வாழ்வின் மொத்த நாட்களில் ஒரு நாள்
மிக முக்கியமாக அமைகிறது.
அதன் சிறப்பை உடனே புரிந்து கொள்ள
கொஞ்சம் முதிர்ச்சி வேண்டும்.
திருமணங்கள் பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டாலும்
அதை முறைப்படி நடத்திச் செல்லும் அவசியம் தம்பதிகளுக்கே
அமைகிறது.
சரியாகப் புரிதல் நிகழும் ஒரு நாள்
வாழ்வின் சிறந்த நாள்.
அதுவரை மோகம், காதல் என்று என்ன சொல்கிறோமோ
அது நிலைக்க வேண்டும்.
மணத்துக்கு முன் வரும் காதலும், பின் வரும் காதலும்
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதிலும்
இணைந்து சிந்திப்பதிலும் தெரியும்.
அனைவருக்கும் தோழமை அவசியம்.
யானைக் காதல் என்று தி.ஜானகிராமன் சொல்வார்.
அதுபோல மணவாழ்வு அமைந்தால் சொர்க்கமே.
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
அன்பின் கோமதி அரசுவின் திருமண நாள்
ஃபெப்ரவரி ஏழாம் தேதி.
மனம் நிறைய இனிய நினைவுகளுடன்
ஸாரின் அன்புடனும்
நல் ஆரோக்கிய வாழ்வு அமைய வேண்டும்.
சுற்றம், குடும்பம் என்று
எல்லோரும் கோமதியின் மீது பரிவுடன் இருப்பதற்கு
அவரின் ஆழ்ந்த புரிதலே காரணம்.
வாழ்க வளமுடன்.
எழுதி வெளியிட்டப் பதிவுகளுக்குப்
பதில் அளிக்கத் தாமதமாகிறது.
இடைவிடா தலைவலி. வீட்டைச் சுற்றி இருக்கும் பனி
சுவர்களில் ஊடுருவி,
தலையில் இறங்குகிறது.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
என்று பாடல்தான் நினைவுக்கு வருகிறது.