Blog Archive

Friday, November 29, 2019

கீழ் நத்தம்////// திருக்குறுங்குடி பயணம் 6

நம்பி ஆறு   எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 
திருநெல்வேலி  வந்தாச்சு.
வைணவ நம்பி கோவிலுக்கும் வந்து விட்டோம்.
புகழ் பெற்ற நம்பி கோவில் படிகள் 
வல்லிசிம்ஹன்
பிரகாரச் சிறப்பு சிற்பங்கள் 

Image result for thamirabarani river in tirunelveli
நெல்லையில் தாமிரபரணி .
அனைவரும் துலா ஸ்நானத்திற்கு காவிரியத் தேடித் சென்று கொண்டிருக்கையில்  நான் பொருனையை   நாடிக் கண்டேன்.
கீழநத்தத்தில் கோவிலைத் திறந்ததும் உள்ளே சென்று  ஸ்ரீவேணு கோபாலனைத் தரிசனம் செய்து வைத்தார்  
பட்டாச்சார்.
அதற்குள் ஊர்ப் பெரியவர்கள்  வந்து எங்களை 
விசாரித்தார்கள். ஏதாவது பரிகாரமோ  என்று ஒருவர் கேட்டார்.
வெறும் அபிமானத்தால் வந்தோம் என்று விளக்கினோம்.

கோவில் மிக மிக சுத்தமாக இருந்தது.
கொஞ்சம்  பணத்தேவை  இருந்ததை மிக்க கௌரவமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

முன்பே சொல்லி விட்டு வந்தால் 
தங்கும் இடம்  ஏற்பாடு செய்து,நாங்களே சமைத்துக் கொள்ள வசதியும்  செய்து கொடுப்பதாவும்  என்றும் சொன்னார்கள்.


மிக உயர்ந்த பதவியில் வேலை யில் இருப்பவர்கள் ,சொந்த ஊருக்கு வந்து மாதக்கணக்கில் 
இங்கு வந்து கோவில் கைங்கரியம் செய்வதாகவும் சொன்னார்கள். எல்லோருக்கும் 60 வயதும் அதற்கு மேலேயும் இருக்கும்.

வைகாசி,சித்திரையில் திரு நாட்களுக்கு வருமாறு 
அழைப்பும் விடுத்தனர்.

இந்தக் கிராமமும்  ,கோவிலும் ஸ்ரீவேணுகோபாலன் கருணையில் 
செழிக்க வேண்டும்.
அடுத்த நாள் திருக்குறுங்குடி  பயணம். செல்வோம்.

Thursday, November 28, 2019

நவம்பர் 11 மாலை.பயணம் 5

வல்லிசிம்ஹன்
கீழ நத்தம்    ஸ்ரீ வேணுகோபாலன்  கோவில் 

Related image

பயணம்  5   எல்லோரும் நலமாக வாழ வேண்டும் 
ஸ்ரீஆண்டாள் கோவிலில் சுற்றுப் பிரகாரங்களில் உள்ள யாளிகள், ரதி,மன்மதன்  எல்லா சிற்பங்களையும் நின்று நிதானமாக சேவித்து  வர நேரமாகிவிட்டது.

கோவில் பிரசாதமாக நிறைய புளியோதரை, தயிர்சாதம், பால் கேக்,
இவற்றை எல்லாம்   அர்ச்சகர் தன்  பங்காகக் கொண்டு வந்து கொடுத்தார். அப்படியொரு தெய்வ மணம் கமழும் பிரசாதங்களை உண்டே வெகு நாட்கள்  ஆகி இருந்தன.
அதுவும்  வில்லிபுத்தூர் ர்க் கோதையின்  கருணைதான்.

கோபுர தரிசனம் முடித்துக் கொண்டு, உள்ளிருக்கும்  அன்னைக்கு நன்றி சொல்லி திருநெல்வேலி கிளம்பினோம்..

மனம் அன்னையைச் சுற்றியே  வந்து கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் 
நினைத்து மகிழ்ந்தேன்.  
கீதாமா கேட்டது போல   யானையையோ, கொட்டாரத்தையோ 
பார்க்க முடியாமல் போனது  சின்ன வருத்தம் .

அதற்கப்புறம், நான்கு  யானைகள் பார்க்க முடிந்தது.

திருநெல்வேலி வந்து சேர மணி 5 ஆனது.

கீழ் நத்தம் போய்விடலாம் என்று வண்டியைத் திருப்பினோம்.

Image may contain: one or more people, people walking and outdoor
Add caption

Map of Tirunelveli, Tamil Nadu, India
அழகான மலைத்தொடர் கூட வர  அந்தி மயங்கும் நேரம். தனக்கும் வெளி உலகத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலாகி காட்சி அளித்தது என் அம்மாவின் பிறந்தகம்.Image result for keezhanatham village

Image may contain: Vijaya Selvaraj, standing

Teerthayatra - Sri Vatapatra Sai Alayam Srivilliputhur Tamil Nadu 20th D...

வல்லிசிம்ஹன்

Wednesday, November 27, 2019

பயணத்தைத் தொடர்வோம் 4

வில்லிபுத்தூர் கோபுரத்தில் ஒரு பகுதி 
வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

பயணத்தைத்  தொடர்வோம்  4


கோபுரத்தின் மேல்பகுதி.
Image result for srivilliputhur andal parrot
என் தாயார் 
++++++++++++++++++++++++++++++
இரட்டைத் திருப்பதிகளில் குளம்.
 ஸ்ரீவில்லிபுத்தூரை அடைந்த போது  காலை பத்து ஆகிவிட்டது. எங்களை வழிகாட்டி அழைத்து செல்பவருக்கு காத்திருந்து அலுத்து விட்டது போல.
தொலைபேசியில்
 அழைத்ததும் வந்து விட்டார் ஈஸ்வர மூர்த்தி.

முதலில் அழைத்துச்  சென்றது ஆண்டாள் நாச்சியார் சந்நிதிக்குத்தான்.
திருமஞ்சனத்துக்கே வருவீர்கள் என்று நினைத்தேன்.
நேரமாகிவிட்டது விரைந்து வாருங்கள் என்று
சொன்னார்.
மகன்கள்  நடைக்கு என் மனம் விரைந்தாலும் கால்கள் ஓடவில்லை.


இங்குதான் தூண்களை சுற்றினோம். இந்தக் கடைகளில் தானே ஸ்நானபொடி டி வாங்கினோம். ,பால்கோவா சுவைத்தோம் என்று
நிலத்தை உணர்ந்த மனம் சொல்லியது.

யானைக் கொட்டாரம் என்று மனம் அரற்றினாலும்

தாயாருக்கு அப்புறம் தான் எல்லாம் என்ற படி படிகள் ஏறி மண்டபத்தைக்
கடந்து அவள் சந்நிதானத்துக்கே வந்து விட்டோம்.

பளீரென்ற  வெளிச்சத்தில் எப்போதோ கண்ட   தாய் அப்படியே
படிக்கு அந்தப் பக்கம் கைத்தளத்தில் கிளியுடன்,
அபயம் கொடுக்கும் பார்வையுடன், தினம் தோறும் மாலையிட்டு மகிழ்ந்த
நாயகனுடன்
அவனை  விரைவில் தன் மேல்       ஏற்றி க் கொண்டு வந்த கருடாழ்வாருடன்
மணக்கோலத்துடன்
அருள் பொழிந்தாள் அன்னை.

பார்த்துப் பூரிக்க முடியாமல் கண்ணை மறைத்த நீர்.

நன்றாகச் சேவித்துக் கொள்ளுங்கள் என்று கட்டளையிடும் பட்டாச்சாரியார்.

என் தம்பி மேலிருந்த அன்பில்  என் கைகளில் இரு கிளிகளைக் கொடுத்து விட்டார்.

அப்படியே இரு பையன்களின் கைகளிலும்  கொடுத்து விட்டேன்.


ஆண்டாளுக்காக ஸ்ரீரங்கனிடம் தூது சென்ற கிளி . இதோ இந்த வீட்டில் அரிசிப் பாத்திரத்தில் இரு கால்களையும் ஊன்றி என்னைப்  பார்க்கிறது.

கிளி வாடவே நாட்களாகும். வாடினாலும் பழுதில்லையாம் !!!!!!
தெய்வக  கிளியல்லவா

Image result for srivilliputhur andal parrot

தாயின் கிளி.

தம்பி முரளிக்கு அடிக்கடி  ஸ்ரீவில்லிபுத்தூர்  செல்லும் வழக்கம்
இருந்தது.  அங்கு  நன்மைகள் சிலவும் செய்திருக்கிறான்.

அதை மறக்கவில்லை அந்த  அர்ச்சகர். கூடவே வந்து
சக்கரத்தாழ்வார் சந்நிதி , வடபத்ர சாயி    கோவில்  இரண்டுக்கும் அழைத்துச் சென்றார்.

துளசிவனம், ஆண்டாள்  அழகு பார்த்த கண்ணாடிக்  கிணறு .

வட பத்ர சாயியின் உருவமோ பிரம்மாண்டம். பச்சை வர்ண முக மண்டலம் .
தம்பதிகளுடன் கருடாழ்வாரும் 
இருக்கிறாரே என்ற  செய்தி தெரிந்திருந்தாலும்   அர்ச்சகர் சொன்ன விவரம் சுவாரஸ்யமாய் இருந்தது. பாரதப் போரின் பொது 

கண்ணன்  கீதை உரைத்ததை  அனுமன்  அர்ஜுனனின்    

தேர்க்கொடியில்  
இருந்து கேட்டதும் கருடனுக்குப் பொறுக்க வில்லையாம்.


உடனே அர்ஜுனனின் தேர்க் குதிரைகளில் தான் ஒன்றாகி விட்டாராம்.
கீதை  உரைகளை மனதில் இருத்தி உலகத்தாருக்கு உரைக்கவே
பெரியாழ்வாராக அவதாரம் எடுக்க,

பூமா தேவியும் துளசி வனத்தில் குழந்தையாக
வந்துதிக்க இருவரும் பாசுரங்களில் 

கீதையை  அருளிச் செய்தனராம்.
அதற்குத்தான்  இருவருடன் கருடாழ்வாரும் ஒரே இடத்தில் உத்சவராக எழுந்தருளுகிறார் என்று சொன்ன உரை என்னை வியப்பிலாழ்த்தியது.

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத  சரித்திரம் ஸ்ரீ ஆண்டாளுடையது.


Image result for VADAPATHRASAYEE ANDAL KARUDAAZHVAAR

தொடரும் புனிதம் .














Monday, November 25, 2019

படங்களுடன் வில்லிபுத்தூர்சென்றவழி . 2

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

படங்களுடன்  வில்லிபுத்தூர்  கோவில்கள்.

மதுரை பழங்காநத்தத்திலிருந்து  அடுத்த நாள் ஸ்ரீவில்லிபுத்தூருக்குக் கிளம்பும் பொழுது , ஊருக்குள் செல்லும் சாலையைச் சென்று பார்த்தோம். ஒரு அடையாளமும் கிடைக்கவில்லை.
அந்த அழகான காலனி எங்கு சென்றது?

அதைச் சுற்றி  இருந்த  வயல்கள் எங்கே சென்றன. 
பயிர்கள் இல்லாத காலத்தில்  வந்த சினிமாக் கொட்டகை எங்கே.

எப்படி சென்ற காலத்தைத் திருப்ப முடியாதோ அது போல நிகழ்ச்சிகளை  மட்டும்  நினைத்துப் பார்த்துக் கொண்டே ன் 

மகன் என் முகத்தைப் பார்த்து ஆறுதல் சொன்னான். ஏம்மா சிவாஜி பாடுவது  போல,,
 பாவாடை தாவணியில் பார்த்த உருவமான்னு பாடிப் பார்த்துக்கோ.
நம் சென்னையே எவ்வளவு மாறிவிட்டது .
அந்தக் கால ஒட்டு வீடுகள் இன்னுமா இருக்கும்.

நிலத்தின் விலை பல லட்சங்கள் ஆகிறதாம்.

எந்த எந்த மக்கள் எந்த ஊருக்குச் சென்றார்களோ.
நாமே மாறி விட்டோம்.ஒரு சின்ன கிராமமா 
அப்படியே இருக்கும் என்று சொல்லும்போதே அந்த ஆஞ்சநேயர் கோவில் கண்களில்  பட்டது.

பக்கம் செல்ல முடியாதபடி  பள்ளம் வெட்டி இருந்தார்கள். ஆண்டவன் அழியாதவன். அவன் கோபுரம் கண்டோமே 
என்ற நிம்மதியோடு கிளம்பினோம்.


Image result for KOVALAN POTTAL ,MADURAI
Add caption
Image result for KOVALAN POTTAL ,MADURAI

Image result for PALANGANATHAM,MADURAI

சென்றவழி 

Sunday, November 24, 2019

ஸ்ரீவில்லிபுத்தூர் வலம் முதல் நாள்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ தாமதமாக இரவு எட்டு மணிக்கு மதுரை வந்தது.
 நாங்கள் தங்கி இருந்த விடுதி  பழங்காநத்தத்தில் இருந்தது தான் அதிசயம்.
தாத்தாவும் பாட்டியும் ,நெல்லையிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு தான் வந்தார்கள்.

அப்போதெல்லாம் டிவிஎஸ் நகர்  ,காலனி என்று ஒருஇடமும் இல்லை. டவுன் பஸ் பத்து நிமிடங்களுக்கு ஒரு தடவை வரும்,
 எதிரார்ப் போல்  கோவலன் பொட்டலும் இடுகாடும் இருக்கும்.

50 வருடங்கள் ஒரு இடம் மாறாமல்  இருக்குமா.

பழங்காநத்தத்தி; விடுதிகளும் சில கிராம அடையாளங்களும்,சரவணா
ஷாப்பிங் சென்டரும் வந்திருந்தன.

அங்கிருந்த வயதான  வாயில் காப்பாவரிடம், விசாரித்தேன். அதெல்லாம் இப்போக்கிடையாதும்மா.
 இப்போ இது டவுணாகிடுச்சு.

ஆஞ்சநேயர் கோவில் ஒன்னு இருக்கு.

நீங்க சொல்கிற மாதிரி ஒன்னும் இல்லை. ரோட்டைத் தாண்டினா கண்ணகி சிலையோடு ,கோவலன் பொட்டல் இருக்கு என்றார்.

எந்த ரோட்டைச் சொன்னார் என்று தெரியவில்லை.
அடுத்த நாள் அதிகாலை மதுரையை வீட்டுக் கிளம்பி விட்டோம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் போகும் வழியில் பசுமலை,பைக்காரா, திருப்பரங்குன்றம், திருநகர், திருமங்கலம் என்று பலகைகள் ஓடின.

இரண்டு மணி நேரத்தில் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் இருந்தோம்.

தம்பி முரளி கோவிலுக்கு அடிக்கடி வருகை தந்திருக்கிறான்.
தம்பியின் மகன் எங்களுக்கு அறிமுகக் கடிதம் கொடுத்ததால்

எல்லா சந்நிதிகளுக்கும்   மிக அருகில் நின்று தரிசிக்க முடிந்தது.

எப்பொழுதோ கண்டா தாயார், அருகே நிற்கும் போது,நான் நிலத்தில் நிற்பதாகவே உணரவில்லை.

அதே பொன்னிற மேனியுடன் அழகிய மாலை,கையில் கிளி,அருகில் மணாளன், கருடாழ்வார்  என்று ஜகஜ்ஜோதியாகக் காட்சி கொடுத்தாள் .
பட்டர் பெருமானோ அவள் பெருமைகளை

சரித்திரமாக  சொல்ல சொல்ல

மனம் நெகிழ்ந்து  கண்கள் கலங்கப் பார்த்துக் கொண்டே இருந்தோம்.

கோவிலைச் சுற்றி அழைத்துச் சென்றார்.
 புகழ் பெற்ற ரதி,மன்மதன் சிற்பங்களை புகைப் படம் எடுத்துக்கொண்டோம்.
தங்க விமானம், திருப்பாவைப் பாசுரங்களும்
அதற்காக  வடிக்கப் பட்ட சிற்பங்களும்
கண்கொள்ளும் அளவு தரிசித்தோம்.

Wednesday, November 20, 2019

பதினைந்து நாட்கள் பயணம். நவம்பர் 2 முதல் 15 வரை.

வல்லிசிம்ஹன்

திருக் குறுங்குடி பசுமை வயல்களும்  நாட்டு மக்களும் 
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
கண்ணாடி  அறையில் ஸ்ரீ ஆண்டாள் சேவை.

நம்பியாறு 
ஸ்ரீவில்லிபுத்தூர் ரதி சிற்பம் 
பதினைந்து நாட்கள்  பயணம்.  நவம்பர் 2 முதல் 15 வரை.
அழகிய நம்பி 

Image result for THIRUKKURUNGUDI  SRI NAMBI
 வைஷ்ணவ நம்பி கோவில் வாயில்.
குறுங்குடி வல்லி


அமெரிக்காவை வீட்டுக்   கிளம்பி  சுவி ட்சர்லாந்த்  வந்து  ஒரு வாரம் தங்கி , சென்னை கிளம்பினோம்.
வீட்டில்  தண்ணீர்  இல்லை.
சென்னை அவ்வளவு வறட்சி காணாவிட்டால் எங்கள் மைலாப்பூரில் 
நிறைய வீடுகளில்  இந்தப் பிரச்சினை இருந்தது.
வீட்டைச் சுத்தம் செய்யவாவது   தண்ணீர் இருந்தது மகிழ்ச்சியே.படுக்கைகளில் பூச்சிகள் வந்து விட்டன.

நல்ல ஆட்களை அழைத்து சுத்தம் செய்து , விருப்பப்பட்டவர்களை எடுத்துக் கொள்ளச் சொன்னோம்.

மீண்டும்   சுத்தம் செய்து வெய்யிலில் காய வைதிக பிறகு உபயோகப் படுத்த சொல்லி

எச்சரிக்கை கொடுத்தபிறகு   எஜமானர்  வருகைக்கு அகத்தைச் சுத்தப் படுத்தினோம்.
அவருக்குப் பிடித்த தங்கைகள், தம்பிகளை
அழைத்து எட்டாம் தேதி அவர் வருகையை  சிறப்பாக நடத்தி முடித்தோம்.

அடுத்த கட்டமாக எங்கள் நெடு நாளைய ஆவலாக வேர்களைத் தேடிய பயணம்  ஆரம்பித்தது.