Follow by Email

Wednesday, February 12, 2014

மாப்பிள்ளை வந்தாரா.புக்ககம்,புதுக்கோட்டை பயணம்
இப்படியாகத்தானே ஐப்பசி மாதமும் வந்தது.தீபாவளி ஷாப்பிங் முடிக்க ஹாஜீமூசா கடை.
முதல் தடவையாகப் புடவை அதிலும் பட்டுப்புடவை போணி.
யானைக் கலர்னு அப்போது புதிதாக ஒரு ஏதோ ஒரு படத்தின் பேரோடு
வந்திருந்தது.
110ரூபாய்தான் விலை.அம்மா தீர்மானம் போட்டாச்சு.
அதுதான் பெண்பார்க்கிற அன்று உடுத்திக்கொள்ளவேண்டும்.சரி.
தீபாவளியும் வந்து போனது.
இந்தத் தடவை தம்பிகளோடு பட்டாசுக்குப் போட்டிபோடவில்லை.
சின்னவன் அடுத்த வருஷம் நீ இங்க வருவியான்னு கேட்க அப்போதுதான்
ஓஹோ இங்க இந்த இடத்தில் நம்ம நாட்கள் குறைவுதான்
என்றும் வெளிச்சமாகியது.
சென்னையில் ஒரு திருமணம் .அதில் எல்லோரும் சந்திப்பதாக ஏற்பாடு.
பலிஆடு முகம் எப்படி இருக்கும் என்று என்னைப் பார்த்தால் தெரிந்து இருக்கும்.
கூட்டத்தில் அனைவரும் என்னைப்பார்ப்பதாக உணர்வு.
ஒரு வட்டமாக நாற்காலிகளைப் போட்டு அத்தை வீட்டுக்காரர்களும்
எங்க வீட்டூக்காரர்களும் உட்கார்ந்தோம்.

பார்த்துக்கோடா அப்புறம் சரியாவே பார்க்கலைனு எல்லாம்
சொல்லக்கூடாது ,
புளித்துப்போன வசனம் தான்.அன்னிக்கு அப்படித்தான் தோணவில்லை.
அடக்கம் ஒடுக்கம் எல்லாம் முன்னாடியே மண்டையில் தைத்துத்தான் பாட்டி அனுப்பி இருந்ததால் நான் தலையை நிமிர்த்தவில்லை.

ஒரு கனமான குரல் நிமிர்ந்து உட்கார்ந்து அவனைப் பார்க்கலாம்
என்றது.
பிறகு தெரிந்ததது அது என் மாமனாரின்குரல் என்று.
சரி என்று நிமிர்ந்தால் நாலைந்து பேர்கள் ஒரே ஜாடையில்.
அதில் ஒருவருக்குக் காதோரம் நரைத்திருந்தது.
அட ராமா,அதுக்குள்ள நரைத்துவிட்டதா.

ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ என்று மீண்டும் குனிந்த தலை.
மாமா அப்ப்போது பார்த்து ஒரு ஸ்கைப்ளூ சட்டை பின்னால் போய் நின்று இதுதான் என்பதுபோல் சைகை காட்டினார்.

திருப்பியும் நிமிர்ந்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்தவரைப் பார்த்துவிட்டு

சரி ஓக்கேதான் என்று நினைத்தபடி

அம்மாவைப் பார்த்தேன்.அப்பா அம்மா இருவரும் கைகூப்பாத குறையாக நிற்பதைப் பார்த்து ஒரு கணம் நான் கலங்கியது இன்னும் நினைவு இருக்கிறது.


அவர்களோடு கிளம்பி இரண்டு வண்டிகளில் மைலாப்பூரில் இருந்த பெரிய வீட்டுக்கும் வந்து பாட்டியையும் தாத்தாவையும் வணங்கி
அம்மாவின் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டோம்
ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து போன் வந்துவிட்டது.
எங்களுக்கு சம்மதம்.
அப்பா வந்து என்னைக் கேட்டார்."அம்மா,உனக்குப் பிடித்திருந்தால் சரினு சொல்லு."
இல்லாட்டாப் பரவாயில்லை.
நான் நிறையப் படித்த அறிவாளி ஆச்சே.
பரவாயில்லைப்பா சரினு சொல்லிடலாம்.
அவ்வளவுதான் பலவிதமானப் பொருளாதாரத் தடைகள் வந்தபோதும்
முனைப்போடு அனைவரும் உழைத்துத் தை மாதத்தில்
எங்கள் திருமணமும் முடிந்தது.
படிக்கவில்லை.
அவரவர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள். இல்லாவிட்டால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க வைக்கப் படுகிறார்கள்.
கதையும் முடிந்தது கத்திரிக்காயும் காய்த்தது.                                    #######################################################                 9ஆம்  தேதி  ஃபெப்ரவரி...         எக்மோர் ரயில் நிலையம். மாமா  சீனுவும் கோபுவும் ஏற்பாடு செய்த கூபே  ஃபஸ்ட் க்ளாஸ். அவர்கள்  புரசவாக்கத்திலிருந்து வர நாங்கள் மைலாப்பூரிலிருந்து கிளம்ப,   புதிதாக வாங்கின நீல சந்தேரி  பட்டுப் புடவை தசாபுசா என்று சுற்றிக் கொண்டு பரிச்சயம் இல்லாத  கைப்பையுடன்   மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு இவருடன் என் வாழ்க்கைப் பயணம் ஆரம்பித்தது.                                                              அம்மா அப்பா ,பெரிய மாமா சின்ன மாமா அவர்கள் குழந்தைகள்   எல்லோர் கண்களிலும்   நீர். என்கண்களில் துளிச்சலனமும் இல்லை.   நம்பிக்கை,பாசம் நேசம் எல்லாம் இருக்கும் போது வாழ்க்கையைப் பற்றி என்ன பயம்._______}  அவர்கள் உணர்வுகளைப் புரிந்து  என் அப்பாவின் கைகளைப் பற்றிச் சிங்கம் சொன்ன வார்த்தைகள் இவை.    மாமா  கவலைப்படவேண்டாம்  நான் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும்   புதுக்கோட்டைக்கு வாருங்கள்.மதுரையிலிருந்து இரண்டு மணி நேரம் தானே.                                                                    என்றபடி வண்டியேறி என்னையும் ஏற்றிவிட்டார்.                                                                       நான் சரியாகப் பேசினேனா  டால்  என்றபடி வந்து உட்கார்ந்தார். அதென்ன    டால் என்று பார்க்கிறீர்கள். அப்போது ஆங்கில பாப் இசைப் பாடல் லிவிங் டால்னு  ஒன்று   க்ளிஃப் ரிச்சர்ட்  பாடினது.   அதிலிருந்து நானும் அவருக்கு இசைந்து நடக்கும் இனிய பொம்மையாகிவிட்டேன்.                                                                                        நினைக்கக் கூட  நேரமில்லாமல் மாதங்கள் ஓடின. பத்து மாதங்களில் நவம்பர் 13 ஆம் தேதி எங்கள் முதல் பையன்   மதுரை டிவிஎஸ் மருத்துவமனையில் பிறந்தான்.    தொடருவேன்.

எல்லோரும் வாழ வேண்டும்

40 comments:

delphine said...

வள்ளி... மலரும் நினைவுகள் ...really very nice...சில இடங்களில் மனது கலங்கியது..அப்பா அம்மா இருவரும் கைகூப்பாத குறையாக நிற்பதைப் பார்த்து ஒரு கணம் நான் கலங்கியது இன்னும் நினைவு இருக்கிறது.//
i guess this is the state of most of our parents!கதையும் முடிந்தது கத்திரிக்காயும் காய்த்தது....how many?

வல்லிசிம்ஹன் said...

டெல்ஃபின்,
:-)))
ரொம்ப வயசான மலர்ந்த நினைவுகளுக்கு கத்திரிக்காய் கொஞ்சமாகக் காய்க்கும் என்று நினைக்கிறேன்.

எனக்குக் கத்திரிக்கய் பிடிக்கும் எண்ணைக்கத்திரிக்காய்.
25 இருந்தால் எல்லாரும் சாப்பிடலாம்.!!!!!!

ஜெயஸ்ரீ said...

பெரிய வேலையெல்லாம் செஞ்சிருக்கீங்களே அந்தக் காலத்திலயே ))
அப்புறம் அவர்கிட்ட இந்தக் கதையெல்லாம் எப்போ சொன்னீங்க ? ))

பாலராஜன்கீதா said...

அந்தக்காலத்தில் கல்யாணம் இவ்வளவு எளிதில் முடிந்ததா ?

ஹூம்ம்ம்ம்ம் :-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜெயஸ்ரீ.
எல்லாம் வடிகட்டின அசட்டுத்தனம்.

அப்பா சரினு சொன்னதால கல்யாணம். என்கிட்ட இப்போப் பணமில்லனு எங்க அத்தைகிட்ட ஏதாவது ஒரு கட்டத்துல கூடச் சொல்லலை.


இவர்கிட்ட அனேகமாக் கல்யாணம் ஆகித் திருப்பதி போகும்போதே சொல்லிவிட்டேன்.
ஒரு விஷயமும் நம்மளிடம் நிக்காது.:-0))))))))))

வல்லிசிம்ஹன் said...

வாங்க பாலராஜன் கீதா,
அப்போ சுலபமா நடந்ததுக்குப் பல காரணம் உண்டு.ஒன்று இந்த விஷயம்
உறவாகிப்போனது.
இரண்டாவது எனக்கு திருமணம் நல்லதுனு எங்க அப்பா நினைச்சு இருக்கணும்,
மூன்றாவது ஒரே ஒரு பெண்.சரி உலக வழக்கம்தானே செய்துவிடலாமென்றும் பெற்றோருக்குத் தோன்றியிருக்கலாம்.

MSATHIA said...

அந்தக்காலத்திலேயே கலக்கி இருக்கீங்க!!
தொடர் நன்றாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

வாங்க சத்யா. நட்சத்திர வாழ்த்துக்கள்.
பெண்களெப்பவும் இந்த மாதிரிதான்:-))

பதிவுனு எழுதினதனாலே என் கதை
தெரிகிறது!!!
.இதைவிட சுவாரசியமாக என் கூடப்படித்தவ்ர்கள் கதையெல்லாம் இருக்கும்.

துளசி கோபால் said...

மொதல்லே எல்லாத்துக்கும் நன்றின்னு சொல்லிக்கறேன் வல்லி.
இப்பத்தான் நீங்க அனுப்பின வாழ்த்து(க்)களையெல்லாம் வீடு முழுக்க
ரொப்பிவச்சுக்கிட்டு இருக்கேன்.

உங்க கல்யாணம்............. ச்சும்மா சொல்லக்கூடாது.
அடிபொளி பண்ணிட்டீங்க:-))))

ஒவ்வொருத்தர் கல்யாணம் ஒவ்வொரு மாதிரி. நினைச்சுப்பார்த்தா
பிரமிப்பாத்தான் இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி,
வீட்டில இன்னும் இடம் பாக்கி இருக்கே. அங்கெ இன்னிக்குஅனுப்பற வாழ்த்துக்களை ரொப்பவும்.

இப்போ ஒரு டாக் ஆரம்பிக்கலாமா
உங்க கல்யாண அனுபவங்கள்னு.
சுவாரசியமா இருக்கும்.:-)))

ambi said...

//கதையும் முடிந்தது கத்திரிக்காயும் காய்த்தது.
//

ha haaaa :) but i hate kathrikaay,
thank God, my wife also :))))

உங்க கல்யாணம்............. ச்சும்மா சொல்லக்கூடாது.
அடிபொளி பண்ணிட்டீங்க:-))))

me repeatttttuu!

அபி அப்பா said...

//இப்போ ஒரு டாக் ஆரம்பிக்கலாமா
உங்க கல்யாண அனுபவங்கள்னு.
சுவாரசியமா இருக்கும்.:-)))//

ம்...ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். கொத்ஸ் ஆரம்பிச்சு வையுங்க, இது நல்ல ஐடியாவா இருக்கு!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் அம்பி,
என்ன திருமணம் ஆகி இன்னும் ஒரு மாசம் ஆகலை.
அதற்குள் ப்ளாகுக்கு வந்தாச்சா.:-)

லீவு எல்லாம் ஒவரா.சரி,டைம் எடுத்துண்டு வந்து பார்த்ததுக்குத் தான்க்ஸ்பா.:-))))
கத்திரிக்காய் பிடிக்கலைன்னா வெண்டைக்காய் போட்டுக்கலாமா.

வல்லிசிம்ஹன் said...

அதானே,இந்தக் கொத்ஸ் நட்சத்திர வாரம் முடிஞ்சு மங்களம் பாடிட்டு அப்புறம் காணோம் அபிஅப்பா.
அவர் ஆரம்பிச்சா நாலு பேரு என்னனு எட்டிப்பார்ப்பாங்க.

பார்க்கலாம்.:-))

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், சீரியலா எடுக்கலாம் போல இருக்கே!
இது ஒரு காதல் கதை! ரொம்பவே நல்லா இருக்கு!
@அம்பி, கத்திரிக்காய் உங்களுக்காகக் காத்துட்டு இருக்கு! அதெல்லாம் சாப்பிட மாட்டேன்னு சொல்ல முடியாது!

வல்லிசிம்ஹன் said...

வாங்க கீதா.
வேலை நிறைய இருக்கா. அம்பிகிட்ட கூடச் சொன்னேன்.நீங்க டயப்பர் மாத்திறதுலேயே பிசியா இருக்கிறதாச் சொன்னார்.:-)))
ஆமாம் சீரியல் மாதிரி ஆயிடுத்து இல்ல. காதல்கதையா. இதுவா. நான் வீரதீர பராக்கிரமம்னு நினைச்சேன்.:-))))))))

சாந்தி மாரியப்பன் said...

கலக்கிட்டீங்க வல்லிம்மா....

வல்லிசிம்ஹன் said...

நன்றி அமைதிச்சாரல். ரசித்ததற்கும் படித்ததற்கும்:))

Anonymous said...

நல்ல நினைவுகள்தான் வல்லிம்மா !!

வல்லிசிம்ஹன் said...

நன்றி, சின்ன அம்மிணி. இந்தக் கீதாசாம்பசிவத்துக்குத்தான் இந்த மலரும் நினைவுகள்

வந்ததற்குக் காரணம். ஒரு பதிவர் இன்னோருத்தரைக் கொண்டாடறது அவ்வளவு சுலபமில்லை.
இவரும் ஆன்மீகப் பதிவாளர் தி.வாசுதேவனும்தான் காரணம்.

ஹுஸைனம்மா said...

அந்தக் காலத்தில இது அட்வென்ச்சர்தான்... எல்லாம் நன்மைக்கேன்னு சொல்வாங்களே, அதுமாதிரி உங்களுக்கு ஏன் மனசில அப்படி எழுதணும்னு தோணனும்? ஆண்டவன் போட்ட முடிச்சு!!

ambi said...

மீள் பதிவானாலும் படிக்க பிரஷ்ஷா இருக்கு. :))

பாருங்க ஒரு லெட்டர்ல கல்யாணம் முடிஞ்சது. என்ன மாதிரியா? பிளாக் ஆரம்பிச்சு, 67 பதிவு போட்டு...

வல்லிசிம்ஹன் said...

அதுதான் உண்மை ஹுசைனம்மா.
ஆண்டவன் போட்ட முடிச்சு.
இல்லாட்ட வாசலில் நிற்கக் கூட அம்மாவின் அனுமதியை எதிர்பார்க்கும் நான்
எந்தத் தைரியத்தில் அப்படி ஒரு கடிதம் எழுதினேன்;)?

அப்பாவின் பொறுமை அளவிட முடியாதது.
என் பெண் திருமணத்தின் போது அப்பா இல்லை. ஆனால் திருமண நிச்சயத்தின் போது
என்னையும் ,இவரையும் பார்த்துச் சிரித்தவாறே சொன்னார்.
உங்க கல்யாணம் எத்தனை சீக்கிரம் நிச்சயிக்கப் பட்டது !! இப்ப நினைக்க ஆச்சரியமா இருக்கிறது என்று.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அம்பி.
திருப்பி வந்து படிச்சதுக்கும் நன்றி. மூன்று வருஷம் ஓடிப் போச்சு/.தான்க்ஸ் ஃபார் த காம்ப்ளிமெண்ட்ஸ்:)

Geetha Sambasivam said...

//அதில் ஒருவருக்குக் காதோரம் நரைத்திருந்தது.
அட ராமா,அதுக்குள்ள நரைத்துவிட்டதா.//

இது! இது!! இதைத் தான் படிக்கக் காத்திருந்தேன், நினைச்சு நினைச்சுச் சிரிக்கணும்! :))))))))))))))))))))

Geetha Sambasivam said...

//ha haaaa :) but i hate kathrikaay,
thank God, my wife also :))))//
க்ர்ர்ர்ர்ர் அம்பி, இன்னிக்கு எண்ணெய்க் கத்திரிக்காய் தான், சாப்பிட்டோமாக்கும், என்ன டேஸ்ட் தெரியுமா?? :P

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் பின்னூட்டங்கள் எல்லாம் பழசா?? சிலது புதுசு போல!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்,புதுசா வந்த 9 பின்னூட்டம் தவிர மிச்சதெல்லாம் பழசுதான் கீதா.
காப்பி பேஸ்ட் தானெ அப்படியே எல்லாம் மொத்தமா வந்துடுத்து:))

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான சந்திப்பு அம்மா...

தொடருங்கள்... இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டால் ஆறுதல் கிடைக்கும் அம்மா...

Geetha Sambasivam said...

//அட ராமா,அதுக்குள்ள நரைத்துவிட்டதா.//
மறுபடி இதைப் படிச்சுச் சிரிப்பு வந்தாலும் உண்மை உறைக்கவே கண்ணும் கலங்குகிறது. :(

ஸ்ரீராம். said...

//பிறகு தெரிந்தது அது என் மாமாவின் (வருங்கால மாமனார் )குரல் என்று.//

யார் குரல் என்று விட்டுப்போய் விட்டது!

//ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ என்று மீண்டும் குனிந்த தலை.//

காலேஜ்ல படிச்ச பொண்ணு.

//சரியாகப் பேசினேனா டால் என்றபடி//

:)))

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா.
வாழ்க்கை நீரோட்டத்தை மிக அற்புதமாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் அம்மா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.மீண்டும் படித்ததற்கு நன்றி. ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டும் மீண்டும் பதிவிட்டேன். இனி கொஞ்ச நாட்கள் போகலாம். கண்ணிர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அழக்கூட அருகதை இல்லைமா.

வல்லிசிம்ஹன் said...

சரி செய்துவிட்டேன். ஸ்ரீராம்.நன்றீ. காலேஜில படித்தாலும் அசடு அசடுதான். ஆமாம் அவர் "டால்} என்று கூப்பிடுவது சில பேருக்கே தெரியும். சிலபேருக்கு கேலியாகப் போகும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ரூபன். சுவை பட எழுத முயற்சிக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

இந்தப் பதிவு முன்னர் வாசித்ததில்லை. யானை கலர் இப்போதுதான் கேள்விப் படுகிறேன். சைகை காட்டிய மாமாவின் அன்பு மற்றும் ஒவ்வொருவரின் உணர்வுகளை நுணுக்கமாக விவரித்திருக்கும் விதம் வாசிக்க நிறைவு. தொடருங்கள் வல்லிம்மா.

Geetha Sambasivam said...

யானை கலர் க்ரேயிலேயே கொஞ்சம் டார்க்னு சொல்லலாம்னு நினைக்கிறேன் ரா.ல. அப்போ அவங்க சொல்றாப்போல் அந்தக் கலர் தான் ஃபாஷன். எனக்கு அந்தக் கலரில் பச்சைக்கலர் பார்டரில் ஜரிகை போட்டுப் பட்டுப்பாவாடை எடுத்தாங்க. நினைவிருக்கு. அதுவும் ஹாஜிமூசா தான்! :)) அப்புறமா 1970 ஆம் ஆண்டில் அதே யானைக்கலருக்கு ஆசைப்பட்டு பச்சைக்கலர் பார்டரில் எல் ஐசி ஜரிகை பார்டர் போட்டுப் புடவையும் எடுத்துண்டேன். பத்து வருஷம் முன்னால் தான் அந்தப் புடைவையைத் தூக்கிப் போட்டேன். :)))))

ராமலக்ஷ்மி said...

நன்றி கீதாம்மா:)!

Kanchana Radhakrishnan said...

நல்ல நினைவுகள்.