நினைக்கிறான்.
கொஞ்சம் தயக்கத்திற்குப் பிறகு
அவரிடம் நிலைமையை விளக்கிப் பணம் கேட்க,அவர் ஆதரவாக  இருபது ரூபாய்
கொடுத்து உதவுகிறார்.
அரிசி பத்தணாவுக்கு விற்றகாலம்.(கதையில்).
பணம் கையில் கிடைத்த மகிழ்ச்சியில்    தேவநாதன் உணவுவிடுதிக்குச் சென்று
காஃபி,டிபன் சாப்பிட்டு,வாயில் வெற்றிலையும் ,மனதில் மகிழ்ச்சியுமாகத் திரும்புகிறான்,.
இருட்டிவிடுகிறது.
வாசலிலேயே  கவலையோடு காத்திருக்கிறாள் கமலம்.
அவளைப் பார்த்ததும்  நினைவுக்கு வருகிறது அரிசி விஷயம்.

அவள் சாப்பிட்டாளோ என்றகவலையோடு அவள் கொடுத்த காப்பியைக் குடிக்கிறான்.
  அரிசி வாங்கணுமே!
இப்ப கடையெல்லாம் பூட்டி இருக்குமே நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்  நீங்கள் சாப்பிட வாருங்கள்''
 அவளுக்குச் சட்டென்று நினைவுக்கு வருகிறது.ஒருவருக்கே போதுமான குழைந்த சாதம் இருப்பது.
அவன் அணைப்பிலிருந்து விலகி,அவன் தந்த கதம்பத்தையும் வைத்துக் கொண்டு.
இதோ முற்றத்துக்கு வாருங்கள் பிசைந்து   கொண்டு வருகிறேன்
என்றபடி நழுவுகிறாள்.

அவள் கைமணத்தோடு இருக்கும் சாப்பாட்டைச் சீக்கிரமே சாப்பிட்டு முடித்து ஏப்பம்
விட்டவன் \'நீயும் சாப்பிடு' என்று கைகழுவப் போகும்போதுதான்
சாயந்திரத்துக்கு அரிசி இல்லை என்று அவள் சொன்னது நினைவூக்கு வருகிறது.
சட்டென்று சமையலறையை எட்டிப் பார்க்கிறான். அவள் பாத்திரத்தைக் கழுவி
வைத்துவிட்டுத் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கிறாள்.
கழிவிரக்கம் தொண்டையை அடைக்க அவள் பின்னால் வந்து நிற்கிறான். அவன் முகக் கலவரத்தை உணர்ந்த அவள்
எனக்கு இப்போதெல்லாம்
பசிப்பதே இல்லை.
ஏன்?
ஹ்ம்ம். இதையெல்லாம் சொல்லித் தெரியணுமா எங்க வீட்டுக்காரருக்கு என்று நாணம் காட்டுகிறாள்.
இப்படி முடிகிறது கதை.
மனம் மிகுந்த மகிழ்ச்சியில் தலை நிமிர்ந்து  வானத்தைப் பார்க்கிறான்.
அங்கே இருளிலும் நட்சத்திரங்கள் பூக்களாகச் சந்தோஷத்தை
உணர்த்துகின்றன.
இது கதைச் சுருக்கம் . !! உள்ளே இன்னும் துல்லியமான உணர்வுகள்
அழகாகத் தொடுக்கப் பட்டிருக்கின்றன.
அடுத்த கதையைச் சென்னையில்   கொடுக்க முயற்சிக்கிறேன்.:)


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, February 18, 2013

படித்த பழம் கதை

vallisimhan


சென்னையில் இருக்கும்போது காணாமல் போன
பழைய புத்தகங்கள் இங்கே துபாயில் வீட்டு மேல் அலமாரியில் கிடைத்தன,.
அவைஎன் தந்தையால் பைண்டு செய்யப் பட்ட வீட்டுவைத்தியம்  என்ற
புத்தகமும் ஒன்று.ஸ்ரீஹரி   அவர்கள் எழுதியது. இதைப் படித்தாலே பாதி வியாதி பறந்து விடும் போலிருக்கிறது.
அங்கங்கே மிளிரும் நகைச்சுவை.
 பீரோமேல் உட்கார்ந்திருக்கும் பையனுக்கு விளக்கெண்ணெய்  குடிக்கக் கொடுக்கும் அம்மா. கூடவே அப்பா. எத்தனை உணர்ச்சிகள்!
இது அம்மாவின் தந்தை சேர்த்துவைத்து அம்மாவுக்கு அனுப்பிய விகடன் அத்தியாயங்கள்.
.
பிஸ்ரீ அவர்களின் கம்பராமாயணக் குறிப்பு.  ஸ்ரீரங்கம் நரசிம்மன் ஒரு கதை எழுதி இருக்கிறார்.
சியாமா ''என்பவர் எழுதிய கதை அழகான மணியான
ஓவியங்கள்,
ஸ்ரீதர் அவர்களின்
நகைச்ச்சுவைத் துணுக்குகள்,
விதவிதமான  விளம்பரங்கள். அந்நிய நாட்டு நடிகைகள் போஸ்  கொடுக்கும்
விளம்பரங்கள்.
சியாமா  எழுதி இருக்கும் வேளைவரவில்லை கதை மனித எண்ணங்கள்
புனித மடையும் நேரம் மரணம் நெருங்கும்போது என்பதை விளக்கமாகக் கோர்வையாக
எடுத்துச் செல்லுகிறது.
வியாபாரி,இளம்சந்நியாசி,
இரு குழந்தைகள்,
கேப்டன் அமர்நாத்,
விமானப் பணிப்பெண்
சமூக சேவகி அம்மையார்  எல்லோரும் வேறு வேறு விதத்தில்
அந்த  ஆபத்தை உணருகிறார்கள்.
இளம் சந்யாசியும்,பணிப்பெண்ணும் மனம் தளராமல் மற்றவர் நலனை வேண்டுஜ்கிறார்கள்.
விமானம் ஆபத்தைக் கடந்து தரை  இறங்கியதும்
ஏறும்போது இருந்த மனோபாவம் மாறாமல் அனைத்துப் பயணிகளும் பிரிகிறார்கள்.
மயானவைராக்கியத்தை நினைவூட்டியது இந்தக் கதை.
இன்னோரு வியாபாரியை ஏமாற்ற நினைத்த செண்பகனார்
ஆபத்தில் மனம் மாறி,
விமானம் தரை தொட்டதும்
பழைய வேலையை தொடருகிறார்.
ரத்து செய்து பிரிந்த கணவனைச் சந்திக்க விழைந்த சமூகசேவகி
அதைச் செய்யாமல் கவர்னர் மாளிகையை நோக்கி விரைகிறார்.
இரு குழந்தைகளும் பத்திரமாகத் தாய்தந்தையரைக் கட்டி அணைக்கின்றன.
கடவுள்  நம்பிக்கை இல்லாமல் இருந்த காப்டன் அமர்நாத்
மனைவிக்கு  ஃபோன் செய்து இனிக்  கடவுளை நம்புவதாகச் சொல்லுகிறார்.
இளம் சந்யாசியும்,
விமானப் பணிப்
 பெண்ணும் இன்னும் வேளைவரவில்லை என்று சொல்லியபடி பிரிகிறார்கள்.
எளிமையான கதைகள்.  எளிமை எழுத்திலும்  பளிச்சிடுகிறது.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, February 17, 2013

கதம்பம்

குழந்தையின் கற்பனைpresent  from    friends
அம்மாக்கள் உதவ மழலைகள் வரையும் படம்
Add caption
Add caption

school games


old cycle  advertisement

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, February 12, 2013

பின்னூட்டங்களுக்குப் பதில் பதிவுAdd caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

உலகத்திலியே  மகா பெரிய பிரச்சினை, இந்த வலைப்பதிவாகப் போய் விட்டது:)
எழுத்ததெரிந்த கையே உனக்கு
படிக்கத் தெரியாதா  ஆஅ.ஆ
பதிவு போட்ட பின்னால்
பதிவை திறக்கத் தெரியாதா...
திறந்தபின்னும் கையே
பதில் கொடுக்க முடியாதா.
என்ன கொடுத்தாய் என்று நினைக்க முடியாதா
கையே நினைக்க முடியாதா??????????????????
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும்
நன்றி.
இராஜராகேஸ்வரி,
ஆதிவெங்கட்,
வெங்கட்நாகராஜ்
கோபு சார்,கீதாமா
இவர்கள் இப்போதைக்கு நினைவில் இருக்கிறது:0)
எந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் இட்டார்கள் என்று குழம்புகிறது.
அதனால் நான் செய்யப் போவது
ஜிமெயிலில்  பின்னூட்டம் வந்ததும்   குறித்துவைத்துக் கொண்டு
தகுந்த பதிலகளைப் பதிவாக இட்டு விடுகிறேன்.
இன்னும் 12 நாட்களில் சென்னை.
அங்கே என் கணினியார்     முறைக்காமல் இருக்கணும். இன்வர்ட்டர் சார் என்ன வெல்லாம் செய்தாரோ.:(
இருக்கவே இருக்கு. இப்பவே என்ன கவலை.!!!!

Monday, February 11, 2013

பூங்காவில் ஒரு நாள்

Add caption
Add caption
The Creek
Canna
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, February 09, 2013

அன்பு மாறாத அன்பு அம்மாவின் அன்பு


ருக்மணிக்கு நிறைமாசம் நெருங்கிக் கொண்டிருந்தது.
வேலைகள்  ஏகத்துக்கு இருந்தது. உதவிக்கு அக்காக்கள் நாச்சியும்
கிச்சம்மாவும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
கீழநத்தம் கிராமத்தில்  84 வருடங்களுக்கு முன் என்ன வசதியிருந்ததோ. .மனிதக் கட்டு இருந்தது.
அவ்வப் போது ஏற்படும் சலசலப்பைத் தவிர அநேகமாக அனைவருமே பாசத்தோடு  பழகிக் கொண்டிருப்பார்கள்.
பொறக்கப் போறது பொண் குழந்தைதான்.அமாவாசை வரது. தை அமாவாசை
நாளைக்குப்
பிறந்தா நன்றாக இருக்குமே
ருக்மணியின் தந்தை ஒரு புறம்  யோசனை செய்தார்.
சனிக்கிழமை ,தை அமாவாசை,ஃபெப்ரவரி 9 ஆம் தேதி
ஒரு அருமையான   பூப்போல  ஒரு பெண்குழந்தை பிறந்துவிட்டது.
தாயாருக்கு அதிகக் கஷ்டம் கொடுக்காமல்.
அன்றிலிருந்து  அது விரதம் பூண்டது போல
தொந்தரவு தராத அக்காவாகவே வளர்ந்தது.
தனக்குப் பிறகு பிறந்த தம்பிகளிடமும் மாறாத நேசம். அம்மாவுக்குச் செய்யவேண்டிய கடமைகள்.
தன் அப்பாவிடம் அதீத பாசம் எல்லாம் சேர்ந்த நல்ல கலவை என் அம்மா புஷ்பா ,பாப்பா,ஜயலக்ஷ்மி.
சென்னைக்கு வந்து படிப்பு  முடித்தல், பதினான்கு வயதில் திருமணம்,
17 வயதில் ஆண் குழந்தையின் வருகை,அன்பான கணவன்.
9 மாதங்கள் மகிழ்ச்சி கொடுத்த  அந்தக் கிருஷ்ணன் சீக்கிரம்
இறைவனடி சேர்ந்தபோதும் இருவரும்  ஒருவருக்கொருவர் ஆதரவாக
இருந்தார்கள்.
அந்ததாம்பத்தியம் வளமாக அதிகம் பேசாத அன்பு நிறைந்த சாம்ராஜ்ஜியத்துக்கு இன்னோரு பெண்ணும் இரு
ஆண்குழந்தைகளாகக் கிடைத்தனர்.

அளவான வருமானம்,சிக்கன வாழ்க்கை. அவ்வப் பொழுது
வெளியூர்ப் பயணங்கள்.
கடனில்லாத வாழ்க்கை. மனதுக்கினிய நண்பர்கள். என்று வாழ்ந்து
முடித்த என் அன்னைக்கு வணக்கம்.
தோற்றம் ஃபிப்ரவரி 9 ஆம் தேதி.
75 வயதில் எங்கள் மனத்தினில் புகுந்து விட்டாள்.
அம்மா அம்மா அம்மா.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, February 05, 2013

நன்றி நவிலுதல்
இந்தக் கணினி யில்  பதிவு போடுவது சுலபம். போட்ட பதிவைப் பார்ப்பது கஷ்டம்.
பின்னூட்டங்களைப் பிரசுரிப்பது சுலபம். அதற்குப் பதில் எழுதுவது கஷ்டம் சிரமம்.
எப்படியோ தட்டிமுட்டிச் சமாளிக்கிறேன்.
ஆதலால் இந்தப் பதிவு வாழ்த்தியவர்களுக்கு மறு மொய் எழுதவேண்டி ஒரு பதிவு போட வேண்டியதாப் போச்சு. மன்னிக்கணும்.
அன்பு சுப்பு சார் மீனாக்ஷி தம்பதியருக்கு வணக்கம். வாழ்த்துகளுக்க்கு நன்றி. என் சிங்கமும் உங்கள் வயதுதான்.:)  72.
@அன்பு கீதா சாம்ம்பசிவம்  மிக மிக நன்றி. இறையருள் நம்மை எப்போதும் காக்கட்டும்.

அன்பு வெங்கட்,ஆதி இருவருக்கும் எங்கள் ஆசிகள்.

@அன்பு அப்பாதுரை மிக நன்றி.

@  அன்பு மீனாக்ஷி  கண்டு காதல் காணாமல் காதல்  என்பது போல நம் நட்பு காணாத நட்பு. எங்க்கே இருக்கிறீர்கள் என்று கூடத் தெரியாது
இருந்தும் அன்புக்கு ஏது  கட்டுப்பாடு.நன்றிமா.


@,அன்பு திரு கருணாகரன்  உங்களுக்கும் எங்கள் ஆசிகள்.


துளசிமா  ப்ளாகர் படுத்தல் என்று சொல்லவில்லை. இந்தக் கணினி என் ப்ளாகைத்தான் திறக்க மறுக்கிறது.
மருமகள் முயற்சியில் சிலசமயம் பதில் போட முடிகிறது.நன்றிமா.

அன்பு ஹுசைனம்மா  உங்களுடன் இன்னும் நான் பேசவில்லை.
ஸாரி.வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

அன்பு இராஜராஜேஸ்வரி மிக மிக நன்றிமா
வேறு  பெயர்கள் விட்டுப் போயிருந்தால் தயவு செய்து மன்னிக்கணும்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்

HAPPY BIRHDAY THULASI GOPAL!!

நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க!
அறியாத் தகவல்கள் அளிக்கும்
அருமைத் துளசிகோபாலுக்கு
நீண்ட  ஆயுளும் நிறை ஆரோக்கியமும், நிம்மதியும் கொடுக்க  இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்  துளசி.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, February 04, 2013

47 ஆண்டு சேர்ந்து வாழ்க்கைப் படகு ஓட்டியாச்சுஅன்பின் இணைய நண்பர்களுக்கு ஒர்  சேதி
இற்றைக்கு 47  வருஷங்களுக்கு முன்னால் சுதந்திரப் பறவைகளாகச் சுற்றிய என்னையும் சிங்கத்தையும்
சேர்த்து முடி போட்டு  வீட்டார்கள்.மகிழ்ந்தார்கள்.
நாங்களும் உன்னைப்பிடி என்னைப் பிடின்னு தாண்டிக் குதித்து(!)
இன்னித் தேதி வரை ஒழுங்காக் குடும்பம் நடத்திவரோம்.
துணையிருக்கும் கடவுளர்கள் எப்பொழுதும் காக்க வேண்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, February 03, 2013

ஒரு நல்ல மனிதருக்கு நன்றி சொல்லும் நாள்


அம்மா
அப்பா கொடுத்த வாழ்க்கை என்னை இங்கே

கொண்டுவந்து
நிறுத்தி இருக்கிறது.

இன்னும்
தி.நகர் பொன்னப்பன் கடையையோ ,ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியையோ கடக்கும்போது

தள்ளாதவயதில்ன்
வனடந்து செல்லும் முதியவர்களைப் பார்க்கும் போது,சிவப்புத் திருசூரணம் இட்ட

நெற்றியுடன்
பளிச்சென்ற வெள்ளை வேட்டி.மெலிந்த தேகத்தை மூடிய நீலவண்ண சட்டை

இப்படி
நடமாடிய அப்பா.17 ஆண்டுகளும் ஓடிவிட்டன.

எத்தனையோ
ஏன் களுக்கு விடைகள் தெரியவில்லை.

அப்பாவைக்
கேட்டால்ல் காலத்தின் போக்கை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

முகத்தைப்
பின்னால் திருப்பாதே.ஆக வேண்டிய வேலைகளைப் பார்

என்றுதான்
சொல்வார்.

அவர்
வளர்த்த பேரன்கள் பேத்திகள் தாத்தா சொன்ன வார்த்தைகளை இன்னும் கடைப்பிடிக்கிறார்கள்.

அவர்
அன்பும் அம்மாவின் மென்மையும்

ஆசிகளும் எங்களைக் காக்கும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, February 02, 2013

அழகான ஆத்தங்கரையின் அருகில் ஒரு அன்னவிடுதி

ஆற்றங்கரை காற்று  ,சாரல் எல்லாம் கொண்டுவந்த மரினா
காவல் குதிரைகள்
முறுக்கிகொண்டு நிற்கும் இன்ஃபினிடி டவர்
அளவிடமுடியாத எண்ணிக்கையில்  உயர்ந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள்
சொகுசு இருக்கைகள் .சாப்பிட்டுக் கொண்டே தூங்கலாம்:)
relaxing center
சாப்பிட விரையும் விருந்தாளிகள்

வரவேற்பரை,,,,,ஹால்,,,நடபாதை.?
நம்  நடராஜர்  நான்கு  மூலையிலும்    ஒளி  வீசுகிறார்

தை மாதம் பிறந்ததும் வரும் திருமணநாட்கள்,பிறந்தநாட்கள் அதிகம். இன்னும் இரண்டு மூன்று பாக்கி இருக்கின்றன.
அதில் ஒன்று மருமகளின் பிறந்த நாளும் திருமணநாளும் பேத்தியின் பிறந்தநாளும்.
இவைகளைக் கொண்டாட  முதல் நாளே மருமகள் துபாயில் தனக்குத் தெரிந்த
கடைகள்  ஊழியர்களுக்கு இனிப்பு மிட்டாய்களும் கேக்குகளும் குழந்தைகையால் கொடுக்கவைத்தார்,
பிறந்த அன்றிலிருந்த அவளுடன் பழக்கப் பட்டவர்கள் ஆனதால்
 எல்லோருக்கும் மகிழ்ச்சி.
மற்றதினங்களையும்  சிறப்பாக கொண்டாடவே எங்களை அழைத்திருந்தார் மகனார்.
அதை ஒட்டி எங்களை  ஒரு அழகிய உணவகத்துக்கு அழைத்துச் சென்றார்.
துபாய் மரினாவை ஒட்டி அமைந்திருந்ததது  அந்த ரெஸ்டராண்ட்.
க்ரோஸ்வனோர்  ஹௌஸ் என்று நினைக்கிறேன்.
வெள்ளிக்கிழமை என்பதால்  ப்ரன்சுக்கு ஏற்பாடு. கொண்டுவந்து வைத்தவர்களும் ,
வைக்கப் பட்ட உணவுகள் சுற்றுச் சூழலும் மெல்லிய இசையோடு
நல்லதொரு உணர்வைக் கொடுத்தன.
பாதிக்கு மேல் சாப்பிடமுடியவில்லை.:)
குழந்தைக்கு மட்டும் சாக்கலேட்டினால் செய்த கேக் கொண்டுவந்து வைத்து
அவளைச் சந்தோஷப் படுத்தினர்.
ஒரு இனிய மதியமாக நான்கு மணிநேரம் அங்கே கழிந்தது.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அதே அதே.