Blog Archive

Tuesday, August 27, 2019

சியாட்டிலிலிருந்து கனடா வான் கூவரை நோக்கி.

பெருமரத்தின்  அடிப்பாகம் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இருபது அடிகள் விட்டம்
இது போல மரங்கள் இங்கே இருந்திருக்கின்றன. ஆயிரம் வருடங்கள் இந்த மரத்தின் வயது. தீயினால் பாதிக்கப் பட்ட மரத்தை  வெட்டி 😊வேறு இடத்தில் வைத்தார்களாம்.
இந்த அடிமரத்தை சீர்  செய்து இங்கே கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.

மரத்தோடு படங்கள் எடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
Add caption
வழி நெடுக்காக கூ டவே வந்த    கடல்
மதிய சூரியன்  , காற்றுடன் இதமாக வந்தான். சூடு இல்லாத சூரியன்.
Image result for Road to Vancouver from Seattle
சியாட்டிலில் இருந்து  வான்கூவர் சாலை.
வல்லிசிம்ஹன்  எல்லோரும்  நலமாக வாழ  வேண்டும்
சியாட்டிலிலிருந்து கிளம்ப மதியம் ஒரு மணி ஆகிவிட்டது.
நல்ல  சாப்பாட்டின் மகிமையில்  உறக்கம் வந்தாலும் வழி நெடுக்க
பச்சை மரங்கள் கண்ணுக்கு குளுமையாக இருக்கவே
உறங்கவில்லை.
நடுவில் இந்த மரம் ஒரு பிட்ஸ்  ஸ்டாப். //காப்பி நேரம்.
ஒரு நல்ல வரலாறு கிடைத்தது  சிங்கம் இருந்தால் ஒரு மணி நேரம் ஆராய்ச்சி செய்திருப்பார்.
என்ன மனுஷங்கப்பா.
இயற்கையை நேசித்தால் அது நம்மை நேசிக்கும் என்று உணர்ந்தவர்கள் என்று சொல்லி மகிழ்ந்திருப்பார்.
சியாட்டிலிலிருந்து கிளம்புகிறோம். பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி.
அன்றுதான் எல்லோரும்  கனடா செல்வது போல சாலை இருபுறமும் 
வண்டிகள். வழி நெடுக  நீர் நிலைகள். கனடா  எல்லையை  நெருங்கும் போது ஆறு வரிசைகளில் வண்டிகள் நின்று கொண்டிருந்தன. கிட்டத்தட்ட  ஒரு மணி நேர காத்திருப்பு.
ஒவ்வொரு வண்டி திருப்பி அனுப்பப்பட்டது.
சரியான பாஸ்போர்ட், அடையாளம், பச்சை அட்டை இல்லாவிடில் கடினமாகி இருக்கும்.
எனக்கு மட்டும் கிறீன் கார்ட். மற்றவர்களுக்கு இந்த ஊர்க்  குடியுரிமை
பெற்றவர்கள்.
அடிக்கடி ஒலி  பெருக்கியில்   வண்டியின் சாளரங்களை இறக்கச் சொல்லி, பாஸ்போர்ட் எடுத்து வைத்து ஜன்னல் அருகில் 
காண்பிக்கும்படி   உத்தரவுகள் வந்து கொண்டே இருந்தன.

கைகளில்  ஐந்து பாஸ்போர்ட்டுகளையும் வைத்திருந்த மருமகன், உள்ளே ஒருவரோடு ஒருவர் 
 வார்த்தைகளால்  மோதிக்கொண்டிருந்த  பேரன்களை  அடக்கிக் கொண்டிருந்தார். 
வெளியேயும் உள்ளேயும் உஷ்ணம் தெறித்தது.

மகள்  முன் இருக்கையிலிருந்து  செயலிழந்து போன ஜிபிஎஸ் ஐ உயிர்ப்பித்துக் கொண்டே,

இந்த க்ஷணம் நிறுத்தாவிடில் இருவரும் இறங்கி கொள்ளலாம் 
என்று எச்சரிக்கை விடுத்ததும் 

என்ன அம்மா. வெறும் விளையாட்டுதான் என்கிறான் சின்னவன்.
அரைமணி நேரம் ஒரே அமைதி.

எங்கள் வண்டி அந்த ஜன்னல் அருகே வந்ததும்,
ஒரு போட்டோ எடுத்துக் கொண்ட அதிகாரி 
போகச் சொல்லி விட்டார்.

அடச்சே  , இதுக்குத்தான் இத்தனை ஆர்பாட்டமா . 
அம்மா  தே  ஆர் நைஸ் பீப்பிள்  மா.  என்று பெரியவன் 

சின்னவன் பக்கம் திரும்பி கிருஷ்ணா  எப்பப் பார்த்தாலும் என்னோட சண்டை 
போடாதே . 
ஆ ஃப் டர்  ஆல்  நான் தான் பெரியவன். நீ வீட்டுக் கொடுக்கணும் என்று 
சொல்ல  ,இவன் தன்  தமிழில்  மறு  மொழி சொல்ல,
இனிதே மாரியாட் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.😃😃😃😃😃😃😃😃
இரண்டு  மணி நேர பயணம் ,காத்திருப்பு இரண்டு மணி நேரம்  பிரிட்டிஷ்  கொலம்பியா மாகாணம்  வந்து சேர்ந்த பொது நேரம்  மாலை 6 மணி .



17 comments:

ஸ்ரீராம். said...

உயிர்ப்புடன் இருந்தபோது எப்படி இருந்திருக்கும் அந்த மரம்.... மஹாமரம்.

கடலை சுவர் கட்டி தடுத்திருக்கிறார்கள் போல.. ஹா.... ஹா.... ஹா....

தூக்கம் வரவைத்த அந்த நல்ல சாப்பாடு என்னவோ?!

பேரன்கள் சண்டை சுவாரஸ்யம்.

கோமதி அரசு said...

நாங்கு வழி, எட்டுவழி சாலை அமைப்புக்கு , பல ஆண்டு மரங்கள் அடி அகலமாக இருந்த ஆலமரங்கள், அரசமரங்கள், புளியமரங்கள் வெட்டபடும் காட்சியை பார்க்கும் போது மனது வருத்தப்படுகிறது.

சார் சொல்வது சரிதான், இயற்கையை நாம் நேசித்தால் இயற்கை நம்மை நேசிக்கும்.

குழந்தைகள் என்றும் குழந்தைகள் தான் வளர்ந்து விட்டாலும் அவர்கள் சண்டைகள் சும்மா பொழுது போக.

பாடல் பகிர்வு அருமை. பிடித்த பாடல் கேட்டு ரசித்தேன்.

நெல்லைத்தமிழன் said...

இதுபோன்று ஒரு மரம் (அவ்வளவு வருஷமான்னு தெரியலை) லண்டன் ஹைட் பார்க்கில் பார்த்தேன். அவங்க (வெளிநாட்டுல) எவ்வளவு இயற்கையை நேசிக்கறாங்க. எதையும் பத்திரமாக வரலாறா விட்டுச்செல்லணும்னு நினைக்கறாங்க. ஆச்சர்யம்தான்

Geetha Sambasivam said...

அருமையான சாப்பாடு என்ன மெனு என்றும் சொல்லி இருக்கலாம். பேரன்கள் சண்டை பார்க்கப் பார்க்கப் பரவசம்! பொழுதும் போகும்! நன்றாக விவரித்துக் கொண்டுவருகிறீர்கள்.

ஜீவி said...

உங்கள் வர்ணனை நானும் கூடவே வந்தது போலிருந்தது, வல்லிம்மா.

என் பெண் வீட்டிலும் இப்படியே தான். பேரன்கள் இருவருக்கும் பின் சீட்டை ஒதுக்கி விடுவார்கள். கிளம்பும் போது ஐபேடும் கையுமாக, அல்லது லைப்ரரி புத்தகத்தோடு இருப்பவர்கள் கொஞ்ச நேரத்தில் ஒருவரை ஒருவர் சீண்ட இதே மாதிரி தான். அம்மாவிடமிருந்து அதட்டல் வந்தால் கூடவே கொஞ்சல் வரும்.

இதுவரை கனடா போனதில்லை. சென்ற தடவை நயாகரா போன பொழுது அப்படி ஒரு திட்டம் இருந்தது. அதுவே ஒரு வாரம் சுற்றல் என்று ஆகிவிட கடைசி நேரத்தில் அடுத்த தடவை போய்க் கொள்ளலாம் என்று ஆகிவிட்டது.

நேற்று பெண் ஆரம்பித்திருக்கிறாள். "நீங்கள் இருவரும் அங்கு இருந்து என்னத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.. பேசாமல் கிளம்பி வந்து விடுவது தானே?.. குழந்தைகளுக்காவது சந்தோஷம் இருக்கும்.." என்று.

அதற்குள் பேரன் பெரியவன், "தாத்தா. எப்போ வர்றே?.." என்று கோரிக்கை வைக்கிறான்.

இங்கே உடம்பு, அங்கே மனசு என்று இருக்கிறது. பார்க்கலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

// இயற்கையை நேசித்தால் அது நம்மை நேசிக்கும் //

ஆகா...!

கொடுத்த காணொளி பாடல் எத்தனை முறை கேட்டாலும் புதிய உற்சாகம் பிறக்கும்... நன்றி அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

அன்றைய சாப்பாடு மிளகு குழம்பும்,பருப்புப்பொடியும்
சௌசௌ கறியும்.
கொஞ்சமாக எடுத்துக் கொண்டாலே உண்ட மயக்கம் எனக்கு எப்பொழுதும்
உண்டு.ஹாஹா.

கடலுக்கு அணை அந்த சுவர் இல்லை. கடல் கீழே
இருந்தது. இது வாகனங்களுக்கான பாதுகாப்பு.

சின்னவன் எப்பவும் பெரியவனை சீண்டிக்கொண்டெ
இருப்பான்.
அவனும் பொறுமையா கேட்டுப்பான். சமயங்களில்
சண்டை வந்துவிடும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, இவர்களும் காடுகளைத் திருத்திச் சாலைகளை அமைத்திருக்கிறார்கள்.
மலைகளில் பாதை போடும்பொழுது நிகழ்வதுதான்.
ஆனால் இந்த இயற்கை எல்லாவற்றையும் வளைத்துப் போடுகிறது.
இந்த மரத்தை எரியுண்ட இடத்திலிருந்து எடுத்து வந்து,
அங்கு குடியிருப்பவர்கள் கொடுத்த இடத்தில் ரெஸ்ட் ரூம்
,காப்பிக்கடை என்று டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார்கள்.கட்டணம் ஒன்றும் கிடையாது.
அந்தப் பிரம்மாண்டம் மலைப்பாகத்தான் இருக்கிறது.

இந்தப் பாடலின் இனிமை என்றும் மறப்பதில்லை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா,

கார்ப்பயணம் எப்பொழுதும் சுவாரஸ்யம். நல்ல வண்டி , நல்ல ஓட்டுனர்.
நான் ஐபாடில் படம் எடுப்பேன். சின்னவன் தன் மொபைலில் இன்னும் சுத்தமாக எடுத்து எனக்கு அனுப்புவான்.
அண்ணாவையும் இயர் போனை எடுத்து விட்டுக் காட்சிகளை ரசிக்க சொல்வான்.

பொதுவாக எல்லோரும் இயற்கையை நேசிப்பவர்கள்.
நம்மூரிலும் இப்படி இருந்தால் நன்மைதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

இன்னும் விவரம் சொல்ல முடியவில்லையே
என்று ஆதங்கமாக இருக்கிறது.

அன்னிக்கு சாப்பாடு மிளகு குழம்பும் சௌசௌ
கறியும்.
கூட உருளை வறுவல். பர்மனெண்ட் ஸ்டாக்.
எனக்குப் பழங்கள், ஆப்பிளும், கொய்யாவும், பப்பாளியும்.
பசங்களோட எப்பவும் கலகலப்புதான்.
அதுவும் பெரியவன் தான் சின்னவனுக்கு ரெஸ்ட் ரூம் போகத் துணை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார்.

யோசிக்காமல் இங்கே வந்து விடுங்கள்.
உஷ்ணம் சீராகத்தான் இருக்கிறது. கீதா வரப் போகிறார்கள்.
நீங்களும் வந்தால் இன்னும் சந்தோஷமே.

பொறுமையாக உட்கார்ந்து எழுதினால் இன்னும் விவரம் சொல்லலாம்.
முதுகு கேட்க மாட்டேன் என் கிறது. ஹாஹ்ஹா.

பள்ளி நாட்களில் கூட இவ்வளவு எழுதியதில்லை
என்று சிரிப்பு வருகிறது.
உங்கள் பேரன் களுக்கு விடுமுறை வருமே.
மனசுக்கும் சந்தோஷம்.எல்லா இடங்களையும் பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்.
பாட்டுகள் கேட்கும்போது எல்லாம், கோமதி மா, ஸ்ரீராம், மற்றும் உங்கள் நினைவு கட்டாயம் வரும்.
இந்தப் பாடலை மறக்க முடியாது.
இதுவும் ஓஹோஹோ மனிதர்களேயும்
மிகப் பிடித்தவை.

இராய செல்லப்பா said...

அழகான வருணனைகள். ஆர்வத்தைத் தூண்டுகிறது. 2005 இல் நயாகரா பார்த்ததோடு சரி. மிசிசாகாவில் சரவணபவனில் தோசை சாப்பிட்டோம். மற்றப்படி உங்கள் பதிவுகளைப் படித்து திருப்தி அடையவேண்டியதுதான்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு திரு செல்லப்பா, அங்கு சரவணபவன் இருக்கிறதா.
நாங்கள் டொரண்டோ வழியாகப் போனோம்.

அப்போது சரவணபவன் எல்லாம் இல்லை.
உங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது போய் வாருங்கள்.
நாங்களும் ஒரு வருடம் கழித்தே
வீட்டை விட்டுக் கிளம்பினோம்.வருகைக்கு மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

நீண்ட சாலைப் பயணம்... அதுவும் இயற்கை அன்னையின் எழிலைக் கண்டபடியே பயணம் - மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் தான்.

உங்கள் பயணத்தில் நாங்களும் கூடவே வந்த உணர்வு.

பிரம்மாண்ட மரம்... பார்க்கவே பிரமிப்பு.

பயணத்தில் குழந்தைகளும் கூடவே இருந்துவிட்டால் மகிழ்ச்சி இரட்டிப்பு தான்.

தொடர்கிறேன் மா...

Anuprem said...

நீல வண்ண கடலும் , இயற்கையும் என்றும் இனிமை மா ..

பசங்க வளர வளர சண்டை யும் சீண்டலும் அதிகம் தான் ...இங்க தினமும் அப்படி தான் மா போகுது ...

மாதேவி said...

குழந்தைகள் இருந்தால் கலகலப்புதான்.