Blog Archive

Tuesday, December 31, 2019

Sri Vatapatra Sai Alayam, Srivilliputhur Part 5

Sri Vatapatra Sai Alayam, Srivilliputhur Part 5 வல்லிசிம்ஹன்


Vatapatra saayee Temple.

எல்லே இளங்கிளியே!!!! மார்கழி 15

வல்லிசிம்ஹன்


எல்லோரும் வளமாக வாழ  வேண்டும் 

எல்லே இளங்கிளியே!!!!  மார்கழி 15

Image may contain: 1 person
Add caption

Image may contain: 1 person
No photo description available.

ஆனைக்கூட்டம் நிறைய வருகை தரும்   பாடல் இது.
நம் கோதை எழுப்பப்போகும் கிடைத்த தோழி
கிளி போன்றவளே  ,  அதாவது இறை பக்தியில், கிள்ளை 
மழலையில்    பயின்று  வந்து கொண்டிருப்பவள்.

அன்பாக விழிக்க வேண்டிய தருணம். இன்னம் உறங்குகிறாயே அம்மா என்றதும் உள்ளே இருந்து பட்டென்று பதில் வருகிறது.
என் இவ்வளவு கோபமாக அழைக்கிறீர்கள்.
இதோ வருகின்றேன் என்கிறாள்.

நா வலிமை பெற்றவளே , உன் கட்டுரைகள் அனைத்தும் முன்பே  நாங்கள் அறிவோம் . இது கோதை  சொல்லும் பதில் 

அதற்கு அந்தப் பெண் , நீங்கள் தான் எல்லாம் அறிந்தவர்கள் 
சரி நானே சொன்னதாக இருக்கட்டும் என்கிறாள்.
இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறாள்.
கொஞ்சம் எழுந்து வெளியே வா...
ஓஹோ எல்லோரும் வந்து விட்டார்களோ 
ஆமாம்   எல்லோரும்  வந்து விட்டார்கள் 
வேண்டுமானால் வந்து எண்ணிக் கொள் ....

உனக்கு நினைவு இல்லையா , நாம்  இன்று 
பாடப் போகும் கண்ணன்  எப்படிப்பட்டவன்  என்று தெரியாதா.

வல்லவனான  கம்சனைக் கொன்றவன்,
அதற்கு முன்  குவலயாபீடம் என்ற மதம் பிடித்த யானையைத்
 தனி  ஒருவனாக மாய்க்கிறான்.
தன்னிடம்  பகைமை கொண்டவர்களின் பகைமையைக் கொன்று 
அவர்களை நல்ல கதிக்கு அனுப்புபவன்.  

அந்த யானையின் பலம் கொண்ட கண்ணனின் 
பெருமையை நாம் பாடிக் கொண்டாடுவோம்  வா என்று அழைக்கிறாள்.

ஐந்து வயதிலே அத்தனையும் உணர்ந்து கொண்ட பிஞ்சிலே பழுத்த நம் கோதையின்   பாசுரங்களுக்கு  நம்  அடியொற்றிப் பாடுவோம்.








Monday, December 30, 2019

நகர் வலம் 2019 December 29.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

ஓராண்டு ஓடி விட்டது.இதோ அடுத்த நாள் புத்தாண்டு 
பொலிய 
 ஆரம்பிக்கும்.
இங்கு வீடுகளில் சத்தம் இல்லாமல் அமைதியாக இருக்கும் 
மக்கள்,  நகரின் மைய பகுதியை ச் சுற்றி 
 குழுமுகிறார்கள் . எந்நேரமும் சலசலப்புதான் .

அனைத்து ஐரோப்பிய மக்களும்  விடுமுறைக்கு களிப்பில் ஈடுபடுகிறார்கள்.
ட்ராமில்  ஏறினால் , சந்தோசம் கொப்பளித்துப் பரவுகிறது.
கண்ணாபின்னான்னு குளிர்.
அதிலும் வண்ணம் ஏற்றிய கூந்தல், முகம்.....
 உறை  அணியாத கால்கள் என்று இளைஞர்களும் யுவதிகளும்,

நடுவயதுக்காரர்களும் குழந்தைகளும், மகன் பேரன்,மக்கள் என்று குடும்பத்தோடு செல்லும் பாட்டிகள்.
தாத்தா பாட்டி என்று தனியாகத் தம்பதிகள்.

கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர்  பரப்பில் எங்கும் ஒளிவெள்ளம்.
அலங்கரிக்கப்பட்ட  கடைகள்.  வளைவுகள். சாண்டா க்ளாஸ். இனிய இசை வெள்ளம் .

ஊரின் மால் எனப்படும்  கடைகளில் குளிர்கால உடைகள்  சேல் !!சேல் !
என்று கூவி அழைக்கின்றன.

உள்ளே வருபவர்களைக் கண்காணிக்க காமிராக்கள்.

வருபவர்களைத் துன்புறுத்தாமல்,அதே சமயம்,கடைக்கும் பாதுகாப்பாக இயங்கும் சூட் 
அணிந்த  இளைஞர்கள்.

ஒரு தமிழ்  இளைஞனைக்  கூட பார்த்தேன்.
திடீரென ஒரு வயதானவரின் சத்தம்.

நான் ரிட்டையரான மிலிட்டரி ஆளு.
என்னைத்தனியாகக் கவனிக்க வேண்டும் . என்றவாறு முன்னேறிக் 
கொண்டிருந்தார்.
யாரும் கண்டு கொள்ளவில்லை.
அவரைத் துன்புறுத்தவும் இல்லை.
அதுதான் இந்த ஊர் மக்களிடம் என்னை வியக்க வைத்த பண்பு.


அவரவர்  வேலை அவரவர்களுக்கு.

Chestnut  வறுத்து விற்கும் இடம். நாங்களும் ஆளுக்கொரு பாக்கெட் வாங்கித் தின்றபடியே நடந்தோம். 

Image result for basel town christmas 2019

அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2020க்கான  நல் வாழ்த்துக்கள் .

Image result for basel town christmas 2019





Sunday, December 29, 2019

மார்கழி 14 ஆம் நாள்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.

14 ஆம் நாள் மார்கழியின் இனிமை.

நாச்சியார் திருவடிகளே சரணம்.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து  வாவியில் 
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து  ஆம்பல்  வாய் பூத்தன காண் 
செங்கல் பொடிக்கூறை வெண்  பல்  தவத்தவர் 
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்  போதந்தார் 
எங்களை  முன்னம்  எழுப்புவான் வாய் பேசும் 
நங்காய் எழுந்திராய்  நாணாதாய்  நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் 
பங்கயக் கண்ணா னைப் பாடேலோர்  எம்பாவாய்........

ஸ்ரீ ஆண்டாள்  திருவடிகளே சரணம்.
அடுத்த பாவையை எழுப்ப  ஆண்டாளும் தோழிகளும் வருகிறார்கள்.

அவர்களுக்கு உடனே கண்ணில் தெரிவது அவளது தோட்டத்துக்குளம்தான்.
அதில் அழகாக மலர்ந்திருக்கும் செங்கழுநீர்  மலர்கள். 
தாமரை போன்ற குணம் உடையவை .

அதேபோல் ஆம்பல்  மலர்கள்  கூம்புகின்றன.
சூரிய உதயமும்  தாமரை மலர்வதும் போல 
கண்ணனை நினைக்கையில் மனம் மலர்கிறது.

காவி உடை உடுத்திய துறவிகள் , வெண்  பற்கள் பொருந்திய தூய வாயில் வெண்சங்கைப் பொருத்தி இறைவனின் 
புகழை வலியுறுத்துவார்  போல  முழக்கம் செய்வது உன் காதில் விழவில்லையா பெண்ணே ?
எங்களை முன்பே வந்து எழுப்புவதாக நேற்று உரைத்தாயே.
இதோ நாங்கள் வந்து விட்டோம் நீதான் உறங்கி கொண்டிருக்கிறாய்.

உன் உரையை நீயே மறந்தாய்,வெட்கமாக இல்லையா உனக்கு.

நாவன்மை படைத்தவளே  , சங்கும் சக்கரமும், சாரங்கமும் ஏந்தும் 
கரங்களை உடைய நம் நாராயணனைப் 
பாட எங்களுடன் கலந்து  கொள் .வா 
இதோ இந்த மலர்களைப்   போலவே மலர்ந்த
 திருமாலின்  அழகான கண்கள் 
நம்மை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
என்று  அழைக்கிறாள் ஸ்ரீ ஆண்டாள். நாமும் செல்வோம்.

கோதா தேவி! உன் பாதங்கள் சரணம்.











Saturday, December 28, 2019

மார்கழி 13 ஆம் நாள் புள்ளின் வாய்க் கீண்டானை

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

மார்கழி 13 ஆம்  நாள் புள்ளின் வாய்க் கீண்டானை 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Image result for THIRUPPAAVAI PASURAM PICTURES

மார்கழி  13ஆம் நாள் , திருமாலின் அவதாரங்களில் கண்ணனையும் ராகவனையுமே சேர்த்துப்  போற்றுகிறாள் கோதை.

வெண்மை நிறத்தில் பெரிய கொக்காக வந்த அரக்கனை அவன் வாய்க்குள் 
புகுந்து இரண்டாகக் கீறி மாய்த்து விடுகிறான் சின்னக் கண்ணன்.

ராகவனோ பத்துத் தலை ராவணனின்  சிரங்களைக் கிள்ளிக் 
களை கிறான்.

ராமனையும் கண்ணனையும் பாட எல்லோரும் 
பாவை த்தலத்துக்கு   அதாவது திருப்பாவை பாடி   சேவிப்பதற்காகவே  ஏற்பட்ட இடத்துக்கு   வந்துவிட்டார்கள்.
அழகிய மலர்ந்த தாமரை போன்ற கண்களைக் கொண்டவளே 
பறவைகள்  சேர்ந்து  ஒலி  எழுப்பிக் களிப்பது 
உன் காதுகளில் விழுகிறதா.

இதோ வானில் வெள்ளி முளைத்து விட்டது. 
பிரகஸ்பதி  உறங்கி சுக்கிராச்சாரியார் விழித்து எழுந்து விட்டார் 


நாம் எல்லோரும் கண்ணன் பக்தர்கள்.
தனித்தனியே போவது அழகில்லை.
நதியில் குள்ளக்  குளிர முங்கி குளித்து ஆனந்தித்து 

எங்களுடன் வந்து  அவனை அனுபவிக்க  வா. 
ஆண்டாள்  திருவடிகளே சரணம்.














கனைத்திளங் கற்றெருமை மார்கழி 12

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளம்பெற  வாழ வேண்டும் 

கனைத்திளங்  கற்றெருமை  மார்கழி 12

Friday, December 27, 2019

1700, இங்கிலிஷ் பாட்டி 8

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் .
இங்கிலிஷ்  பாட்டி  8

அடுத்த நாள்  காலையில் அதிகாலையில்  விழிப்பு  வந்துவிட்டது
சந்தோஷுக்கு.
இன்னும் இரண்டு நாளுக்கு இப்படி இருக்கும். இன்றாவது  இரவு 10 மன்னிக்குத் தூங்கப் போக வேண்டும்,என்று 
நினைத்துக் கொண்டே, குளித்து அம்மாவிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

வயல் வெளிகளிடை நடந்து கிராம எல்லைக்கு வந்து விட்டான்.

ஒரு ஓடையின் அருகில் நின்று சூரியன் உதிப்பதைக் 
கண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

பக்கத்தில் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பினான்.
வயதான பெரியவர் ஒருவர்,முகத்தில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்,.

என் பேரு  சாம்பமூர்த்தி  . சீதாலெட்சுமியின் மாமனார்.

சந்தோஷ்  ஒரு நிமிடம் ஒன்றும் பேச முடியாமல் 
ஹலோ மட்டும்  சொல்லிப் புன்னகைத்தான்.

உங்கள்  அம்மா என்னிடம் வந்து பேசினார். எங்களுக்கு இந்த விஷயத்தில் பூரண சம்மதம் 
சீதா நாங்கள் பெறாத பெண். இந்த நாலு வருடமாக அவளை பார்த்து நாங்கள் வருந்திக் கொண்டிருக்கிறோம்.

நேற்று இங்கு வந்ததும்   ,கோயிலில் உங்களைப் 
பார்த்ததும் எங்களுக்கு மனம் லேசாகிவிட்டது.
அவர் குரல் நடுங்குவதை பார்த்து மனம்  குழைந்தது  சந்தோஷுக்கு.

உங்கள் மருமகளுக்கு இதில் ஈடுபாடு இருந்தால் 
மட்டுமே   நல்லது  நடக்கும் ஐயா. வருந்த வேண்டாம்.
அன்னை பரமேஸ்வரி  நினைக்க வேண்டும்.

கல்யாணத்தில்  மட்டும்  கட்டாயப் படுத்த  முடியாது. 
ஏற்கனவே தோல்வியைச் சந்தித்தவன்  நான்.
ஆழம் தெரியாமல் காலை விட முடியாது.

எந்த முடிவுக்கும் நான் தயார்.   
அம்மாவின்  ஆசை  நிறைவேறினால்  மகிழ்ச்சியே.
என்று பதில் சொன்னான்.

சாம்பமூர்த்தி  ஆழ்ந்த யோசனையுடன் அவனுடன் நடந்தார்.
கோவிலின் மணி ஓசை கேட்டதும் அவர்  கைகள் குவிதைக் கவனித்தான்.
மருமகள்  மீது இத்தனை அக்கறையா.
அந்தப் பெண் உண்மையில்   நல்ல மருமகளாக 
இருந்திருக்க வேண்டும் என்றதும், தன்  மனத்தில் ஆவல் துளிர் விடுவதை உணர முடிந்தது.

அவன் கையைப் பிடித்தபடி கோவிலுக்குள் 
அவர் நுழைவதைக் கண்ட சீதாவின் மனதில் 
பரவசமும் படபடப்பும்  ஒன்றாகப்  பூத்தது.

மறைந்த கணவனை நினைத்துக் கண்ணில் நீர் வந்தது.

அருகில் இருந்து எல்லாவற்றையும்  பார்த்துக் கொண்டிருந்த ஆனந்திக்கும் 

கண் கலங்கியது.  சீதாவை ஆதரவுடன் அணைத்துக் கொண்டாள் .

அம்பாளின் மாலையை  சந்தோஷுக்கு அணிவித்து மரியாதை செய்தார் குருக்கள்.
எல்லோரும்  மலர்கள், குங்குமப் பிரசாதங்களை பெற்றதும்,
அன்றைய   உணவுக் கட்டளையாகச் சர்க்கரைப் பொங்கல் எல்லோருக்கும் பரிமாறப்பட்டது.

எல்லோருக்கும் பொங்கலை பாக்கு மட்டையில் வைத்துக் கொண்டு வந்து கொடுத்த சீதா, சந்தோஷுக்கும்   கொடுத்தாள் .

தன்னருகில் வந்து உட்கார்ந்த சீதாவின் முகத்தை 
கெஞ்சாத குறையாகப் பார்த்தார் சாம்பமூர்த்தி.
எனக்குப் புரிகிறது மாமா. இன்னும் கொஞ்சம் நாட்கள் எனக்கு வேண்டும்.
சட்டென முடிவுக்கு  வர முடியவில்லை. என்றபடி ஆனந்தியையும் , இன்னும் மாலையைக் கழற்றாத   சந்தோஷையும்   நிமிர்ந்து பார்த்துவிட்டுப் புன்னகைத்தாள்.


ஆனந்தியின் மனதில்  பூ மழை  சொரிந்த உணர்வு. இனி எல்லாம் நல்லபடி நடக்கும் என்று அம்பாள் சொல்வது பொல்லாத தோன்றியது.
உடனே நேரே சந்நிதி அருகே சென்று விட்டாள் .
அருகே  சந்தோஷ் வந்து நின்று கொண்டு என்னம்மா, காரியம் பழமா 
என்று  கேட்டான்.

அப்படித்தான் நினைக்கிறேண்டா என் செல்லமே.

இன்னும்   ஆறு  மாதங்களில் எனக்கு இன்னொரு மருமகள் 
வந்துவிடுவாள். இது அம்பாள் கொடுக்கும்  நல்வாழ்வு 
என்றபடி சீதாவையும் அவள் மாமனாரையும் பார்த்துப் 
புன்னகை செய்தாள் .

அவள் எதிர்பார்த்தபடியே   அம்பாளின் அனுக்கிரகத்தில்  சந்தோஷும் சீதாவும்   அவர்களின் கிராம வீட்டிலேயே 
அவர்களின் நட்புக்கள் உறவுகள் சூழ   மணம் புரிந்து கொண்டனர்.

சிக்கல் ஏதும்  இல்லாமல்  அமெரிக்காவுக்குப்  பயணித்தார்கள்.

புதிய பாதையில் பயணித்த இருவர் மனதில் 
தூய அன்பு நிறைந்திருந்தது.

ஆனந்தி மீண்டும் பாட்டியாகும் வாய்ப்பு அடுத்த வருடம் 
கிடைத்தது.

மிக நீண்ட கதையைத் தொடர்ந்து வந்து படித்த  அன்பு கோமதி, கீதா மா, ஸ்ரீராம்,மாதேவி  அனைவருக்கும்  என் மனம் நிறைந்த நன்றி.










கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து ....

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.

மார்கழியின் 11 ஆம் நாள் பாசுரம்.

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து 
+++++++++++++++++++++++++++++++++++++++++



வேங்கடவற்கு எம்மை விதி என்ற மாற்றத்தைக் கடவாமல் இருக்க,அவனைப்  பாதித்த துதிக்க ,
கோதை நாச்சியார் 
தனது ஆறாம் நாள் பாவையை  அழைக்கத் தோழிகளுடன் 
அவள்  வீட்டு வாயிலுக்கு வருகிறாள்.
அவளோ பெருந்தனக்காரரின் பெண்.

அவள் வீட்டில் கன்றுகளும்  கறவை  மாடுகளுமாகக் கூட்டங்கள் 
அவைகள் அனைத்தையும் கறந்து பால் சேர்க்கும் வல்லமை படைத்த கோவலனின்    பொற்கொடி  அவள்.
அங்க லாவண்யமும் ,சௌந்தர்யமும்  பொருந்தியவள் .

அவள் தந்தையோ  கண்ணனைப்  பகைத்தவர்களை அடியோடு அழிப்பவர்.
 குற்றமே  இல்லாத ,  புனமயில் அவள் நிச்சிந்தையாக உறங்குவதை 
பார்த்து ஆண்டாள்,
உன் சுற்றத்துத் தோழிமார் அனைவரும் இங்கே வந்துவிட்டோம். உன் முற்றத்தில் நின்று கண்ணனைப் பாடிக் கொண்டிருக்கிறோம்.
அதைக்கேட்டும்  நீ உறங்குவது சரியல்ல.

மறுத்துப் பேசாமல் எங்களுடன்  வா என்று வேண்டுகிறாள்.

நாமும் செல்வோம்.

Image result for THIRUPPAAVAI SCENES



Thursday, December 26, 2019

இங்கிலிஷ் பாட்டி. 7

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.


இங்கிலிஷ் பாட்டி.  7
Bildergebnis für american asian  indian men

ஆனந்திக்கு அளவில்லாத மகிழ்ச்சி மகன் வந்ததில்.

அவன் மனம் பிடிபடாவிட்டாலும் 
அவனது வேற்று வாழ்க்கையில் ஒரு மாறுதல்  இருக்கட்டும் என்றுதான் 
வராகி சொன்னால்.
எதோ திரைப்படங்களில்  வருவது போல 
வந்தான் காதலில் விழுந்தான் ,அடுத்து திருமணம்  என்பதை அவளும் 
நம்பவில்லை. 

லக்ஷத்தில் ஒருவருக்கு இது   போல  தோன்றலாம்.

தன்  மகனின்  இலட்சிய நோக்கு அவளுக்கு த் தெரியும். இருந்தும் ஒரு தாய்க்கே  உரிய பாசத்தினால்   நன்மை விளைந்தால் நல்லதே 
என்ற எண்ணமே அவளை இவ்வாறு யோசிக்க வைத்தது.

வந்த உடனே குளித்துக் கோவிலுக்கு கிளம்ப தயாரான 
மகனைப்  பெருமையுடன் பார்த்தாள் .

இருவரும் நடந்தே  கோயிலை அணுகினர்.

கோயிலின் வாசனைகளும் ,அமைதியாகப் பணியாற்றும்  பெண்கள் 
ஆண்கள் அனைவரும் அவன் மதிப்பில் உயர்ந்தனர்.

ஆனந்தி வருவதை முதலில் கண்ட சீதா அவள் அருகில் நிற்கும் சந்தோஷைப்  பார்த்து விட்டுப் பின்  வாங்கிவிட்டாள் .
கடைக்கண்ணால் இதையும் கண்டால் ஆனந்தி.
கோவிலின் பிரகாரத்தில் அவர்களின்  குல தெய்வம் மாகாளி சந்நிதிக்கு மகனை அழைத்துச் சென்றாள் .
அங்கே பிரார்த்தனை செய்த பிறகு,அங்கு    குருக்கள்  கொடுத்த குங்குமத்தை அளவாக அவன் நெற்றியில் பொருத்தினாள் .

மகன் சிரித்தான். அமெரிக்காவில் செய்ய முடியாததை இங்கே செய்கிறாயா.
அங்கேயும் செய்வேனடா. உனக்கு கோவில் வர சந்தர்ப்பங்கள் குறைவு இல்லையா 

மெதுவே விநாயகன்,  வேலவன்  சந்நிதிகளை சுற்றி, அம்பாளின் சந்நிதிக்கு வந்தார்கள்.

அங்கு தன்  தோழிகளுக்கு  மகனை அறிமுகம் செய்து வைத்தாள் 
ஆனந்தி.

ஆராதனைகள் முடிந்த பிறகு சீதாவைத் தேடினாள் .

அவள் கோவில்   சமையலை அறையைச் சுத்தம்செய்பவர்களோடு இருப்பதை பார்த்து  என்னம்மா அம்பாளைத் தரிசனம் செய்ய வரவில்லையா என்று வினவினாள் 

கூ ட்டம் களைந்து பிறகு வரேன் மா. நிம்மதியாக   அவளுடன் பேசலாம் என்றவளை 
ஆழ்ந்து பார்த்து,என் மகனை நான் அழைத்துப் போகிறேன் நீ வா வெளியே  என்றாள்  ஆனந்தி.

அச்சோ  அப்படி எல்லாம் இல்லை மா. அவர் என்னுடன் வேலை செய்யும் மற்றவர்கள் போலத்தான். எனக்கு வித்தியாசமில்லை ,
இதோ வருகிறேன்  என்று வந்தவள்  அம்பாளைத் தரிசனம் செய்து விட்டு வெளியே 
வந்தாள்.

மகனை அறிமுகப் படுத்தி வைத்த   ஆனந்தி ,
அனைவரையும் தன்  வீட்டுக்கு மாலையில்  வருமாறு அழைத்தாள் .

பயணக்  களைப்பு   இருந்தாலும் மலர்ச்சியுடன்  
எல்லோருடனும் உரையாடினான்  சந்தோஷ்.

எதோ இறுக்கம்  கலைந்தது  அங்கே.

நாளை இந்த வேளை  பார்க்கலாம்.

Image result for தமிழ்ப் பெண்கள்.










Wednesday, December 25, 2019

மார்கழி மாதம் 10 ஆம் நாள் நோற்றுச் சுவர்க்கம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.





நோற்று அதாவது நோன்பிருந்து செல்லும் இடம் சுவர்க்கம்.
அதில் வசிப்பதோ நாராயணன் ,கண்ணன்.
அதற்காக நம் கோதை எடுக்கும் முயற்சிகளில் தோழிகளை அழைத்துச் செல்லும்
அழகு பாவைப் பாடல்கள்.

எவ்வளவு எழுப்பியும் எழுந்திராத ஐந்தாவது வீட்டுப் பெண்,
கும்பகர்ணனிடமிருந்து பெற்ற சொத்தைப் போலத் தூக்கத்தைத் தழிவி இருக்கிறாள்
என்ற சந்தேகம் ஆண்டாளுக்கு வர,
துளசியைத் தலையில் சூடிய கண்ணனி
ஆராதிக்க நீ வா. வந்து கதவைத் திற என்று வேண்டுகிறாள்.
அனைவரும் செல்லலாம்.

இங்க்லீஷ் பாட்டி. 6

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.



சந்தோஷ்  தன்  இருக்கையில் காலை நீட்டி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு
வர போகும் நாட்களை நினைத்துப்  பார்த்தான்.
எந்த  வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிதானமாக யோசிக்க வேண்டிய விஷயம்.

அம்மா சொல்வதை வைத்து சீதா நல்ல கட்டுப்பாடுடன் வளர்ந்த பெண் என்பது தெளிவானது.
அம்மாவை  அந்தப் பெண்ணிடம் எந்த குணம் ஈர்த்தது.

இந்தத் தேசத்தில் வளர்ந்த தனக்கு அது ஒத்து வருமா.
முதலில் அந்தப் பெண்ணின் சம்மதம் கிடைத்ததா .
கோவில் திருவிழா இன்னும் இரண்டு நாட்களில் முடியப் 
போகும்  வேளையில் 
இந்த அவசரம்  அம்மாவுக்கு என். இந்தியா  வருவது அவனுக்குப் பிடித்ததே.

ஆனால் இந்த   எண்ணம் எத்தனை நன்மை  பயக்கும் என்பது 
சந்தேகமே.
 இன்னும் சந்தித்திராத சீதா   வின் நினைவுகளோடு உறங்கினவன், ஃ பிராங்க் பார்ட் நிலையத்தில் தான் விழித்தான்.

கடந்த சில மாதங்களாக  அவன் ஈடுபட்டிருந்த  
ப்ராஜெக்ட் அவன் சக்தியை உறிஞ்சி இருந்தது.
ஊருக்கு வருவதே தனக்கு ஒரு நல்ல   மாறுதலாக 
இருக்கும் என்றே தோன்றியது.

சென்னை சென்று, திருச்சிக்கு மாற வேண்டும்.
அங்கிருந்து  வாடகை வண்டி  ,எடுத்துக் கொண்டு 
மாகாளிபுரம் செல்ல வேண்டும்.

Bildergebnis für a village in South India

பலவருடங்களுக்கு  முன் சென்ற இடம். பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்று  நினைத்துக் கொண்டான்.
அம்மா பாவம், முப்பது வருட அமெரிக்க வாழ்க்கையில்  சிறிதும் மாறவில்லை. தோற்றம் மாறினாலும் 
இன்னும் மனதில் தானும் கணவனும் திருமணம் செய்து கொண்ட கோவில் அக்கம்பக்கத்தார் 
என்று சொல்லிக் கொண்டே இருப்பாள்.

இப்பொழுது இன்னொரு பெண்ணின்  வாழ்க்கையில் குறுக்கிடுவது தேவையா 
என்று அவனுக்குப் புரியவில்லை. இயற்கையில் அவன் 
தானுண்டு,தன்  வேலை உண்டு என்று இருப்பவன்.

அதுவும் திருமண முறிவுக்குப் பிறகு ,நொந்து போன மனது 
மற்ற மாற்றங்களை நாடவில்லை.
அந்த வகையில் தானும் அம்மா மாதிரி தானோ என்ற நினைப்பு முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

ஒரு நல்லதோர்  காலை ப்  பொழுதில்  மாகாளி புரத்தில் பாதம் பதித்தான்   சந்தோஷ்.

அந்தப் பசுமை,பழமையைப் பார்க்க  மனம் நிறைந்தது.














மார்கழிப் பாசுரம் தூமணி மாடம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

மார்கழிப்  பாசுரம்   தூமணி மாடம் 

தூமணிமாடத்துச் சுற்றும்  விளக்கெரிய 
தூபம் கமழத்  துயிலனை  மேல் கண்வளரும் 
மாமான் மகளே  மணிக் கதவம் தாள்திறவாய் 
மாமீர்  அவளை  எழுப்பீரோ உன் மகள்தான் 
ஊமையோ  அன்றிச்  செவிடோ அனந்தலோ 
ஏமப்பெருந்துயில்  மந்திரப்  பட்டாளோ 
மாமாயன் மாதவன்  வைகுந்தன்  என்றென்று 
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



Bildergebnis für SRIVILLIPUTHUR ANDAL
நம் கோதை இப்பொழுது  அடுத்த வீட்டுக்கு வருகிறாள்.
ஆவலுடன் கூட வருகிறார்கள் தோழிகள்.

கண்ணனப் பார்க்கப்   போகிறோம்  சீக்கிரம் போகவேண்டும் என்றபடியே நாலாவது வீட்டைப் பார்த்தால் 
கதவு மூடி இருக்கிறது. இந்தப் பெண் இன்னும் எழுந்திருக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் 
திறந்திருக்கும் சாளரம்   வழியே ஆண்டாள் பார்க்கிறாள்.
அங்கே அவளை காணும்  காட்சி...அழகான மஞ்சம், சுற்றிலும் 
விளக்குகள்,

தூய ரத்தினங்கள் பதித்த சுவர்கள் விளக்கொளியைப் பிரதிபலிக்கின்றன.
 அந்த மஞ்சத்தில் எழிலாக உறங்குவது போலப் 

பாவனை செய்தபடி இருக்கும்  பெண்.
ஆச்சர்யத்துடன் விளிக்கிறாள்  ஆண்டாள்.

அவளோ அசையவில்லை. அவள் அன்னையை அடுத்தபடி அழைக்கிறாள் . அன்பு மாமீர் அவளை எழுப்புங்கள்.
அவளுக்கு காது கேட்கவில்லையா, ஊமையாகிவிட்டாளா 

பெண்ணே என்ன உறக்கம் இது உன்னை யாராவது மந்திரத்தால் வசியப்  படுத்தி விட்டார்களோ?

நாம் மாதவனை,வைகுந்தனை, மால வனைப் பாட வேண்டாமா.
பொய்யுறக்கம் களைந்து எழுந்து வந்து எங்களுடன் அவன் நாமங்களைச்  சொல் 
என்று வேண்டுகிறாள்.
நம்மையே அழைக்கிறாள்  நாமும் பாடுவோம்.







Tuesday, December 24, 2019

மார்கழி எட்டாம் நாள் பாசுரம் கீழ்வானம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.
மார்கழி எட்டாம் நாள் பாசுரம்  கீழ்வானம்

வானம் வெளுத்தது நீல வண்ணனைப் பாட வாராய்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+மூன்றாவதாக ஒரு பெண்ணை அழைக்க வருகிறாள் கோதை.
அவளை எழுப்புவதற்குப் படாத பாடு பட வேண்டியிருக்கிறது

உன்னை அழைப்பதற்காகக் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கும்
மற்றப் பெண்களையும் நிறுத்தி வைத்திருக்கிறேன் எழுந்து வாராய் என்கிறாள்.

எப்பொழுதும் கலகலப்பாகச் சிரித்துப் பேசும் பெண்ணே
குதூகலமாக இருப்பவளே என்றும் சொல்லிப் பார்க்கிறாள்.
அந்தப் பெண்ணோ அசைந்து கொடுக்கவில்லை.

வானம் வெளுத்துவிட்டது. எருமை
மாடுகள் சிறுவீடு மேயப் போய் விட்டன.
நீ இன்னும் உறங்குவது தகுமா.

பகாசுரனைக் கொன்றவனை நாம் பாடவேண்டாமா
என்றும் நினைவுறுத்துகிறாள்.
மல்லர்களை துவந்தயுத்தத்தில் மாட்டி
அவனை வென்றான் என்று கண்ணன் லீலைகளைச் சொல்லி
அவள் உறக்கத்தைக் கலைக்கப் பார்க்கிறாள்.
அந்தப் பெண் அசைய வில்லை.
நாம், தேவாதி தேவனைத் திருமாலை,
நம் கண்ணனைப் பாட வேண்டாமா, விரைந்து
எழுந்து வருவாய் ,
என்று முடிக்கிறாள்.

இதோ பாடல்
கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
மேய்வான் பறந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய்ப் பாடிபறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.

Bildergebnis für early morning sky images



Monday, December 23, 2019

இங்க்லீஷ் பாட்டி. 5.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக. வாழவேண்டும்.

மாகாளி புரம். தன்னை அலங்கரித்துக் கொள்ள  ஆரம்பித்தது. வருடத்துக்குஒரு முறை  நடக்கும் கோடைத் திருவிழா. கொடை. என்றும் சொல்வதுண்டு. கன்யகா பரமேஸ்வரி .


அவர்களது குலதெய்வம். அவளைப் பார்வதியின் சக்தியாகப் பார்ப்பவர்ளும் உண்டு.
வைணவ வைசியர்களுக்கு அவள் லக்ஷ்மி தேவியின் இன்னோரு வடிவம்.
அரோரா ,சிகாகோவில் அவள் சன்னிதி, அலர்மேல் மங்கா தாயாருக்கு வலது பக்கம்
 இருக்கும்.


ஆனந்திக்கு வழக்கமாகக் கலந்து கொள்ளும் சடங்குகளில்
கலந்து கொள்ளாதது வருத்தமே.

தான் கலந்து கொண்டு ,அதனால் அவர்களுக்கு ஏதாவது பாதகமாக நடந்து
விட்டால்  இன்னும் வருத்தமாக இருக்கும் என்பதால்

பேசாமல் எல்லாவற்றையும் வேடிக்கை
பார்த்து உதவலாம் என்று சொன்னால் சுற்று வேலைகளைக்
கவனித்தாள்.

அவளுக்கு உதவியாக வந்து அமர்ந்த சீதாலக்ஷ்மியை ஆதரவுடன்
அணைத்துக் கொண்டு அவர்கள் வங்கியைப் பற்றியும்
அவளது புக்கக மனிதர்களைப் பற்றியும்
விவரமாக அறிந்து கொண்டாள்.

அவளுக்கு அவர்கள் மேல் உயர்ந்த மதிப்பு இருந்தது.
அவளைத் தங்களுடன் இருக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை.
பிறந்தகத்தில் அவளுக்கு ஒரு தங்கை மட்டுமே இருந்தாள்.
அவளுக்கும் திருமணமாகி பக்கத்தில் திருச்சியில்
இருந்தாள்.

ஆனந்தியைப் பற்றி அதிகம் சொல்லவில்லை இல்லையா.
அவளுக்கு இரு பிள்ளைகள் . பெண் குழந்தை இல்லை என்று
ஆதங்கம் இன்னும் உண்டு அவளுக்கு.

முதல் மகன் வாழ்க்கை அவ்வளவாகச் சுகப்படவில்லை.
கல்லூரியில் சந்தித்துக் காதலித்த பெண்ணையெ
திருமணம் செய்ய ஆனந்தியும் கணவரும் சம்மதித்தனர்.

ஏதோ ஒரு நிகழ்வில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து
திருமணமாகி இரு வருடங்களில் பிரிந்து விட்டார்கள்.
இதோ 32 வயதில் இன்னும்  வேறு திருமணம் செய்யாமல்
அவன் வேலையைப் பார்த்துக் கொண்டு
நிம்மதியாகவே இருந்தான்.

இரண்டாவது மகனும் காதல் திருமணம் தான்.
அவன் குடும்பம் குழப்பம்  இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.
ஒரு பேரனும் இருக்கிறான். இரண்டாவது  குழந்தையை
எதிர்பார்த்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இதை எல்லாம் ,தனது புதுத் தோழியுடன்
பகிர்ந்து கொண்டாளானந்தி.
சீதாவுக்கு இதெல்லாம் புதுமையாக இருந்தது.
ஆவலுடன் கேட்டுக் கொண்டாள்.
நீங்கள் நல்ல பொறுமைசாலிதான் என்றாள்.

வருவதை ஏற்றுக் கொள்ளாமல் மறுப்பதனால்
எதுவும் மாறப் போவதில்லை மா. பக்குவமாகத் தான்
இருக்க வேண்டும். நமக்கு வேண்டியது குழந்தைகளின்
நல்ல வாழ்வு தானே என்று நிறுத்தினாள்.
கோவில் சன்னிதியிலும் மங்கல ஆரத்தி
எடுக்கும் சத்தம் கேட்டதும் இருவரும் உள்ளே சென்றார்கள்.
அம்பாளைக் கண்டதும் ,ஆனந்திக்கு
ஒரே வேண்டுதல் தான் தோன்றியது.
இந்தப் பெண் தன் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்கிற பிரார்த்தனை தான் அது.

Bildergebnis für kanyaka parameswari

மார்கழி 7 ஆம் நாள் பாசுரம் கீசு கீச்சென்று ஆனைச்சாத்தன்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

மார்கழி  7 ஆம் நாள்  பாசுரம் கீசு கீச்சென்று ஆனைச்சாத்தன் 





Sunday, December 22, 2019

புள்ளும் சிலம்பின காண்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

மார்கழி  ஆறாம் நாள்.

ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே  சரணம்,




Saturday, December 21, 2019

பெரிய ஆழ்வார். பெரியாழ்வார் ஸ்ரீ விஷ்ணுசித்தர்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வள மாக வாழ வேண்டும் .


பெரிய ஆழ்வார். பெரியாழ்வார் ஸ்ரீ விஷ்ணுசித்தர்


Ähnliches Foto

Bildergebnis für பெரியாழ்வார் வரலாறு
Add caption





Bildergebnis für PERIYAZHVAAR

பெரியாழ்வார் பெற்றஎடுத்த  பெண்பிள்ளை வாழியே.

Bildergebnis für PERIYAZHVAAR
பெரியாழ்வார் உத்சவம்   வல்லப  பாண்டியனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்த பெரியாழ்வார் யானை   மேல்  பவனி வரும்
காட்சி.





 பேர் அணிந்த வில்லிபுத்தூர் ஆனி தன்னில்
 பெருந் சோதி தனில் தோன்றும் பெருமானே
முன் சீர் அணிந்த பாண்டியன் தன் நெஞ்சு தன்னில்
துயக்கற மால் பரத்துவத்தைத் திருமாச்செப்பி

வாரமேல் மதுரை ம் வரவே
வானில் கருடவாகனனாய்த் தோன்ற
வாழ்த்தும் ரணி  பல்லாண்டு முதல் பாட்டு

நானூற்று எழுத்து ஒன்று இரண்டும் 
எனக்கு உதவு நீயே//

மேற்சொன்ன மேற்கோள் ஸ்ரீ வேதாந்த தேசிகர் பெரியாழ்வாரைத் துதி 
செய்த பாடல்.
யானையின் மீது, பரிவட்டம் கட்டப் பெற்று  பவனி வந்த விஷ்ணுசித்தர் முன் தோன்றினான்  எம்பெருமான் . 
இம்மைக்கு நாம் சேர்க்கும் புண்ணியம்  எம்பெருமானே என்ற தத்துவத்தை அவர் விளக்கி பொற்கிழி அறுபட்டதால் கிடைத்த தனத்தை வைத்து வடபத்ரசாயிக்குக் கோயில் எழுப்பினார்.

கண்முன் தோன்றிய  ஸ்ரீமன் நாராயணனைக் கண்டதும் 
அவர் ஒரு அதீதப் பரவச நிலையில் பல்லாண்டு பாட தொடங்கினார்.
பெருமானே உனக்கு கண்ணேறு படாமல் இருக்க உனக்கு 
பல்லாண்டு, பாடுகிறேன் என்று கைத் தாளங்களைக்  கொட்டிக் கொண்டு பாட ஆரம்பித்தார். இந்தப் பொங்கி வந்த பரிவால் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தான் அவர் பெரியாழ்வார் ஆனார். 


எங்கள் ப்ளாகில்
+++++++++++++++++++++++++++

 திருமதி ரமா ஸ்ரீனிவாசனின் பதிவு எனக்குத் தூண்டிய கோலாக இருந்து 
எழுத வைத்தது.
பெரியாழ்வார் பெற்றேடுத்த பெண்பிள்ளை வாழியே.
ஸ்ரீ  பெரியாழ்வார் ,ஆண்டாள் திருவடிகளே  சரணம்.

கைத்தாளங்கள் கொட்டி நாமும் பாடுவோம் 


மாயனை.................மார்கழி 5

வல்லிசிம்ஹன்


மாயனை.................மார்கழி 5


மார்கழி ஐந்தாம் நாள்  மாயனைப் பாடும்  திருநாள். அதென்ன  எல்லாப் பாடல்களும் அவனைப் பற்றித்தானே  இதில்  இந்தப் பாடலுக்கு என்ன  மகிமை பெரிதாக என்றால்...இது அவதாரப் பெருமை,யமுனையின் பெருமை, தேவகியின் பெருமை,யசோதையின்  பெருமை எல்லாம்  விகசிக்கும்  பாடல் இது.

மாயங்கள் செய்பவன்,அதிசயங்களை  நிகழ்த்துபவன்  மாயன்.
மதுராவில் பிறந்தவன்.  யமுனையை மகிழ்வித்து  அதைத் தாண்டித் தன் தந்தை வசுதேவரால்   எதிர்க்கரையில் இருக்கும் நந்தகோபனிடம் ஒப்படைக்கப் பட்டவன்.
யமுனையைக் கௌரவித்தவன்.
வைகுந்தத்திலிருந்து கீழே  இறங்கி தேவகியின் கர்ப்பத்தில் புகுந்ததால் தாயைக் குடல் விளக்கம் செய்தவன்.
யசோதை  அவனைக் கயிற்றால் கட்டப் புகுந்தபோது கயிறு பற்றாமையால் சோர்ந்தபோது குழந்தை எடுத்துக் கொடுத்ததாம் இன்னோரு கயிற்றை.
அம்மா இதைவைத்து என்னைக் கட்டு என்று. அவன் தாமோதரன்.

அவனைத்,,,,,,,,  நாம் தூயநீரில்  நீராடி,  புது மலர்களைப் பறித்து அவனைத் தொழுது,மலர்களைத் தூவி, வாயினால் பாடி,மனதில் அவனையே    நினைத்து,உடல் பூமியில் அங்கமெல்லாம் பட கீழே விழுந்து வணங்கி னால்
இதுவரை   செய்த பாபங்களும் இனி செய்யப் போகும் பாபங்களும்(அறிந்தோ அறியாமலோ)  தீயினில் இட்ட தூசு  போல  மறையும் என்று உறு தி சொல்கிறாள் நம் கோதை.
இதோ   பாசுரம்.
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத்துறைவனை
ஆயர்குலத்தின்ல் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடுஇ மனத்தினால் சிந்திக்கப்
போயபிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர்  எம்பாவாய்....மாயனை.......
வில்லிபுத்தூர்க் கோதை தாள்களில் சரணம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa




Friday, December 20, 2019

Azhimazhai Kanna

வல்லிசிம்ஹன்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
மார்கழியின் நான்காம் நாள்
மார்கழி நீராட்டத்துக்கான நீர் வேண்டி
கண்ணனைத் துதிக்கிறாள்.

குழந்தைகளுக்கு ஓர் விஞ்ஞான செய்தியும்
உள்ளடக்கி வருவதை எங்கள் தமிழாசிரியர் சொல்வார்.

கண்ணனை விளித்து,
அன்புக் கண்ணா ஆழியில் துயில் கொள்பவனே,
உன்னால் ஒரு நன்மை வேண்டும்.
ஆழியில் புகுந்து அந்த நீரை எடுத்து ஊழிக்கே முதல்வனான உன் மேனி போலக்
கருத்த மேகங்களை கொண்டு,
உயர்ந்து அகன்ற திடமான தோள்களைக் கொண்ட பத்மனாபா
உன் கையில் உன் வலது கரத்தில் சுழலும் சக்கிரம்
போல மின்னி, உன் சங்கம் போல முழங்கி,
உன் சார்ங்கம் எனும் வில்லிலிருந்து புறப்படும் அம்புகள்
போல மழைத்தாரைகள் எங்கள் நிலத்தில் சரசரவென்று இறங்க வேண்டும்.

அது எங்களை வாழ வைக்கும் மழையாக வந்து நீர் நிலைகளை நிரப்பினால நாங்களும் மார்கழி நீராடி மகிழ்வோம். அருள் செய்வாய் என்று பூர்த்தி
செய்கிறாள். சென்னையில் இன்று மழை பெய்திருக்க வேண்டும்.

Thursday, December 19, 2019

இங்கிலிஷ் பாட்டி 4

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழவேண்டும்.


இங்கிலிஷ் பாட்டி  4

ஆனந்திப்பாட்டியின்  அடுத்த அதிர்ச்சி,
30  வயது      சீதாலட்சுமி.
ஆனந்தியின் தோழி செல்லம்மாவின் கடைசிமகள். 
வெறும் சீதா என்று பெயர் வைத்தால் வாழ்வில் அவதியுறுவாளோ 
என்று  பயந்து  சீதாலட்சுமி  என்று பெயர் வைக்கப் பட்ட மங்கை.

ஒரு இளவயதுப் பெண்ணுக்குரிய   லட்சணங்கள் எதுவும் இல்லாமல் சமூக சேவகி போல கரையிட்ட    புடவையுடன் வந்தவள் முகத்தைப் பார்த்து மீண்டும் அதிர்ச்சி என்னாச்சு மா என்றவள் குரல் தழுதழுத்தது.

பர்வதம் தான் விளக்கினா ள்    .வங்கியில் வேலை செய்த சீதாவின் கணவன்  லாரியில் அடிபட்டு  மரணித்ததை.

சட்டென்று எழுந்த ஆனந்தி, இப்படி இருக்கச் சொல்லி வற்புறுத்தினார்களா உன்னை.? என்று வினவினாள்.

இல்லை   மாமி, எனக்கு இப்படி இருப்பது பாதுகாப்பாக 
இருக்கிறது.
நான் அதே வங்கிக்குப் போகிறேன். 
வேலை கொடுத்திருக்கிறார்கள்.     அவரது மனைவி என்று எனக்கு கௌரவம் கொடுத்திருக்கிறார்கள்.

அதை மாற்ற எனக்கு விருப்பம் இல்லை என்று நிதானமாகப் பேசியவளின் கண்களில் 
கலக்கமோ, கண்ணீரோ  தென்படல்லை
"கோரிக்கையற்றுக் கிடைக்கனுதண்ணே.   இங்கு வேரில் 
பழுத்தபலா "பாடல் தான் நினைவுக்கு  வந்தது ஆனந்திக்கு.
ஒரு பெருமூச்சுடன்  மற்றவர்களை நோக்கியவள்,
நானும் இது போல் இருந்திருந்தால் உடனே விசாரிக்க வந்திருப்பீர்கள் 

இல்லையா என்று  கேட்டாள் .
ஆமாம் கண்ணு  முறைப்படி நடந்தால் 
யாருக்கும் பயப்பட வேண்டாம்   இல்லையா. நீ திடீர்னு அந்நியமான மாதிரி    எங்களுக்குத் தோணுகிறது என்றாள்  பாட்டி.

இந்தப் பொண்ணுக்கு  குழந்தை கூட   இல்லை.

இப்படியே இருந்துடப் போறாளோ  என்று கணை தொடுத்தாள் 
ஆனந்தி. நாங்க எல்லாம் இருக்கோம்  அப்புறம் என்ன.
என்றால் பர்வதம்.
எத்தனை நாளைக்கு  எத்தனை வருடங்கள் காப்பீர்கள். அவளுக்கு என்று 
ஒரு துணை வேண்டாமா. வாழ்க்கை வேண்டாமா .

யாருமே யோசிக்கலையா  என்றவளை அதிசயமாகப் பார்த்தார்கள் தோழிகள். நம் வழக்கத்தில் வேற வழி கிடையாதே 
இப்படியே தான் இருக்கணும் 
என்றவர்களைக் கண்டு அவளுக்குத் துக்கம் மேலிட்டது.

இங்கே இவளுக்காவது ஒரு வழி காட்டாமல் கிளம்பக் கூடாது 
என்ற நோக்கத்துடன்,
அவர்கள் எல்லோரையும் பார்த்து என்னால் கோவில் காரியங்கள் கெட வேண்டாம்.
இதோ பாக்கியம் செய்தவளாக நிற்கும் செல்லமே இந்த வேலைகளை செய்யட்டும்.
நான் கோவிலுக்கு பார்வை    இட  மட்டும் வருகிறேன்.
என்று அவர்களுக்கு விடைகொடுத்தாள் .

அடுத்தப்பக்கம் நீளும். ஆனால் முடித்துவிடலாம்.




.