Wednesday, July 22, 2026

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன்

வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள்.

சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந்தைக் குரல் ராஜேஸ்வரி அம்மா குரல்களைக் கேட்டு
வளர்ந்த பொன்னான நேரங்கள் வானொலிக் காலங்கள்.


முதன் முதல் அவர் குரலை ''மலரோடு விளையாடும் தென்றலே
வாராய் என்ற பாட்டை 1958இல் கேட்டிருப்பேன் என்று
நினைவு. சுசீலாவின் குரலுக்கு ஒரு மாற்றுக் குரலாக
அமைந்தது. நானும் தோழியரும் அவ்வளவு 
சீக்கிரம் அவர் குரலுக்கு மாறவில்லை.
பிறகு வந்த சிங்கார வேலனே தேவா பாட்டு
எங்கள் மனதை எல்லாம் மாற்றிவிட்டது.

அப்படியே அந்த மயக்கம்  தொடர்ந்தது.
இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள்
மிகப் பிரபலமாயின.





என்றும் நம் நினைவில் அழியாத குரலாக அவர் நிலைத்திருப்பார். 


அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...