Blog Archive

Sunday, November 24, 2019

ஸ்ரீவில்லிபுத்தூர் வலம் முதல் நாள்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ தாமதமாக இரவு எட்டு மணிக்கு மதுரை வந்தது.
 நாங்கள் தங்கி இருந்த விடுதி  பழங்காநத்தத்தில் இருந்தது தான் அதிசயம்.
தாத்தாவும் பாட்டியும் ,நெல்லையிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு தான் வந்தார்கள்.

அப்போதெல்லாம் டிவிஎஸ் நகர்  ,காலனி என்று ஒருஇடமும் இல்லை. டவுன் பஸ் பத்து நிமிடங்களுக்கு ஒரு தடவை வரும்,
 எதிரார்ப் போல்  கோவலன் பொட்டலும் இடுகாடும் இருக்கும்.

50 வருடங்கள் ஒரு இடம் மாறாமல்  இருக்குமா.

பழங்காநத்தத்தி; விடுதிகளும் சில கிராம அடையாளங்களும்,சரவணா
ஷாப்பிங் சென்டரும் வந்திருந்தன.

அங்கிருந்த வயதான  வாயில் காப்பாவரிடம், விசாரித்தேன். அதெல்லாம் இப்போக்கிடையாதும்மா.
 இப்போ இது டவுணாகிடுச்சு.

ஆஞ்சநேயர் கோவில் ஒன்னு இருக்கு.

நீங்க சொல்கிற மாதிரி ஒன்னும் இல்லை. ரோட்டைத் தாண்டினா கண்ணகி சிலையோடு ,கோவலன் பொட்டல் இருக்கு என்றார்.

எந்த ரோட்டைச் சொன்னார் என்று தெரியவில்லை.
அடுத்த நாள் அதிகாலை மதுரையை வீட்டுக் கிளம்பி விட்டோம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் போகும் வழியில் பசுமலை,பைக்காரா, திருப்பரங்குன்றம், திருநகர், திருமங்கலம் என்று பலகைகள் ஓடின.

இரண்டு மணி நேரத்தில் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் இருந்தோம்.

தம்பி முரளி கோவிலுக்கு அடிக்கடி வருகை தந்திருக்கிறான்.
தம்பியின் மகன் எங்களுக்கு அறிமுகக் கடிதம் கொடுத்ததால்

எல்லா சந்நிதிகளுக்கும்   மிக அருகில் நின்று தரிசிக்க முடிந்தது.

எப்பொழுதோ கண்டா தாயார், அருகே நிற்கும் போது,நான் நிலத்தில் நிற்பதாகவே உணரவில்லை.

அதே பொன்னிற மேனியுடன் அழகிய மாலை,கையில் கிளி,அருகில் மணாளன், கருடாழ்வார்  என்று ஜகஜ்ஜோதியாகக் காட்சி கொடுத்தாள் .
பட்டர் பெருமானோ அவள் பெருமைகளை

சரித்திரமாக  சொல்ல சொல்ல

மனம் நெகிழ்ந்து  கண்கள் கலங்கப் பார்த்துக் கொண்டே இருந்தோம்.

கோவிலைச் சுற்றி அழைத்துச் சென்றார்.
 புகழ் பெற்ற ரதி,மன்மதன் சிற்பங்களை புகைப் படம் எடுத்துக்கொண்டோம்.
தங்க விமானம், திருப்பாவைப் பாசுரங்களும்
அதற்காக  வடிக்கப் பட்ட சிற்பங்களும்
கண்கொள்ளும் அளவு தரிசித்தோம்.

18 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன் சகோதரியாரே
கோவலன் பொட்டலைப் பார்க்க வேண்டும் என்பது நெடுநாள் விருப்பம்

துரை செல்வராஜூ said...

காலையிலேயே
ஆண்டாள் தரிசனம்...

மகிழ்ச்சி.. நன்றியம்மா...

KILLERGEE Devakottai said...

நானும் தரிசித்தேன் அம்மா.

ஜீவி said...

தமிழக அரசின் இலச்சினையே ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் தானே!

ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றாலே எனக்கு வில்லிப்புத்தூராரின் மகாபாரதம் தான் நினைவுக்கு வரும்!

Geetha Sambasivam said...

காலையில் ஆண்டாள் தரிசனம் கிடைத்தது. நன்றி. சுருக்கமாக எழுதுகிறீர்கள்.

ஸ்ரீராம். said...

மதுரையில் இருந்திருக்கிறேன்.   ஸ்ரீவில்லிப்புத்தூரில் வேலை பார்த்திருக்கிறேன்.  இனிய பயணம் தொடரட்டும்.  தொடர்கிறேன் அம்மா.

நெல்லைத்தமிழன் said...

என்னவோ 1 மார்க் கேள்விகளுக்கு பதில் அளிப்பதைப் போன்ற இடுகை. இன்னும் நீளமாக எழுதியிருக்கலாம்.

நான் பள்ளி, கல்லூரி செல்லும்போது கீழநத்தத்திலிருந்து பாளையங்கோட்டைக்கு நடந்து சென்றிருக்கிறேன். பத்து வருடங்கள் முன்பு சென்றபோது, எந்தப் பாதை என்றே தெரியவில்லை. பை-பாஸ் லாம் வந்து எல்லாவற்றையும் புதியதுபோல ஆக்கிவிட்டது. ஆனாலும் அந்த இடங்கள் கொடுத்த தனி உணர்வு, உங்களுக்கும் அந்த அந்த இடங்களைப் பார்க்கும்போது கிடைத்திருக்கும்.

கோமதி அரசு said...

நீங்களும் ஆண்டளை தரிசனம் செய்து எங்களையும் ஆண்டாளை தரிசனம் செய்ய வைத்தீர்கள் மிகவும் மகிழ்ச்சி.

இரண்டு முறை மதுரை வந்த பின் தரிசனம் செய்தோம்.

சுருக்கமாய் அழகாய் பதிவு இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் அன்பு கரந்தையாரே.

கோவலன் பொட்டல் பார்த்த பிறகு கட்டாயம் எழுங்கள். என்னால் முடியாமல் போனது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை இனிய மதிய வணக்கம். உடல் நிலை சற்றே சரியில்லை. தாமதமாகப் பதில் தருகிறேன். உண்மையில் மங்கையாக வந்த தெய்வம் ,
இந்த உணர்வை அந்தக் கோவிலே உணரவைக்கிறது.

நாம் தமிழர் என்பதன் பெருமை இந்தக் கோவிலை எழுப்பியவர்களுக்கு
நன்றியுடன் சொல்லலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டையாருக்கு வணக்கம். உங்களுக்கெல்லாம் அவள் அருகிலேயே இருக்கிறாள்.
அந்தத் தாயின் அருள் என்றும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு ஜீவி சார்.
எங்கள் மகன் முதலில் குறிப்பிட்டது இந்த கோபுரத்தைப் பற்றித்தான்.
எல்லாமே பிரம்மாண்டம். மனம் அங்கேயே நின்று விட்டது.
பாரதம் என்றதும் பாஞ்சாலி சபதமும் நினைவுக்கு வருகிறது.
ஸ்ரீ ஆண்டாள் சபதமெடுத்துக் கண்ணனை மணந்தாள்.

அவன் அருளால் துகில் பூண்ட பாஞ்சாலி சபதம் செய்து போர் முடித்தாள்.
நன்றி ஜி

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா.
ஏதோ மிகவும் சோர்வாக இருக்கிறது.
உங்களுடன் பேசியது ஒரு தெம்பு.
இனியாவது விரிவாக எழுத வேண்டும். தாயார்தான் துணை..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் வேலை பார்த்தீர்களா.
கோவிலுக்குச் சென்ற நினைவு இருக்கிறதா.
மதுரையில் ஓர் இரவுதான் தங்கினோம்.
ஒரு சாலையும் நினைவில் தங்கவில்லை. ஹிருப்பரங்குன்றம் மட்டும் நினைவில்
பசுமை. அந்தக் கண்மாய்க் கரை எல்லாம் எங்கே என்று தெரியவில்லை. அங்கேயும் வீடுகள் வந்திருக்கும்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இதுதான் முதல் தடவையாகக் கீழனத்தம் செல்கிறேன்.

பைபாஸ் எல்லா ஊரிலும் அடையாளங்களை அழித்து விட்டது.
கீழ் நத்தம் வீடுகளுக்குப் பின்னால் தாமிரபரணியின் வாய்க்கால் ஓடுகிறது. கோவிலைச் சுற்றி வளமை.
ஆனால் பாட்டியின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

15 நாட்களின் அலைச்சல் உடலைத் தளர வைத்து விட்டது. இனி
சரியாக எழுத முயற்சிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
மதுரையைச் சுற்றிப் பார்க்க நேரம் இல்லை.
ஆண்டாள் கோவிலிலும் ஏறி இறங்குவது
மிகக் கடினமாக இருந்தது.
பதிவும் சுருங்கி விட்டது.அவள் அருள் இது வரையாவது கிடைத்ததே என்ற மகிழ்ச்சியே.

Anuprem said...

பார்க்க ஆசைப்படும் கோவில் ..சிறு வயதில் சென்றது நினைவில் கூட இல்லை மா ...

மாதேவி said...

ஆண்டாள் தரிசனம் மெய்சிலிர்த்தது.