Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts
Saturday, March 09, 2024
Monday, July 25, 2011
ஹோல் புட் சூப்பர் மார்க்கெட்
| பிஸ்கட்ஸ் |
| பிரெஞ்ச் ப்ரெட் ரோல் |
| பார்க்க உள்ளம் கொள்ளை போனது. நாவுக்கு ஏற்றது,வயிற்றுக்கு வேண்டாம்:) |
| நலம் வாழ நாம் தேடும் காய்கறிகள். |
| தானிய வகையறாக்கள் சுத்தம் படு சுத்தம். |
| ஒரு விதமான ரொட்டி வறுத்தது. |
முழுமையான உலகம் சாப்பாட்டுக்கு மட்டும்... என்றால் இந்தக் கடைதான்.
ஹோல் புட் மார்க்கெட் என்ற இடம்.
நம்மூர் மருந்து அதாவது இயற்கை மருந்துகள்.
சந்தன சோப்புக்கட்டி,தைலம்
,எல்லாம் இயற்கையிலிருந்து எடுக்கப் பட்ட அழகு சாதனங்கள். விலை இருபத்தியேழு டாலரிலிருந்து ஆரம்பம்:)
அங்கு உணவருந்தவும் ஒரு நாள் சென்றோம்.
என்னைப் போல தாவிர பட்சினிகளுக்கு ஏற்ற பலவித சாலட் வகையறா.
கொண்டைக்கடலை ,கீரை,காய்கறிகள் கலந்த சூப் வகைகள்
., பேரன்களுக்கும் தாத்தாவுக்கும் வித விதமான
ஐஸ்க்ரீம்
வயிற்றுக்கு இதமான உணவு.
நல்ல
உணவு. நல்ல உணர்வு.
Friday, June 29, 2007
194,காரக்குழம்பு.. எங்க ஊர் வகை

அப்பா வழிப்பாட்டி என்னை மாதிரி மாடர்ன்.:)))
ச்சின்ன வெங்காயம்,முருங்கை எல்லாம் கீரையோட சேர்த்து மண்சட்டியில் சமைப்பார். வாசனை ஊரைத்தூக்கும்.
அவங்க செய்யற இந்தக் காரக்குழம்பு, கெட்டியாக, நான்குநாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
படித்து சமைச்சுப் பாருங்க. நல்லா இருந்தா சரி. இல்லாட்ட இப்பப் பாட்டிகிட்ட கேக்க முடியாது.
செய்வதற்குத் தேவையான உணவுப் பொருட்கள்,
சின்ன வெங்காயம், ........2 கால்கிலோ பாக்கெட்
கொஞ்சம் பூண்டு,.......... 25 பல்லு
மிளகு........100கிராம்
புளி...........பெரிய எலுமிச்சம் அளவு
தனியா.......100கிராம்
மிளகாய் வற்றல்...100 கிராம்
தேவையான அளவு உப்பு.
இந்தக் குழம்பில் போடக்கூடிய தான்,அதாவது காய்கறிகள்...
முருங்கைக்காய்,.
கத்திரிக்காய்,
அவரைக்காய்,
சௌ சௌ,
கொத்தவரங்காய்,
உருளைக்கிழங்கு.
1,
புளியை முதலில் ஊற வைக்கவேண்டும்,
2 ,வாணலியில் இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணை விட்டு
3..தனியா,மிளகாய்வற்றல்,மிளகு,10பூண்டு,சின்னவெங்காயம் கால்கிலோ (பொடியாக நறுக்கினது)எல்லாவற்றையும் வறுத்து மையாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
4,நறுக்கின காய்கறிகளையும் வதக்கிக் கொண்டு,
புளியைக்கரைத்தத் தண்ணீரை மஞ்சள்பொடி உப்பு போட்டு
கொதிக்க வைக்க வேண்டும்.
புளிவாசனை போனதும் , காய்கறிகள் வெந்த பிறகு இறக்கிவைத்துவிட்டு,
கொஞ்சம் தாரளமாக எண்ணைவிட்டுக் கடுகும் சீரகமும் சின்னவெங்காயம்,மிச்சமான பூண்டு இவற்றை வதக்கிச் சேர்க்க வேண்டும்.
இதுவும் கொதித்தவரும் போது அரைத்தகலவையைப் போட்டுக்
கொதிக்க விடவேண்டும்.
குழம்பு ரெடி.
எண்ணைத் தனியாகத் தெரிய வேண்டும்.அதுதான் இந்தக்குழம்பின்
இலக்கணம்.:))))
கருவேப்பிலை,பெருங்காயத் தண்ணீர் விட்டு இறக்க வேண்டியதுதான்.
பி.கு.
செல்வநாயகி சுட்டிக் காடியதால் தான் காய்கறிகளைச் சேர்த்தேன்.
இல்லாவிட்டால் அவை வாடிப் போயிருக்கும்:))))
நன்றிப்பா.
Subscribe to:
Posts (Atom)
சுதந்திரம் அடைய என்ன தேவை?
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட அவ்வளவு சிரமம் இல...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...

