| வெள்ளை மனம் அதனுள் இன்பத்தேன் |
| அழகும் அடக்கமும் |
| பட்டாம்பூச்சிப் பூ |
இந்த வண்ணப் பூந்தோட்டத்துக்குப் போய் வந்து ஐந்து வருடங்கள்
ஓடிவிட்டன.
எப்பொழுதும் பற்றிக் கொள்ளும் அவசரம்.
காணச் சென்றவர்கள் நானும் பெண்ணும் கணவரும் குட்டிப்பாப்பாவும்.
அதுவும் மலர்களோடு மலராக தள்ளுவண்டியில் வந்தது.
சிங்கத்துக்கு அங்கிருக்கும் எல்லா வண்ணங்களையும் அள்ள ஆசை.
எனக்கு எல்லாவற்றையும் காமிராவில் அடைக்க அவசரம்.
பெண்ணுக்குப் பிள்ளையின் பசி பற்றிய அவசரம்.
கண்ணுக்கு விருந்தும் மனதுக்கு அமைதியும்
கொடுத்த மலர்களை மீண்டும்
புரட்டிப் பார்க்கிறேன்.
வாழ்க்கையையும் இப்படித்தான் கடந்து வைத்திருக்கிறேன்.
சோகங்களை நினைத்த அளவு
சுகங்களை நினைக்கவில்லையோ
அழகான அன்புகளை அள்ளித்தர
அனைவரும் தயார்.
போர்வைக்குள் ஓளிந்து சோர்வோடு இருப்பதால் சுகமென்ன கிடைத்தது.
வெய்யில் சுரீர் என்று உறைத்தால்
புலன்கள் விழிப்பது போல
இரு கோடுகளில் ஒன்று உயர்ந்த போது
மற்றவர்களின் வாழ்விலும் துன்பம் வரும்போது
கூட்டிலிருந்து வெளிவருகிறது அழுக்கு நீங்கிய பட்டாம்பூச்சி..
அனைவருக்கும் ஆரோக்கியம் கொடு தேவா.
