Blog Archive

Sunday, April 27, 2008

டீச்சருக்கான பதிவு(மாணவர்கள் கவனிக்க)

இது கேள்வி கேட்கும் மாணவன் படம் இது பலவகைகளில் படிப்புச் சொல்லித்தரும் தாத்தா பாட்டிகள்



இது உண்மையான டீச்சர்




இதுதான் சந்தோஷமாக டீச்சர் இருக்கும் இடம்


இதனால் சகலருக்கும் அறிவிக்கப் படுவது. இன்று எனக்கும் டீச்சர் பட்டம் கொடுக்கப் பட்டது.


இல்லப்பா அதெக்கெல்லாம் மரியாதைப் பட்டவங்க ஏற்கனவே


வலைலே படு வேக நீச்சல் போட்டு எட்டாத சிகரங்களை எல்லாம்


எட்டிக்கிட்டு இருக்காங்கனு சொன்னாலும் இந்த மனுஷன் கேக்கிறதாத் தெரியலை:)




வேற யார்ர்?சதங்கா தான் இந்த மாதிரி செய்யாறார். சரிப்பாப் போனாப்போறதுனு பார்த்தால் அவர் பதிவுல போய் ஒரு உப்புச் சப்பாணி டீச்சரா நாம இருக்கலாம்னு சம்மதம் சொல்லிட்டுத் திரும்பறதுக்குள்ள சேதுக்கரசியையும் டீச்சர்னு கூப்பிட்டு இருக்காரு.
இங்க பாருங்கhttp://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post.html :)
ஆகக்கூடி நமக்கு பட்டம் கொடுத்தவரை வாழ்த்தறதுதான் நல்ல வழக்கம். எப்படியோ பட்டப் படிப்பு கூட முடிக்காத எனக்கு டீச்சர்னு மரியாதை கொடுத்த சதங்கா வாழ்க.
சதங்கா தப்பா எடுத்துக்க மாட்டார்னு நினைக்கிறேன்.
சும்மா தமாசுக்குத்தான்:)


:))





33 comments:

உண்மைத்தமிழன் said...

வலையுலகில் எங்கெங்கு காணினும் டீச்சர்களடா..?

ரிட்டையர்ட்டு எந்த வயசுல டீச்சர்..?

Anonymous said...

உள்ளேன் டீச்சர், புது டீச்சர் நல்லா பாடம் எடுப்பீங்களா??

துளசி கோபால் said...

வாழ்க வல்லி டீச்சர்:-)))))

துளசி கோபால் said...

உண்மைத்தமிழன், கொஞ்சம் சும்மா இருக்க மாட்டீங்களா? எம்ப்ளாய்மெண்ட்லே பதிஞ்சு இப்பத்தான் வேலையே கிடைச்சிருக்கு. அதுக்குள்ளே ரிட்டயர்மெண்டா? ஊஹூம்... நோ வே:-))))

வல்லிசிம்ஹன் said...

இது புதசெவி போல:)
டீச்சரா இல்லாத டீச்சர்.
டி இ டி.
எப்பவோ ரிடயராயாச்சு.
நாம சொல்றதைக் கேக்க ஆளு இல்லப்பா.

அதனால இப்ப கணினிக்கு மட்டும் பாடம் எடுத்துட்டு இருக்கேன். அதுதான் என்னக் கேள்வி கேக்காது.:)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. இந்த டீச்சர் பெரிய டீச்சர் எடுக்கிற பாடங்களைப் படிக்க மட்டும் செய்வாங்க..


ஸ்பெஷல் டியூஷன் வேணும்னா நியுசிக்காரங்க மாச மாசம் ஆயிரம் டாலர் அனுப்பணும்.:)
சரியாப்பா அம்மிணி??

வல்லிசிம்ஹன் said...

டீச்சர் !!!!! எங்கியோ போயிட்டீங்க.
சே கண்ணில தண்ணி வந்துடுத்துப்பா. துளசி.
இன்னிக்கு மட்டும் நான் டீச்சர். நாளலேருந்து வெறும் வல்லி.:)

ambi said...

அப்ப, உங்க வீட்டு சிங்கம் தான் ஹெட் மாஸ்டரா? :))

கிருத்திகா ஸ்ரீதர் said...

டீச்சர்னா வீட்டுப்பாட பயம் வந்துடும் அதனால எனக்கு நீங்க வல்லிம்மா தான் சரியா...

வல்லிசிம்ஹன் said...

அம்பி,எப்படிப்பா நேரம் கிடைச்சுது.
சென்னைக்கு வரும்போது வீட்டுக்கு வாங்கோ.

சிங்கம் தான் ஹெட்.
நானு வாலு.:)

வல்லிசிம்ஹன் said...

கிருத்திகா, நீங்கதான் எனக்கேத்த ஆளு.
அப்படியே நடக்கக் கடவது.
டீச்சர்னா கொண்டை போடணும். எனக்கு சவுரி வச்சு போட எல்லாம் முடியாது:)
ரெண்டாவது காரணம் டீச்சருக்கு நிறைய விஷயம் தெரிஞ்சு இருக்கணும். அந்த விததில நாம கொஞ்சம்...ஹீ ஹீ

அதனால இருக்குமிடம் வைகுந்தம்பா நமக்கு. ஓக்கேயா:)

வல்லிசிம்ஹன் said...

துளசி இது ஒரு நாள் முதல்வன் மாதிரி ஒரு நாள் டீச்சர். அதெல்லாம் நிறைய ப் பணம் கொடுத்து ரிடயர் செய்துட்டாங்கப்பா.:)

ambi said...

பங்க்ஷன் முடிஞ்சாச்சு. சீதா மிதிலைக்கு போயாச்சு!

இனிமே வீட்ல சமையல் எல்லாம் (தம்பி துணையோட தான்)தனியாவர்த்தனம் தான். :p

நிறையா நேரம் கிடைக்கும் இனிமே!

நானானி said...

ரிடையர்மெண்ட் நாளிலேயே
போஸ்டிங்கும் கிடைத்த வல்லிக்கு வாழ்த்துக்கள்!!
ஒரு நாள் டீச்சரா என்ன தாளிச்சீங்க....ஹூஹூம் என்ன சாதிச்சீங்க? அதையும்தான் சொல்லிப்போடுங்க.

பாச மலர் / Paasa Malar said...

வேணாம்..நிம்மதியா இருக்க வேண்டிய நேரத்துல டீச்சர் பட்டம் எதுக்கு? ...எங்களை மாதிரி அவஸ்தை வேணாமே என்ற நல்ல எண்ணத்துல சொன்னாலும் உங்களை எங்க கட்சிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இலவசக்கொத்தனார் said...

உங்க வகுப்பு மாணவர் தலைவர் யாரு? எங்க ரீச்சருக்குக் கிடைத்த மாதிரி நல்ல ஆளா கிடைக்க வாழ்த்துகள்.

SP.VR. SUBBIAH said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா - டீச்சர் பதவி உங்களால் மேலும் சிறக்கட்டும்!

வல்லிசிம்ஹன் said...

அப்படியா அம்பி. சௌக்கியமா இருக்கட்டும்.

ம்ம் இப்பதான் தங்கமணி ஊரில என்ன செய்யுதோனு தோணிண்டே இருக்குமே:)

தம்பி ,அம்பியைக் கவனிச்சுக்கோமா. மரம் செடி,இலை இதைஇயெல்லாம் பார்த்துப் பேசிக்கொண்டு இருப்பார். அதனால் சமையல் செய்யும்போது உதவிக்குக் கூப்பிட்டுக் கொள்ளவும்:)

வல்லிசிம்ஹன் said...

அப்படியா அம்பி. சௌக்கியமா இருக்கட்டும்.

ம்ம் இப்பதான் தங்கமணி ஊரில என்ன செய்யுதோனு தோணிண்டே இருக்குமே:)

தம்பி ,அம்பியைக் கவனிச்சுக்கோமா. மரம் செடி,இலை இதைஇயெல்லாம் பார்த்துப் பேசிக்கொண்டு இருப்பார். அதனால் சமையல் செய்யும்போது உதவிக்குக் கூப்பிட்டுக் கொள்ளவும்:)

வல்லிசிம்ஹன் said...

இன்னிக்கா, நாஅனானி. ஒரு நல்ல சலாட் செய்து, கடுகு கொட்டினேன்,தாளிச்சேன்.

தம்பி மகன்,மருமகளுக்கு மதிய உணவு இங்கதான். நல்ல வென்ங்காய சாம்பாரும்,வெண்டைக்காய் கறியும்,சேமியாப் பாயசமும்,வடையுமாய் சாப்பாடு போட்டு இரண்டு வருஷத்தில் இரண்டு பெற்றுக்கொள்ளச் சொல்லி புத்திமதி சொன்னேன்:)

அப்புறமா கோவிலுக்குப் போயி அட்வைஸ் வாங்கிக் கொண்டேன். இதோ ரிடையரும் ஆகிட்டேன்:)
செரியா/.

வல்லிசிம்ஹன் said...

பாசமலரும் டீச்சரா. அதான் சதங்கா கண்ணுக்கு, பார்த்த இடமெல்லாம் நீக்கமற நிறைஞ்ச பரமானந்தமா டிச்சராத் தெரிஞ்சுருக்கு.பாவம் அந்தப் பிள்ளை.
நன்றிம்மா. சிண்ட்ரெல்லா மாதிரி 12 மணி அடிச்சதும் வல்லிம்மா ஆகிட்டேன்:)

வல்லிசிம்ஹன் said...

துளசி உ.தமிழன் திண்டுக்கல் ஞாபகத்துல கேக்கறாரு. அங்க எல்லாம் ரொம்பப் பெரியவங்க எல்லாம் டீச்சரா இருப்பாங்க:)

M.Rishan Shareef said...

வாழ்த்துக்கள் டீச்சர்.
பிரம்புக்கு ஆர்டர் கொடுத்தாச்சா? :P

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ், இளவரசியம்மா நல்லா இருக்காங்களா.
வகுப்பு,மாணவர்கள் எல்லாரும் வந்துட்டு ஸ்கூல் விடுமுறை விட்டாச்சுப்பா.

அதனால வகுப்பில எலெக்ஷன் எல்லாம் வைக்க முடியலை. :)

ஒரு மாணவனைச் சொன்னா அடுத்த பையன் கஷ்டப்படுவானே ,,அந்த
ஒரே காரணத்தினாலே இன்னிப் பூராவும் நானே ராஜா நானே மந்திரினு இருந்தாச்சு.:)
பழையபடி துளசி டீச்சர் வகுப்பு முதல் பென்சுக்கேப் போயிட்டேன்.

காலை வணக்கம் டீச்சர்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பையா சார்.
இன்னிக்குக் காலைலே பதவி ஏற்பு விழா நடந்து மாலைலே ரிடயரும் ஆயாச்சு.
இந்த ஒரு காரணத்தினாலேயே
டீச்சர் பதவி கண்டிப்ப்பா நாலு இன்ச் உயர்ந்திருக்கும்.
வாழ்த்துகளுக்கு நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

ரிஷான்,

நம்ம ஊரில இப்ப பிரம்பே எடுக்கக் கூடாதாம்பா.வேற ஏதாவதுதான் யோசிக்கணும்.
எல்லாரையும் ட்ரிக்னாமெட்ரி கத்துக்கணும்னு சட்டம் போட்டுடலாம். சரியா:)

சதங்கா (Sathanga) said...

உள்ளேன் டீச்சர்,

//எப்படியோ பட்டப் படிப்பு கூட முடிக்காத எனக்கு டீச்சர்னு மரியாதை கொடுத்த சதங்கா வாழ்க.//

ஆஹா படிக்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு. உங்களுக்குத் தான் வாழ்த்துச் சொல்லணும்.

சேதுக்கரசி அவர்களை "நீங்க டீச்சராக இருக்கலாம்" என்று தான் எழுதியிருந்தேன். ஆனால் உங்களை டீச்சர் என்று எழுதிய போது இரண்டாம் எண்ணம் துளி கூட இல்லை :)

மாணவர்கள் குசும்பு புடிச்சவங்ளாத் தான் இருப்பாங்க, அதுக்காக "நான் ஒரு நாள் டீச்சர், ரிடையர் ஆகிட்டேன்" என்று ஜஹா வாங்காதீரகள். எனிவே, வலையுலகில் பட்டம் வாங்கியதில் வாத்தியார் சுப்பையா அவர்களுக்கு அடுத்து, டீச்சரம்மா வல்லிம்மா !!!

வல்லிசிம்ஹன் said...

வாத்தியார் சுப்பையாவா!!!சதங்கா... அவரெல்லாம் பெரியவங்க.
என்ன ஒரு தீர்க்கமா உண்மைக்குப் பிறழாமல் ஜோதிட வகுப்புகள் நடத்தி
துளியும் சுவை குன்றாமல் வெகு பொறுமையாக பதிவு நடத்தி வருகிறார்.
அவருக்கு அந்தப் பட்டம் பொருந்தும்.

இந்த அன்புக்கு என்ன பதில் சொல்றது. சரி உங்களுக்கு மட்டும் டீச்சரா இருக்கேன்:)))

தகுதி வேணுமில்லையாப்பா.ஓகே??

நானானி said...

சேரி...சேரி....சே...ரீஈஈஈஈ!!

நானானி said...

சேரி...சேரி....சே...ரீஈஈஈஈ!!

வல்லிசிம்ஹன் said...

நானானி ரெண்டு போட்டுட்டீங்களா:)
ரொம்ப நாளாச்சு இந்த சேரியை கேட்டு.
நன்றி.
என் தங்கை விளையாட்டில் சரியான அழுகுணி அடிப்பா. ஏன்னு கேட்டா இதே ''சேரிப்பா ''விட்டேன், அப்படீனு வாழிக்கு வருவா:)

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் என்ன என்னமோ நடந்திருக்கு, எனக்கு ஒண்ணுமே தெரியலை! :( போகட்டும், பதவி கிடைச்சதைப் பிடிச்சு வச்சுக்குங்க, உடனே கீழே இறங்கறீங்க? :))))))

வல்லிசிம்ஹன் said...

அதொண்ணும் பெரிய கதையில்லாம்மா கீதா.
ச்சும்மா தமாஷுக்கு சதங்காவை ஹீரோவா வச்சுக் கதை பண்ணிட்டேன். அவர் எனக்கு டீச்சர் பட்டம் கொடுத்தார் நான் வாங்கி வச்சிண்டு ஒரிஜினல் டீச்சர்கள் கிட்டக் கொடுத்திட்டேன்:)))))))000