| ஆஜிப்பாட்டி ஆரத்தி எடுக்கிறார் இடது பக்கம் நீண்ட பின்னல் மல்லிகைப் பூவோடு அம்மா. |
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்| ஆஜிப்பாட்டி ஆரத்தி எடுக்கிறார் இடது பக்கம் நீண்ட பின்னல் மல்லிகைப் பூவோடு அம்மா. |
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
19 comments:
பழைய படம் மிக அற்புதம், அம்மாவின் பின்னல் அழகு, அந்த கொடி போன்ற உடலில் அந்த நீண்ட சடையும் பூவும் அழகு.
மலரும் நினைவுகள் அருமை.
தொடர்கிறேன் நினைவுகளை ரசிக்க.
நீண்ட பின்னல் வெகு அழகு. சென்னையில் தான் கல்யாணமா? தொடர்ந்து பகிர்ந்து வாருங்கள். நாங்களும் தொடர்கிறோம். பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும் நினைவுகள்!
மலரும் நினைவுகள் அற்புதம். திருமணத்துக்குப் பின்னும் இன்ஷியல் மாறாத ராசி சிலருக்கு உண்டு. என் மனைவிக்கும் உண்டு! இன்னும் சிலர் திருமணத்துக்குப் பின்னும் அப்பாவின் இனிஷியலையே வைத்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.
பட்சணத்தில் பெயரா... அட!
படமும் பகிர்வும் அருமை வல்லிம்மா. தொடரக் காத்திருக்கிறோம்.
ஶ்ரீராம், பக்ஷணத்தில் பெயர் 1963 ஆம் வருஷம் என் சித்தி (அசோகமித்திரனைக் கல்யாணம் செய்து கொண்டவர்) கல்யாணத்திலேயே எங்க வீட்டில் அறிமுகம் ஆச்சு. :))))))
அற்புதமான நினைவுகள் வல்லிம்மா..
தவறாமல் வருகைதரும் தனபாலன்.நன்றி மா. மிக நன்றி.
அன்பு கோமதி அம்மாவுக்கு வெகு அழகிய முகம். என் திருமணத்தின் போது 37 வயது. அப்பாவுக்குப் பிடித்த மாதிரிதான் நடந்து கொள்வார்.நானும் அந்த மாதிரி மாற முயற்சிக்கிறேன். கூடுமா என்று தெரியவில்லை. நன்றி மா.வளமே வாழ்க.
ஆமாம் கீதா.சென்னையில் வைத்துக் கொள்ளச் சொல்லி இவரின் பாட்ட்டி சொல்லிவிட்டார். இல்லாவிட்டால் மதுரைக்கு எல்லோரும் வரணும். எங்க கூட்டம் பெரிசுன்னு சமாதானம் சொல்ல அப்பாவும் சம்மதித்தார்.இரட்டிப்படி செலவு. அம்மாவின் அம்மா,மாமாக்கள் எல்லோரும் நிறைய உதவினார்கள். ஆபட்ஸ்பரியில் திருமணம்னு சொல்லி எஸ்ஜி எஸ் சபா,ஹபிபுல்லா ரோடில் வந்து நின்றது சாய்ஸ். அம்மா என்றால் அழகுதான். ஸ்மைலி போட முடியவில்லை இந்தக் கணினியில்:*}
வரணும் ஸ்ரீராம். அப்பாவுக்கு எப்பவும் தன் பாதுகாப்பில் பெண் இருக்கவேணும் என்கிற எண்ணம் இருந்திருக்குமோ}}} பாவம். என் தோழி கூடத் தன் இனிஷியலை விட்டுக் கொடுக்கவில்லை. அவளைத் தேட நான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெகு காலம் கழித்தே பயன் கொடுத்தன.
நன்றி ராமலக்ஷ்மி. முடியும் போது தொடருகிறேன். நன்றி மா.
நன்றி சாந்தி. அன்புக்கு மிகவும் நன்றி.
//ஶ்ரீராம், பக்ஷணத்தில் பெயர் 1963 ஆம் வருஷம் என் சித்தி (அசோகமித்திரனைக் கல்யாணம் செய்து கொண்டவர்) கல்யாணத்திலேயே எங்க வீட்டில் அறிமுகம் ஆச்சு. :))))))//
அப்போ சொல்லிடலாம் இன்னொரு "அட!"
அம்மா படங்கள் தான் நீங்கள் பகிர்ந்து இருக்கிறீர்களே! மிக அழகாய் இருப்பார்கள் வயதான பின் கூட அவர்கள் அழகுதான்.
ஆமாம் கோமதி. மறந்துவிட்டேன். நன்றி அம்மா.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
அன்பின் பூ - இரண்டாம் நாள்
இனிய நினைவுகள்.... எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
நன்றி தனபாலன். இந்தத் தக்க சமயத்தில் சேதி சொல்வது மிக இனிமை.
நன்றி வெங்கட். இதை எழுதுவதும் சிலசமயம் வருத்தம் தருகிறது. அதையும் மீறித்தான் பிடிவாதமாக பதிவிடுகிறேன். நீங்கள் எல்லாம் பின்னூட்டமிட்டு உதவி செய்வது ஒரு ஆறுதல்.
Post a Comment