Blog Archive

Saturday, June 30, 2018

Gaya Mahathmiyam : Upanyasam by Kasi Guru Prakash Sasthrikal

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

1397, காசிப் பயணம் 2 ஆவது படி

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 இரவில் நல்ல உறங்க ஆரம்பித்த வஞ்சும்மாவுக்கு
ரயிலின் சத்தம் ஒத்துக் கொள்ளவில்லை. இத்தனை வேகம் அவசியமா.
என்றபடி எழுந்து, பக்கத்து கூஜாவில் வைத்திருந்த தண்ணீரை, நிதானமாக எடுத்துக் குடித்தார்,
 எதிர்த்த இருக்கையைப் பார்த்தார், லக்ஷ்மி ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருந்தார்.
என்னம்மா தூக்கம் வரலியா என்ற ஆதரவான குரல் கேட்டுமேலே பார்த்தார்.
கணவரின் புன்னகை முகம் கண்ணில் பட்டதும் சிரிப்பு வந்தது.
ஏன் நீங்க தூங்கலை.
ஏதோ நினைவுகள்னு பாடலாமா என்று தோன்றுகிறது.
க்கும் தோன்றும் தோன்றும்.
என்று அவர் முடிப்பதற்குள் ஸ்ரீனிவாசன் கீழே வந்தாச்சு.
 உடம்பு சரியா இருக்காம்மா.
உடம்பு மனசு எல்லாம் சரி செய்து தானே அனுப்பினார் டாக்டர் செரியன்.
அவர் அனுமதிப்படிதானே. பயணம் ஆரம்பித்தோம்.
வீணக் கவலைப் படாமல் தூங்குங்கோ.
லக்ஷ்மி பார்த்தால் சிரிக்கப் போகிறாள்.

ரயில் தெலிங்கானா ஸ்டேஷனில் நின்றது.
ஒரு நிமிஷம் இரு. நல்ல சூடான பால் வாங்கித்தருகிறேன்.
சாப்பிட்டுத் தூங்கு என்றபடி இறங்கிய கணவரை
கண்ணெடுக்காமல் பார்த்தார் வஞ்சு,.
 அவளது அதிர்ஷ்டம் அந்தப் பால் வண்டி பக்கத்திலியே இருந்தது. ஃப்ளாஸ்கில் சர்க்கரை போட்ட பாலை வாங்கிக் கொண்டு மீண்டும் உள்ளே வந்தார் ஸ்ரீனிவாசன்.
தன்னையே பார்க்கும் வஞ்சுவைப் பார்த்து
என்னம்மா உன் நினைவு எங்க இருக்கு
என்றபடி பாலை ஆற்றி அவள் கையில் கொடுத்தார்.
அவருக்கு சளைக்காமல் வஞ்சுமாவும்,அவரிடம் இன்னோரு டம்ப்ளரை நீட்டினாள்.
ம்ம் சொல்லு, நம் முதல் பயணத்தைதானே நினைத்துக் கொண்டிருந்தாய்
என்று குறும்பாகக் கேட்டார்.
58 வயது வஞ்சுமாக்கு இன்னும் சிவந்தது கன்னம்.
30 வருஷமா எவ்வள்வோ பயணம். எனக்கு மறதி.
எத்தனையொ
மறந்துவிட்டது என்று சிரித்தாள்.
நான் மறக்க மாட்டேன் என்ற ஸ்ரீனிவாசன் என்கிற வாசு.
கல்யாணம் முடிந்து திருப்பதி போய் வந்த கையோடு நாம்
ஷங்கர் நகர் போனோம் இல்லையா.
ம்ம் என்றார்.
நீயும் புடவை கசங்காமல், மல்லி வாடாமல், காசுமாலை உறுத்தால் அப்படியே
ஜன்னலோரம் உட்கார்ந்து விட்டாய்.
தூக்கம் கண்களைச் சுற்ற அப்படியே சரிந்து விட்டாய்.
அந்த முதல் வகுப்பில் யாரும் இல்லை.
உன்னை அப்படியே எடுத்து என் மடியில் சார்த்திக் கொண்டேன்.
நானும் தூங்கிவிட்டேன். திண்டுக்கல் வந்த போதுதான்
உனக்கு விழிப்பு வந்தது..
சடக்கென்று எழுந்துவிட்டாய்.
அனியாயத்துக்கு வெட்கப் பட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்டாய்.
 இப்போது நீங்கள் படுத்துக்கொள்ளுங்கள். இன்னும் ஆறு மணி நேரமாவது போகணுமே
என்றாய். .தலயணை இல்லையே என்ற என் சிரிப்புக்கு ஈடு கொடுக்க முடியுமால் சிரித்துவிட்டாய்,
எல்லாம் இருக்கு.மேலே ஜம்க்காளத்தில் அப்பா சுற்றி வைத்திருக்கிறார்
என்று எடுத்துக் கொடுத்தே.
நானும் உன்னை எவ்வளவு ஒட்டமுடியுமோ அத்தனை ஒட்டி
தலையணைப் போட்டுக் கொண்டு உன் புடவைத்தலைப்பை
இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.

ம்ம்ம். ,மாஹா ரொமாண்டிக்கா இருக்கே. மாமிக்கு ரொம்பக் கூச்ச்மோ என்று மேலிருந்து
நாராயணன் என்கிற நாணா வின் குரல் சிரித்தது.
நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் தானா. கணக்குப்படி
ஆறாவது இருக்கணுமே என்றபடி அவரும் கீழே இறங்கினார்,

இருக்கும் இருக்கும் என்று லக்ஷ்மியும் ஒத்துப் பாடினார்.
எங்களுக்கு மூன்று முத்துகள் . எல்லாம் வேற நாட்டுக்கே போயாச்சு.

எங்க குடித்தனம் சனி அல்லது ஞாயிறு ஸ்கைப்பில் ஒன்று சேரும்
என்றார் நாணா.
இந்த ஏஸீ வண்டியில் இரவு பகலே தெரிவதில்லை. இதோ இன்னோரு ஸ்டேஷன் வருகிறது.
நாம் இருக்கைகளை பழைய நிலைக்கு வைத்துவிடலாமா என்றார்,.
 கட்டாயம் மதியம் தூங்கிக் கொள்ளலாம்.
வஞ்சு பல் தேய்த்துவிட்டு முகம் அலம்பி வா. என்ன வருகிறது என்று பார்ப்போம்.
லக்ஷ்மியும் வஞ்சுவும் எழுந்திருக்க ,அந்த காலை வேளை சுகமான காற்றில் நின்றபடி சுத்தம் செய்தபடி பேசிக்கொண்டு வந்தார்கள்.
ஆடவர்கள் இருவரும் கச்சிதமாக
அவர்கள் இருக்கைகளைச் சுத்தம் செய்து வைக்கவும் அடுத்த
ரயில் நிலையம் வரவும் சரியாக இருந்தது. மீண்டும் பார்க்கலாம்.

Friday, June 29, 2018

காசிப் பயணத்தின் முதல் படி

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

ரயில் வேகம் எடுக்க ஆரம்பித்ததும் அதுவரை வெளியே பார்த்துக் கொண்டிருந்த
வஞ்சும்மா, கணவரைப் பார்த்து மென்மையாகச் சிரித்தாள்.
என்னால் நம்பவே முடியவில்லை. நாம் தனியாக
இந்தக் கங்கைப் பயணம் மேற்கொண்டிருக்கிறோம்னு.

 எதிர் சீட்டில் இருந்த தம்பதிகளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்த ஸ்ரீனிவாசன்
அவளை நோக்கி, நம்புமா. உன் மன சந்தோஷம் எனக்கு
ரொம்ப முக்கியம்.
ரொம்ப பயந்து போயிருக்கிறீர்கள்.
இன்னும் நாம் போக வேண்டிய இடங்கள் எத்தனையோ.

உங்களுடந்தான் நான் போய்ப் பார்க்கவேண்டும், என்றபடி ,ஏதோ
பையிலிருந்து கொடுப்பது போல அவர் கரங்களைப் பிடித்தபடி
சொன்னார்.

உடனே எதிர் இருக்கைகளில் இருந்த தம்பதியினரை அறிமுகப்
படுத்த ஆரம்பித்தார். தன் கண்களில் துளிர்த்திருந்த
நீரை மறைக்க  பக்கத்தில் திரும்பியவாறு பேசினார்.

இவர்கள் சென்னையிலிருந்து வருகிறார்கள். இங்கே பங்களூரில்
மகன் வீட்டுக்கு வந்துவிட்டு இப்போது நம்மைப் போலவே
காசி,கயா,மதுரா எல்லாம் பார்க்க வருகிறார்கள்.
 அவர் நாராயணன், அம்மா லட்சுமி.
இது என் மனைவி வஞ்சுளா.. எங்களுக்கெல்லாம் கும்பகோணம்
பக்கம். நாச்சியார் கோவில்.
உடனே அந்த லக்ஷ்மி அம்மா, பெயர் பொருத்தம் பிரமாதமாக இருக்கே
என்றார். வஞ்சும்மா சிரித்துவிட்டார்.
உங்கள் இருவரையும் போலத்தான் என்றபடி பேச்சைத் தொடர்ந்தார்.

மணி ஒன்பதை நெருங்குவதைப் பார்த்த ஸ்ரீனிவாசன், வஞ்சு
உன் மாத்திரைகளை எடுத்துக் கொள்.
பிறகு இருவரும் சாப்பிட்டுப் படுத்துக் கொள்ள சரியாக
இருக்கும்  என்றவாறு மருந்துகள் கொண்டு வந்த
பெட்டியை எடுத்தார்.
எதிரில் இருப்பவர்களும் இதே நிலைமையில்
 இருப்பவர்கள் போல. இருவருக்கும் டயபெடிஸும்,
இரத்த அழுத்தமும் இருப்பதாகச் சொன்னார்கள்.
இந்த வயதில் இதெல்லாம் வராமலிருந்தல் தான் அதிசயம் என்று சொன்னபடி
நால்வரும் உண்டு முடித்தனர்.

கிட்டத்தட்ட 40 மணி நேரம் ஆகும் போலிருக்கே.
நாளைப் பொழுது நல்ல பொழுதாகட்டும்.
என்றபடி ,படுத்துக் கொள்ள ஏதுவாக வஞ்சுமாவின் இருக்கையை விரித்து
கொண்டு வந்திருந்த படுக்கையை விரித்தார்,
நீங்கள் மேலே ஏறணுமே என்றார் கவலையோடு வஞ்சுமா.
நான் கிழவன் இல்லைமா. நன்றாக ஏறி இறங்குவேன்.சிரித்தவரைப் பார்த்து நாராயணன்
எல்லா மனைவியரும் இப்படித்தான்
என்றபடி  தங்கள் படுக்கையையும் விரித்தார்.
மனைவிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து
ரகசியமாக புன்னகை புரிந்து கொண்டார்கள்.
என்னம்மா ,பால் வரவழைக்கட்டுமா என்றவரிடம்
மறுத்துவிட்டு ,ரயிலின் தாலாட்டில் உறக்கம் வரத் தூங்க ஆரம்பித்தார்.
ஸ்ரீனிவாசன் ,நாராயணன்  மேலேறிப் படுக்க
பயணத்தின் முதல் நாள் இனிதே பூர்த்தியானது.
Add caption

Wednesday, June 27, 2018

1395, வாராணசி பயணம் துவங்கியது.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 பங்களூர் ரயில் நிலையத்தை விட்டு நகர்ந்தது,வேகம் பிடித்தது
வாரணசி  எக்ஸ்ப்ரஸ். கண்கலங்கின தங்கையை அணைத்துக் கொண்டான் அண்ணா.
இரண்டு வாரம் தானே போகிறார்கள்.

அப்பா நன்றாகப் பார்த்துக் கொள்வார். பயப்படாதே இந்த 63 வயசிலயாவது கிளம்பணும்னு தோணித்தே அப்பாவுக்கு.

அம்பாசமுத்திரம், சென்னை,விராலி மலைன்னு எத்தனை ட்ரிப்
போவார்.
இதைத்தவிர, ஸ்பெயின், ஜெர்மனி, சின்சினாட்டி,ஹ்யூஸ்டன்னு சுத்தல்

அப்பா ஆல்சோ நீட் அ ப்ரேக்.
21 வயசிலிருந்து எத்தனை பாடு பட்டிருக்கார்.
ஏன் அம்மாவும் தான் அலுக்காம எவ்வளவு வேலை செய்வார்.
தாத்தா பாட்டி இருக்கிறவரை எல்லோருக்கும் சலிக்காமல்
செய்வாள் என்றாள் ஸ்ருதி.
ஆமாம் ஸ்கூலில் இருந்து வரும்போது கூட சமையலறையில்
 ஏதாவது செய்து கொண்டிருப்பார்.
வருபவர்கள் போகிறவர்கள்னு நிறைய விருந்தாளிகள்.
என்றான் வேணு.
என்ன கலகலப்பா இருக்கும்.
யேன் சமையலுக்கு அப்போ ஆள் வச்சுக்கலை அம்மா.
அப்பாவுக்குத் தன் கையால செய்யணும்னு ஆசை.
என்னவோ அண்ணா, வந்தவா எல்லாம் அதை செய் ,இதை செய்யுனு சொல்லும்போது எனக்குக் கோவமா வரும் என்றாள்
ஸ்ருதி.
போனாப் போறது. அம்மாவுக்குப் பிடித்ததை அவள் செய்தாள்.
இப்பதான் எல்லா உதவியும் வந்துட்டதே என்றான் சமாதானமாக
வேணு.
சரி வா போலாம்,நம் சம்சாரம் நமக்குக் காத்திண்டு இருக்கும்.
அம்மா வந்த விட்டுச் சொல்ல எனக்கு ஒரு விஷயம் இருக்கு.
 அட. நவீனுக்குத் தங்கையா என்று பூரித்தான் வேணு.
எப்படி அண்ணா புரிஞ்சுக்கற,
கில்லாடிண்ணா நீ என்று அண்ணனை அணைத்துக் கொண்டாள்.
எங்க ப்ராஜெக்ட் அடுத்த வருடம் என்று சிரித்தான்.
ஓஹோ  என்று சிரித்தாள் ஸ்ருதி.
ஆனால் இந்தத் தடவை அம்மா வீட்டில் பிரசவம் இல்லை.
மாமியாரே பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டார்.
ஸ்ரீதரும் நான் இல்லாட்டக் கஷ்டப் படுவார் என்ற தங்கையை வாத்சல்யத்தோடு
பார்த்தான் வேணு.
எங்க வீட்டுக்கு வரலாமே ,வசுதா ரொம்ப நன்றாகப் பார்த்துக் கொள்வாள்
என்றான்.
 ம்ம் இன்னும் ஏழு மாசம் இருக்கு. அம்மாக்கு என்னைப் பார்த்ததிலிருந்து சந்தேகம் தான்.
வாய்விட்டுக்கேட்கவில்லை.
இந்தா இன் பெண்ணுக்கு இதை எடுத்து வந்தேன் என்று
பெரிய ஸாலி American Doll பொம்மையைக் கொடுத்தாள்.
அத்தைன்னால் நீதான். மது குட்டி
Add caption
தலைகீழாக்  குதிக்கப் போறது என்ற வண்ணம் வண்டியில் வைத்தான்.
நீ நம் வீட்டுக்கு வந்துவிட்டு அப்புறம் போ. சேதி சொன்ன வாய்க்கு,
திருனெல்வேலி அல்வா வந்திருக்கு என்றபடி அவளையும் உள்ளெ
ஏற்றிக் கொண்டு ஜய நகர் பக்கம் வண்டியைத் திருப்பினான்.

காசித்தம்பதியை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Monday, June 25, 2018

கங்கையிலே குளித்தோமே ராமா ஹரே. 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


  கங்கை என்ற வார்த்தை காதில் பட்டதும்  வஞ்சும்மாவுக்குத் தனி உற்சாகம்.
உடனே பெண்ணுக்கும், மகனுக்கும் எழுதிப் போட்டுவிட்டு,
ஏற்பாடுகளில் முனைந்தாள்.

செப்டம்பரில் போவதால் வெய்யிலும் ,குளிரும் சேர்ந்தே
என்று சொன்ன நண்பரின் சொல்லுக்கு ஏற்ப
உடைகளை   எடுத்து வைத்துக் கொண்டார்கள்.
பெண்ணும் பிள்ளையும் குடும்பத்துடன் வந்து விட்டார்கள்.
முன்பே சொல்லி இருந்தால்
நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொள்வோமே
என்று குறைப்பட்டுக் கொண்ட பெண்ணை
வஞ்சும்மா செல்லமாகக்  கோபித்துக் கொண்டார்.
உன் பெரிய கூட்டுக் குடும்பத்தை விட்டு
எப்படி வருவாய்.
மாமியார், பாட்டி எல்லோரும் நீ ,இல்லாவிட்டால்
சிரமப்பட மாட்டார்களா.
இன்னும் பத்து வருடம் போகட்டும், நீங்களும் போகலாம் என்றாள்.
ஆமாம் ஒவ்வொருத்தர் பொண்ணு பிள்ளை எல்லாம் அழைச்சிண்டு போவார்கள்.
நீ தான் நீதி போதிப்பதிலியே இருப்ப, என்று முகத்தைச் சுளிக்கும் மகளைக் கண்டு சிரிப்புதான்
வந்தது வஞ்சும்மாவுக்கு.

சமையல்கார மாமியுடன் சேர்ந்து, பெற்றோர்களுக்குச் சத்துமாவு,
அவல்பொரித்தது,
 ரயில் பயணத்துக்குச் சப்பாத்தி,
பயத்த லாடு என்று செய்து அழகாக  சம்புடங்களில்
போட்டுப் பெட்டியில் அடுக்கினாள்.
காசியில் அவர்கள் தங்கும் விலாசத்தை வாங்கிக் கொண்டாள். அலுவகம் வழியாக
நல்ல இடத்தையே ரிசர்வ் செய்திருந்தார் ஸ்ரீனிவாசன்.

கங்கைத் துறையின் அருகில் இருந்த விடுதி அது,.
மனைவியின் கங்கை மோகம் அவருக்கு நன்றாகவே தெரியும்.
 இந்தப் பயணம் அவளுக்கு நல்லதொரு
அனுபவமாக இருக்கத்தான் அவர் கவனமாக இருந்தார்.
அவர்களுடன் வருபவர்கள்
முன் பின் பழக்கமானவர்களே.

மனைவிக்காகவே, முதல் வகுப்பிலியே டிக்கெட்டுகள் பதிவு செய்திருந்தார்,
ஒரு நல்ல வியாழன் அன்று, ஆக்ரா வழியாக தில்லி செல்லும்
 விரைவு வண்டியில் இருவரும் ஏறிக்கொள்ள,
வழியனுப்ப ,மகனும் மளும் வந்தனர்.
மகன் ஜாஸ்தி பேசாதவன். அம்மாவிடம், மருந்து விசாரணை நடத்தி உறுதி செய்துகொண்டான்.
இருவருக்கும் சூடான பால் வாங்கிக் கொடுத்தான்.
அம்மாவுக்குப் பத்திரிகை வாங்கப் போனவனைப்
பார்த்து ஸ்ரீனிவாசன் சிரித்துக் கொண்டார்.
ஏண்டி அவன் பொறக்கறத்துக்கு முன்னாடிலேருந்தே
உன்னை நான் பார்த்துக் கொள்ளவில்லையொ
என்று சீண்டினார்.
அம்மா முகம் சிவப்பதைப் பார்த்து,பெண்ணுக்குச் சிரிப்பு வந்தது.
ஆஹா, எத்தனை நல்ல தம்பதி இவர்கள்
என்றவாறு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு
அம்மா கன்னத்தில் முத்தமிட்டு
இறங்கினாள்.
என்ன முகம் பூரா பூரிப்பு என்று கேட்ட அண்ணாவிடம்
அண்ணா, அம்மா அப்பா இருவரும் படு ரொமாண்டிக்
என்று புன்னகைத்தாள்.

எனக்குத் தெரியுமே,
இதுக்கு நடுவிலே நீயும் புகுந்து கொள்ளப் பார்த்தியே என்று நகைத்தான்
அண்ணன்.
சரி இதோ வண்டி கிளம்புகிறது. என்றவாறு, அம்மாவிடம்
 விகடன்,கல்கி, கலைமகள் என்று கொடுத்தான்/,.
அம்மா, அப்பாவைப் பத்திரமாப் பார்த்துக்கோ.கங்கையில நீந்துகிறேன் என்று ஆரம்பித்துவிடுவார் என்று பத்திரப் படுத்தினான்.
போடா பயலே. நாங்கள் பத்திரமாப் போய் வரோம்
நீங்கள் பத்திரமாக இருங்கள் என்றபடி விடை பெற்றனர் பெற்றோர்.
மீண்டும் காசியில் பார்க்கலாம்.

Friday, June 22, 2018

காசிக்குப் போலாமா ராமா ஹரே..1

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 வீடே அல்லொலகல்லோலப் பட்டது.
பாட்டியும் தாத்தாவும் காசிக்கும் கயாவுக்கும் யாத்திரை போகிறார்கள் என்றால்
சும்மாவா.

அதுவும் தாத்தாவுக்குக் கோவில் குளம் இங்கெல்லாம்
போவது வேஸ்ட் என்று தீர்மானம். அருகிலுள்ள அனுமார் கோவிலுக்கு மட்டும் போய்
வருவார்.
அங்கே ராமர் பட்டாபிஷேகப் படம் பெரிதாக் மாட்டி இருக்கும்.
பெங்களூரில் அனுமன் கோவிலுக்கா பஞ்சம்.



மற்றபடி மாடிப் படுக்கை அறைக்கு ஏறும்போதும் இறங்கும்போதும்
ராம் நாமமே துணையாக நடந்து வருவார்.
பாட்டிக்குப் பூஜை அறையே கோவில்.
நிறைய தோழிகள் உண்டு. தினம் ஒரு கோவில்.மல்லேஸ்வரத்துக்கு எப்பவொ
1960இல் குடிவந்தது.
அதற்கப்புறம் பொன் போலப் பிள்ளையும் பெண்ணும் தான்.
அலுப்பில்லாத சம்சாரம்.
தாத்தா இளைஞராக வேலைக்குச் சேர்ந்த தொலைபேசி இலாகாவில்
இப்போது ஜி எம் வேலை..இன்னும் கன்சல்டண்டாகத்தான் இருக்கிறார்.
இதோ 63 வயதை எட்டும்போது  போர்ட் மீட்டிங்க்,டைரக்டர் கான்ஃபரன்ஸ் என்று
போய் வந்து கொண்டிருக்கிறார்.
இறைவன் கொடுத்த ஆரோக்கியமான உடம்பு.
டென்னிஸ் விளையாடுவார்.
பிள்ளையும் பெண்ணும் திருமணமாகிப் போனதிலிருந்து
ஒரு சங்கடமும் இல்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறது
வாழ்க்கை.
பாட்டிக்கு இருதய நோய் வரும் வரையில்.
திடீர் என்று இரவு வேளையில் வந்த வலிக்கு
ஆஞ்சியோ ப்ளாஸ்டி ,வாழ்வுக்கு உத்திரவாதம் கொடுத்தது.
உடல் இளைத்தாலும் மனம் இளைக்காத
பாட்டி ,வஞ்சு, தன் வழக்கமான சுற்றல்களிலிருந்து
கொஞ்சமே குறைத்துக் கொண்டாள்.
தாத்தா ஸ்ரீனிவாசனும் வீட்டில் நிறைய நேரம் தங்க ஆரம்பித்தார்.

அப்போதுதான் அவர்களுக்கு  அனுமார் கோவில் நட்பு
ஒருவர் காசிக்கு யாத்திரை ஏற்பாடு செய்வதாகவும், முன்னோர்களுக்கான
கயா ஸ்ரார்த்ததுக்கு  ஏற்ற மாதிரி பயணத்தை அமைக்கப் போவதாகவும் சொன்னார்.

ஸ்ரீனிவாசன் தயங்குவதைக் கண்டு, மாமியைப் பற்றிக் கவலை வேண்டாம்.
இங்கிருந்து ரயில் இலஹாபாத் போகிறோம்.
பிறகு காசியும் ,கங்கையும், கயாவும்,மத்ரா கிருஷ்ணனும் தரிசனம்.
வரும்போது  விமானப் பயணம். பங்களூரு வந்துவிடலாம்.
கூடவே டாக்டர் ராமமூர்த்தியும், பிகே ஸ்ரீனிவாசனும் வருகிறார்கள்.

உடல் நேரத்துடன் ஒத்துழைத்தால் ,காலமும் நம்மை நடத்திச் செல்லும்.
பகவான் நம்முடன் வருவார்,.
மாமிக்கும் உங்களுக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
விட்டுவிடாதீர்கள்  என்று முடித்தார்.... பயணம் முடிவாகியது.
Add caption
Add caption

Tuesday, June 19, 2018

அவசரக் கோலங்கள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அதுவும் ஒரு கணவர் பல மனைவிகள்
பலவிதமாகக் குழந்தைகள்

ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஒரு திரைப்படம் வந்து அத்தனை வேடங்களையும் கலைத்துவிட்டது.

ஒரு ஆடவன் இந்தத் தவறைச் செய்யும்போது
சிரமப்படும் அவன் குழந்தைகள் , அவனைத் திட்டவில்லை.
அவனை அழைத்து வைத்துக் கொண்ட இன்னோருத்தியை
குணம் கெட்டவள், குலம் கெட்டவள் என்று தூற்றுகிறது.

இது அந்தத் திரைப்படத்தை விட இப்பொழுது பேசுபவர்களின்
நாடகம் விபரீதமாக இருக்கிறது.

விட்டு விட்டார்கள் என்றால் தேவலை.
என்ன பலன் எதிர்பார்த்து இதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் நடிகர்களும்  கலந்து  விமர்சிப்பது இன்னும்  அழுக்கை சேர்க்கிறது.

கண்ணன் வேடம் போட்டவர்கள் கண்ணனாக வாழவில்லை.
நம்மிடையே பல தவறுகள் இருக்கும்போது
இறந்தவரைச் சொல்வதால் என்ன  லாபம்.

Reminded me of an ancient story.  உங்களில் பாபம் செய்யாதவர்கள் அவள் மேல் கல்லெறியுங்கள் என்று இயேசு  சொன்ன வார்த்தைகள்.

Friday, June 15, 2018

எல்லை இல்லாத இன்பம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

காத்திருந்தவரின் காதுகளில்  ஆம்புலன்சின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது.
 பிரம்பு நாற்காலியை விட்டு எழுந்திருக்க முடியவில்லை.
தம்பி தோளை அழுத்திப் பிடித்து உட்கார வைத்தான்.
வேண்டாம் அண்ணா.
வரப் போவது அண்ணியின் உடல் .உயிரில்லை.
நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்.

அவளும் வந்தாளே.
போன சுருக்கிலியே வந்துவிட்டியா விசாலம் என்று
விம்மத் தொடங்கினார் விஸ்வேஸ்வர சர்மா.
 அவள் முகத்தில் ஒரு மாற்றமும்/ இல்லை. அதே இள நகை,.
அதே பேசரி.அதே பளீர் தோடு.
கட்டம் போட்ட புடவை.
//ஏன்னா இன்னும் தூங்கலியா என்று எழுந்துவிடுவாளோ என்று நினைக்க வைத்தது.
அவளைத் தூக்கி வந்த மருத்துவ மனை ஆட்கள்

அப்படியே கீழ இறக்க நினைத்த போது, தன் பக்கத்திலிருந்த விரித்த படுக்கையைக் காட்டினார்
விசு.

செய்தி கேட்டு அந்த இரவு நேரத்திலும் வந்த அவள் அண்ணா  கண்ணன்,அவன் குடும்பம்
எல்லாம் திகைத்து நின்றனர்.
70 வயது தங்கை ஆரோக்கியமாக இருந்தவள் தான்.
 முதல் நாள் அவர் வீட்டுக்கு வந்து அவர் மனைவிக்குத் தான் வாங்கிய புது பாபாலால்  கடைச்
செயினைக் காட்ட வந்திருந்தாள்.
நாளை வெள்ளிக்கிழமை  அம்மனுக்குச் சார்த்தப் போகிறேன்.
கற்பகம்  கழுத்துக்கு நனறாக இருக்கும் இல்லையா என்று குதூகலித்தவளா இது.

கண்ணன்,தன் அத்திம்பேரை அணைத்துக் கொண்டார். அவரது கன்னங்களில் வழிந்த கண்ணீர்
அவர் கண்ணீரில் கலந்தது.
55 வருடப் பழக்கம் சொந்தம் இருவரின் மனதை,
நெருக்கியது.
ஏண்டா இது போல் ஆச்சு. சட்டுனு வண்டி ஏறிப் போயிட்டாளே.
நான்  என்ன செய்யப் போகிறேன் என்று கதறினார் 78 வயது விசு.

யாராவது ஒருத்தர் முந்திக் கொள்ள வேண்டியதுதான்..
நல்லபடியாக் கரையேத்தறத்துக்கு வழி பார்க்கணும் என்ற
தம்பியைப் பார்த்தார் விசு.

ஓ அப்படியா , நீ  எப்போ இவ்வளவு ஞானி ஆனயோ.
வந்திருப்பவள் என் வீட்டு மகராணிடா.
 அவள் நான் சொல்லும் நேரம் போவாள்.

உன் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு போ.
நாளை வந்தால் போதும்.
 இந்தக் கையால் எத்தனையோ பேருக்குக் காரியம் செய்துட்டேன்.
 நீ சிரமப் பட வேண்டாம்.
அவ அப்பா என்னிடம் ஒப்படைத்த போது அவள் பிஞ்சாக இருந்தாள்.
இப்போது அவள் நாலு பிள்ளைகளையும், எட்டு பேரன் பேத்திகளையும் கொண்ட ஆலமரம்.

அவளை வைத்து மரியாதை செய்து  நான் அனுப்புவேன்.

ஒரு நிமிஷத்தில் அவள் உனக்கு, உயிரில்லாத
பொருளாகிவிட்டாளா.
வந்த அன்னிலிருந்து,
உனக்குக் கல்யாணம் ஆகும் வரை எப்படிக் கட்டிக் காத்தாள்.

என்றபடி எழுந்து நின்றார் கைத்தடியின் உதவியுடன்.
 என் விசாலத்தை நான் அலங்காரம் செய்து
மஞ்சளிட்டு,புதுப் புடவை உடுத்தி
கோலாஹலமாக அனுப்புவேன்.
எனக்கு யார் உதவியும் வேண்டாம் என்று விசாலத்தின் உடலருகில்
உட்கார்ந்தார்.

தம்பி அதிர்ச்சியுடன் நின்றார். நான் என்ன சொல்லிட்டேன் அண்ணா.
ஏன் இப்போ கோபம் உங்களுக்கு என்றார்.

என்ன செய்யணும்டா. ஏதோ சாஸ்திரிகள் வந்தால் அவர் சொல்வார் /
அக்கம்பக்கத்துக்காரா எல்லாருமா ஆறுதல் சொல்வா.
அதற்குள் நானும் கொஞ்சம் அடங்கி இருப்பேன்.
அவள் நம்  வீட்டு மூத்த மருமகள் டா. அவள் போயிட்டாளா இல்லையான்னு
கூட எனக்குத் தெளியலை.

நீ ஒண்ணு பண்ணு,
இந்த ஐஸ் பொட்டி, வரச்சொல்லு.
ரெடியா விளக்கெடுத்துண்டு வரா உன் மனைவி.
 வைக்க சொல்லு.
இப்ப நான் விசாலத்துக் கிட்டச் சொல்ல நிறைய விஷயம் இருக்கு
எல்லாரும்  வாசல்க்குப் போங்கோ.
ஏசி ஆன் செய்.
 டேய் கண்ணா உன் தங்கை மஹாலக்ஷ்மி டா.
அவள் உயிர் இன்னும் பத்து நாளைக்கு இங்கதான் நாம் பேசுவதைக் கேட்டுண்டு
 இங்கதான் உலாவிண்டு
இருக்கும் .எல்லோரும் அஜாக்கிரதையா அவளைப் பத்திப் பேசிட வேண்டாம்.

வெறி வந்தவர் போல அமர்ந்தவரை ,விட்டு விட்டு அமைதியாக அகன்றார்கள்.

விசு எழுந்தவர், பூஜை அறைக்குச் சென்று, யாரும் மறுப்பு சொல்வதற்கு  முன்பே
கங்கை சொம்பை உடைத்து.
விசாலம் மேல் பன்னீர் போலத் தெளித்தார். திறந்திருந்த வாயில்
துளித்துளியாக கங்கை நீர் விட்டார்.
கொஞ்சம் உள்ளே சென்றதோ. இல்லை அவர் கற்பனையோ.
 மெதுவாக அவள் வாய் இதழ்களை மூடினார்.
அவையும் நிரந்தர
ப் புன்னகையில் அழுந்தின.

அவளுக்குப் பிடித்த புடவையை எடுத்து வந்து போர்த்தினார்.

விஷ்ணு சஹஸ்ரனாமத்தைத் தலை மாட்டில் கேட்கும் படி
வைத்தார்.
காலையில் வந்த மகன் கள் அவர்கள் குடும்பங்கள் மற்ற எல்லோரும்
எல்லோரும் கண்டது  விஸ்வனாத சர்மாவும் விசாலமும்
கைகள் ஒன்று சேர்ந்த நிலையில் ,
Add caption
சேர்ந்தே கைலாசம் அடைந்த  கோலம்.

இருபது வருடங்களுக்கு முன் நடந்த எங்க அத்தை வீட்டில் நடந்த சம்பவம்.

இணை பிரியாத தம்பதிகளுக்கு வணக்கம்.





Sunday, June 10, 2018

சந்தோஷப் பட வேண்டிய நினைவுகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ரயில் பயணங்கள் எப்பொழுதும் இனிமைதான்.
நிறை மாதத்துடன், கையில் இரண்டு சமத்துக் குழந்தைகளுடன்,
என்னை அம்மா வீட்டுக் கொண்டு போய் விட ஆள் வேண்டுமே.

சிங்கத்துக்கோ கோவையில்  மூச்சுவிட நேரம் இல்லை.
யாரை உதவிக்குக் கேட்கலாம்னு பார்த்தால்,
முரளி நினைவு வந்தது,
20 வயது முரளி 22 வயது அக்காவுக்குத் துணையாக
வந்தான்.
படிப்பு முடிக்கும் வருடம்.
குழந்தை அலுத்துக் கொள்ளவில்லை.

திருச்சியில் இறங்கி, காரைக்குடிக்குச் செல்லும்
வண்டியில் ஏற்றி விட்டுத் தானும் வந்தான்.
மறு நாளே சென்னை செல்ல வேண்டும்.
மீண்டும் போட் மெயில் ஏறிச் சென்னை வந்து சேர்ந்த
பையன்.இரண்டு நாட்கள் கழித்து கடிதம் போட்டான்.
தூக்கக் கலக்கத்தில் திருச்சியில் இறங்கி பங்கலூர் எக்ஸ்ப்ரஸ்ஸில் ஏறிவிட்டதாகவும்.
ஜோலார்பேட்டை வந்ததும், டிக்கெட் கலெக்டர் எழுப்ப,போட் மெயில் டிக்கட் இருக்கிறது
இந்த வண்டியின்
டிக்கட் இல்லாமல் விழித்திருக்கிறான்.
அந்தக் காலத்து நல்ல மனிதர்,
உடனே என் அப்பாவுக்கு, தந்தி கொடுக்க,
அப்பா பதறிப் போய் தந்தி மணி ஆர்டரில் பணம் அனுப்ப
சென்னைக்கு ஏற்றிவிட்ட அந்த நல்ல மனிதர்,காப்பியும் இட்லியும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
வாழ்க வளமுடன் .என்றும் நன்றியுடன் உன் அக்கா ரேவ்.

Add caption

Wednesday, June 06, 2018

வாழ்வின் பல யாகங்கள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  பெண்ணுக்கு மட்டும் தான் பொறுப்புகள்,கவலைகள்
என்றில்லை.
 ஆண்களுக்கும் உண்டு.
வேறு வேறு விதமான கவலைகள். இன்ப துன்பங்கள் பிரார்த்தனைகள்.

முந்தின பதிவில் சூது செய்யும் தீவினை எழுதி இருந்தேன்.

இந்தப் பதிவில் என் தம்பி முரளி தன் நண்பனுக்காகச் செய்த

பட்ட பாடுகளை எண்ணுகிறேன்.
கல்கத்தாவில் அவனுக்கு பாட்டா அலுவலகம்+ஃபாக்டரியில்
வேலை.

  பி//வியாஸ் என்று ஒரு அலுவலக நண்பன். திருமணமனமானவன்.
பெங்காலி.
அவனுடன் டார்ஜிலிங்க் ,ஷிம்லா எல்லாம் போய் வந்திருக்கிறான்.
 அவனுக்கு பான், பியர் எல்லாம் வழக்கம் போல இருக்கு அதாவது நண்பனுக்கு.
குடும்பத்துடன் இருக்கையில் கட்டுப்பாடுடன் இருப்பான். தோழர்களுடன் சேர்ந்து விட்டால்
தண்ணீர் பட்ட பாடு தான்.

ஆரம்பத்தில் முரளி இதை ஆமோதித்தாலும், பிறகு விலக ஆரம்பித்தான்.
நண்பனின் மனைவி மிக  அறியாத பொண்ணுன்னு சொல்வார்களே
அந்த வகை.
அண்ணா அண்ணா என்று ஒரே உபசாரம்.
துர்கா பூஜாவை ஒட்டி, அந்தப் பெண்ணின் ..அவள் பெயரும் துர்கா தான்,
தந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டமும் சேர்ந்தன.

மாமனாரின் பிறந்த நாளன்று மாப்பிள்ளை வ்யாசைக் காணவில்லை.
பரிசுகளுடன் சென்ன்ற முரளியிடமே துர்கா கேட்கிறாள்.
நேற்றூ ஏதாவது பார்ட்டியா ,இவரைக் காணோமே.
உறவுகாரர்கள் கேட்பார்களே. வீட்டிலிருந்தால் அழைத்து வருகிறீர்களா
என்று கேட்கவும் ,சங்கடமாகிவிட்டது தம்பிக்கு.
அவன் விடுமுறைக்குச் சென்னை கிளம்ப கோரமாண்டலில்
 டிக்கெட் எடுத்துக் கிளம்ப தயாராக இருந்தான்.
 அக்கா,அம்மா,சிங்கம் எல்லோருக்கும் அன்புப் பரிசுகள்
 வாங்க வேண்டும். அடுத்த நாள் ஹௌராவில் 12 மணிக்கு
 வண்டி ஏறவேண்டும்.
 அப்பாவி முரளிக்கு மறுக்கக் கூடத்தெரியாது.
சரிம்மா நான் பார்க்கிறேன் என்பதற்குள் வாசலில்
கலகலப்பு. மாப்பிள்ளை வியாஸ் வந்தாச்சு.
துர்கா விரைந்தால். பின்னாடியே முரளியும் செல்ல
அவர்கள் கண்டது ,தன் வண்டியில் உட்கார்ந்திருந்த வியாஸ்
 மது வாசத்தோடு உளறிக் கொண்டிருப்பதை.
 துர்க்கா இதை எதிர்பார்க்கவில்லை.
அண்ணா இவர் இப்படியே உள்ளே வந்தால்
அவமானமாகிவிடும்,

பரிசு வாங்கச் சென்றிருப்பதாக நான் சமாளிக்கிறேன்.
நீங்கள் அவருடன் சென்று தெளிவானதும் வாருங்கள்
என்று தயவாய்க் கேட்டுக் கொண்டாள்.
திகைத்துப் போன முரளியை, வியாஸ் சத்தம் போட்டு அழைக்கிறான்.
ராகவன்////   கமான். என் பாஸின் புது வண்டி.
என்னை டெஸ்ட் ரன் எடுக்கச் சொன்னார். நீயும் வா
வேறு வழியில்லமல் ஏறிக்கொண்ட முரளியுடன்
வண்டி பறந்தது. அதுபோய் நின்ற இடம்
 ரவீந்திர சரோவர். கல்கத்தாவின்  மாபெரும் ஏரி.
வண்டியின் எஞ்சினை நிறுத்தாமல் இறங்கிவிட்டான் வியாஸ்..

அது ஒரு சரிவில் நின்றதால் பின்னோக்கி நகர ஆரம்பித்தது.
முரளியால் கதவைத் திறக்க முடியவில்லை.
கடைசியாக ஏதோ மரத்தில் மோதி நின்றது.
பாவம் முரளி. உடலே அதிர்ந்திருக்கும்.

நசுங்கின கதவை எப்படியோ திறந்து வெளியே வந்து
வியாசைத்தேடினான். அவனோ பான் வாலாவிடம்,
மேலும் போதை ஏற்றிக் கொண்டிருந்தான்.
அவசரமாக அவனை நெருங்கிய முரளி கார் இருக்கும் நிலையைக் காண்பித்ததும்
அந்தக் கோழை அரண்டுவிட்டான்.

இது போலீஸ் கேசாகிவிடும் என் வேலை போய் விடும்.
நீ இந்த வண்டியை கம்பெனியில் கொண்டு போய் விட்டு விடு என்று உளற
ஆரம்பித்தவன் ஓடவும் முயற்சித்தான்.
இன்னும் இரு ஆட்கள் துணையோடு, அவனைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிப் போட்டு,
வண்டியையை விடுவிக்க ,பணிமனை ஒன்றுக்குத் தொலைபேசி அவர்கள் வருவதற்குள்
வியாசைக் கட்டுப் படுத்துவது கடினமாக இருந்தது,.
பணிமனை ஆட்கள் ,சிரமப் பட்டு எடுத்த வண்டி நல்ல வேளையாக
இயங்கும் கண்டிஷனில் இருந்தது.

உளறியபடி இருந்த வியாசை வண்டியில் ஏற்றி, அலுவலகத்துக்குப் போனால்
மேலதிகாரி ,விவரங்களைக் கேட்டு,இதைப் போலீஸ் தான் விசாரிக்கணும்.
வியாஸ் செய்தது பெரிய தப்பு என்று இரைய ஆரம்பித்தார்.

போலீசும் வந்தது. உறங்கிவிட்டிருந்த வியாசை அருவருப்புடன் பார்த்தவர்களிடம்,
முரளி மன்றாடி,
அவர்கள் குடும்ப கௌரவமே போய்விடும்.
இப்போதைக்கு அவனை விடுவியுங்கள். நாளை அவன்
தன் நிலைக்கு வந்ததும் பொறுபெடுத்துக் கொள்வான்
என்று பாட்டா டைரக்டரிடமும் கேட்டூக்  கொண்டான்.
நீ ஜவாப்தாரி. அவன் இந்தச் சேதத்துக்குப் பணம் கொடுக்க வேண்டும்.
என்றதும் தன்னிடமிருந்த ஆயிரம் ரூபாயைப் பணிமனைச் செலவுக்குக் கொடுத்துவிட்டு,
வாடகை வண்டியில் வியாசை ஏற்றி,

துர்க்காவிடம் கொண்டு சேர்த்தான்.

யாருக்கும் தெரியாமல் அவள் அவனைப் பின்புறம் அழைத்துச் சென்று ஆசைதீற ஷவரில் நிற்க வைத்து வசைமாறி பொழிந்ததும்
ஒரு மாதிரி அரை நினைவுக்குத் திரும்பினான்.
 ராகவன் எங்கே என்று கேட்டிருக்கிறான்.
பிறகு தேடினால் ராகவன் அங்கே இல்லை.
நடந்ததை எழுதி துர்காவின் அம்மாவிடம் கொடுத்துவிட்டுக்
கிளம்பிவிட்டான்.
அடுத்தனாள் வண்டி ஏறும் வரை அவன் படபடப்பு அடங்கவில்லை.

சென்னை வந்து என்னிடம் சொன்னபிறகே ஆஸ்வாசப்பட்டான்.
வண்டி மோதின அதிர்ச்சி,போலீஸ் என்று ஒரே  சங்கடம். 23 வய்தில்
இதெல்லாம் அப்போது அந்தக் காலத்தில்
நேர்மையான மனிதர்களுக்குக் கஷ்டம் தானே.
பெற்றோருக்குக் கூட இந்த விஷயம் தெரியாது.
பயக்ருத் பய நாசனனே காப்பாற்றினான் என் அருமைத் தம்பியை.
Add caption
Add caption

Saturday, June 02, 2018

வாழ்க்கை குரலின் கீதம் சுகம். சுபம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  சுந்தரத்தின் வரவு, 25 வருடங்கள் உழைத்த கம்பெனி ,பிடித்தம் போக
கையில் கணிசமாக சில லட்சங்கள் கிடைத்தன.
அந்த நிமிடத்தில் தான் கணினி படிப்பத் தொடர்ந்ததில்
தனக்கே   நன்றி சொல்லிக் கொண்டான்.
 தன் பயணம், நண்பன் வீட்டில் தங்கக் கொடுக்கப் பணம்,
என்று அளவாக எடுத்துவைத்துக் கொண்டு
மிச்சமான பணத்தை மகள்கள் பெயரில் உயர் வட்டி கொடுக்கும் வங்கியில் ஆறு வருடங்களுக்கு
 டெபாசிட் செய்தான்.
புது மெருகேறிய வளையல்கள் கைகளில் மின்ன
இன்னும் நம்பாத முகத்தோடு
கணவன் மனை புகுந்தாள்.
தந்தை தாய் போல அவர்கள் அணைப்பு வேண்டி இருந்தது.

எல்லோருமாக ,சுந்தரத்தை ஒரு வெள்ளி இரவு, மலேசியன்
விமானத்தில் ஏற்ற  மீனம்பாக்கம் வந்ததும், சந்திராவை
ஏதோ வெறுமை சூழ்ந்தது.
வெற்றியோ தோல்வியா இது.
சுந்தரம் அவள் முகத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டான்.
உன் மனம் ஆறுதல் அடைய  உனக்கு நேரம் வேண்டும்.
அதற்குத்தான் இந்தப் பயணம். முடிந்த வரை என்னை மன்னித்துவிடு.
 சென்ற காலத்தைத் திருப்ப முடியாது.
இந்த வாழ்க்கை நீ கொடுத்தது, அதனாலயே நான்
வளம் பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நான் வருகிறேன் என்று சொன்னவன் பெற்றோரை வணங்கினான்.
 பெண்களை அணைத்துக் கொண்டான்.
அவர்கள் அவன் காதில் ஏதோ கிசுகிசுக்க
அவன் முகத்தில்  புன்னகை விரிந்தது.
சரி என்று தலையாட்டி கை அசைத்து விடை பெற்றாஆன்.
அடுத்தடுத்த வருடங்களில் அவன் அனுப்பிய பணம் சேரச் சேர
இரண்டு வருடங்களில் இருவரும்  அமெரிக்காவில் பட்டப் படிப்பு வந்தனர்.

மாமாவின் மகன்கள் இருக்கும் பல்கழகத்துக்கு நூறு மைல்கள் தொலைவில்
இவர்கள் பல்கலைக் கழகம் அமைந்தது.
அருமை சகோதரர்களக அவர்களின் உதவி கிடைத்தது.
பெரியவள் மைதிலி  நான்கு வருடங்களிலிலும்
சிறியவள் மிதிலா ஐந்து வருடங்களிலிலும்
கணினி சம்பந்தப் பட்ட படிப்பில் க்ராஜுவேட் செய்தனர்.

சுந்தரம் நடுவிலும் ஒரு தடவை மகள்களை
வந்து பார்த்து விட்டுப் போனான்.
அப்பாவிடம் தெரிந்த மாற்றம் அவர்களை மகிழ்வித்தது.
கோடை விடுமுறையில் அவர்களும் அம்மா,தாத்தா பாட்டியைப் பார்க்க வந்தனர்.
தாத்தா முன்னைவிடத் தெம்பாக இருந்தார்.

தங்கள் தந்தை அனுப்பும் தபால்களே காரணம் என்று கண்டு கொண்ட
பேத்திகள் தாங்களும் எழுத ஆரம்பித்தனர்.
சந்திரா எப்பொழுதும் போலச் சலனம் காட்டாமல்
தன் அலுவலகத்தில் உயரிய பதவிக்காக உழைத்து
வெற்றியும் கண்டாள்.
இதற்குத்தான் தன் வாழ்வு மாறியதோ என்று வியந்தாள்.
மாமியார் மாமனார் உடன் ,நிறைய உபதேச சொற்பொழிவுக்குப்
போய் மன நிம்மதி பெற முயன்றாள்.

காலம் சென்று,மகள்கள் திரும்பியதும்,
தாத்தாவின் ஏற்பாட்டில்  மைதிலிக்கான மாப்பிள்ளை
பார்க்கும் படலம் முடிவுக்கு வந்தது.
சேகர் மாமாவின் பேரன் சென்னையிலேயே நல்ல வேலையில் இருந்தான்.
 இருவரும் சந்தித்து மனம் ஒத்துப் போனதில்
திருமணம் நிச்சயமானது.

ஒரு மாதம் முன்னதாக வந்த சுந்தரம்,
தந்தை சொன்ன வழியில் கல்யாண வேலைகளை ஏற்றுக் கொண்டான்.

கிருஷ்ணசாமி ரெட்டியார் திருமணமண்டபத்தில்
இதோ ஜூலை  யில்
 திருமணம்.
 நல்வாழ்க்கை தொடங்க இருக்கும் மைதிலிக்கும் கார்த்திக்குக்கும் நன் வாழ்த்துகள்.
பெரியவர்கள் அவரவர் மனப்படி தொடர்வார்கள். வாழ்க வளமுடன்.
என்னுடன் விடாமல் தொடர்ந்து படித்து
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

வாழ்க்கையின் குரல் 11.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 முதன் முறையாகச் சந்திரா வீட்டில் இல்லாத சூன்யத்தை உணர்ந்தான் சுந்தரம்.

அதல பாதாளத்தில் விழுந்து, ஏற வழியில்லாமல் தவிக்கும் சுய பச்சாதாபத்தில்
 யாரை நோவது என்றே புரியவில்லை.
தந்தையின் தோழர் பார்த்தது இன்னும் அவமானம்.

இப்போது சேகர் மாமா காட்டும் வழியில்
போகத்தான் வேண்டும்.
அத்தோடு ,காசியிடமிருந்து அந்த வளையல்களையும் மீட்க வேண்டும்.

பசியில்லாத நிலையிலும்  சாப்பிட்டே ஆகவேண்டும் என்று  கட்டாயப் படுத்தின
நல்லசிவம் தம்பதியினரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டன்.
இரவு முழுவதும் தூங்காமல் கழித்த சுந்தரத்தைத் \
திடீரென கண்ணாடி உடையும் சத்தமும், நல்லசிவம் அம்மவென்று வலியில் அலறியது
காதில் விழ ,அறையை விட்டு வெளியே வந்தான்,.
 மனைவியின் கையைப் பிடித்தபடி எழுந்திருக்க முயன்றபடி இருந்த
நல்லசிவம் நெற்றியில் ரத்தக் காயம்.
 ஐய்யா கேட்டைத்  தாண்டி வந்து ஜன்னல் வழியே
இந்தக் கல்லை எறிந்திருக்கிறார்கள் ஐயா
என்றவனுக்கு எழுந்திருக்க முடியவில்லை.
 சுந்தரத்துக்கு உடல் எல்லாம் பதறியது. சரஸ்வதி அம்மாவை வீட்டைப்
பூட்டிக்  கொள்ளச் சொல்லிவிட்டு  , வெளியே போய் முனையிலிருந்து ஆட்டோ
அழைத்து வந்தான்.
 ஆஸ்பத்திரியில் நல்லசிவத்துக்கு  டாக்டர்  ,கட்டுப் போட்டு, மருந்து மாத்திரைகள்
கொடுத்து,
ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லவம் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தான்.
தான் மாட்டி இருக்கும் பயங்கரக் கும்பலின் வன்மம் புரிந்தது.
சரஸ்வதியிடம் தங்கள் வீட்டுக்கே போகும்படி சொன்னாலும்
அவர்கள் கேட்கவில்லை. இனிமேதான் நாங்க ஐயாவுக்குத் துணை இருக்கணும்.


என்றபடிக் கணவனை பின்கட்டில் பாய் போட்டுப் படுக்க வைத்துவிட்டுத் தன் தம்பியை
வரச் சொல்லி தொலைபேசியில் அழைக்க அவன் வாசல் காவலை ஏற்றுக் கொண்டான்.
சுந்தரத்துக்குச் செய்து வைத்திருந்த உப்புமா சட்னியைச்
சாப்பிட்டு விட்டு அலுவலகம் விரைந்தான்.

தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை விளக்கி ,உடனடியாகத் தன்னை
வேலையிலிருந்து விடுவிக்க வேண்டு கோள்
விடுத்தான்.
அவனையும் அவன் வேலைத்திறமையையும்
உணர்ந்தவரான மேலதிகாரி ஒரு வாரத்தில்
அவன் கணக்குகளைச் சரிபார்த்து அவனை,
நல்ல நடத்தை சான்றிதழுடன் அனுப்புவதாகவும்
சொன்னார்.
 அங்கிருந்து கிளம்பியவன் சேகர் மாமாவின்
இல்லத்தை  அடைந்து , தான் தயாரித்த  கடன் தொகையை
குனிந்த தலையுடன் கொடுத்தான்.
 அவர் கேட்கும் முன்னரே வீட்டில் நடந்ததைச் சொன்னான். முகத்தை நிமிர்த்த
வழியில்லாமல் இருந்தவனுக்கு
சேகர் மாமாவின் முகத்தில் படர்ந்த அதிர்ச்சியைப் பார்க்க
சக்தி இல்லை.
ஒரு மாதிரி சமாளித்துக் கொண்ட, அவர் ,நீ எத்தனை பெரிய
கும்பலில் மாட்டி இருக்கிறாய் தெரியுமா.
இவன் பெரிய தாதா இங்கே.
இவனை  நாமிருவரும் பார்த்தால் போதாது.
ஒரு நிமிடம் இரு என்று காவல் துறை அதிகாரி 4
ஒருவருக்குப்
போனில் தொடர்பு கொண்டு, தங்களுக்குப் பாதுகாப்பு
தேவை என்று கேட்டுக் கொண்டார்.
சுந்தரத்துக்கு அச்சம் அதிகரித்தது.

ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினான்.
காலை உணவு சாப்பிட்டியா என்று கேட்டவர்,
கிளம்பு என்று கைத்தடியை எடுத்துக் கொண்டார்.
முதலில் அந்த ரிடையர்ட் காவல் அதிகாரியை அழைத்துக் கொண்டார்,
அவர் முகத்தை தொலைக்காட்சியில்தான்
பார்த்திருக்கிறான் சுந்தரம். எத்தனை கண்டிப்பானவர் என்று
தெரிந்தவன்.

 அண்ணா சாலையில் இருந்த பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த கிளப்பிற்குள்
நுழைந்ததும் ,பல கண்கள் சுந்தரத்தைக் கண்டு வெறுப்பை உதிர்த்தன.
 அவனுடன் வந்த பெரிய மனிதர்களைக் கண்டு  வியப்பும் பயமும்
அவர்களுக்குள் ஏற்படுவதைக் கண்ணால் கவனித்தான்.
இந்தச் சலசலப்பை கேட்டு வெளியே வந்த காசி போலீஸ் அதிகாரியைக்
கண்டு அப்படியே நின்றான்.
குழப்பம் அவனைச் சூழ்ந்தது.
என்ன சுந்தரம் விளையாட அழைத்து வந்திருக்கிறாயா என்று சாமர்த்தியமாகப் பேசினான்.
அவனை அடக்கிய போலீஸ் அதிகாரி, சுந்தரத்தின் கடன்
 விவரம் தேவை.
ஒழுங்கான தேதி விவரங்கள், ஆட்களின் பெயர்கள்
உடனே இங்கே இந்த மேஜையில் வை. என்றதும் அவன் மறுப்பு சொல்லவில்லை.
அவனும் தன் எடுபிடிகள், மற்றும் விளையாடுபர்களின் குறிப்புகளை
எடுத்துக் கொண்டு வந்தான்.

சேகரும், போலீஸ் அதிகாரியும்,
சுந்தரம் கொடுத்த லிஸ்டையும் காசி கொடுத்த பட்டியலையும்
ஒப்பு நோக்கினார்கள். சில இடங்களில் அதிகமாக இருக்கவே ,
அதிகாரி புருவத்தை உயர்த்தினார்.

சுந்தரத்தின் தலை உயர்ந்தது. அது தவறான கணக்கு என்றான்.
அனைவரும் இங்கே வாருங்கள் என்றதும் அனைவரும்
தயங்கிபடி வந்தார்கள்.
தயாராகக் கொண்டு வந்திருந்த செக்குகளில் அவரவருக்கான்
பணத்தை எழுதி ,
கையோடு கொண்டு வந்திருந்த பத்திரங்களில்
அவர்களின் கையெழுத்துகளையும் சாட்சி கையெழுத்துகளையும்
வாங்கி முடிக்க இரண்டு மணி நேரம்  ஆகிவிட்டது.
மொத்தம் 80 ஆயிரத்துக்குப் பக்கம் கணக்காகி இருந்தது.

சந்திராவின் வளையல்களை மீட்க இன்னோரு
இருபதாயிரம் ஆயிற்று.

மூவரும் எழுந்ததும் போலீஸ் அதிகாரி, அவர்கள் எல்லோரையும் பார்த்துக்
கம்பீரமான குரலில் எச்சரிக்கை விடுத்தார்.
இவனுக்கு நல்ல மனைவி வாய்த்தது அவன் அதிர்ஷ்டம்.
உங்களையும் யார் வந்து காக்கப் போகிறார்கள் என்று
பார்க்கப் போகிறேன்.
சுந்தரம் வீட்டில் கல் எறிந்தது யார் என்று
தெரிந்து வைத்திருக்கிறோம்.
இனி யாராவது அந்தத் தெருவுக்குள் வந்தால் எனக்கு விவரம் வந்துவிடும்.
அது உனக்கும் தான் காசி.
இந்தக் கிளப்பை மூட எனக்கு அரசு வரை போக முடியும்.
அதனால் இனி அதிக ஆட்டம் வேண்டாம்.

அந்த இடத்திலிருந்து  விலகினார்கள் மூவரும்.

சுந்தரத்தை அந்த அதிகாரி பார்த்த பார்வை அவனைக் கூச வைத்தது.
இனி இந்த பள்ளத்தில் விழமாட்டாய் என்று நினைக்கிறேன்.

சரி,நான் உன்னை வீட்டில் விடுகிறேன்.
மாமா நான் வேலையை விட்டு விட்டென்.
இழந்த பணத்தை மீட்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில்
 நான் மலேஷியாவுக்குப் போகிறேன்.
பொய்யில்லை மாமா. என் சினேகிதன் வெகு நாட்களாக
அழைத்துக் கொண்டிருக்கிறான்.

அங்கு புதிதாக வேலை நல்ல சம்பளத்தில் கிடைக்க வழி செய்து
தருவதாகச் சொல்லி இருக்கிறான்.
எனக்கும் இவர்களுக்குத் தொந்தரவில்லாத இடத்துக்குப் போக
எண்ணம்.
முடிந்தால் சந்திரா ,அம்மா அப்பாவிடம் சொல்லிவிடுங்கள் என்று, ஏதோ,
தொண்டையில் அடைக்கத் தன்வீட்டில் இறங்கிக் கொண்டான்.

அடுத்த இரு வாரங்களில் வீடே மாறியது.
பெண்கள் இருவரின் பரீட்சைகள் முடிந்தன.
சந்திரா வீடு வந்து சேர்ந்தாள்.
 செய்தி கேட்ட சுந்தரத்தின் பெற்றோர்கள் உடனடியாக
தங்கள் வீட்டிற்கு வந்து, சுந்தரை அழைத்தனர்.
குடும்பத்தோடு சென்ற சுந்தரை
அணைத்துக் கொண்டார் அம்மா.
ஊரைவிட்டா போகிறாய் அப்பா என்றார்.  ஆமாம் அம்மா
எல்லாம் சரியாகும் வேளை வந்துவிட்டது.
இரண்டு முதல் ஆறு வருடங்கள் தான்.
சந்திராவும் குழந்தைகளும் உங்களோடு இருக்கத்தான்
என் விருப்பம்.
என் பயம் இன்னும் தெளியவில்லை என்று தந்தையை நோக்கினான்.

அவரும் அவனை அருகில் வரச் சொல்லி உட்கார வைத்தார்.
பேத்திகளைப் பார்த்து அப்பா வெளியூர் போக உங்களுக்குச் சம்மதமா என்று
கேட்டார். சம்மதம். அப்பா சந்தோஷமாகப் போய் வரட்டும். ஆனால் வாரா வாரம் எங்களுடன்
பேச வேண்டும்.என்றார்கள்.
இப்படியாக ஆரம்பித்தது சந்திரா சுந்தரத்தின் புது வாழ்க்கை.

இதன் முடிவுரை அடுத்த பாகம்.வாழ்க வளமுடன்.
Add caption