Blog Archive

Tuesday, February 10, 2009

399,பிப்ரவரி படம்

அது தீபாவளித் திருநாள். குளிரோ எலும்பை ஊடுருவியது.

எனக்கோ பட்டாசும்,மத்தாப்பும் கொளுத்தாமல் குழந்தைகள் தீபாவளியை உணராமல்,அனுபவிக்காமல் வெறுமே தொலைக் காட்சியைப் பார்ப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை.

இரவு மாப்பிள்ளையையும், சிங்கத்தையும் கிளப்பி, பேரனை கார்கள் நிறுத்தும் கராஜில்

நிற்கச் சொல்லி,

வாங்கி வைத்திருந்த மத்தாப்புக் கட்டை, அந்தக் குளிர்காற்றில் ஒரு டப்பாக்குள் நிறுத்தி வைத்து,

ஒளியேற்றச் சொல்லி வற்புறுத்தினேன்.

பேரனின் சந்தோஷத்தைச் சொல்லி முடியாது.

நிலச்சக்கரம் என்பது காற்றில் ஒளிவெள்ளமாய்ப் பறந்தது.

படம் எடுத்து விட்டேன்.

Posted by Picasa

15 comments:

தமிழ் said...

தீப்பொறி பறக்கிறது.

பாராட்டுகள்

வல்லிசிம்ஹன் said...

நன்றி, திகழ்மிளிர். இதை நான் போட்டிக்கு அனுப்பப் போவதில்லை. ஆசைக்குப் பதிவு இது;)

ராமலக்ஷ்மி said...

//நிலச்சக்கரம் என்பது காற்றில் ஒளிவெள்ளமாய்ப் பறந்தது.//

அருமையாக இருக்கிறது ஒளி வெள்ளத்துடன் அதை விவரிக்கும் வரிகளும்!

//இதை நான் போட்டிக்கு அனுப்பப் போவதில்லை.ஆசைக்குப் பதிவு இது//

அதான் ஏற்கனவே மிகப் பெரிய பரிசு கிடைத்து விட்டதே ஆசைப் பேரனிடமிருந்து..அதை விடவா?

//பேரனின் சந்தோஷத்தைச் சொல்லி முடியாது.//

ராமலக்ஷ்மி said...

ஆனாலும் படத்தை அனுப்புங்கள் வல்லிம்மா, முடிந்தவரை நாம் எல்லோரும் இருப்போமே மாதமாதம் பிட்டிலே.

ராமலக்ஷ்மி said...

நானூறாவது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

ஆசை பதிவு அசத்தல் ;))

Ungalranga said...

நல்லா இருக்கே...
அருமை... நன்றி....

சந்தனமுல்லை said...

ஒளியொன் கோலங்கள் அழகு!! எடுத்த கோணமும் அழகு!! ராமலஷ்மி இந்த ஒளிக்கு ஒரு கவிதை எழுதியிருப்பாங்களே!! :-)

நானானி said...

வாங்க...வாங்க...வல்லி! எல்லோரும் பிட்டிலே கும்மியடிப்போம்.
தீப்பொறி பறக்க வாருங்கள்!!!

உங்க படம் நிஜமாவே பொறி பறக்குது.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி.

எனக்கே திருப்தி கொடுத்தால்தான் அதை அனுப்பணும்னு தோணுதுப்பா.

அப்படியும் ஒரு நாள் வரும்:)))
நன்றிங்கோவ்.

நாமெல்லாம் மனத்தளவில் மிகவும் நெருங்கித்தான் இருக்கிறோம்மா.

வல்லிசிம்ஹன் said...

400 ஐயும் போட்டுட்டேன்.
வாழ்த்துகளுக்கு அட்வான்ஸாவே நன்றிம்மா ரா.லக்ஷ்மி!!!!

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத் , ஆசைக்கொரு பதிவு போட்டுட்டு அடுத்ததும் படங்கள் போட்டு விட்டேன். ஆசைக்கு அளவில்லை.
பார்த்தீர்களா:)

வல்லிசிம்ஹன் said...

வாருங்கள் ரங்கன். உங்கள் பதிவும் அருமையாக இருக்கிறது. முதல் வருகையா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்க முல்லை.
தனிக் கவிதை அவங்க மனசில ஓடி இருக்கும்.:))


இன்னும் மத்தாப்பு மோகம் என்னை விடவில்லை என்று என் பிள்ளைங்க சிரிக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நானானி, காத்துக்கு அந்தப் பொறி பறந்து பக்கத்து வீட்டுக்குப் போயிடப் போகுதேன்னு பயந்துகொண்டே கம்பிகளைக் கொளுத்தி வைத்தாங்க.

அவை அழகாக ஒளி வீசிப் பறந்தன:)