Showing posts with label 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி. Show all posts
Showing posts with label 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி. Show all posts

Tuesday, August 27, 2019

சியாட்டிலிலிருந்து கனடா வான் கூவரை நோக்கி.

பெருமரத்தின்  அடிப்பாகம் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இருபது அடிகள் விட்டம்
இது போல மரங்கள் இங்கே இருந்திருக்கின்றன. ஆயிரம் வருடங்கள் இந்த மரத்தின் வயது. தீயினால் பாதிக்கப் பட்ட மரத்தை  வெட்டி 😊வேறு இடத்தில் வைத்தார்களாம்.
இந்த அடிமரத்தை சீர்  செய்து இங்கே கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.

மரத்தோடு படங்கள் எடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
Add caption
வழி நெடுக்காக கூ டவே வந்த    கடல்
மதிய சூரியன்  , காற்றுடன் இதமாக வந்தான். சூடு இல்லாத சூரியன்.
Image result for Road to Vancouver from Seattle
சியாட்டிலில் இருந்து  வான்கூவர் சாலை.
வல்லிசிம்ஹன்  எல்லோரும்  நலமாக வாழ  வேண்டும்
சியாட்டிலிலிருந்து கிளம்ப மதியம் ஒரு மணி ஆகிவிட்டது.
நல்ல  சாப்பாட்டின் மகிமையில்  உறக்கம் வந்தாலும் வழி நெடுக்க
பச்சை மரங்கள் கண்ணுக்கு குளுமையாக இருக்கவே
உறங்கவில்லை.
நடுவில் இந்த மரம் ஒரு பிட்ஸ்  ஸ்டாப். //காப்பி நேரம்.
ஒரு நல்ல வரலாறு கிடைத்தது  சிங்கம் இருந்தால் ஒரு மணி நேரம் ஆராய்ச்சி செய்திருப்பார்.
என்ன மனுஷங்கப்பா.
இயற்கையை நேசித்தால் அது நம்மை நேசிக்கும் என்று உணர்ந்தவர்கள் என்று சொல்லி மகிழ்ந்திருப்பார்.
சியாட்டிலிலிருந்து கிளம்புகிறோம். பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி.
அன்றுதான் எல்லோரும்  கனடா செல்வது போல சாலை இருபுறமும் 
வண்டிகள். வழி நெடுக  நீர் நிலைகள். கனடா  எல்லையை  நெருங்கும் போது ஆறு வரிசைகளில் வண்டிகள் நின்று கொண்டிருந்தன. கிட்டத்தட்ட  ஒரு மணி நேர காத்திருப்பு.
ஒவ்வொரு வண்டி திருப்பி அனுப்பப்பட்டது.
சரியான பாஸ்போர்ட், அடையாளம், பச்சை அட்டை இல்லாவிடில் கடினமாகி இருக்கும்.
எனக்கு மட்டும் கிறீன் கார்ட். மற்றவர்களுக்கு இந்த ஊர்க்  குடியுரிமை
பெற்றவர்கள்.
அடிக்கடி ஒலி  பெருக்கியில்   வண்டியின் சாளரங்களை இறக்கச் சொல்லி, பாஸ்போர்ட் எடுத்து வைத்து ஜன்னல் அருகில் 
காண்பிக்கும்படி   உத்தரவுகள் வந்து கொண்டே இருந்தன.

கைகளில்  ஐந்து பாஸ்போர்ட்டுகளையும் வைத்திருந்த மருமகன், உள்ளே ஒருவரோடு ஒருவர் 
 வார்த்தைகளால்  மோதிக்கொண்டிருந்த  பேரன்களை  அடக்கிக் கொண்டிருந்தார். 
வெளியேயும் உள்ளேயும் உஷ்ணம் தெறித்தது.

மகள்  முன் இருக்கையிலிருந்து  செயலிழந்து போன ஜிபிஎஸ் ஐ உயிர்ப்பித்துக் கொண்டே,

இந்த க்ஷணம் நிறுத்தாவிடில் இருவரும் இறங்கி கொள்ளலாம் 
என்று எச்சரிக்கை விடுத்ததும் 

என்ன அம்மா. வெறும் விளையாட்டுதான் என்கிறான் சின்னவன்.
அரைமணி நேரம் ஒரே அமைதி.

எங்கள் வண்டி அந்த ஜன்னல் அருகே வந்ததும்,
ஒரு போட்டோ எடுத்துக் கொண்ட அதிகாரி 
போகச் சொல்லி விட்டார்.

அடச்சே  , இதுக்குத்தான் இத்தனை ஆர்பாட்டமா . 
அம்மா  தே  ஆர் நைஸ் பீப்பிள்  மா.  என்று பெரியவன் 

சின்னவன் பக்கம் திரும்பி கிருஷ்ணா  எப்பப் பார்த்தாலும் என்னோட சண்டை 
போடாதே . 
ஆ ஃப் டர்  ஆல்  நான் தான் பெரியவன். நீ வீட்டுக் கொடுக்கணும் என்று 
சொல்ல  ,இவன் தன்  தமிழில்  மறு  மொழி சொல்ல,
இனிதே மாரியாட் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.😃😃😃😃😃😃😃😃
இரண்டு  மணி நேர பயணம் ,காத்திருப்பு இரண்டு மணி நேரம்  பிரிட்டிஷ்  கொலம்பியா மாகாணம்  வந்து சேர்ந்த பொது நேரம்  மாலை 6 மணி .



அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...