ஆற்றங்கரை காற்று ,சாரல் எல்லாம் கொண்டுவந்த மரினா |
காவல் குதிரைகள் |
முறுக்கிகொண்டு நிற்கும் இன்ஃபினிடி டவர் |
அளவிடமுடியாத எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள் |
சொகுசு இருக்கைகள் .சாப்பிட்டுக் கொண்டே தூங்கலாம்:) |
relaxing center |
சாப்பிட விரையும் விருந்தாளிகள் |
வரவேற்பரை,,,,,ஹால்,,,நடபாதை.? |
நம் நடராஜர் நான்கு மூலையிலும் ஒளி வீசுகிறார் |
தை மாதம் பிறந்ததும் வரும் திருமணநாட்கள்,பிறந்தநாட்கள் அதிகம். இன்னும் இரண்டு மூன்று பாக்கி இருக்கின்றன.
அதில் ஒன்று மருமகளின் பிறந்த நாளும் திருமணநாளும் பேத்தியின் பிறந்தநாளும்.
இவைகளைக் கொண்டாட முதல் நாளே மருமகள் துபாயில் தனக்குத் தெரிந்த
கடைகள் ஊழியர்களுக்கு இனிப்பு மிட்டாய்களும் கேக்குகளும் குழந்தைகையால் கொடுக்கவைத்தார்,
பிறந்த அன்றிலிருந்த அவளுடன் பழக்கப் பட்டவர்கள் ஆனதால்
எல்லோருக்கும் மகிழ்ச்சி.
மற்றதினங்களையும் சிறப்பாக கொண்டாடவே எங்களை அழைத்திருந்தார் மகனார்.
அதை ஒட்டி எங்களை ஒரு அழகிய உணவகத்துக்கு அழைத்துச் சென்றார்.
துபாய் மரினாவை ஒட்டி அமைந்திருந்ததது அந்த ரெஸ்டராண்ட்.
க்ரோஸ்வனோர் ஹௌஸ் என்று நினைக்கிறேன்.
வெள்ளிக்கிழமை என்பதால் ப்ரன்சுக்கு ஏற்பாடு. கொண்டுவந்து வைத்தவர்களும் ,
வைக்கப் பட்ட உணவுகள் சுற்றுச் சூழலும் மெல்லிய இசையோடு
நல்லதொரு உணர்வைக் கொடுத்தன.
பாதிக்கு மேல் சாப்பிடமுடியவில்லை.:)
குழந்தைக்கு மட்டும் சாக்கலேட்டினால் செய்த கேக் கொண்டுவந்து வைத்து
அவளைச் சந்தோஷப் படுத்தினர்.
ஒரு இனிய மதியமாக நான்கு மணிநேரம் அங்கே கழிந்தது.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
13 comments:
குழந்தைக்கு எங்கள் ஆசிகள். உங்கள் பொழுது இனிமையாகக் கழிந்ததற்கும், இனிமேலும் இனிமையாகக் கழியவும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
வியப்பூட்டும் படங்கள் அம்மா...
வல்லி அக்கா, பேத்திக்கு எங்கள் வாழ்த்துக்கள். படங்கள் பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துகளுக்கு மிக நன்றி கீதா.
இன்று அவளுடைய பள்ளி சினேகிதர்களுக்க்கு
விருந்து கொடுத்தாகிவிட்டது.. பெரிய கல்யாணம் நடந்த மாதிரி ஒரு
உணர்வு.:)
வருகைக்கு மிகவும் நன்றி தனபாலன்.
அன்பு கோமதி,ஆசிகளுக்கு மிகவும் நன்றிமா. ஐந்து வருடங்களாக அவள் பிறந்த நாள் பற்றிக்
கேட்டதே இல்லை. இப்பொழுது எல்லோருடைய பிறந்த நாளுக்கும் போய் வருவதால்
அவளுடைய பெற்றோர்கள் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
குழந்தைகளோடு எங்கள் பொழுதும் ஆரவாரமாகக் கழிந்தது.
பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துகள் அம்மாவுக்கும், மகளுக்கும்!!
//பள்ளி சினேகிதர்களுக்க்கு
விருந்து கொடுத்தாகிவிட்டது.. பெரிய கல்யாணம் நடந்த மாதிரி ஒரு
உணர்வு.:)//
இதுக்கே இப்படி செல்ல அலுப்பா? அப்படின்னா, பேத்தி கல்யாணத்துக்கு என்ன சொல்லுவீங்க?! :-))))
வாங்க ஹுசைனம்மா. இந்த ஏற்பாடு, குழந்தைகளுக்கு விளையாட்டு ஏற்பாடு, பதில் பரிசுகள்,வந்த சுமார் 40 பெற்றோர்கள்
அவர்களை விசாரித்து,அவர்கள் உணவுக்கு அழைத்து உபசாரம் செய்து நல்ல பேரும் வாங்கிக் கொண்டனர் மருமகளும் மகனும்.
அதைத்தான் சொன்னேன்.:)
பிறந்த நாள்,திருமண நாள்னு எல்லாத்துலையும் கலந்துண்ட நம்ப வல்லிம்மாவுக்கும் சிங்கத்துக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்! :)
விழாக் காணும் குடும்பத்திற்கு நல்வாழ்த்துகள்:)!
அன்பான விருந்து குறித்து அழகான பகிர்வு.
படங்களும் சேதியும் ஒன்னையொன்னு மிஞ்சுது!!!!
குழந்தைக்கும்,மருமகளுக்கும், திருமணநாள் கொண்டாடும் மகன் அண்ட் கோவுக்கும் மனமார்ந்த இனிய வாழ்த்து(க்)கள்.
மீண்டும் வாழ்த்திக்கிறேன். பேத்திக்கும் மருமகளுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
மறுபடியும் படிச்சேன். வாழ்த்துகள்.
Post a Comment