அம்மா
அப்பா கொடுத்த வாழ்க்கை என்னை இங்கே
கொண்டுவந்து
நிறுத்தி இருக்கிறது.
இன்னும்
தி.நகர் பொன்னப்பன் கடையையோ ,ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியையோ கடக்கும்போது
தள்ளாதவயதில்ன்
வனடந்து செல்லும் முதியவர்களைப் பார்க்கும் போது,சிவப்புத் திருசூரணம் இட்ட
நெற்றியுடன்
பளிச்சென்ற வெள்ளை வேட்டி.மெலிந்த தேகத்தை மூடிய நீலவண்ண சட்டை
இப்படி
நடமாடிய அப்பா.17 ஆண்டுகளும் ஓடிவிட்டன.
எத்தனையோ
ஏன் களுக்கு விடைகள் தெரியவில்லை.
அப்பாவைக்
கேட்டால்ல் காலத்தின் போக்கை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
முகத்தைப்
பின்னால் திருப்பாதே.ஆக வேண்டிய வேலைகளைப் பார்
என்றுதான்
சொல்வார்.
அவர்
வளர்த்த பேரன்கள் பேத்திகள் தாத்தா சொன்ன வார்த்தைகளை இன்னும் கடைப்பிடிக்கிறார்கள்.
அவர்
அன்பும் அம்மாவின் மென்மையும்
ஆசிகளும் எங்களைக் காக்கும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
12 comments:
அப்பாவின் அன்பும் அம்மாவின் மென்மையும் சேர்ந்த கலவையாக நீங்கள். அதற்கு அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
அப்பாவின் நினைவுகளை என்றும் அன்பாய் நினைவு கூறும் நாள்.
அவர்கள் ஆசிகள் குடும்பத்தினர்களை காக்கும் நிச்சயமாய்.
அழகாச் சொல்லியிருக்கீங்க.
அன்பு கோமதி நன்றிமா. எங்கள் ப்ளாகில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.
என் வாழ்க்கைஉஇன் முக்கிய கட்டங்களில் அப்பா,தம்பி,அம்மா இவர்களை இறைவன் தன்னிடம் சேர்த்துக் கொண்டார்.
அவர்கள் எனக்குச் செய்திருக்கும் உதவிகளில் கால்பங்காவது திருப்பிக் கொடுத்திருக்கலாம்.
வாய்ப்பு இல்லை.
வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக நன்றிமா.
துரை. எங்க இருக்கிறீர்கள்!!
பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி மா.
அப்பா, அம்மா நினைவுக்கு அஞ்சலியை நானும் சேர்ந்து செலுத்திக்கிறேன். இன்னிக்கு எங்க அப்பாவுக்கும் திதி, சென்னையில் நடக்கிறது. அவர்கள் ஆசிகளே நம்மை எல்லாம் காத்து வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
பி.கு. துரை அமெரிக்கா போயாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :))))போய்ச் சேர்ந்து போஸ்டும் போட்டாச்சு.
நன்றி சொல்லும் நாளில் உங்களுடன் நாங்களும் வணங்குகின்றோம்.
அப்பாவிற்கு அருமையான அஞ்சலி.
மண்ணிலிருந்து மறைந்து விட்டாலும் மனதிலிருந்து மறையவில்லை நினைவுகள்.
எங்கள் வணக்கங்களும் வல்லிம்மா.
அப்பா............. ஹப்பா !!!!
அப்பாவின் நினைவுகளை என்றும் அன்பாய் நினைவு கூறும் நாளில்....
என்றென்றும் அவர்கள் ஆசிகள் குடும்பத்தினர்களை காக்கும் நிச்சயமாய்.
அப்பா அம்மாவுக்கு எங்கள் அஞ்சலிகளும்...
Post a Comment