Friday, February 14, 2014

அப்படியே உரிச்சு வச்சிருக்கு:)
இதெல்லாம் இப்பொதைய விளையாட்டுப் பொருட்கள் இங்க. சின்னவனுக்கு விளையாட இவைகளைவிட ரொம்பப் பிடித்தது சமையல் பாத்திரங்களும் தண்ணீரும்தான்.
அரிசி டப்ப இருக்கிற அலமாரி திறந்து வைத்தால் ஆபத்து:0
குட்டிக் கையால அஞ்சாறு கைப்பிடி இறையும் கீழ.
''அச்சச்சோ ,கீய வீனுடுத்தே'' என்று அது மேலயே நடப்பான். நடந்துவிட்டு,''கால் நாஸ்தின்னு'' வேற சொல்லுவான்.
இதெல்லாம் எனக்கு ஞாபகப் படுத்தியது எங்க குழந்தைகளின் மழலைப் பருவம்.
அத்றகு முனால் என் தம்பிகளின் சிறிய வயது மழலைகள்.
இதென்ன ஒரே மாதிரி வருதே என்று யோசிக்கும்போதுதான்.,
அப்படியே அச்சில வார்த்த மாதிரி இருக்கே என்கிற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
எங்க பெரிய பையன் பிறந்த போது, எல்லாரும் அவன் என்னை மாதிரியே இருப்பதாகவும், அப்பா வீட்டைக் கொள்ளவில்லை என்றும் சொல்லிகொண்டிருந்தார்கள்.
இப்ப ஒண்ணும் சொல்ல இல்ல. அப்பாவுக்குப் பக்கத்தில பையனும் அதே போல இன்னொரு சிங்கமாத்தான் இருக்கான்:)
இதில என்ன கவலைப் பட இருக்கு. யாரையாவது கொள்ள வேண்டியதுதானே.
அந்தந்த ஜீன்ஸுக்கு ஏத்த மாதிரி அமைப்பும், எண்ணங்களும் அமையும்.
சில நிறைகுறை இருக்கும். கோபத்துக்கு பெரிய தாத்தா, குணத்துக்கு பெரிய பாட்டி, ஓடறத்துக்கு சித்தப்பா, மொழிக்கு மாமா என்று எங்கயாவது குறித்து வைத்து இருக்கிறதா என்றும் ஆராய்ச்சி செய்யணும்:)
குழந்தை சிரிக்கும் போது எல்லோரும் மனக்கண் முன் வந்து போகிறார்கள். அது கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டால் என் தந்தை ஞாபகம் வருகிறார்.
ஸ்விஸ் பேத்தி முறைக்கும் போது என் பாட்டி நினைவு வருகிறது.
காலை வேற நீட்டி,''பாட்டி !!! காலைப் பிடிச்சு விடு'' என்றால் என் பாட்டி சொல்லுவது போலவே இருக்கிறது:)
''எனக்கு புளூ கலர்ல வாலு வச்சுக் கொடு'' என்றால் என் தம்பி நினைவு வருகிறது!!
ஆகக் கூடி , குழந்தைகள் பிறக்கும் போது அவர்களைக் கொள்ளவில்லை, இவர்கள் ஜாடை இல்லை என்று கவலையே வேண்டாம் ஏதாவது ரூபத்தில் நம் அணுக்கள் இந்தத் தளிர்களிடம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.புது சிங்கம்

36 comments:

இலவசக்கொத்தனார் said...

இப்போ என்ன திடீரென்று ஜெனிடிக்ஸ் ஆராய்ச்சி? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாச்சொன்னீங்க.. என் பிள்ளைங்களப்பார்த்து என் அக்கா .. என்னடி ரெண்டுபேரும் கொஞ்சம் கூட உன்னை மாதிரி இல்லையேன்னாங்க.. அப்படியே அப்பா .. அவங்க தாத்தா தான் கொஞ்சம் ஆச்சி மாதிரின்னாங்க.. இப்ப எல்லாரும் பொண்ணு ஒன்னையமாதிரியே ஆகிட்டு வராங்கறாங்க..
பின்ன என்னை மாதிரியே முறைச்சிக்கிட்டு கோபப்பட்டுக்கிட்டு இருந்தா சொல்லமாட்டாங்களா.. :)

ராமலக்ஷ்மி said...

இந்தப் பதிவின் தலைப்பை வாழ்க்கையில் பல சமயங்களில் பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறோம்தான்:)! நல்லா சொல்லியிருக்கீங்கம்மா!

வல்லிசிம்ஹன் said...

அதையேன் கேக்கறிங்க கொத்ஸ்.

டிஸ்கி போடறதுக்கு முன்னால பேரன் கீபோர்ட்ல எதையோ தட்டி விட்டுட்டான்:)


போன வாரம் சனிக்கிழமை கோவிலுக்குப் போயிருக்க்ம்போது, சின்னவன் ஓடிக்கொண்டே இருந்தான்.
மாப்பிள்ளை என்னிடம் கொடுத்து
'அம்மா கொஞ்சம் பார்த்துக்குங்க,நான் மற்ற சன்னிதிக்குப் போயிட்டுவரேன்னு சொல்லிட்டுப் போனார்.
நம்ம பக்கத்திலிருந்த இன்னோரு அம்மா, உங்க பையன் அப்படியே உங்க வடிவாவே இருக்காஅரே. பேரந்தாம் அம்மா ஜாடைபோல் இருக்கு'' என்று புன்னகைத்தார்.

நானும் மறுப்புச் சொல்லலை.
அப்புறமா சிரித்ஹ்ஹுக் கொண்டோம். இந்த ஜாடை விஷயம் ரொம்ப நாளாச் சொல்லணும்னு ஆசை. சொல்லிட்டேஎன்!!

வல்லிசிம்ஹன் said...

ஆன்ங், அங்கதான் தப்பு வருது.
கோவிச்சுகிட்டா அம்மா. சிரிச்சுகிட்டா அப்பாவா!! நல்லா இருக்கே கதை முத்து:)
குணங்களையும் கூறு போட்டு, கொஞ்சம் அசமஞ்சம் அம்மா மாதிரின்னு சொல்றவங்களையும் கேட்டு இருக்கேன்!!
பாவம்பா பெத்தவ!!

அதாவது இந்த சைடு ஒரு கணிப்பு. அந்த சைடு ஒரு கணிப்பு:)

வல்லிசிம்ஹன் said...

ராம்லக்ஷ்மிம்மா,

இதுதான் பிள்ளை பொறந்ததும் கேட்கிற முதக் கேள்வி.

பேரன் மீது அதீதக் காதல் கொண்ட, தாத்தா ஒருத்தரை இங்க ஹாஸ்பிட்டல்ல பார்த்தேன்.
அந்த இரண்டு நாள் குழந்தை அத்தனை பொறுப்பு உணர்வோடு (வெரி ரெஸ்பான்சிபில்) இருப்பதாகச் சொன்னார்.!!!

நானும் அந்தக் குழந்தையைப் போய்ப் பார்த்தேன். அது தேமேன்னு கண்ணைத் திறக்கலாமா வேண்டாமான்னு யோசித்துக் கொண்டு இருந்தது.:)
இது அந்தத் தாத்தாவோட கற்பனைதானே!!

நானானி said...

நல்லாருக்கு வல்லி!
அவரவர் பேரப்பிள்ளைகள் அவரவர்க்கு ஒசத்தி என்பது போல்தான் அந்த தாத்தாவும். என் நாத்தனாருக்கு பேத்தி பிறந்து முன்று மாதத்தில் பாக்கப் போனோம்.அப்போது அவர்,'பாரு! எப்படி கையை ஆட்டி ஆட்டி உம் உம் என்று தாத்தாவை அதட்டுகிறது!' என்றார். நானும் அந்தப் பாட்டியின் ஆர்வத்தை உடைக்காமல்,'ஆமாம் அப்படித்தான் தெரிகிறது.' என்று சொல்லிவிட்டு வந்தேன். உங்கள் பேரனின் குறும்புகள் = என் பேரன்.
அமெரிக்காவிலிருந்து ஒரு வண்டி வெளாட்டு சாமான்கள்...அவனுக்குப்பிடித்ததென்னவோ என்னோட சமையலறைதான். நான் வருவதற்குள் எவ்வளவு பாத்திரங்கள், பாட்டில்களை உருட்ட முடியுமோ அவ்வளவையும் உருட்டிவிட்டு பார்க்ககும் கள்ளப்பார்வைக்கு எதைத் தரலாம்?

ஆயில்யன் said...

//இலவசக்கொத்தனார் said...
இப்போ என்ன திடீரென்று ஜெனிடிக்ஸ் ஆராய்ச்சி? :)
//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!:))

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி
இப்ப எல்லாரும் பொண்ணு ஒன்னையமாதிரியே ஆகிட்டு வராங்கறாங்க..
பின்ன என்னை மாதிரியே முறைச்சிக்கிட்டு கோபப்பட்டுக்கிட்டு இருந்தா சொல்லமாட்டாங்களா.. :)//


:)))))

சொல்லுவாங்க சொல்லுவாங்க!

இன்னும் கொஞ்ச நாள் போன அவுங்கம்மா மாதிரியேன்னும் கூட சொல்ல ஆரம்பிக்கலாம்:)))

ஆயில்யன் said...

எங்க பிரதருக்கு குழந்தை பொறாந்தப்ப ஒவ்வொரு எங்கம்மா சொன்னதை நினைச்சு இப்ப சிரிச்சுக்கிட்டேன்!

எல்லா பாகத்திலும் எங்க குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் வந்தாங்க :))

வல்லிசிம்ஹன் said...

நானானி மூணு மாஅசத்தில பரவாயில்லைப்பா. பொறந்த்த குழந்தைக்கு என்ன பொறுப்பு வந்திருக்கும்னு தெரியவில்லைன்னு சொன்னேன்:0

பாட்டிகள் வீட்லதான் பேரப்பசங்க சுதந்திரம் அதிகரிக்கும்,நாமும் அப்படி இருந்தவங்கதானே:)

வல்லிசிம்ஹன் said...

அவங்களுக்குச் சொன்ன பதில்தான் ஆயில்யன்.

எனக்குத் தெரிஞ்ச ஒரு அப்பாக்காரர் பொண்ணு முகத்தில தன் மாமியாரைப் பார்த்து வெலவெலத்துப் போயிட்டார்:)

வல்லிசிம்ஹன் said...

அது இன்னோண்ணு. மெல்ல நடந்தா அப்படியெ அத்தையைக் கொண்டு இருக்கு''
சத்தம் போட்டா எல்லாம் மாமனை மாதிரி''

அழுதா ''எனக்கு முன்னால்ல ஒரு ஒண்ணுவிட்ட தங்கச்சி இப்படித்தான் நிக்காம அழுவா''

கடவுளே இந்தப் பெரியவங்க பட்டம் கட்டறதில வல்லவங்கப்பா.:0)

வல்லிசிம்ஹன் said...

அதிலென்ன தப்பும்மா ஆயில்யன்:)
ஏதாவது அந்தப் பக்க ஜாடை வந்துடப் போகிறதேன்னு பயம் எல்லாருக்கும் உண்டானதுதானே.

இதில பொண்ணைப் பெட்டவங்க அதாவது அம்மவோட சைட் ,ஒரே மட்டா சொல்றது, எங்க பொண்ணு ஒண்ணு பெத்தாலும், கணவன் வீட்டுக்கு வாரிசா அப்படியே இருக்கா. எங்க ஜாடை கொஞ்சம் கூட இல்லைன்னு பெருமைப் பட்டுப்பாங்க.

பார்த்தால் அந்தக் குழந்தை அப்பா கண்ணு, அம்மா வாய்னு சொல்லிகிட்டு இருக்கும்:)

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ....

இப்ப டெலி டப்பீஸ் அங்கே உலா வர்றதா? இங்கே இருந்து அனுப்புச்சுட்டொம்லெ:-))))

ஒருமுறை, கேரளாவில் நம்ம தெருமுக்குப் பெட்டிக்கடைக்காரர், என்னையும் கோபாலையும் பார்த்துக் கேட்டது இப்படி.....

கடைக்காரர்: நீங்க ரெண்டு பேரும் சொந்தமா?

நான்: ஆமாம். எப்படிக் கண்டு பிடிச்சீங்க?

கடைக்காரர்: ஒரே ஜாடையா இருக்கீங்க. அதான்.

நான்: உங்க கண்ணு பயங்கர ஷார்ப்:-)))


வீட்டுக்கு வரும்போது கோபால் கேட்டார், 'சொந்தமான்னதுக்கு ஆமாம்னு சொன்னே?'

இல்லையா பின்னே? நாம கணவன் மனைவி இல்லையோ!!! அது சொந்தமில்லையா?:-)))

என் பொண்ணுகூட என்னைமாதிரியே நடப்பதாகத் தோழி(டாக்டர்) சொல்வாங்க!!!!!!!!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

ஆமா துளசி,, டெலிடப்பீஸ் வந்தாலும் இவன் நிறையப் பார்க்க மாட்டான்.நல்லவேளை.அந்த லாலா மாதிரி ரெண்டு தடவை சிரிச்சாலெ நமக்கும் மறை கழண்டுடும்.

பொண்ணு உங்களை மாதிரி நடக்காம யாரைக்கொள்ளுவா.:)
டாக்குட்டரம்மா சொன்னா சரிய்யய்த்தான் இருக்கும்.
க்கோவைல நாங்க இருந்த வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி டார்சான் அப்படீன்னு ஒரு நாய் இருந்தது.


அதை வளர்க்காவங்க முகத்துக்கும் அதுக்கும் ஒரே ஜாடை. நம்புவீங்களா:)

முட்தல் தாடவை பார்த்தபோது அதிர்ச்சிய இருன்ந்தட்த்ஹு. அப்புறம் எங்க மாடி வீட்டு அம்மாவைக் கேட்ட்டால், ஐய்யோ ஆமாம்பா அப்டீங்கறாங்க!!!!!

துளசி கோபால் said...

பெட் முஞ்சும் ஓனர் மூஞ்சும் ஸ்டைலும் ஒரே மாதிரி இருப்பது ரொம்ப சகஜம்.

கோகி அப்படியே கோபால்:-))))

வல்லிசிம்ஹன் said...

இது!!!!!!
யாருக்குப் பாராட்டு??
கோகியும் கோபால்லுமா.
கோகியும் நீங்களுமா. ஓ அதான் நீங்க ஏற்கனவே சொந்தமாச்சே.
அதனால a+b+c==abc.:)

கவிநயா said...

ச்சோ ச்வீட்! :) ரசித்துப் படித்தேன் வல்லிம்மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

thank you ma Kavinaya.sorry to use english.

மெளலி (மதுரையம்பதி) said...

உண்மைதான் வல்லியம்மா...என் பெண்ணிடத்தும், என் அண்ணா பையனிடத்தும் இதை நன்றாக உணர முடிகிறது. தூங்கும் பொசிஷன் கூட அப்படியே என் பாட்டி, அப்பாவை கொண்டு இருப்பதைப் பார்க்கிறேன். வார்த்தைகள் கேட்கவே வேண்டாம்.

Geetha Sambasivam said...

//அதை வளர்க்காவங்க முகத்துக்கும் அதுக்கும் ஒரே ஜாடை. நம்புவீங்களா:)//

சூப்ப்பரு!! பதிவை விடக் கமெண்ட்ஸ் எல்லாம் பயங்கர சூப்பர்! சூப்பரோ சூப்பர்!

குப்பன்.யாஹூ said...

Nice post. I am not sure how much % Nature (gentic) contribute and how much % Nurture (environment, friends cricle, school, books...)contribute to a human being's growth/intelligence/sharp/personality.

If it is 100% Nature why Chaaruhaasan is not able to perform like Kamalhaasan or why there is difference between yuvan sankar & karthik raja and why Manoj cant be a director like his dad Baharthiraja.


Thanks & Regards


Kuppan_Yahoo

ambi said...

எவ்ளோ ரத்ன சுருக்கமா இன்ட்ரஸ்டிங்கா சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க. :)

பசி வந்தா, கோவத்துல உங்க அப்பாவை கொண்டிருக்கியேடா!னு தங்கஸ் ஜுனியரை பாத்து சொல்றது உண்டு. :))

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலிம்மா.
இந்த இயற்கையான குணங்களை மாற்ற முடியாது.

பேரன்களும் பேத்திகளும் பெரியவர்களை அடையாளம் காட்டும் விதம் மிகவே அழகு.
நன்றாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

கீதா, உண்மையாவே அந்த டார்சானைப் பார்த்துட்டு, ஒரே சிரிப்ப்பு. அது தும்மும்போது கூட குரல் வளர்க்கிறவரோட குரல் மாத்ரியே இருக்கும்.:)))))))

வல்லிசிம்ஹன் said...

ஹை குப்பன் -யாஹூ,

முகஜாடையத் தவிர,மன நலன்களுக்கு வேறு வேறு உறவினர்களின் சாயல் வரும். உண்மையில் நமக்கு முன்பின் தெரியாத முன்னோர்களின் குணாதிசயங்களும் பதிந்து இருக்கும்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அம்பி,அதெல்லாம் ச்சும்மா லுலுவாங்காட்டிட்யும்.
உண்மைலியே தங்ஸெக்க்கெல்லாம் மனசு நிறயப்ப் பெருமையாக்கும்:))

வல்லிசிம்ஹன் said...

கீதா, இது எல்லாருக்கும் ரொம்ப ஃபெமிலியர் சப்ஜெக்ட்:)கதான் அந்த வாக்கிலயே கமெண்டுகளும் வரது:)

திண்டுக்கல் தனபாலன் said...

நடை, உடை, பாவனை, மற்ற எல்லாவற்றையும் ரசிப்பதே ஒரு தனி மகிழ்ச்சி அம்மா...

இராஜராஜேஸ்வரி said...

புதுப்பிக்கப்பட்ட புது சிங்கம் அழகு..!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராஜராஜேஸ்வரி. அவன் அக்கா மாரியம்மா வேஷம் போட்டுக்கிட்டா>*

துளசி கோபால் said...

ஹைய்யோ!!

சூப்பர். அப்படியேதான் உரிச்சு வச்சுருக்கு!!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். எத்தனை பரம்பரை தாண்டினாலும் இந்த ஆராய்ச்சி போகாது,(****

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி ஆட்டம் வேகம் எல்லாம் தாத்தா தான் பையனுக்கு.

Anonymous said...

பையனுக்கு மீன் கொடுங்கோ புஷ்டியா வருவான்.