Blog Archive

Tuesday, December 24, 2019

மார்கழி எட்டாம் நாள் பாசுரம் கீழ்வானம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.
மார்கழி எட்டாம் நாள் பாசுரம்  கீழ்வானம்

வானம் வெளுத்தது நீல வண்ணனைப் பாட வாராய்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+மூன்றாவதாக ஒரு பெண்ணை அழைக்க வருகிறாள் கோதை.
அவளை எழுப்புவதற்குப் படாத பாடு பட வேண்டியிருக்கிறது

உன்னை அழைப்பதற்காகக் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கும்
மற்றப் பெண்களையும் நிறுத்தி வைத்திருக்கிறேன் எழுந்து வாராய் என்கிறாள்.

எப்பொழுதும் கலகலப்பாகச் சிரித்துப் பேசும் பெண்ணே
குதூகலமாக இருப்பவளே என்றும் சொல்லிப் பார்க்கிறாள்.
அந்தப் பெண்ணோ அசைந்து கொடுக்கவில்லை.

வானம் வெளுத்துவிட்டது. எருமை
மாடுகள் சிறுவீடு மேயப் போய் விட்டன.
நீ இன்னும் உறங்குவது தகுமா.

பகாசுரனைக் கொன்றவனை நாம் பாடவேண்டாமா
என்றும் நினைவுறுத்துகிறாள்.
மல்லர்களை துவந்தயுத்தத்தில் மாட்டி
அவனை வென்றான் என்று கண்ணன் லீலைகளைச் சொல்லி
அவள் உறக்கத்தைக் கலைக்கப் பார்க்கிறாள்.
அந்தப் பெண் அசைய வில்லை.
நாம், தேவாதி தேவனைத் திருமாலை,
நம் கண்ணனைப் பாட வேண்டாமா, விரைந்து
எழுந்து வருவாய் ,
என்று முடிக்கிறாள்.

இதோ பாடல்
கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
மேய்வான் பறந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய்ப் பாடிபறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.

Bildergebnis für early morning sky images



8 comments:

Geetha Sambasivam said...

பதிவு நன்றாக இருக்கு. ஆனால் வரிகள் தொடர்ந்து ஒட்டி வரலை. நிறைய இடைவெளி!

ஸ்ரீராம். said...

ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மா .அழகியில் தான் எழுதினென்.
பிழை இல்லாமல் இருக்கட்டுமே என்று.
அங்கே சரியாக இருக்கு. பதிவில் மாறிவிட்டது.
நன்றி மா.இன்று எழுந்திருக்கும் போதே
4 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.

துரை செல்வராஜூ said...

இன்று அருமையிலும் அருமையாய் எருமையையும் அதன் தொழுவத்தையும் சொல்கிறாள் - சூடிக் கொடுத்தவள்...

அங்கே கீதாக்காவும் விரிவுரை...

எனக்கென்னவோ நாம் எருமையைக் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டோமோ.. என்று தோன்றுகிறது....

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
எருமை சிறு வீடு மேய்வது பற்றி
ஐயா இராஜனாராயணன் சொல்லி இருப்பார். முன் பசிக்கு
சாப்பிடுமாம்.
பசுவுக்கு அது போல வேண்டாமாம்.
புள்ளரையன் கோவிலை உங்கள் பதிவில் சேவித்தேன்.எங்கள் வீட்டில் எருமைக்கு உயர்வு உண்டு.
பழைய வீட்டில் மாமனாரின் பிரத்தியேகக் கவனிப்பில் பெரிதாக வளர்ந்து தினம்

இரு வேளையிலும் கொடுக்கும்.

கோமதி அரசு said...

பாடலும் விளக்க உறையும் அருமை.

மாதேவி said...

பாடல் ரசனை.