Blog Archive

Showing posts with label பாப்பா பாடும் பாட்டு. Show all posts
Showing posts with label பாப்பா பாடும் பாட்டு. Show all posts

Sunday, November 08, 2009

வாண்டுவின் ராஜாங்கம்


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

அம்மா தூகர் வேணும். ஆ போடு.

எதுக்குடா இப்ப.(9 மணி இரவு) நீ ஹைப்பர் ஆகித் தூங்காமல் இருக்கவா.
ஆளைவிடு.
இல்லியெ, அண்ணாவுக்கு விக்கறது.!!
அதனால?
எனக்கும் இப்ப வந்துடும். :)


நாளைக்கு உனக்கு ஹேர்கட் பண்ணனும் கிஷா.
வேண்டாமேமா.
இப்பியே இக்கட்டும்மா.

கண்ணு குத்துமே
உனக்குக் குத்திலியே:))

அண்ணா இனிமெ நீ கிஷா முன்னால கெட்ட வார்த்தைகள் சொல்லாதே. உடனே பிடிச்சுப்பான்.
எதுமா ---இது அண்ணா
அதாண்டா ஐ டி ஐ ஒ ட், ஃப் ஒ ஒ எல்

என்று அம்மா ச்பெல்லிங் கொடுத்ததும் சின்னவன் சொல்லிட்டான்.

அம்மா உன்னை இடியட் சொல்லாதே ஃபூல் சொல்லாதேன்னு
சொல்றா அண்ணா:)))
அம்மா அவன் லிப் ரீடிங் கத்துண்டு இருக்கான்மா. நாம இனிமே வேற பாஷை கத்துக்கலாம் என்று சிரிக்கிறான் பெரியவன்.