Follow by Email

Sunday, February 22, 2009

சூரியன் கண்ட பனித்துளி
அடுத்த நாள் திங்கள். முதல் பெண் யமுனா என்கிற மூன்மூனும்,
ரெண்டாவது பெண் நர்மதா என்கிற நர்மியும்
தயாராக வேண்டும். எல்.கேஜியோ ப்ரி கேஜியோ காலை 7 மணிக்கு அவிலா கான்வெண்ட் பஸ்ஸுக்குப் போய் நிற்க வேண்டும்.
சாப்பிடவைத்து யூனிஃபார்ம் மாட்டி அன்றைய காலண்டரைச் சரி பார்த்து அனுப்ப வேண்டும்.

காலையில் எழுந்ததிலிருந்து எல்லாம் தகறார்தான்.
இன்னும் தூங்கணூம்ம்ம் என்று முனகல். காலை 7.45க்குக் கிளம்ப வேண்டிய பாசு, குளியலறையிலிருந்தே இன்னும் வரவில்லை. ஹேங்கோவர்.
முதல்நாள் நடந்த கூத்தை நினைத்து அழுகையும் ஆத்திரமாக வந்தாலும் காலை நேர அவசரத்தில் அதை ஒதுக்கி வைத்துவிட்டுக் குழந்தைகளைத் தயார் செய்தாள்.

ராஜம்மாவிடம் குழந்தைகளை ஒப்படைத்து கெட்டிச் சட்னி, முறுகல் தோசை என்று தட்டில் வைத்து,
பேப்பர், ஆரஞ்ச் ஜூஸ் என்று சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டுக் குளியலறைக் கதவை ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டுத் திரும்பினாள்.

துணி துவைப்பதற்கான் ஏற்பாடுகளைக் கவனிக்கும் போது,
பின்னாலிருந்து பாசுவின் குரல் கேட்டது. ''சாரிம்மா.
இப்பவே கோவில் போய் வந்துவிடலாம்'' என்றான்.
அதுவரை சும்மா இருந்த மனசு கேட்காமல் கண்ணீரை வெளியே தள்ளியது.
அது எப்படி உங்களால் முடிந்தது பாசு, நான் பார்க்க மாட்டேன் என்று நினைத்தீர்களா.
நம் நால்வரில் நிதானமாக இருந்தது நாந்தானே?" என்று அழத்தொடங்கினாள்.''

இது எத்தனை நாள் நடக்கிறது. அவருக்கும் தெரியுமா. இதுதான் இந்த நாட்களின் கலாசாரமா. இன்னொருவனின் மனைவியைத் தொட்டுப் பேசும் அளவிற்கு எப்படி வளர்ந்தது இது. எனக்குத் தெரியவில்லையே.''
''தப்பா எடுத்துக்காதேம்மா. ஏதோ அந்த கணநேரம் நடந்து விட்டது.அவள் பழகினது, தலையில் கலக்கிய போதை,என்னுடைய சொந்த ஏமாற்றங்கள் என்னை அப்படி நடக்கச் செய்துவிட்டது.
ஆனால் இதுவே எனக்கு அதிர்ச்சி.

எத்தனையோ வெளிநாடுகள் அங்கே கிடைத்த சந்தர்ப்பங்கள் ஒன்றிலுமே நான் தடுமாறியது இல்லை. உனக்கும் தெரியும் சுதா.
ஒரு சித்தம் தடுமாறிய நிலையில் நான் அவளை அணைத்ததும் தவறுதான். நீ வந்ததும் தெளிவு வந்ததும் நிஜம். ''
இந்த நொடியிலிருந்து இந்த வீட்டிற்குள் மது நுழையாது.
என்னை மீறி என் புலன்கள் போகவும் அனுமதிக்க மாட்டேன். என் பெற்றோர் அப்படி என்னை வளர்க்கவில்லை'' என்று நிறுத்தினான்.

அவன் அலுவலகம் சென்ற அரை மணி நேரத்தில் அவனுடைய தொலைபேசியில் சுதாவின் குரல்.
''நீங்கள் மதுவைத் தொடவில்லை என்றால் உங்களைத் தொடுவதிலும் எனக்கு மறுப்பு சொல்லும் எண்ணம் கிடையாது '' என்று சொல்லி
நிம்மதியாகப் போனை வைத்தாள்.
பாசுவின் அயர்ந்த பெருமூச்சு அவளை எட்டியது.

Posted by Picasa

மழையில் ஒரு நாள்----1


மழையும் மந்தாரமாக இருக்கும் வானத்தை ஜன்னல் திரை வழியாகப் பார்த்த சுதாவுக்கு, உற்சாகம் மீறி மனம் சுறுசுறுப்பானது.
குழந்தைகளின் படுக்கை அறையில் எட்டிப்ப் பார்க்கும்போது இரண்டு பெண்களும் அழகு தேவதைகளைப் போல் ஒரெ ரஜாய் அடியில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருப்பது பார்த்து சந்தோஷப் புன்னகை வந்தது.


அடுத்து கணவனின் படிப்பறைக்கு வந்ததும் ,அவன் கைகளிலிருந்த கண்ணாடி
கிண்ணத்தைப் பார்த்ததும் அவள் மனம் சட்டென்று நின்றது.
அழகான புன்னகையோடு பாசு அவள் கை பிடித்து இழுத்தான். என்ன மழையைப் பார்த்ததும் அம்மாவுக்கு என்ன யோசனை வருது, என்ற கேலிக்குரலோடு அவளை வளைக்க முனைந்தான்.

''கட்டாயம் இந்த யோசனை இல்ல:)
வெளில போய் இந்த கோவை காற்றை ,சிலுசிலுப்பை அனுபவிக்க ரொம்ப ஆசையா இருக்கு. வாங்களேன்.
ராஜம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு குட்டி ட்ரைவ் போய் விட்டு வரலாம்.
இல்லாவிட்டால் அதுகளயும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ரோடில் ஒரு நீள மழை ஊர்வலம் போலாமே என்றாள்.

'கொஞ்சம் வயசு ஆன பிறகு உன்னைக் கல்யாணம் செய்திருக்கணும்.'
யாருக்கு?
'ஏன் உனக்குத்தான் 'என்றவனைப் பார்த்து சிரித்தபடி ,அவன் கையிலிருந்த பானத்தைத் தனிப்படுத்தினாள்.
'சரி இது உள்ள போனால் வண்டி ஓட்ட வேணாம்.
நானும் குழந்தைகளோடு குட்டித் தூக்கம் போட நீங்களும் கொஞ்சம் தூங்குங்கள்' என்றபடி
செல்பவளை யோசனையோடு பார்த்தான் பாசு.
ஏன் இவள் இப்படி இருக்கிறாள்? எல்லாத் திருமணங்களும் குழந்தைகள் பிறந்ததும் தேக்கமடைகின்றதா, இல்லை எனக்கு மட்டுமா இப்படி என்று ஏமாற்றத்தை மறக்க மீண்டும் பாட்டிலைத் தேடினான்.

சற்றே கிறங்கிய நிலையில் தோழனின் வருகையை அறிவித்தது அவனது பெரிய வண்டியின் ஹார்ன் சத்தம்.
ஹேய் பாஸ் ,வாடா வெளில போலாம் 'கெட் யுர் ஃபாமிலி'
என்ற சத்ததோடு உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
சுரேஷ் பாசுவின் அலுவலகத்துக்கு மென்பொருள் சப்ளையர்.
இரன்டு மூன்று வருடப் பழக்கம்.
அவனால் தான் பாசு குடிக்கக் கற்றுக் கொண்டான் என்று சுதாவுக்கு அந்தக் குடும்பத்தை அவ்வளவாகப் பிடிக்காது.
அதுவும் அவர்கள் பம்பாயிலிருந்து நவநாகரீகமாக வந்து இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசுவது ,அதற்கு பாசுவும் தாளம் போடுவது, எல்லாரும் செர்ந்து இரவுக் காட்சிகளுக்குப் போய் குழந்தைகளின் தூக்கம் கெடுவது இப்படி நீண்டு கொண்டே போகும் அவள் லிஸ்ட்.
சுரேஷின் மனைவி வட இந்தியப் பெண்.அழகி. விதம் விதமாக சமைக்கத் தெரிந்தவள்.
அடிக்கடி இவர்களை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள்.
தான் வரவில்லையென்றால் தனக்கு தாழ்வு மனப்பான்மை என்று நினைத்து விடுவார்களே!! சுதாவும் குழந்தைகளை அழைத்துச் செல்வாள்.

அவர்கள் மூவரும் பானங்களோடு இருந்து உரையாட,
பழைய இந்திப் பாடல்களைப் பாடி முடிக்கும்போது,குழந்தைகளைக் கவனித்து அவர்களை உண்ண உறங்க வைப்பாள்.
11 மணி அளவில் 'ஓ ஐ அம் ஃபைன் என்றபடி பாசு கிளம்ப
அரவமற்ற வீதிகளில் புகுந்து வீடு வந்து சேருவார்கள்.
(தொடரும்)
Saturday, February 14, 2009

அன்புள்ளவர் அனைவருக்கும் வாழ்த்துகள்காதல்,பாசம்,அன்பு எல்லாம் கொண்டாடப்படும் தினமாக மலர்ந்திருக்கும் இந்த பெப்ரவரி 14 ஆம் தேதி
எல்லா அன்பு இதயங்களையும் மகிழ்விக்கட்டும்.
காதலுக்குக் கணவன் மனைவிக்கும் தனி தினம் வேண்டாம்தான். ஆனால்
ஒரு உற்சாகம்,
எளிய பூ,நாமே
உருவாக்கின அன்பைப் பதிந்த அட்டை
எல்லாமே ஆனந்தத்தைத்தான் கொடுக்கின்றன.
வேலைக்குச் செல்லும் இரு தம்பதியினரும் ஒருவருக்கொருவர் சில மணித்துளிகளாவது தங்கள் மணவாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்
தினமாக இந்த நாளைப் பயன்படுத்தினால் பயன்கள் அதிகம் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.
குழந்தைகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் அவர்களுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியைகளுக்கும் வாலண்டைன் கார்டுகள் பரிமாறிக் கொள்ளும்போது இந்தத் தினத்துக்கு இன்னும் சிறப்பு கூடுகிறது.
காதலிப்பவர்களுக்கும், காதலித்து மணந்தவர்களுக்கு, அன்புக் குழந்தைகளும்
இந்த அன்பு தின வாழ்த்துகள்.Posted by Picasa

Wednesday, February 11, 2009

400,ஒளியில் நீந்தும் மீன்களும் மற்றும்....

மாறிய வீட்டு முகப்பு
திருப்பதி செல்லும் வழி

செயிண்ட் லூயிஸ் காட்சிகள்செயிண்ட்லூயிஸ் ஆர்ச் ஒளி கண்டேன்.தூண்கள் நடுவே சிங்கம் தோன்றுமோ:)

காலம் மாறுகிறது
காட்சியும் மாறிவிட்டது .சிகாகோ பவுர்ணமி.


நவராத்திரி ஞாபகங்கள்
கோடை வருமா,.


சந்தோஷ பலூன்கள்...வெடிக்காத வகை
செடெம்பர் 1 லேபர் டே. ஃபையர் ஒர்க்ஸ்:)

இவரும் வேலை செய்கிறார்.உழைப்பாளி என்றுமே.


தானியம் தின்ன வந்திருக்கும் குருவிகளும் அணிலும்
நம் வீடு..முகப்பு பழசு.

துபாய் மீன்காட்சியகம்சுத்திட்டு வந்துட்டோமில்ல.
இன்னும் பணிகள் தொடர்கின்றன.
செப்பனிட்டுக் கொண்டே இருக்கிறோம்.
நடுவில் எங்களையும்(உடலளவில்) சோதித்துக் கொண்டுப் புதிய உருவெடுத்துக் கொண்டிருக்கிறோம்:)
சட்டென நினைவுக்கு வந்தது நம்ம பதிவுக்கும் வயதாகி வருகிறது என்று. நன்றி நண்பர்களே.
Posted by Picasa

Tuesday, February 10, 2009

399,பிப்ரவரி படம்

அது தீபாவளித் திருநாள். குளிரோ எலும்பை ஊடுருவியது.

எனக்கோ பட்டாசும்,மத்தாப்பும் கொளுத்தாமல் குழந்தைகள் தீபாவளியை உணராமல்,அனுபவிக்காமல் வெறுமே தொலைக் காட்சியைப் பார்ப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை.

இரவு மாப்பிள்ளையையும், சிங்கத்தையும் கிளப்பி, பேரனை கார்கள் நிறுத்தும் கராஜில்

நிற்கச் சொல்லி,

வாங்கி வைத்திருந்த மத்தாப்புக் கட்டை, அந்தக் குளிர்காற்றில் ஒரு டப்பாக்குள் நிறுத்தி வைத்து,

ஒளியேற்றச் சொல்லி வற்புறுத்தினேன்.

பேரனின் சந்தோஷத்தைச் சொல்லி முடியாது.

நிலச்சக்கரம் என்பது காற்றில் ஒளிவெள்ளமாய்ப் பறந்தது.

படம் எடுத்து விட்டேன்.

Posted by Picasa

Wednesday, February 04, 2009

வாழ்த்துகள் தேவை மக்களே:)

ப்ரூக்ஃபீல்ட் ஜூ

வாழ்த்துகள் சொல்லும் ஜிப்சி


தை மாத வரவேற்பு.
அதாகப் பட்டது பெரியோர்களே, தாய்மார்களே, அண்ணன், தம்பிகளே, தங்கச்சிகளே,பிள்ளைகளே,
வலை தொடங்கிய நாள் முதல் இன்று வரையும் இன்னும் எப்போதும் னம்மை மகிழ்விக்கும் துளசி டீச்சருக்கு ஃபெப்ரவரி ஐந்து, ஃபெப்ரவரி 5 பிறந்தநாள் காண்பது. எல்லோருக்கும் தெரிந்த நல்ல விஷயம்.
அவங்களை வாழ்த்துறவங்களும் வணங்கறவங்களும் எங்களையும் வாழ்த்திக்கணுமாய் தாழ்மையோடு கேட்டுக்கறோம்.
எங்களைன்னா என்னையும் என்னை 43 வருஷமா சகிச்சுக்கிட்டு இருக்கற எங்க தங்க சிங்கத்தையும் தான் சொல்கிறேன்.:)
வணக்கமுங்கோ.
The Secret Language of Trees