Blog Archive

Thursday, January 31, 2013

நாட்கள் நல்லவை


Add caption
வந்தேன்
வந்தேன் மீண்டும் நானே வந்தேன்னு ஒரு பதிவு போடணும்னு நினைத்தேன்.

ஏதாவது
யோசனை தோணினால் தானே எழுத.

நல்லதாப்
போச்சு எல்லார் சொல்கிற மாதிரி நாமும் உண்மையாவே எழுத்தாளி ஆகிட்டோம் போலிருக்கு. இந்த மெண்டல் ப்ளாக் வந்திடுத்து.

மெண்டல்
ப்ளாக் வந்தால் கட்டாயம் நாம் எழுத்தாளர் என்பது லாஜிக்.

 

 


அதாவது
தலைவலின்னு ஒண்ணு வந்தால் தலை இருக்கு என்பது நிதர்சனம்,

ஒண்ணு
இருக்கு என்று நிரூபிக்க வேண்டும் என்றால் அது இல்லாமல் மேல ஒண்ணும் நடக்காது என்று சொல்லணும்.

அதே
போல முதிய பதிவாளர் என்றால் அப்பப்போ உணர்ச்சிகரமா ஏதாவது எழுதவேண்டும்.

வர்த்தி
ஏத்தவேணும். அதாவது கொசுவர்த்தி.

கவிதை
எழுதலாம்.அநேகமா அது உரைநடைல இருக்கணும்.

ஐயோ
ஏன் இந்த அம்மா இப்படி வதைக்கிறாங்கன்னு நாலு பேராவது நினைக்கணும்.

 


பந்தபாசம்
,படிக்காத மேதை, கணவனே கண் கண்ட தெய்வம் ,பொன்னித் திருநாள், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்இந்த மாதிரி புதுப் படங்களுக்கு ரெவ்யூ எழுதலாம். பழசுக்கு எப்பவும் மதிப்பு இல்லையா.

 


இதெல்லாம்
இந்த துபாய்க்கு வந்த பிறகு எனக்குத் தோன்றிய எண்ணங்க இங்க வீட்டுக்குள்ள குளிருகிறது.

வெளியில்
நல்லா இருக்கிறது.

வெளி
வராந்தாவை சிங்கம் குத்தகை எடுத்து விட்டதால், வீட்டுக்குள்ள ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டு, என்னடா எனக்கு வந்த சோதனைன்னு யோசித்தேன்.

பாப்பா
தூங்கின பிறகு வாங்கி வைத்திருக்கும் குங்குமம்,விகடன் எல்லாம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

உள்குளிர்
நம்மளை வெளில தள்ளினாலும், ஒத்துக் கொள்ளவில்லை.

நல்லவேளை
இந்த சமயம் பேத்தி,மருமகள் பிறந்த நாட்கள்,இவர்களது திருமண ஆண்டு நிறைவு எல்லாம் வருவதால் போர் அடிக்க சந்தர்ப்பம் இல்லை.

''

பாட்டி நீ இங்கயே இருக்கியா. நான் செய்யற கேக் செய்ய ஆளே இல்ல.(கற்பனை)

இருக்கலாம்.

நீ
யேன் எப்பவும் தமிழ் பேசறே. இங்க்லிஷ் பேசு.

எனக்கு
இங்க்லிஸ்கஹ் வராதே

அப்போ
அரபி பேசு.

அஸ்ஸலாம்
அலைக்கும்

வாலேக்கும்
அஸ்ஸலாம்

இன்ஷா
அல்லா

அல்லா
மாலிக்

மாஷா
அல்லா.

அச்சோ
இதெல்லாம் விஷிங்க்.

என்று
விட்டு அதுவே எனக்குக் கற்றுத்தர ஆரம்பித்திருக்கிறது.

பாரபி
டால் வாங்கப் போறியா

என்னது
ஓஓஓஓஓஓஓ
சாரி பார்பி
ம்
வாங்கித்தரேன்.
நிறைய
பொம்மை இருக்கு . நாம் யாருக்காவது கொடுத்துடலாம். இல்ல பாட்டி. ஆமாம் செல்லம்.
இந்தப்
பூனை அத்தை வாங்கிக் கொடுத்தது.
இது
டெல்லிப் பாட்டி
இது
அப்பா.
இது
என் ஃப்ரண்ட்.
இந்த
இரண்டும் மை கிட்ஸ்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
. மமேபி நெக்ஸ்ட் இயர் கொடுக்கலாம். இப்ப கொடுத்தா இதெல்லாம் அழும் பாட்டி
ஓஹோ

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.

இனிதாக வாழ வேண்டும்

Monday, January 28, 2013

நிலவில் நனைந்த துபாய்


 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

துபாய்த் தோழிகளுக்கு வணக்கம்.
துபாய்   குளிர்  சில்ல் என்று இருக்கிற்து.
வீட்டைவிட்டு ஒரு தரம் வெளிய  போக  முடிந்தது .

கிளம்பும்  அவசரம்   மருந்துகளில் முக்கியமா ஒன்றை மறந்து விட்டேன் .

மற்றபடி ஒன்றும்  பிரச்சினை   இல்லை
முழுநிலவைப் படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன் .
விரைவில் பதிவேற்றுவேன்.

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, January 22, 2013

ஒரு மாதம் சென்னைக்கு பை பை

தங்க விளக்குகளா!
இப்பொழுது சுடவில்லையாம் இந்தச் சூரியன்


நெடு நாட்களாக அழைத்துக் கொண்டிருக்கிறார்   மகனார். நமக்குத்தான் உடல் நிலை  அலுப்புத்தர எங்கும் செல்லவேண்டாம்  என்று  முடிவெடுத்திருந்தோம்.

சிங்கத்துக்கு இருமலிலிருந்து இப்போதுதான் விடுதலை கிடைத்துக் கொண்டு இருக்கிறது.
என் கண்  நான் உன்னோடுதான் இருக்கிறேன்  என்னைக் கவனி என்கிறது.
உறவினர்களுக்கு உடம்பு முடியாமல் போகிறது.
  இதெல்லாம் இந்த ஊர்ப்பந்தங்கள்.

பேத்தியின் அழைப்பும் அன்பும்  வாழ்க்கையின்
அடுத்தபக்கத்தைக் காட்டி  அழைக்கிறது.

ஓ!ஒரு மாதம்தானே.
சமாளிக்கலாம் என்று ஒரு குரல்.

காலைக் கொட்டிக் கொண்டு கிளம்பியாச்சா'' ஆஜிப்பாட்டியின் குரல் இன்னும் மிரட்டுகிறது.:)

அஸ்தமன அழகைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட்டு சூரிய உதயத்தை அனுபவிக்கக் கற்றுக்கொள் என்னும் மாமியாரின் புத்திமதியும் கேட்கிறது.

மாமியார் மெச்சிய மருமகளாக இருக்கத் தீர்மானித்துவிட்டேன்.!!

அங்கே  பேத்தியும் கணினி உபயோகிக்கறளாம்.
அவள் எனக்கு இணையத்தைவிட்டுக் கொடுக்கும்போது உங்களைச்

சந்திக்க வருகிறேன்.
அதுவரை,
விடைபெறும்
வல்லிம்மா.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, January 21, 2013

ராமேஸ்வரம் 3

பர்வதவர்தினி அம்பாளும்  ராமலிங்கேஸ்வரரும்
Add caption
பாம்பன் பாலம்.
செந்தூர ஆஞ்சனேயர்
படம் அளித்தவருக்கு நன்றி
புதுப்பிக்கப்பட்ட கோவில்  தனுஷ்கோடி
மூன்றாம் பிரகாரம்
ஸ்ரீகோதண்டராமர் கோவில் விபீஷண சரணாகதிஸ்ரீராமனாத ஸ்வாமி சரணம்.
இராமெஸ்வரம் ,ராமன் ஈஸ்வரனைப் பூஜித்த இடம்.
ராவணவதம் முடிந்து சீதையுடன் மகிழ்வாகப் புஷ்பக விமானத்தில் ஏறும்போது,
விபிஷணப் பட்டாபிஷேகம் முடிந்து அரசாட்சி ஆரம்பமான நிலையிலும் ,
சீதை பல உயிர்க்ள் பலியானதை நினைத்து மனம் வருத்தம் கொண்டாளாம்.
அப்போது இராமனுக்கும் ரவணவதம், என்னதான் லோக க்ஷேமம் என்றலும் உயிர் வதை தோஷம் பாதிக்கும்
என்று அறிவுறுத்தப் பட்டது.
சிவனாரைப் பூஜித்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்று.
அங்கிருந்த முனிவர்கள் உணர்த்தினார்கள்.

உடனெ முன்வந்தது யாராக இருக்க முடியும்?
நம்ம ஹனுமான் ஜி தான்.

உடனே காசிக்கு சென்று, விஸ்வநாத லிங்கத்தைக் கொண்டு வருவதாக விண்ணில் பாய்ந்து விட்டார்.
சீதையும் இராமனும் முறைப்படி சிவலிங்க அர்ச்சனைக்கு வேண்டிய (அங்கே கிடைக்கக் கூடிய)
இலை, பழங்கள் எல்லாம் சேகரிக்க ஆரம்பித்துக் காத்திருக்கலானார்கள்.
இந்த சம்பவம் நடப்பது இராமேஸ்வரம் என்று இப்போது அழைக்கப்படும் கடல் கரையில்.
அனுமனுக்கு எதனாலொ தாமதமாகிறது.
முஹூர்த்த நேரம் நெருங்கியதால் ராமன் சீதையை நோக்கி, இந்த நேரத்தைத் தவிர்க்கக்கூடாது.
நீயெ சிவரூபமான லிங்கத்தை மணலில் பிடித்து வை.
பூஜையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டார்.

அவளும் அவ்வாறே மணலும் நீரும் கலந்து லிங்கம் செய்து வைக்க,
இருவரும் ஈஸ்வரனை மனதார வேண்டிக்கொண்டனர்.
அவர்கள் இஷ்டப்படியே பாப விமோசனமும் கிடைத்தது.
சீதையும் ராமரும் வழிபட்டு முடிக்கும்போது அநுமன் காசிலிங்கத்தோடு வருகிறார்.
இங்கோ பூஜை முடிந்துவிட்டது.

அனுமன் கொண்டு வந்த லிங்கத்தைக் கீழே வைத்தார்.
மீண்டும் அதை அசைக்கப் பார்த்தால் முடியவில்லை.
விச்வரூபம் எடுத்து அசைத்துப் பார்த்தாலும் ஸ்வாமி
மனம் வைக்க மாட்டென் என்கிறார்.காசிக்குத் திரும்ப மனமில்லை
அந்த ஸ்வாமி ராமனாதன் ஆகிவிட்டார்.
ராமன் பூஜித்த லிங்கம் ராமலிங்கம்
அனுமன் கொண்டு வந்த லிங்கம் காசிலிங்கம்.
இரண்டு பேருக்கும் கோவில் உண்டு.
அனும்ுக்கும் செந்தூரவர்ணத்தோடு ஒரு தனி சன்னிதி.
நல்ல ஆகிருதியோடு கோவில் வாசல் பக்கம் பாதி உருவம் நிலத்திலும் மீதி உருவம் கடலிலும் இருக்கும்படியான தோற்றம்.
அவ்ர சன்னிதி அருகே நிற்கும்போது காலுக்குக் கீழே கடல் ஓசையிடும் சத்தம் கேட்கும்.
ராமனாதர் கோவில் நந்தி பெரிய வடிவில் உள்ளது.
உள்ளே ஈச்வரனுடன் தாய் பர்வதவர்த்தினி.
ஆடி மாதம் தங்கத் தேரோட்டம், வெள்ளித் தேரொட்டம் உண்டு.
ராமேச்வரம் ஒரு magical place.
பாம்பன் பாலத்தைக் கடக்கும்போதே நம் உற்சாகம்
ஆரம்பம்.முன்னால் இந்த தார்ச் சாலை வருவதற்கு முன்
ராமெச்வரம் -போட் மெயில் ஒன்றுதான் அங்கே போகும்.
நாம் போகும் அந்த ரயிலில் தான் அந்த ஊருக்குப் பால்,தயிர்,காய்கறி,நியூஸ் பேபர் எல்லாம் போகும்.
எங்கள் தந்தை அங்கே தபால்தந்தி அலுவலக மேலாளராக இருந்த 2 வருடமும் ,தினந்தோறும் ஏதாவது நடந்துகொண்டே இருக்கும்.
நாட்டுத் தலைவ்ர வருவார். சென்னைப் பிரமுகர்கள், கவர்னர் என்று யாராவது ப்ரார்த்தனை செலுத்த வருவார்கள்.
யாத்திரிகர்களால் வாழும் ஊராய் அது இருந்தது.


எனக்குத் தெரிந்து கழுதைகளும் மாடுகளும்
வெளியே உலர்த்தும் புடவைகளை சாப்பிடும் ஒரே ஊர் அதுதான்:-))
முதல் தடவை நாங்கள்(நாங்களும் எங்கள் முதல் புத்திரனும்) 4 நாட்கள் விடுமுறையில் போனபோது,
பாம்பன் பாலத்தின் மேல் ரயில் ஊர்ந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கீழே சன்னலுக்கு வெளியே காற்றும் அலை ஓசையும் நம்மை
தாலாட்டும்.
1964 புயல் ஞாபகம் வந்தால் பயம் பற்றிக்கொள்ளும்.
அதில் தானே ஒரு ரயிலோடு பயணிகள் மறைந்தார்கள்.

பழகுவதற்கு இனிய மக்கள். அவ்வளவு வியாபாரம் எடுபடாத நாட்கள் அவை.
இதே பிரயாணம் 2003இல் செய்த போது நிலமை மாறி இருந்தது. (மீண்டும் பார்க்கலாம்)ராமேஸ்வரம் -2
Saturday, July 29, 2006

வழி,தங்குமிடம் ராமேஸ்வரம்


எல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான்.
இந்தப் பதிவு ஒரு பின்குறிப்பாக எழுதுகிறேன்.
ஒரு நாள் பயணமாகவே போய் விட்டு வரக்கூடிய இடம் தான். ஆனால் அங்கே தங்கி வந்தால் இன்னும் நிறைய இடங்களைப் பார்க்கலாம்.
மதுரையில் இருந்து நான்கு மணிநேரப் பயணம்.
ராமனாதபுரத்தில் நல்ல வசதியுடன் விடுதிகள் இருக்கின்றன.
அங்கே இறங்கி சேது விலிருந்து பயணத்தை ஆரம்பிக்கலாம்.
வைணவர்கள் சேது தீர்த்தத்தில் குளித்துவிட்டு அடுத்த நாள் ராமேச்வரம் அக்கினி தீர்த்ததில் குளிப்பார்கள்.
சேதுவில் சங்கல்பம் செய்து முன்னோர்களுக்கு நினைவாக கட்லில் குளித்து அங்கே வாழும் வசதி குறைந்தவர்களுக்கு நாம் அணிந்த் உடையோ ,அன்னதானமோ செய்யலாம்.
அங்கிருப்பவர்களே நமக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.

அங்கெ பக்கத்திலேயே ராமன் தபம் செய்த திருப்புல்லணை ஆதி ஜகன்னாதன் கொவிலுக்குப் போனால் மதிய சாப்பாடு உறுதி.
கடலுக்குக் குளிக்கப் போவதற்கு முன்னால் சொல்லிவிட்டால் போதும். சமைத்து வைத்துக் கொடுப்பார்கள். ஆஹா அந்தப் பசிக்கு அந்தப் பொங்கல் அமிர்தம் தான்.
இங்கு இராமபிரானுக்கு கடலரசன் சேதுப் பாலம் கட்ட வழி சொல்லிக் கொடுத்தானாம்.
கடலைப் பிளந்து இலங்கைக்குப் பாலம் அமைத்தால் கடலில் உள்ள உயிர்கள் அழியும், அதனால் மிதக்கும் பாலம் ஒன்றை நளன் என்னும் தேவ சிற்பியை வைத்துக் கட்டலாம், என்று யோசனை சொல்ல, இராமனும் நளனை
வேண்ட வானரங்கள் உதவியுடன் அதிகக் கனமில்லாத கற்களால் சேதுப்பாலம் அமைந்ததாம்.
அதனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அப்போது இன்னும் சிறப்பாக இயங்கி இருக்கிறது என்று எனக்குத் தெளிவாகியது.
பக்கத்தில் தேவிட்டினம் என்னும் கடலோர கிராமத்தில் நவபாஷணம் என்னும் நவக்கிரக பரிகார தலம் இருக்கிறது.
கடலுக்குள் போய் ராமபிரான் ஸ்தாபித்ததாகச் சொல்லப்படும் கிரஹங்களைச் சுற்றி வந்து அர்ச்சனை செய்யலாம்.
அங்கேயும் தானம் செய்யும் வழக்கம் உள்ளது. நம் பின்னாலேயெ அவர்கள் குறி வைத்து வருவதைப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்

அங்கிருந்து நேரே ராமேஸ்வரம் தான். அங்கே ந்இறைய தங்கும் விடுதிகள் வந்து விட்டன.
நாற்பது வருடங்கள் முன்னால்
நமக்கு பரிகாரம் செய்ய உதவியாக கைருக்கும் சாஸ்திரிகள் வீட்டிலேயே தங்கவும், சாப்பிடவும் வசதி செய்வார்கள்.
இப்போது நமக்குத்தான் அந்த வசதி எல்லாம் போதாதே..
அதனால் (பண) வசதிக்கு ஏற்ப விடுதிகள் கிடைக்கின்றன.
ஸ்ரீ ராமனாத ஸ்வாமி ஆலயத்துக்குள் 22 தீர்த்தங்கள் இருக்கின்றன.
எல்லாம் நாம் செய்த , செய்யப் போகும் பாப விமோசனம்,,(நிவர்த்தி) செய்யக் காத்துக் கொண்டு ,அந்தக் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுப்பதையே சேவையாகச் செய்யும் நண்பர்களோடு
தயார் நிலையில் உள்ளன.
எத்தனை உயர்ந்த சேவை.!!
பர்வதவர்த்தினி அம்மனும், இராமலிங்கமும் ஜோதியாகத் அவ்வளவு ஓளியோடு காட்சி தருகிறார்கள்,
அங்கெ இன்னும் கை நீட்டும்
காட்சி வரவில்லை.
பக்தியும் சுத்தமும் ஆன்மீகமும் இருந்தன.
ஏழ்மையும் இருந்தது.

இன்னோரு தடவை என்னை இராமேஸ்வரம் போக வைத்த தமிழ் மணத்துக்கு நன்றி..

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

ராமேஸ்வரம்...1

அழகான குடும்பம் தலைவர் காமராஜுடன்

Friday, July 28, 2006


சேது,பாம்பன்,தனுஷ்கோடி -2


ராமேச்வரம் எக்ஸ்ப்ரஸ் ராமனாதபுரத்தை விட்டுக் கிளம்பியதுமே
ரயில் பாதையை மணலும் புதர் மற்றும் முட்கள் சூழ்ந்த பரப்பு கண்ணில்பட ஆரமபித்தது.
முற்றும் புதிதான பயணம்.
உச்சிப்புளி என்று ஒரு ஸ்டேஷன்.
பின் தங்கச்சி மடம்
அதன் பின் பாம்பன்.
என் அப்பா முதலிலேயே சொல்லி வைத்து இருந்த்தால் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கடலும் பாலமும் வந்துவிட்டன.
காற்றோ ஆக்ரோஷமாக வீசுகிறது.
ரயிலுக்கு இரண்டுபக்கமும் கடல். அடியெ பாலத்தின் தூண்களில் மோதும் அலைகள்.
மெதுவாகப் போன ரயில் நின்றது அப்போதுதான் cantilever bridge என்று சொல்லப்படும் அந்த பாலத்தின் நடுவே இருந்த தண்டவாளங்கள் உயர்ந்து ஒரு வியாபாரக்கப்பல் சென்றது.
மூச்சு விடக்கூடத்தோன்றாமல் பார்த்தொம்.
பின்னாட்களில் வேறு எத்தனையோ அன்னிய நாடுகளில்
வித விதமான அதிசயங்களைப் பார்த்தாலும்,
அப்போது பார்த்த அந்தக் கடலும்,ரயிலும்,கப்பலும் இன்னும் எனக்கு ஆனந்தத்தைத் தருகின்றன.
ராமேச்வரமும் வந்தது. குத்ரை வண்டியில் ஏறி,
போஸ்ட்மாஸ்டர்(எங்கள் அப்பா) வீட்டுக்கு வந்தொம்.
ராமெச்வரம் வீடுகள் வீதியில் ஆரம்பித்து அடுத்த வீதியில்
முடிந்தன.வீட்டிற்குள் நுழைய 7,8 படிகள் ஏறி உள்ளே போனொம்.
மஹா பழைய வீடு. இருட்டு,கொஞ்சம் வெளிச்சம் வந்தது மேலே இருக்கும் ஜன்னல்கள் வழியாகத்தான்.
அம்மாவின் சமையலறை விறகு அடுப்பு ,கரி அடுப்பு எல்லாம் சுத்தமாக இயங்கிக் கொண்டு இருந்தன.
காஸ் வராத நாள்.
கெரசினும் ரயிலில் வந்தால் உண்டு. முக்கால்வாசி வராது.
புதுவிதமான குடித்தனம் செய்து கொண்டிருந்தார் எங்காள் அம்மா.
புதிதாக வரும் காய்கறிகள் பற்றியும், வாசலில் உட்கார்ந்தால் வித விதமான மனிதர்களின் போக்குவரத்து தன்னை எப்போதும் , ஒருபுதிய உலகக்
கற்பனையைத் தூண்டும்படி இருப்பதாகவும் சொன்னார்..எல்லாவற்றையும் பாசிடிவாகப் பார்க்கும் உயர் மனம் அவளுடையது
சின்ன தம்பி அப்போது பள்ளி இறுதி வகுப்பில் இருந்தான்.
அவ்னுக்கும் ஓயாதவேலை. சந்தோஷமாக இருந்தான். வரும் வீ.ஐ.பி நபர்களை ராமெஸ்வரத்தை சுற்றிக் கான்பிப்பான்.
எத்தனை தீர்த்தங்கள் உண்டோ அத்தனை இடங்களுக்கும் அழைத்துப் போவான்.
சங்கு, சோழி, பவளப்பாறை, கோரலால் ஆன கைப்பொருட்கள்.
எல்லாம் எங்கே குறைந்த விலையில் வாங்கலாம் என்று தெரியும் அவனுக்கு.
அவனுடன் தனுஷ்கோடி வரை போய் வந்தோம்.
1967இல் இப்போது போல் அவ்வளவு வசதி கிடையாது. நடந்துதான் போனோம்.
ராமர் கோவில் குருக்கள் மட்டுமே போய் வரும் நாட்கள்
அவை.
நாங்கள் மீண்டும் 2003 இல் மதுரையிலிருந்து காரில் பயணம் செய்தோம்.
தேவிப்பட்டினம், சேது ஸ்னானம், முடித்து அதே பாலம் வழியாக ஆனால் தரை மார்க்கமாக அந்தப் பாலத்தை வேறு கோணத்தில் பார்த்தபடி.
பழய நினைவுகளை அசை போட்டபடி....
இப்போது அதே தம்பி பெரிய வேலைக்கு வந்து விட்டதால் . தனி காட்டெஜ், கொடுக்கப் பட்டது
அதெ போல் கடைகளில்
தெரிந்த மனிதர்கள்.எலோருக்கும் வயதாகி விட்டது.
கந்தமாதனபர்வத்தில் இருக்கும் அர்ச்சகரிடம் இவன் கேட்கிறான்"சாருக்கு என்னைத் தெரிகிறதா?' என்று. அவரும் அட போஸ்ட்மாஸ்டர் வீட்டுப் பையனில்லை!!! என்ரு ஆச்சரியப் படுகிறார்.
தன் மகனும் என் தம்பியும் புயல் வந்த போது செய்த சமூக
சேவையை சொல்கிறார். இன்னும் சில நண்பர்களைப் பார்க்க முயற்சி செய்து விட்டு சிலரைப் பார்த்து முப்பத்து நான்கு வருடக் கதைகளைப் பேசிக் கோவிலுக்கும் வருகிறொம்.
ராமேஸ்வரம் மாறியது தெரிகிறது.
புது விதமான நடை உடை பாவனைகளொடு இருக்கும் அண்டை நாட்டுத் தமிழர்களின் நட்பைப் பார்க்க முடிந்தது.
அழகான குடிசைகள், அதன் வாசல்களில் கோலங்கள்
சுத்தமான சூழ்னிலையை விரும்பும் அவர்களது பான்மை
கண்கூடாகத் தெரிகிறது.
நேபாலோ, சிக்கிமோ ஏதோ ஒரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் ராமேஸ்வரம் அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.
கேரளா சர்க்கஸ் ஒன்று கூடாரம் அடித்துக் கொண்டு இருந்தது.
அங்கே ஒரு திடலில் சிவாஜியின் கௌவுரவம் படம் கூட ஓடிக் கோண்டு இருந்தது.
புயலின் சாயல் அழியாமல் தங்கி விட்ட பூமியாகத் தனுஷ்கோடி.
மறைந்து மறைந்து ஓடி வரும் சிறிய தண்டவாளங்கள்.
பச்சை மரகதமாக ஒரு கடல்.
பழுப்பு நிறமாக இன்னோரு கடல்.
காலம் மாற்றாத வெண்மணல்.,, சிப்பிகள் ஆயிரக்கணக்கில்.
நமது ஜனாதிபதியின் எளிய வீடு., சேது பாலத்தைக் காண்பிப்பதாகக் கூவும் படகுக்காரர்கள்.
எல்லாமே இருக்கின்றன . கூடவே சமய சொற்பொழிவுகளும் அறைகூவி அழைத்தவண்ணம் இருந்தன.
நம் இந்தியா இங்கே இருக்கிறது என்ற நினைப்புடன் திரும்பினோம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Friday, January 18, 2013

பிடித்ததில் பிடித்தது ஜனவரி பிட் போட்டி..2

நீரைத்தொட முயலும் மரக்கிளைகள்
ஏரியில்  விழும் நீர்வீழ்ச்சி
ஸ்விட்சர்லாண்ட்   ஏரி
பாரீஸ் சதுக்கம்
பாரீஸ் அந்திவேளை
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

பிடித்ததில் பிடித்தது பிட் ஜனவரி போட்டி

நதியும் படகுகளும்
Add caption
ஐஃபெல் டவர்
பாரீஸ் நகர மெயின்  தெரு
பாரீசின்  ஓடங்கள்
கதிரவன் உதயம்
உதயத்தின் வண்ணங்கள்
வெயிலும் நிழலும்
ஜெரேனியம் பூக்கள்
தொடரும்...........

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa