வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக. வாழவேண்டும்.
மாகாளி புரம். தன்னை அலங்கரித்துக் கொள்ள ஆரம்பித்தது. வருடத்துக்குஒரு முறை நடக்கும் கோடைத் திருவிழா. கொடை. என்றும் சொல்வதுண்டு. கன்யகா பரமேஸ்வரி .
அவர்களது குலதெய்வம். அவளைப் பார்வதியின் சக்தியாகப் பார்ப்பவர்ளும் உண்டு.
வைணவ வைசியர்களுக்கு அவள் லக்ஷ்மி தேவியின் இன்னோரு வடிவம்.
அரோரா ,சிகாகோவில் அவள் சன்னிதி, அலர்மேல் மங்கா தாயாருக்கு வலது பக்கம்
இருக்கும்.
ஆனந்திக்கு வழக்கமாகக் கலந்து கொள்ளும் சடங்குகளில்
கலந்து கொள்ளாதது வருத்தமே.
தான் கலந்து கொண்டு ,அதனால் அவர்களுக்கு ஏதாவது பாதகமாக நடந்து
விட்டால் இன்னும் வருத்தமாக இருக்கும் என்பதால்
பேசாமல் எல்லாவற்றையும் வேடிக்கை
பார்த்து உதவலாம் என்று சொன்னால் சுற்று வேலைகளைக்
கவனித்தாள்.
அவளுக்கு உதவியாக வந்து அமர்ந்த சீதாலக்ஷ்மியை ஆதரவுடன்
அணைத்துக் கொண்டு அவர்கள் வங்கியைப் பற்றியும்
அவளது புக்கக மனிதர்களைப் பற்றியும்
விவரமாக அறிந்து கொண்டாள்.
அவளுக்கு அவர்கள் மேல் உயர்ந்த மதிப்பு இருந்தது.
அவளைத் தங்களுடன் இருக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை.
பிறந்தகத்தில் அவளுக்கு ஒரு தங்கை மட்டுமே இருந்தாள்.
அவளுக்கும் திருமணமாகி பக்கத்தில் திருச்சியில்
இருந்தாள்.
ஆனந்தியைப் பற்றி அதிகம் சொல்லவில்லை இல்லையா.
அவளுக்கு இரு பிள்ளைகள் . பெண் குழந்தை இல்லை என்று
ஆதங்கம் இன்னும் உண்டு அவளுக்கு.
முதல் மகன் வாழ்க்கை அவ்வளவாகச் சுகப்படவில்லை.
கல்லூரியில் சந்தித்துக் காதலித்த பெண்ணையெ
திருமணம் செய்ய ஆனந்தியும் கணவரும் சம்மதித்தனர்.
ஏதோ ஒரு நிகழ்வில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து
திருமணமாகி இரு வருடங்களில் பிரிந்து விட்டார்கள்.
இதோ 32 வயதில் இன்னும் வேறு திருமணம் செய்யாமல்
அவன் வேலையைப் பார்த்துக் கொண்டு
நிம்மதியாகவே இருந்தான்.
இரண்டாவது மகனும் காதல் திருமணம் தான்.
அவன் குடும்பம் குழப்பம் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.
ஒரு பேரனும் இருக்கிறான். இரண்டாவது குழந்தையை
எதிர்பார்த்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.
இதை எல்லாம் ,தனது புதுத் தோழியுடன்
பகிர்ந்து கொண்டாளானந்தி.
சீதாவுக்கு இதெல்லாம் புதுமையாக இருந்தது.
ஆவலுடன் கேட்டுக் கொண்டாள்.
நீங்கள் நல்ல பொறுமைசாலிதான் என்றாள்.
வருவதை ஏற்றுக் கொள்ளாமல் மறுப்பதனால்
எதுவும் மாறப் போவதில்லை மா. பக்குவமாகத் தான்
இருக்க வேண்டும். நமக்கு வேண்டியது குழந்தைகளின்
நல்ல வாழ்வு தானே என்று நிறுத்தினாள்.
கோவில் சன்னிதியிலும் மங்கல ஆரத்தி
எடுக்கும் சத்தம் கேட்டதும் இருவரும் உள்ளே சென்றார்கள்.
அம்பாளைக் கண்டதும் ,ஆனந்திக்கு
ஒரே வேண்டுதல் தான் தோன்றியது.
இந்தப் பெண் தன் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்கிற பிரார்த்தனை தான் அது.

6 comments:
விரைவில் சீதாவுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவேண்டும். ஆனந்திப்பாட்டியின் மருமகளாகவே ஆக வேண்டும்.
கடைசி வரி புரியவில்லை. சீதாலட்சுமி தனக்கு உறவாக வேண்டும் என்று நினைக்கிறாரா ஆனந்திப்பாட்டி? தொடர்கிறேன் மா.
அன்பு கீதா மா. ஆனந்திப் பாட்டியின்
ஆசை நிறைவேற சீதாவும் சம்மதிக்க வேண்டும்.
நல்லதே நடக்கட்டும்.
அன்பு ஸ்ரீராம்,
கீதா சட்டென்று கதை ஓட்டத்தைப் பிடித்துவிட்டார்.
ஆமாம் அப்படித்தான் விரும்புகிறார் ஆனந்திப் பாட்டி.
ஆனந்தி பாட்டியின் உறவுகளை தெரிந்து கொண்டேன். சீதாலட்சுமி உறவாக வரட்டும்.
ஆனந்தி பாட்டியின் விருப்பம் நிறைவேறுமா....
Post a Comment