Blog Archive

Showing posts with label பாடம். Show all posts
Showing posts with label பாடம். Show all posts

Friday, March 11, 2011

அம்மாவின் டயரியில் குறிப்பிடாத வரிகள்

அம்மாவின் குறிப்பில் விட்டுப் போன, அவள் மறக்க விரும்பிய சில விஷயங்களில்
ஒன்று , மருத்துவ மனையில் அப்பா  சரியாகக் கவனிக்கப் படாதது.

அவசரத்துக்குச் சேர்த்த அந்த இடத்திலிருந்து அப்பாவை மாற்றி இருக்கலாம்.
அப்பாவிடம் உனக்கு நெஞு வலிக்கிறதாப்பான்னு கேட்டு இருக்கலாம்.
அவர்களது புத்திரச் செல்வங்கள் அவர்து
நோயின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாதது ஒரு குற்றம்.
அவரவர் வேலைகளில் மூழ்கி
36 மணிநேரத்தில் ஒரு விலை மதிப்பில்லாத  உயிரை இழந்தோம்.

ஒரே  ஒரு  பூரண செக்அப் அந்த மருத்துவர் செய்திருக்கலாம்.

அம்மாவும் சின்னத்தம்பியும் தான் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள்.
இரவு முழுவதும் அவருக்கு நோவு இருந்திருக்கிறது.
ஆனால் நான் காலையில் அவரைப் பார்க்கப் போனபோது எப்போதும்
 போல நெற்றியில் திருமண்காப்பு,
''என்னம்மா  சாயந்திரம் அகத்துக்குப் போய்விடலாமா ''
என்ற புன்சிரிப்புடனான கேள்வி.

அம்மா சொன்னது போல்  கண்ணும் கருத்தும் இயங்கவில்லை.
அன்று கல்யாணப் புடவைகளையும் திருமாங்கல்யத்தையும் அப்பாவிடம் காண்பித்தேன்.
எப்பொழுதும் போல மெச்சிக்கொண்டார்.

மதியத்துக்கு மேல் தான் நான் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது பலவீனம்
உச்சக் கட்டத்தை  அடைந்தது.
வந்து பார்த்த அருமை வைத்தியர் க்ரோசின் கொடுங்கள், காய்ச்சல் குறைந்து
வியர்த்துவிட்டால் சரியாகிவிடும். இன்னோரு ட்ரிப் ஏத்துமா ''என்று
சொல்லிவிட்டு டென்னிஸ் விளையாடப் போய்விட்டார்.

அப்பாவின் கைகள் மறுத்து,வாய்மொழியாக ஏதோ சொல்ல வந்தன. வாய்ப்பேச்சு வரவில்லை.
அருகில் அமர்ந்திருந்த அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

என்னால் பார்க்க சகிக்க முடியாமல் அறைக்கு வெளியே வந்தேன்.
வைத்தியரை அழைக்க மறுபடி ஓடினேன்.
அவர் வரும்போது அப்பாவின் முகத்தில் இணையில்லாத அமைதி.
 கண்கள் திறந்திருக்க,பார்வை இல்லை.
அம்மா அப்பாவின் நெஞ்சில் காதுகளை வைத்துப் பார்த்தார். அப்படியே
கைகளைக் கூப்பி அவர்கைகளில் முகத்தை வைத்துக் கொண்டார்.
வந்த வைத்தியர் மாஸ்ஸிவ் அட்டாக்'' என்று உரைத்து விட்டு வெளியேறினார்.
பிறகு சின்னத் தம்பி வந்தான்.
வேலைகள் நடந்தன. நான் அந்த நர்ஸம்மாவிடம்  என்ன ஆச்சு என்று கேட்டதற்கு
''வயசாச்சு இல்லம்மா'',  என்று தன் தொலைபேசியில்  சிநேகிதியிடம் பேச ஆரம்பித்தார்.
அன்று எங்களுக்கு மிகவும் உறுதியாக இருந்து எங்களைக் கவனித்துக் கொண்டது, வாய் அதிகம் பேசாத எங்கள் சிங்கம் தான்.
இன்றும் அந்த மருத்துவ மனைப் பக்கம் போவதை நான் விரும்புவதில்லை.

கடின இதயம் படைத்த மனித மருத்துவர்களிடமிருந்து கடவுள் தான் முதியவர்களைக் காக்க வேண்டும்.இந்தப் பதிவு
ஏற்கனவே   வல்லமை மின்னிதழில்  பிரசுரம்  ஆகி இருக்கிறது. ஆசிரியர் திரு அண்ணாகண்ணனுக்கு  மிகவும் நன்றி.

பலவருடங்களாக  மனதில் உறுத்தியது இந்தச் சம்பவம் இப்பொழுது எழுதவும் காரணம் உண்டு.

எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் தம்பி    சர்க்கரை நோயில் அவதிப் படுபவர்.
தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்.

அவரும் வெளியில் கிளம்பியவர் திரும்பி வருகையில் தலை சுற்றி 
நடைபாதையில்  உட்கார்ந்துவிட்டார். அதுவும்   சென்னையின் சுறுசுறு அண்ணாசாலையில்.
கிட்டத்தட்ட   நினைவிழந்த நிலையில், அவரைப் பார்த்த நல்ல மனிதர்  அவர்கையிலிருந்த  டயபெடிஸ் ஐடி   அட்டையைப் பார்த்து அவரை
மருத்துவமனையில்  சேர்த்து, வீட்டுக்கும் சொல்லிவிட்டார்,.
50 வயதே   ஆகும் அவரைக் காப்பாற்றிய   நல்ல மருத்துவரும் இருக்கிறார்.
இதையும் இங்கே பதிய வேண்டும் இல்லையா.


மனதில் உறுதி வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்'
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பெற வேண்டும்.

Tuesday, August 03, 2010

வாடகை கொடுக்காத குடியிருப்புகள்




இருக்கும் இடம் எங்கே சொல் இறைவா



இடம் தேடும் பறவைகள் :)




வெளியேறிய பத்தடி மர அலமாரி




சுவர் ''காளி ''.கரையான்களை அழித்ததால் :)
ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல :(

வரவேற்பா,தூக்கமா:0)






எல்லோரும் வாழ வேண்டும்.





கற்றது.  காலில்லாமல் மரப் பொருட்கள்(பீரோ)
vantha வைத்தால் காலும் வாயும் உள்ள கரையான்கள் குடி புகும்.
 அனுபவம் இல்லாத கார்பெண்டர் வீட்டில் நுழைந்தால் விபரீத அனுபவங்களைச் சந்திக்க  நேரும்.
எப்படியோ  பத்து வருடங்கள் முன் செய்த  தவறு,இப்போதாவது விழித்துக் கொண்டேன். இல்லாவிட்டால் புத்தகப் புழுக்கள,செல்  எனப்படும் அரித்துக் செல்லும் கரையான்களா, பெயர் சொல்லத் தெரியவில்லை. தோல் இருக்க சுளை முழுங்கும் ஜீவராசிகளைக் சந்திக்கும்  பாக்கியம் நேற்று கிடைத்தது.
  பழைய ஆல்பங்களின் ரெக்சின் உரைகள் மூடியிருக்க உள்ளே எப்படிப் புகுந்தன இவை??
வந்த மரவேலைசெய்பவர்,  பல நாட்கள்  தொந்தரவு செய்ததால் இந்தப் பத்தடி பீரோவை
படுக்கை அறையில் வைத்தோம். தரிக்கும் கூரைக்குமாக ஒரு ராட்சச அளவில்
பார்க்க ,முதலில் நன்றாகத் தான் இருந்தது.
அந்த ஆள், பலகைகளை முன்னேற  பாடாகக் கொண்டுவந்தபோது கூடச்க் சந்தேகப் படவில்லை.
அவன் கொண்டுவந்தது வெறும் பெயின்ட் அடித்த  ஆனால்   பூச்சிக் கொல்லி பூசின  மாம்பலகை  என்று நம்பினோம் பாருங்கள். அதுதான் தப்பு.
வெறும் மட்ட ரக  பிளைவுட்  உள்ளே ஏதோ  வைத்து,பார்க்கக் கனமாக இருந்ததால்,
.............ரூபாய் கொடுத்து   உள்ளேயும்  வைத்தாகிவிட்டது.
2004lilrunthu    ஆறு வருடங்கள் எல்லாவற்றையும் வைக்க இடம் கிடைத்த்து. பிரச்சினை கால்கலில் இருக்கு என்ரு தெரியாமல் தலையைக் கோதி, சீர் செய்தால்,என்ன நடக்குமோ அது நடந்துவிட்டது. கால் இருக்க வேண்டிய இடத்தில் மூடிபோட்டுப், பூச்சி எல்லாம் அடையாமல் இருக்கும் சார்னு அவன் சொன்னதை நம்பினோம்.


யாரும் என்னை நோகவேண்டாம், ஏதுடா வல்லிமா,இப்படி ஒரு தொழிலாளிய அவன் இவன் என்கிறாரெ என்று.

நேற்று நங்கள் இந்த பெரிய பீரோவை அகற்றப் பட்ட பாடு, கரயான்கள் மேலும் பரவாமல் இருக்க எடுத்த முயற்சிகள் ,70 வயதில் போராட வேண்டிய காரியமா. பாவம் எங்கள் சிங்கம். இரண்டே இரண்டு ஆட்களை வைத்துக் கொண்டு ,சிரமப்பட்டு வெளியேற்றினார் அந்த அலமாரியை.

அதற்கு முன் உள்ளே இருந்த அனைத்துப் புடைவகள், படுக்கை விரிப்புகள்,திரைச்சீலைகள் ,ஸ்வெட்டர்கள்(வெளியூர் போனால் வாங்குபவை) இத்யாதிகளை வெளியில் இப்போதைய வரவேற்பரையில் அடைத்தேன்.

இஸ்திரி மீனா, ''அம்மா, வீடு மாத்தறீங்களான்னு கேட்டு'' மானத்தை வாங்கினாள்:)

சோகக் கதை போதும்.

மக்களா, மரவிஷயங்களில் ஜாக்கிரதையாக இருங்கள். நான் இனிமேல் காத்ரேஜுக்கு மாறுவது என்று தீர்மானம் செய்துவிட்டேன்.