எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
அதுவும் ஒரு கணவர் பல மனைவிகள்
பலவிதமாகக் குழந்தைகள்
ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
ஒரு திரைப்படம் வந்து அத்தனை வேடங்களையும் கலைத்துவிட்டது.
ஒரு ஆடவன் இந்தத் தவறைச் செய்யும்போது
சிரமப்படும் அவன் குழந்தைகள் , அவனைத் திட்டவில்லை.
அவனை அழைத்து வைத்துக் கொண்ட இன்னோருத்தியை
குணம் கெட்டவள், குலம் கெட்டவள் என்று தூற்றுகிறது.
இது அந்தத் திரைப்படத்தை விட இப்பொழுது பேசுபவர்களின்
நாடகம் விபரீதமாக இருக்கிறது.
விட்டு விட்டார்கள் என்றால் தேவலை.
என்ன பலன் எதிர்பார்த்து இதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் நடிகர்களும் கலந்து விமர்சிப்பது இன்னும் அழுக்கை சேர்க்கிறது.
கண்ணன் வேடம் போட்டவர்கள் கண்ணனாக வாழவில்லை.
நம்மிடையே பல தவறுகள் இருக்கும்போது
இறந்தவரைச் சொல்வதால் என்ன லாபம்.
Reminded me of an ancient story. உங்களில் பாபம் செய்யாதவர்கள் அவள் மேல் கல்லெறியுங்கள் என்று இயேசு சொன்ன வார்த்தைகள்.
அதுவும் ஒரு கணவர் பல மனைவிகள்
பலவிதமாகக் குழந்தைகள்
ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
ஒரு திரைப்படம் வந்து அத்தனை வேடங்களையும் கலைத்துவிட்டது.
ஒரு ஆடவன் இந்தத் தவறைச் செய்யும்போது
சிரமப்படும் அவன் குழந்தைகள் , அவனைத் திட்டவில்லை.
அவனை அழைத்து வைத்துக் கொண்ட இன்னோருத்தியை
குணம் கெட்டவள், குலம் கெட்டவள் என்று தூற்றுகிறது.
இது அந்தத் திரைப்படத்தை விட இப்பொழுது பேசுபவர்களின்
நாடகம் விபரீதமாக இருக்கிறது.
விட்டு விட்டார்கள் என்றால் தேவலை.
என்ன பலன் எதிர்பார்த்து இதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் நடிகர்களும் கலந்து விமர்சிப்பது இன்னும் அழுக்கை சேர்க்கிறது.
கண்ணன் வேடம் போட்டவர்கள் கண்ணனாக வாழவில்லை.
நம்மிடையே பல தவறுகள் இருக்கும்போது
இறந்தவரைச் சொல்வதால் என்ன லாபம்.
Reminded me of an ancient story. உங்களில் பாபம் செய்யாதவர்கள் அவள் மேல் கல்லெறியுங்கள் என்று இயேசு சொன்ன வார்த்தைகள்.
18 comments:
இவர் சொல்வது உண்மையாய் இருந்தால் அவர் பெயரைக் கெடுப்பது போல வைத்திருக்கும் சில பொய்யான காட்சிகள் தவறுதானே அம்மா?
புரியலை போங்க! :(
சமூகத்தை இன்னும் சீரழிப்பார்கள்.
புரியவில்லையே
அந்தப் படம் பற்றி , விஜயசாமுண்டீஸ்வரி பதிவுகள் பார்த்தீர்களா.
அந்தப் படத்தை எடுத்தவர்கள் மேல் இந்தப் பெண்மணி வழக்குப் போடலாம்.
வீணே நாக்கூசும் சொற்களால் அந்த இறந்த நடிகையைப் பேசலாமா என்பதே என் வருத்தம். என் பெண் சொன்னதால் இந்த வீடியோக்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.
படம் எடுத்தவர்கள் தெலுங்கர்கள்.
அவர்களுக்கு சிவாஜி,ஜெமினி கண்ணில் படவில்லை.
சாவித்திரியை மட்டும் பல்லக்கில் ஏற்றி விட்டார்கள்.
நீங்கள் கமலா செல்வராஜ் எடுத்திருக்கும் ஜெமினி பையோ பிக் பாருங்கள்.
சாவித்திரியை இனிய சுகந்தம் ஜெமினி வாழ்வில் வீசியது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.
இது எடுக்கப்பட்டது நாங்கைந்து வருடங்கள் முன்னால்.
நான் நடிகையர்திலகம் படம் பார்க்கவில்லை.
ஸ்ரீராம்,
இவர்கள் நியாயம் எனக்குப் புரிபடவில்லை.அந்தப் படம் பற்றி , விஜயசாமுண்டீஸ்வரி பதிவுகள் பார்த்தீர்களா.
அந்தப் படத்தை எடுத்தவர்கள் மேல் இந்தப் பெண்மணி வழக்குப் போடலாம்.
வீணே நாக்கூசும் சொற்களால் அந்த இறந்த நடிகையைப் பேசலாமா என்பதே என் வருத்தம். என் பெண் சொன்னதால் இந்த வீடியோக்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.
படம் எடுத்தவர்கள் தெலுங்கர்கள்.
அவர்களுக்கு சிவாஜி,ஜெமினி கண்ணில் படவில்லை.
சாவித்திரியை மட்டும் பல்லக்கில் ஏற்றி விட்டார்கள்.
நீங்கள் கமலா செல்வராஜ் எடுத்திருக்கும் ஜெமினி பையோ பிக் பாருங்கள்.
சாவித்திரியை இனிய சுகந்தம் ஜெமினி வாழ்வில் வீசியது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.
இது எடுக்கப்பட்டது நாங்கைந்து வருடங்கள் முன்னால்.
நான் நடிகையர்திலகம் படம் பார்க்கவில்லை.
ஸ்ரீராம்,
இவர்கள் நியாயம் எனக்குப் புரிபடவில்லை.
அன்பு கீதா. இதுவே பெரிய கதை ஆகிட்டது.
விட்டுடுங்கோ. ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.
நடிகர்கள் நடிப்பை ரசிப்பதுடன் நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவர்கள் வாழ்க்கையை நாம் பார்க்க கூடாது.
அதில் நிறைய சோகம், துரோகம், ஏமாற்றம் எல்லாம் இருக்கும்.
எடுத்தவர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம், இருவர் குழந்தைகளும் அதை பார்ப்பார்கள் என்பதால் யாரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ எடுத்து இருக்க வேண்டாம்.
வெட்டி அரட்டைனு சொல்லிட்டீங்க. நம்ம பங்குக்கு ஒண்ணு கொளுத்திப்போடுவோம்.
பாலகுமாரன் இறந்த அன்று அவர் வீட்டில் பிரஸ் வந்தபோது, மைக்கில் தன் அம்மாவை இழுத்து பேச்ச் சொன்னார் பாலகுமாரன் மகன். இன்னொரு அம்மாவை மைக்கின் அருகில் வர விடவில்லை.
ஆரம்பத்திலேயே இவர்கள் -
இந்த முயற்சியைத் தடுத்திருக்க வேண்டும்...
நல்லதோ கெட்டதோ
நல்லவரோ கெட்டவரோ
இறந்த ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்வது பெருந்தவறு..
தவறு இல்லாதவர்கள் யார்!?...
வீட்டுக்குள்ளோ அல்லது வேறு இடங்களோ
ஒருவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றிப் பேசுதல் கூடாது என்று என்பது நீதிமொழி..
உயிருடன் இருப்பவர்களுக்கே இப்படியென்றால்
இறந்து போன ஜீவன்களுக்கு!...
அந்தப் பாவம் நமக்கு வேண்டாம்...
அனைத்தும் அசிங்கமாக இருக்கிறது. என்ன சொல்ல.... இறந்தபின் இப்படி எல்லாம் பேசிக் கொள்வதை என்ன சொல்ல.
உண்மைதான் கோமதி மா. ஒரு பக்கம் இப்படி என்றால்
,நல்லதும் கெட்டதுமாக நடிகர்கள் வேறு பேசுவதைப் பார்த்தேன்.
வாழ்வே இன்று நீ நாளை நான் என்றிருப்பதை மறந்து
கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிகிறார்கள்.
எனக்கு சாவித்ரியின் நடிப்பு பிடிக்கும். மற்றதைப்
பற்றிக் கவலைப்பட எனக்கு உரிமை இல்லை
என்று தான் நினைக்கிறேன். நன்றி மா வாழ்க வளமுடன்.
யார் காதிலாவது விழுந்துவிடப் போகிறது நெ,.தமிழன்.
முக நூலில் இன்னும் அவருக்காக அழுது முடிக்கவில்லை.
எல்லோரும் மெத்தப் படித்தவர்கள்.
கட்டாயம் நமக்கு அந்தப் பாவம் வேண்டாம் தான் அன்பு துரை செல்வராஜு.
அதுவும் ஒரு பெண் ,இன்னோரு பெண்ணைத் தூற்றுவது
இவ்வளவு காலங்கள் கடந்த பிறகு என்பது வருத்தம் தருகிறது.
ஆமாம் முளையிலேயே கிள்ளி எறிந்து இருந்தால்
குடும்பங்கள் பிழைத்திருக்கும்.
எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்ட முதல்
விஷயம்.
பிறந்த வீட்டைப்பற்றிப் புகுந்த வீட்டில் பெருமை பேசாதே.
புகுந்த வீட்டை இகழ்ந்து பிறந்த வீட்டில் பேசாதே.
இருவர் மதிப்பும் கெட்டால் அவதிப்படப் போவது நீதான். என்பதுதான்.
நீங்கள் வந்து படித்துக் கருத்து சொன்னது மிக மகிழ்ச்சி.
இறந்தவர்கள் எழுந்து வந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
இவ்வாறு செய்வது மிகப் பாவம்.
வாழ்க வளமுடன் மா.
உண்மைதான் வெங்கட். அரசியல் ஒரு சாக்கடை என்றால்.
சினிமாப் பேச்சு அதைவிட மோசமாக இருக்கிறது மா.
ஹ்ம்ம் ஆமாம் வல்லிம்மா ..ரொம்ப வேதனையா இருந்தது சிலரின் இன்டெர்வியூஸ் .நான் முகப்புத்தகத்தில் இல்லாததால் அங்கு இன்னும் பெரிய அலசல் நடந்திருக்கும் என்று நினைக்கிறன் .
ஆக மொத்தம் இந்த திரைப்படத்தால் மனுஷ மனசின் அழுக்குப்பக்கங்கள் வெட்டவெளிச்சமாக நிக்குது .
நான் அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை .இறந்தவர்கள் வந்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்விகேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் மக்கள் நரம்பில்லா நாவால் இப்படி பேசி திரியறாங்க .அவரவர் மனசாட்சி அவரவரை குத்தும் நேரம் கஷ்டப்படுவாங்க .
அன்பு ஏஞ்சல், முகனூலில் ,பட விமரிசனங்களே அதிகம் யாரும்
அதன் பின்புல வீடியோக்களை விமரிச?கவில்லை.
விளைவுகளை நினைத்து
பயந்தார்களோ. இல்லை இதை விடப் பிரயோசனமுள்ள விஷயங்கள் கிடைத்தனவோ.
எனக்கும் சாவித்ரிக்கும் உள்ள உறவு சினிமா மட்டுமே.
அவர்கள் வாழ்வு பாழானதும் ஒரு வருத்தம்.
நம்மிடையிலும் இறந்த பெரியவர்களைப் பலப்பல காரணங்களுக்காக
இறக்கித் திட்டும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்.
அந்த வரிசையில் இவரும் சேர்ந்து கொள்கிறார்.
நன்றி கண்ணா.
வணக்கம் சகோதரி
நான் இன்னமும் இந்த படம் பார்க்கவில்லை. அந்த படத்தைப் பற்றி யாருடைய கருத்துக்களும் இதுவரை படித்ததில்லை. ஆனால் தங்களுடைய பதிவின் மூலம் சிலவற்றை அறிகிறேன்.
விமர்சனங்கள் பொதுவாகவே படிப்பதற்கு கஸ்டமாக இருக்கும் . இறந்து போனவர்களை குறித்து பேச ஏதும் இல்லை. நாளை நாமும் அதை பட்டியலில்தானே சேரப் போகிறோம்.
என் தளம் வந்து கருத்துக்கள் கொடுப்பதற்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
துளசிதரன்: எனக்கு இந்தப் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலை இங்கு வராததால். எனவே அதைப் பற்றிய செய்திகளும் அவ்வளவாகத் தெரியலை அம்மா.
கீதா: வல்லிம்மா படம் பற்றி விமர்சனம் மட்டும் பார்த்தேன் தெரியும். மற்றபடி அதன் பின்னான கருத்துப் பதிவுகள் மோதல்கள் எதுவும் வாசிக்கவில்லை எனவே தெரியவில்லை.
என்றோ நடந்தவை...நடந்ததை மாற்ற முடியாது. யாருக்கும் உண்மை சரியாகத் தெரியாது ஏனென்றால் ஒரே நிகழ்வு ஒவ்வொருவராலும் அவரவர் பார்வையில்தான் பேசப்படும் விருமாண்டி போல. எனவே....புரியலைம்மா
Post a Comment