இன்று உலக அன்பு நாள். அதாவது கைண்ட்னஸ் டே.அன்புள்ளவர்களுக்கு இந்த உலகம் அடிமை.
வயதானவர்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் .
கவனித்துக் கொள்ளும் செவிலியர்கள்.
உடல்நலம் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களும்
பெற்றொரைப் பாராட்டும் பிள்ளைகள்
பிள்ளைகளைக் காக்கும் பெற்றோர்கள்
இப்படி நீளும் பட்டியல்.
எல்லாவற்றுக்கும் அடிப்படை கருணையும் அன்பும்தான்.
இதற்கென்று ஒரு நாள் இருப்பதே இன்றுதான் தெரியும்.
அதுவும் எங்கள் இருவருக்கும் மிகவும் வேண்டப்பட்டவரின் பிறந்தநாள்.
அவருக்கு மயில் வாழ்த்துகள் அனுப்பலாம் என்றுதான் பொட்டியைத் திறந்தேன்:)
பார்த்தால்,
KINDNESS DAY என்று வருகிறது. இன்னிக்கு ஸ்பெஷல் இதுதான்.
நல்ல நாளில் தான் பிறந்திருக்கிறார் இந்த அன்பர்.
அவரும் இன்னும் அன்பாக ,மனித நேயத்தோடு வாழும் எல்லோரும் சிறப்பாக
இயங்க வாழ்த்துகள்




