Showing posts with label வெளி நாட்டில் உழைப்பு. Show all posts
Showing posts with label வெளி நாட்டில் உழைப்பு. Show all posts

Tuesday, September 11, 2007

நம்மூர் மக்கள் வெளிநாட்டில்

ஊரை விட்டு வெளியில் வந்து உழைக்கும் எல்லோருக்கும் இந்தப் பதிவைச் சமர்ப்பிகிறேன்.

இது ஒன்றும் சுலபமான வேலை இல்லை.
நம் சுயத்தைக் கொஞ்சமாவது விட்டுக் கொடுத்துத் தான் வெளிநாடு வர வேண்டி இருக்கிறது.

யாரும் சும்மா இருப்பதற்குப் பணம் கொடுக்கப் போவதில்லை. 500டிர்ஹமோ
5000 டாலரோ, இல்லை 10000 fரான்க்ஸோ ஏதாக இருந்தாலும் ஒவ்வொரு துளி நேரத்துக்கும் உழைத்தால் தான் பிழைக்க முடியும்.

நேற்று ஒரு கடைசி நேர வேலையாக வெய்யிலில் வெளியே போக நேர்ந்தது.
இங்குதான் டாக்ஸி காரர்கள் கொஞ்சம் கலர் பார்த்துத் தான் நிறுத்துகிறார்கள். அவர்களுக்கு மேற்கத்தியர்களால் லாபமும் நிறைய.
அவர்களைக் குறை சொல்ல முடியாது.
எங்க்ளுக்காக வண்டியை நிறுத்திய இளைஞன்
பக்கத்து ஊர்க்காரன்.

நீங்கள் வெய்யிலில் நிற்பதைப் பார்த்து நிறுத்தினேன்.
என்று சொல்லிவிட்டு சொந்தக் கதை சோகக்கதையைச் சொல்லி முடித்தார்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடத் தான் தனக்கு நேரம் இருப்பதாகவும் மற்ற நேரம் அலைவதற்கே சரியாக இருப்பதாகவும் சொன்னார்.

இவர் தனி ஆளில்லை. இது போல நம் அண்டை மானிலக்காரர்களும் ஒரு தமிழ்க்காரரையும் பார்த்தொம்.
அவர்களாவது குளிரூட்டப்பட்ட வண்டியில் பயணம் செய்து , காவலுடன் மல்லுக்கட்டி, வண்டி சொந்தக்காரருக்குப் பணம் கட்டிப்
பிழைக்கிறார்கள்.
மற்றொரு நாள் இந்த ஊரு பஸ்ஸில் வர வேண்டிய கட்டாயம்.
டாக்ஸி கிடைக்கவில்லை.
அங்கே பஸ் நிறுத்தத்தில் காத்திருப்போர்கள் அனைவரும்
அத்தனை பொறுமையாக வெய்யிலில் வாடுவதைப் பார்த்தால் கஷ்டமாக இருந்தது.
குறித்த நேரத்துக்கு வண்டி வருமா தெரியாது.

அத்தனைக்கும் நடுவில் ஊருக்குப் போன் செய்து பெண்டாட்டியோ, அம்மாவொ பேசிவிட்டால் முகத்தில் அத்தனை மலர்ச்சி.
நம்மைப் பார்த்தால் பாபா,மாஜி என்று நிழலில் உட்கார இடம் தந்து
தாங்கள் வெய்யிலில் நிற்கும் குணம்.

இதற்கு நேர் மாறாக இறங்கும்போதே வண்டியை ஓட்டிவிட்ட பஸ் ஓட்டுனர்,
எந்த தேசமோ தெரியாது, நம்மூராக இருக்க முடியாது...

ஒரு செகண்ட் தாமதித்து இருந்தாலும் நடந்திருப்பது வேறாக இருந்து இருக்கும்.
சிங்கம் விழாமல் பிடித்துக் கொண்டார்.
திகில் அனுபவம்:(((


நாங்களாவது கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு,
வந்துவிடுகிறோம்
.
இங்கெ இருப்பவ்ர்கள் பிழைப்புக்காக வந்த இடத்த்தில்
முன்ஜாக்கிரதையோடு
எச்சரிக்கையாக இருந்து நல்ல வளத்தோடு வாழ வேண்டும்.



அக்கரைப் பச்சை செழிப்பாகவே இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்திய நாட்டை விட்டு ,சொந்த மக்களைப் பிரிந்து வாழும் எல்லோரும் சுகமாக இருக்கட்டும்.



Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

நவராத்திரி பதிவு 4

வல்லிசிம்ஹன் நவராத்திரி நல் நாட்கள் வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்  நவராத்திரி நல்  நாட்கள்  +++++++++++++++++++++++++++++++ சின...